PDA

View Full Version : என்னால் மறக்கமுடியாத மனிதர்கள்:3ராஜாராம்
15-02-2011, 07:40 AM
(இது ஒரு உண்மைச் சம்பவம்.இதில் வரும் நபர்களின் பெயர்களும்,ஊரின் பெயரும்,மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சம்மந்தப்பட்ட நபர்களையோ.அவர்களைச் சார்ந்தவர்களது மனதையோ, புண்படுத்த வேண்டும்,என்ற நோக்கத்தில் இது சித்தரிக்கப்படவில்லை.கதைவடிவில் சித்தரிப்பதற்காக நேரிடை வசனங்களும்,நடை மாற்றமும் செய்யபப்பட்டுள்ளது.)

(11.07.2008.வெள்ளிக்கிழமை...காலை 8மணி..-விழுப்புரம் மாவட்டம்...மாளிகைமேடு...)
கண்ணையன்,சுமதி தம்பதியரின் ஒரே மகள்,துர்காதேவி.விழுப்புரம் தனியார் கல்லூரியில்,பீ.காம்,இரண்டாம் ஆண்டு படித்துவந்தாள்.நல்ல அழகும்,அறிவுத்திறனும்,கொண்ட அவளை,அணைவருக்கும் பிடிக்கும்.பயந்த சுபாவமும்,அமைதியான பேச்சும்,வெகுளித்தனமான உள்ளமும்,கொண்ட அவளிடம் கல்லூரி பேராசிரியர்கள் கூட அதிகம் அன்புக் காட்டினர்.
2008,ஜூலை மாதம் 11ம் தேதி வெள்ளிக்கிழமை,அன்று,அவளுடைய பிறந்தநாள் வந்தது.
"துர்கா...இந்தாம்மா.!!..உன் பிறந்தநாளுக்கான பரிசு,...",என்ற துர்காவின் அப்பா,அவளிடம் ஒரு அழகிய கலர் மொபைல்போன் ஒன்றை நீட்டினார்,
"எதுக்குப்பா...எனக்கு மொபைல்போன்லாம்?வீடு,காலேஜ்,இது இரண்டைத் தவிற வேற எங்கையும் போறதில்லை.அப்படி இருக்கையில்...எனக்கு எதுக்கு போன்னு?"
என்றபடியே அதை தந்தையிடம் இருந்து வேண்டாவெறுப்புடன் வாங்கிக் கொண்டாள்.

(26.07.2008.சனிகிழமை.....மத்தியம் 2.மணி)
அன்று கல்லூரி விடுமுறை என்பதால்,வீட்டில் இருந்தாள் துர்கா.
"க்ரிங்க்.....க்ரிங்க்",என்று சிணுங்கிய, தனது மொபைல்போன்னை எடுத்து,
"ஹலோ...',என்றாள் துர்கா.
"துர்கா..இன்னைக்கு நீ உடுத்தி இருக்கிற,பச்சை நிறப் பாவாடையும், சிகப்புகலர் தாவணியும், சூப்பரா இருக்கு.",என்று மறுமுனையில் ஒரு இளைஞனின் குரல்.
துர்கா,அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனாள்.
"யாரு நீங்க..?",என்று பயந்தவன்னம் துர்கா கேட்க,
போன்னின் மறுமுனைத் துண்டிக்கப்பட்டது.

(மறுநாள்...27.07.2008..ஞாயிற்றுகிழமை...மாலை 6.மணி)
"ஹலோ..துர்கா...இன்றைக்கு..நீ போட்டிருக்கிற மெரூன்கலர் பூப்போட்ட நைட்டி சூப்பரா இருக்கு...",
சிணுங்கிய மொபைல்போன்னை எடுத்தவளுக்கு,மீண்டும் அதே மர்மக்குரலின் வர்ணனை.
"நீங்க யாரு ஏன் இப்படில்லாம் பேசுறீங்க...",என்றவள்,போன்னைக் கட் செய்துவிட்டு,
"அப்பா எனக்கு இந்த மொபைல்போன்னு வேண்டாம்ப்பா...',என்று பதறியவன்னம்,தந்தையிடம் செல்போன்னை நீட்டினாள்.
"ஏம்மா...அப்பா நான், ஆசையா உனக்கு வாங்கித் தந்தேன்...அதுப் பிடிக்கவில்லையாம்மா?என்றதும்,
பயந்துக் கொண்டு, தன் தந்தையிடம்,ஏதும் கூறாமல்,அந்த மொபைல்போன்னை மீண்டும் தன்வசம் வைத்துக் கொண்டாள்.

(அதேபோல்,தொடர்ந்து அந்த மர்மமனிதன்,அவள் உடுத்தும் உடைகளை வர்ணித்தும்,அவள் வீட்டில் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் நேரில் பார்த்ததுபோலவே,அப்பட்டமாகக் கூறிக் கொண்டே இருந்தான்.
அவளது சந்தோஷம் ,நிம்மதி,எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்மாக,அந்தத் தொல்லையினால் தொலைந்தேப் போயின.உச்சக்கட்டமாக....அவளது வீட்டுக் கொல்லைப்புறம்,அவள் உலரப்போட்டிருந்த,ஒருசில ஆடைகளைப் பற்றிக்கூட,அந்த மர்மக்குரல் கூறத்தொடங்கியது.அவளது இயல்பு வாழ்க்கை பாழானது, கடும் மன உலைச்சலுக்கு ஆளாகினாள் துர்கா)

(செப்ட்டம்பர்..1.2008.திங்கட்கிழமை..காலை...6...30மணி)
"ஐயையோ...துர்கா...எங்களையெல்லாம்..தனியா தவிக்கவிட்டுப் போயிட்டியேடி...",என்று துர்காவின் அம்மாவும்,
"தற்கொலைப் பன்னிக்கொள்கிற அளவுக்கு,,..என்னடி நடந்தது?பாவி மகளே...இப்படிப் பன்னிட்டியேடி",..என்று துர்காவின் தந்தை கதறி அழுதனர்.
தனது அறையில்,மின்விசிறியில் தூக்குபோட்டுத் தற்ககொலை செய்துக் கொண்ட ,துர்க்காவின் உடலை ஊர்மக்கள், கண்ணீருடன் கீழே இறக்கி வைத்தனர்.

(துர்கா,தனக்கு நேர்ந்ததைக் கடிதமாக எழுதி வைத்திருந்தாள்.மர்மக்குரலின் கொடுமையால்தான் தற்கொலை முடிவிற்கு வந்ததாகவும், அந்தக் கடிதத்தை முடித்திருந்தாள்.காவல்துறையின் கவனத்திற்கு,சென்றது துர்காவின் தற்கொலை மரணம்.விசரணையின் இரண்டாம் கட்டத்திலேயே...பிடிப்பட்டான் ,அந்த மர்மக்குரல்மன்னன்.அவனைப் பற்றி அறிந்ததும், ஊர் மக்கள்,அதிர்ந்தேப் போனார்கள்.
ஆம்....துர்காவின்..பக்கத்து வீட்டில் வசித்துவந்த,10ம் வகுப்பே படித்துக் கொண்டிருந்த,ராம்குமார் என்ற சிறுவன் தான் அது,என்பது விசாரனையில் ஊர்ஜினம் ஆனது.
சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு தள்ளப்பட்டான்,ராம்குமார்.அவனது பெற்றோரோ..."எங்க மகனை தூக்குதண்டனை தந்து கொன்னுடுங்க...இவன் எங்க மகனே இல்லை...",என்று அவனை குடும்பத்தில் இருந்து ஒதுக்கியே விட்டனர்.
விசாரணயில் கேட்ட கேள்விகளுக்கு அவன் சொன்ன ஒரே பதில்
,"நான் விளையாட்டுக்குத் தான் அப்படிப் பன்னினேன்...சத்தியமா அக்கா செத்துப்போகும்னு எனக்கு தெரியாது...தெரியாமப் பன்னிட்டேன்..",
சிறையில்,தனிமையில்,தான் செய்தகாரியத்தை எண்ணி கதறி அழுது அழுது...மனநிலை பாதிக்கப் பட்டவனாக ஆகினான்.காவல்துறையின்,கண்கானிப்பில்,வேலூர் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்,ராம்குமார்.)

(15.11.2010..திங்கட்கிழமை...வேலூர்...பாகயா மனநல மருத்துவமனை...காலை,,.11மணி)
துர்காவின்,தாயும்,தந்தையும்,ராம்குமாரின்மேல்,பரிதாபம் கொண்டு,அவனைத் தங்கள் பராமரிப்பில் கவனிக்கத் தொடங்கினர்.
"அக்கா...நான் விளையாட்டாதான் செஞ்சேன்...மன்னிச்சிடு அக்கா....",என்று தலையில் அடித்துக் கொண்டு,புத்திதெளிவின்றி, புலம்பிக் கொண்டே இருந்தான் ராம்குமார்.
'அக்காவுக்கு உன்மேல கோபம் இல்லையாம்...என் கனவில் சொன்னாள்...நீ ஒழுங்கா சாப்பிடாவிட்டல் தான்,துர்கா அக்கா கோச்சுப்பாள்",என்றபடி,அவனுக்கு,அன்புடன் , சாப்பாடை ஊட்டிவிடத் தொடங்கினாள்,துர்காவின் அம்மா,,,,,,,.....

(மொபைல்போன்களும்,இண்டர்நெட் மையங்களும்,விஞ்ஞானம் தந்த ஆக்கப்பூர்வமான கருவிகள்.இன்றைய காலக்கட்டங்களில்,எத்தனை இளைஞர்கள் அவற்றை ஆக்கப்பூர்வமான உபயோகத்திற்கு பயன்படுத்துகிறார்கள்......?)

உமாமீனா
15-02-2011, 07:54 AM
உருக்கமான சம்பவம்துர்கா..இன்னைக்கு நீ உடுத்தி இருக்கிற,பச்சை நிறப் பாவாடையும், சிகப்புகலர் தாவணியும், சூப்பரா இருக்கு.",

"ஹலோ..துர்கா...இன்றைக்கு..நீ போட்டிருக்கிற மெரூன்கலர் பூப்போட்ட நைட்டி சூப்பரா இருக்கு...",


அவள் உடுத்தும் உடைகளை வர்ணித்தும்,அவள் வீட்டில் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் .உச்சக்கட்டமாக....அவளது வீட்டுக் கொல்லைப்புறம்,அவள் உலரப்போட்டிருந்த,ஒருசில ஆடைகளைப் பற்றிக்கூட,


10 ம் வகுப்புன்னா ஒரு 16 வயசு இருக்குமா விடல...பய புள்ள....இந்த வயசிலேயே இந்த மாதிரி பேச்சா?(மொபைல்போன்களும்,இண்டர்நெட் மையங்களும்,விஞ்ஞானம் தந்த ஆக்கப்பூர்வமான கருவிகள்.இன்றைய காலக்கட்டங்களில்,எத்தனை இளைஞர்கள் அவற்றை ஆக்கப்பூர்வமான உபயோகத்திற்கு பயன்படுத்துகிறார்கள்......?)

கேட்டிங்களே ஒரு கேள்வி? எங்கே மனசாட்சியை தொட்டு சொல்லுங்க பார்ப்போம்..... பார்க்கலாம்.

நாஞ்சில் த.க.ஜெய்
15-02-2011, 08:22 AM
அளவுக்கு மயங்கினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் ..அந்த பெண் மீது காட்டிய அதீத பாசம் மற்றும் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத பெற்றோர் மீது உள்ளது முதல் தவறு மேலும் வெளி உலகினை புரிந்து கொள்ளாமல் தன்னுயிரை மாய்த்த பெண்ணிற்கு இந்த பிரச்சனையை நம்மால் சந்திக்கமுடியும் எனும் எண்ணம் தோன்றாதது துரதிர்ஷ்டமே ....இது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினை ....

sarcharan
15-02-2011, 08:35 AM
ராஜாராம், உண்மையில் ஸ்தமபித்தும், பயந்தும் போனேன்.

முரளிராஜா
15-02-2011, 11:09 AM
நண்பர் ஜெய் அவர்களின் கருத்தே என் கருத்தும்.

sarcharan
15-02-2011, 12:00 PM
அளவுக்கு மயங்கினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் ..அந்த பெண் மீது காட்டிய அதீத பாசம் மற்றும் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத பெற்றோர் மீது உள்ளது முதல் தவறு மேலும் வெளி உலகினை புரிந்து கொள்ளாமல் தன்னுயிரை மாய்த்த பெண்ணிற்கு இந்த பிரச்சனையை நம்மால் சந்திக்கமுடியும் எனும் எண்ணம் தோன்றாதது துரதிர்ஷ்டமே ....இது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினை ....

சரியாய் சொன்னீர்கள். ஆனால் பருவ வயதில் (teen ageல்) இது போன்ற பக்குவப்பட்ட சிந்தனைகள் தோன்றுவதில்லை.

அமரன்
18-02-2011, 09:15 PM
என் தங்கை ஒருத்தி இனமில்லா இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை.

அப்படியே யாராவது அடி அடி என்று அடிச்சால் தகப்பனின் இலக்கத்துக்கு அழைப்பை திருப்பி விடுவாள்.

இப்படியும் இளையோர்..

கலைவேந்தன்
22-04-2012, 03:18 PM
மனம் பதறவைத்த சம்பவம். பகீரென்றது. என்ன சொல்வது..? அவனும் அறியாச்சிறுவன். அவசரப்பட்டது துர்காதான்..!!