PDA

View Full Version : மலேசியா வாசுதேவன் கவலைக்கிடம்



முரளிராஜா
15-02-2011, 01:01 AM
http://thatstamil.oneindia.in/img/2011/02/14-malaysia-vasudevan200.jpg
சென்னை: பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன். அவர் தனது இனிய குரலாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அவர் 8,000க்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.

அவர் சில காலமாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
நன்றி: நக்கீரன்

உமாமீனா
15-02-2011, 02:14 AM
நலம் பெற பிராத்திப்போம்

aren
15-02-2011, 02:53 AM
அவர் பூரண குணமடைந்து இன்னும் பல்லாண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

sarcharan
15-02-2011, 05:23 AM
அவர் நலம் பெறவும், குணமடையவும் இறைவனை வேண்டுகிறேன்.

p.suresh
15-02-2011, 06:04 AM
நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்,

அவருடைய ஹிட் பாடல்களான

"ஆழக்கடலில் தேடிய முத்து",

"இந்த மின்மினிக்கு கண்ணில்"

"மலர்களே நாதஸ்வரங்கள்"

"ஒரு தங்க ரதத்தில்"

போன்றவற்றை யாரால் மறக்க இயலும்?

virumaandi
18-02-2011, 02:26 PM
அவர் பாடிய ஆழ கடலில் தேடிய முத்து பாடல் அருமையான கணவன் மனைவி தாம்பத்திய பாடல்


நலம் பெற வாழ்த்துக்கள்

ஓவியன்
18-02-2011, 03:44 PM
அவர் நலமுடன் மீண்டு எழ எல்லாருக்கும் பொதுவான இறைவன் துணை நிற்கட்டும்.