PDA

View Full Version : கண்ணீர் அஞ்சலி



ராஜாராம்
15-02-2011, 12:44 PM
கண்ணீர் அஞ்சலி
****************

ஏன் இந்தக் கொடுமையை ஆண்டவன் எங்களுக்கு அளித்தான்....,
பிரிவு என்பதின் சோகம் என்னயென்பதை இன்றே உணர்ந்தோம்....,
நீ எங்களுடன் இருந்தபொழுது கண்ணீரை தந்தாலும்...,
அந்தக் கண்ணீரிலும் சுகம் இருந்தது....,
இன்றோ..,
எங்களை ஆழ்ந்த துயரில் ஆழ்த்திவிட்டு...,
எங்களைவிட்டு எங்கோ சென்றுவிட்டாய்...,
நீ மறைந்ததால் ,உண்ணும் உணவுக்கூட விஷம் ஆனது....எங்களுக்கு,
உறக்கத்தில்கூட உன் நினைவே....,
உன்னுடன் வாழ்ந்த நாட்களைப் பொற்காலம் என்றே எண்ணுகிறோம்..,
மீண்டும் எங்களுடன்,நீ வாழும் காலத்தை இறைவன் தருவானா?
நினைக்கும் சக்தியை தந்த இறைவன்....,
உன்னை மறக்கும் சக்தியை எங்களுக்கு அளிக்கவில்லையே...,
நீ பிரிந்தாலும்............,
என்றும் உன் நினைவில்.....நாங்கள்....இருக்கின்றோம்...,
எங்கள் பாசத்திற்குரிய "வெங்காயமே"...


என்றும் உன் நினைவால் வாடும்:-
தமிழக மக்கள்... :traurig001:

முரளிராஜா
15-02-2011, 01:02 PM
வெங்காயம் (ராஜாராம்) அருமையாக உள்ளது.
(ராஜாராம் வெங்காயத்துக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு உனக்கு தெரியுமா?
வெங்காயத்தை உரிக்க உரிக்க உள்ள ஒன்னும் இருக்காது அதுபோல ஒரு நாள் முழுவதும் நீ பேசினாலும் உன்கிட்ட விசயம் ஒன்னும் இருக்காது)

ராஜாராம்
15-02-2011, 01:20 PM
அடப்பாவி....முரளிராசா....உன் தொல்லைத் தாங்காம்மல்...நானும்,மல்லிமன்றம்,...தாமரைமன்றம்...முல்லைமன்றம்...ன்னு...தினம் தினம்,...ஒவ்வொரு மன்றமா ஓடி ஒளியிறேன்...
அப்படி இருந்தும்...நீயும் துரத்தி துரத்தி அடிக்கிறியே.....

எவ்வளவோதான் நானும் வலிக்காதமாதிரியே நடிக்கிறது.....

முடியல....முடியல :frown:

ஷீஜா ப்ரியா
15-02-2011, 02:32 PM
பரவாயில்ல.<முரலிராஜா அண்ணாவ திட்டாதிங்க>

Nivas.T
15-02-2011, 03:02 PM
வெங்காயம் இருந்தாலும் அழுகை
இல்லன்னாலும் அழுகை

கண்ணீர் அஞ்சலியில் ஒரு காமெடி

அருமை

பிரேம்
16-02-2011, 06:45 AM
அடப்பாவி....முரளிராசா....உன் தொல்லைத் தாங்காம்மல்...நானும்,மல்லிமன்றம்,...தாமரைமன்றம்...முல்லைமன்றம்...ன்னு...தினம் தினம்,...ஒவ்வொரு மன்றமா ஓடி ஒளியிறேன்...
அப்படி இருந்தும்...நீயும் துரத்தி துரத்தி அடிக்கிறியே.....

எவ்வளவோதான் நானும் வலிக்காதமாதிரியே நடிக்கிறது.....

முடியல....முடியல :frown:

அவரு..கெடக்குறாரு விடுங்க..இந்த காலத்துல
விஷயம் வச்சிக்கிட்டு பேசுறவங்கள விட..விஷயமே இல்லாம பேசுறவங்கதான் ஹீரோ..:).
எலே..டோன்ட் வொர்ரி..பீ ஹேப்பி..:icon_b:

உமாமீனா
27-02-2011, 02:47 AM
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா......

வெங்காயத்துக்கு கண்ணீர் அஞ்சலி - பொறுங்க பெருசுகிட்ட போட்டு கொடுக்கிறேன்

sarcharan
01-03-2011, 05:05 AM
ஜெய ஜெய ராம் ராஜா ராம்
ஜெய ஜெய ராம் வெங்காய ராம்
வெங்காய ராம் ராஜா ராம்

lolluvathiyar
03-03-2011, 07:28 AM
வெங்காயம் ஜோக் நல்லா இருக்கு. வெங்காயத்தின் மூலம் கன்னீர் வரகூடாது என்றால் உடனே அதை கொதிக்கும் நீரில் வேக வைத்து வருத்து வதக்கி விட வேண்டும்.


ராஜாராம் வெங்காயத்துக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு உனக்கு தெரியுமா?
அப்ப ராஜாராமையும் கொதிக்கும் நீரில் வேகை வைத்தோ அல்லது என்னையின் வருத்து வதக்கி விடனும் என்று சூசகமா சொல்லறீங்க போல தெரியுது. (ஏதோ என்னால முடிஞ்ச பத்த வைப்பு)

sarcharan
03-03-2011, 07:54 AM
வெங்காயத்துக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு உனக்கு தெரியுமா?


ஆம்லெட்டுக்கு வெங்காயத்த வெட்டி இல்லை போடணும்...