PDA

View Full Version : நெடுந்தூரப் பயணங்களின்போது.....



கீதம்
15-02-2011, 06:50 AM
நெடுந்தூரப் பயணங்களின்போது
நம்மோடே பயணம் வருகின்றன
சில பழம்பாடல்கள்!

நீ ஓட்டுநராயிருக்கும்பட்சத்தில்
பாடல்தேர்வு
உன்விருப்பத்தின் பேரிலேயே அமைகின்றது.

சில பாடல்களைத்
தலையாட்டி ரசிக்கிறாய்,
சிலவற்றின்போது கூடவே பாடுகிறாய்,
சிலவற்றின் கர்த்தாக்களை சிலாகிக்கிறாய்,
ஒருசில பாடல்களை உள்வாங்கி
ஆழ்ந்த பெருமூச்சு விடுகிறாய்,

சிலபாடல்களின்போதோ...
கனத்த மெளனம் அழுத்த...
கண்கள் நெடுஞ்சாலையை வெறித்திருக்க…
விரைத்துப்போன ஜடம்போல் அமர்ந்திருக்கிறாய்,

பாடல் முடிந்து
அடுத்தது துவங்கும் வேளையில்
கண்களில் விழுந்த தூசியைத் துடைப்பதுபோல்
மெல்லத் துடைத்துக்கொள்கிறாய்
கண்ணோரக் கசிவை!

ஏஸி காருக்குள் எப்படி தூசியென்று
கேட்கப்போவதில்லை நான்!

புரிந்துகொள்கிறேன்,
நம் நெடுந்தூரப் பயணங்களின்போது
என்னுடன் வருவதுபோன்றே
உன்னுடனும் பயணிக்கின்றன,
பழம்பாடல்களோடு பழம்நினைவுகள் சிலவும்!

முரளிராஜா
15-02-2011, 07:00 AM
ஆம் உண்மைதான் கீதம் அவர்களே.
சில பாடல்களை நாம் பயணிக்கும் பொழுது கேட்கும் சமயம் பல ஆண்டுகள் பின்நோக்கி போயிருப்போம் கணத்த இதயத்தோடு

Nivas.T
15-02-2011, 07:33 AM
ஒவ்வொரு பாடல் தொடக்கத்திலும்
காலத்தில் மனம் பயணிக்கும்
வாகனம் முன்னோக்கி பயணிக்க
என்மனமோ காலத்தில் பின்னோக்கி பயணிக்க
பாடல் என் பயணத்தின் வாகனமாகிப்போனது
மனமோ சோகத்தின் வசமாகிப்போனது
கண்ணீரே வரமாகிப்போனது

அழகான கவிதை வழக்கம்போல் உங்கள் முத்திரை பதிந்த அடையலாம்

கீதம்
15-02-2011, 07:39 AM
ஆம் உண்மைதான் கீதம் அவர்களே.
சில பாடல்களை நாம் பயணிக்கும் பொழுது கேட்கும் சமயம் பல ஆண்டுகள் பின்நோக்கி போயிருப்போம் கணத்த இதயத்தோடு


ஒவ்வொரு பாடல் தொடக்கத்திலும்
காலத்தில் மனம் பயணிக்கும்
வாகனம் முன்னோக்கி பயணிக்க
என்மனமோ காலத்தில் பின்னோக்கி பயணிக்க
பாடல் என் பயணத்தின் வாகனமாகிப்போனது
மனமோ சோகத்தின் வசமாகிப்போனது
கண்ணீரே வரமாகிப்போனது

அழகான கவிதை வழக்கம்போல் உங்கள் முத்திரை பதிந்த அடையலாம்

உடனடிப் பின்னூட்டத்துக்கு மகிழ்ச்சியும் நன்றியும் முரளிராஜா மற்றும் நிவாஸ். திரையிசைப் பாடல்கள் இல்லாத வாழ்வை நினைத்தே பார்க்கமுடியாதுதான். நாம் விரும்பியோ விரும்பாமலோ நம் வாழ்வு அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறதே!

Nivas.T
15-02-2011, 07:53 AM
திரையிசைப் பாடல்கள் இல்லாத வாழ்வை நினைத்தே பார்க்கமுடியாதுதான். நாம் விரும்பியோ விரும்பாமலோ நம் வாழ்வு அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறதே!

கலைக்காக கடமைப்பட்டவன் தமிழன்
அவன்கையில் சினிமா கிடைத்தால் விடுவானா?
செதுக்குகிறான் அதை சிற்பமாக
வாழ்க்கை அதன் நுட்பமாக.

கீதம்
15-02-2011, 08:04 AM
கலைக்காக கடமைப்பட்டவன் தமிழன்
அவன்கையில் சினிமா கிடைத்தால் விடுவானா?
செதுக்குகிறான் அதை சிற்பமாக
வாழ்க்கை அதன் நுட்பமாக.

உண்மைதான். நானொரு பழம்பாடல் பைத்தியம். ஒவ்வொரு பாடலும் ஒரு கதை சொல்லும், ஒரு நிகழ்வை நினைவுபடுத்தும். சில இனிமையாய்... சில கொடுமையாய்....
அதன் பாதிப்பில் எழுந்ததுதான் இக்கவிதை. உங்கள் கவிதையும் அழகு. நன்றி நிவாஸ்.

உமாமீனா
15-02-2011, 08:06 AM
உண்மை உண்மை எனக்கும் அனுபவம் உண்டு

நாஞ்சில் த.க.ஜெய்
15-02-2011, 08:27 AM
என் நினைவுகளினூடே பின்னோக்கி செல்கின்றேன் என் நண்பர்கள் , உறவுகளை காணும் போது ...என் நினைவுகளை அமைதிபடுத்த கேட்கிறேன் இந்த இனிய கானங்களை ...உங்கள் அடையாளத்துடன் நினைவுகளை தூண்டும் இனிய கவிதை ....

கீதம்
15-02-2011, 07:36 PM
உண்மை உண்மை எனக்கும் அனுபவம் உண்டு


என் நினைவுகளினூடே பின்னோக்கி செல்கின்றேன் என் நண்பர்கள் , உறவுகளை காணும் போது ...என் நினைவுகளை அமைதிபடுத்த கேட்கிறேன் இந்த இனிய கானங்களை ...உங்கள் அடையாளத்துடன் நினைவுகளை தூண்டும் இனிய கவிதை ....

உங்கள் ரசனையும் ஒத்துப்போவதில் பெருத்த மகிழ்வெனக்கு. நன்றி உமாமீனா அவர்களே, நன்றி ஜெய்.

அமரன்
17-02-2011, 07:30 PM
பால் வித்தியாசம் பாராமல்
பாடல் பார்க்கலாம்

தெரிந்து விடக் கூடாதென்ற துடிப்பும்
தெரிந்தும் விடக் கூடாது என்ற வாழ்க்கைப் பிடிப்பும்
ஒன்றுடன் ஒன்று ஒட்டி உரசிப் பயணிக்கிறன...

ஒற்றை சன்னல் திறந்து காட்டி
இரட்டைக் கிளவியின் சுகம் தந்து
செல்கிறது சொல்காற்று.

பழம் நினைவு..
எவ்வளவு இனிப்பு!!!!!

பிரேம்
17-02-2011, 11:54 PM
அது என்ன பாட்டா...இருக்கும்..:confused:

பூமகள்
18-02-2011, 02:11 AM
அதெப்படி கீதம் அக்கா.. என் மனசுக்குள்ள இருப்பதை எல்லாம் சிறப்பாக கவிதையாக்க முடிகிறது உங்களால்??!!

ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி என்னில்..

பாராட்ட வார்த்தைகள் இல்லை..

கீதம் அக்கா நிஜமாகவே சொல்கிறேன்.. இதை விட அழகாக என்னால் இக்கருவை கவிதையாக்க இயலாது..

வாழ்த்துகள் அக்கா. :)

கீதம்
18-02-2011, 02:48 AM
பால் வித்தியாசம் பாராமல்
பாடல் பார்க்கலாம்

தெரிந்து விடக் கூடாதென்ற துடிப்பும்
தெரிந்தும் விடக் கூடாது என்ற வாழ்க்கைப் பிடிப்பும்
ஒன்றுடன் ஒன்று ஒட்டி உரசிப் பயணிக்கிறன...

ஒற்றை சன்னல் திறந்து காட்டி
இரட்டைக் கிளவியின் சுகம் தந்து
செல்கிறது சொல்காற்று.

பழம் நினைவு..
எவ்வளவு இனிப்பு!!!!!

அடிக்கோடிட்டு எதையும் குறிப்பாலுணர்த்தவில்லை, ஆயினும்
புரிந்துகொள்ளப்படுவதால் உண்டாகும் ஆனந்தத்துக்கு அளவில்லை.

நன்றி அமரன்.

கீதம்
18-02-2011, 02:50 AM
அது என்ன பாட்டா...இருக்கும்..:confused:

அதானே! அது என்ன பாட்டா இருக்கும்? :confused:

கீதம்
18-02-2011, 02:58 AM
அதெப்படி கீதம் அக்கா.. என் மனசுக்குள்ள இருப்பதை எல்லாம் சிறப்பாக கவிதையாக்க முடிகிறது உங்களால்??!!

அதனாலதான் சொல்றேன், எதையும் மனசுக்குள்ள வச்சிகிட்டு இருக்கக்கூடாது. உடனே எழுதிடணும். இல்லைனா இப்படிதான் வேற யாராவது எழுதிடுவாங்க. :) இப்படிதான் 'தாமதித்த தருணங்கள்' கவிதையில் நான் புலம்பியிருக்கேன்.


ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி என்னில்..

பாராட்ட வார்த்தைகள் இல்லை..

கீதம் அக்கா நிஜமாகவே சொல்கிறேன்.. இதை விட அழகாக என்னால் இக்கருவை கவிதையாக்க இயலாது..

வாழ்த்துகள் அக்கா. :)

உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒத்துப்போவதில் எனக்கு மகிழ்ச்சியே. பாராட்டுக்கு நன்றி பூமகள்.

பென்ஸ்
18-02-2011, 03:17 AM
சபாஷ் கீதம்...

ஆனால் பாடலில் சிறிது ஆணாதிக்கத்தை சுட்டுவது போல் உணர்வது...

எதேதோ சுவையாக பேசிக்கொண்டு (sweet nothings) செல்கையில்,
பாடலும், பாடலால் வரும் நினைவுகளின் தூண்டுதலும் இல்லையே...
பயணம் எதுவாகினும்...

கீதம்
18-02-2011, 03:30 AM
சபாஷ் கீதம்...

ஆனால் பாடலில் சிறிது ஆணாதிக்கத்தை சுட்டுவது போல் உணர்வது...

எதேதோ சுவையாக பேசிக்கொண்டு (sweet nothings) செல்கையில்,
பாடலும், பாடலால் வரும் நினைவுகளின் தூண்டுதலும் இல்லையே...
பயணம் எதுவாகினும்...

சில பாடல்களின் கர்த்தாக்களை சிலாகிக்கிறாய் அப்படின்னும் சொல்லியிருக்கேனே!

அப்படியென்றால் அந்தப் பாடல்களின் படம், இசை, பாடியவர்கள் பற்றிய அளவளாவுதல் என்று கொள்ளலாம் அல்லவா?

நீ ஓட்டுநராயிருக்கும்பட்சத்தில் பாடல் தேர்வு உன்னுடையது என்று சொல்லும்போதே நான் ஓட்டுநராயிருப்பின் பாடல் தேர்வு என்னுடையது என்றாகிவிடுகிறதே.

இதில் ஆணாதிக்கம் எங்கு வந்தது?
ஒரு பெண்ணாக நான் இதை எழுதியிருப்பதால் உங்களுக்கு அப்படித் தோன்ற வாய்ப்பிருக்கிறது.

நீங்களே சொல்லுங்க, சில பாடல்கள் உங்களுடைய கடந்தகாலத்தின் சில நிகழ்வுகளை நினைவுபடுத்தும் அல்லவா? ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் உண்டு என்பதைச் சொல்லவே இக்கவிதை.

பின்னூட்டத்துக்கு நன்றி பென்ஸ் அவர்களே.

அமரன்
18-02-2011, 08:56 PM
அதெப்படி கீதம் அக்கா.. என் மனசுக்குள்ள இருப்பதை எல்லாம் சிறப்பாக கவிதையாக்க முடிகிறது உங்களால்??!. :)

ஓ.. அக்காளும் தங்கையும்தான் காருல பாட்டுக் கேட்டபடி பயணம் செய்தீங்களா.

கீதம்
18-02-2011, 09:00 PM
ஓ.. அக்காளும் தங்கையும்தான் காருல பாட்டுக் கேட்டபடி பயணம் செய்தீங்களா.

அட, இப்படி இவ்வளவு துல்லியமாய்க் கண்டுபிடிச்சீங்க?

என்ன வித்தியாசமென்றால்... வேறு வேறு நாடு....வேறு வேறு கார்.... வேறு வேறு பாட்டு... வேறு வேறு நீ....