PDA

View Full Version : உங்கள் கை தொலைபேசியில் இருந்து இலவசமாக தொலைபேசி களுக்கு தொடர்பு கொள்ளலாம்



நாஞ்சில் த.க.ஜெய்
14-02-2011, 02:34 PM
(http://tamil25.blogspot.com/2009/12/phone-call.html)
http://2.bp.blogspot.com/_UpSEBwNdj3k/SzrAmpSrPNI/AAAAAAAAAQw/fyePLOW9Yyo/s400/2h3u906.jpg.png (http://2.bp.blogspot.com/_UpSEBwNdj3k/SzrAmpSrPNI/AAAAAAAAAQw/fyePLOW9Yyo/s1600-h/2h3u906.jpg.png)
இப்பொழுது முற்றிலும் இலவசமாக உங்கள் மொபைலில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம்,

இதற்கு உங்களிடம் 3G வசதி(வீடியோ கால் வசதி) கொண்ட நோக்கியா or iphone மொபைல் இருக்கவேண்டும் (3G நெட்வேர்க் இருக்கவேண்டிய அவசியம் இல்லை),

உங்கள் மொபைலில் GPRS வசதியை activate செய்து அதன் பின்பு உங்கள் மொபைலில் இருந்து http://www.fring.com/ என்ற இணையத்தளத்துக்கு சென்று fring என்ற mobile application ஐ டவுன்லோட் செய்க.பின்பு ஏதாவது voip account ஒன்றை registrar செய்ய வேண்டும். (உதாரணமாக voipcheap (http://www.voipcheap.com/) , voipwise (http://www.voipwise.com/) , smartvoip (http://www.smartvoip.com/) , jumblo (http://www.jumblo.com/)). பின்பு உங்கள் மொபைல் இல் நீங்கள் டவுன்லோட் செய்த fring ஐ open செய்து உங்களுக்கென்று ஒரு account ஐ registrar செய்க. பின்பு முறையே

option-> setting -> configure service -> SIP -> other -> user ID and Password ஐ type செய்து proxy address என்ற இடத்தில் proxy address ஐ type செய்ய வேண்டும் (உதாரணமாக sip.voipcheap.com , sip.voipwise.com , sip.smartvoip.com , sip.jumblo.com ).

பின்பு ok கொடுத்து main மெனுவிற்கு சென்று option -> setting -> show phone contact ஐ select செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் மொபைல் இல் save செய்துள்ள contact number களின் list உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் யாருக்கு call செய்ய வேண்டுமோ அந்த number ஐ select செய்து option -> call -> SIP call ஐ select செய்யுங்கள். உங்களின் மொபைல் இல் இருந்து அழைப்பு ஏற்படுத்தப்படுவதை மொபைல் இன் screen இல் காணலாம்.....

NOTE: voip account களில் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.....
voip account பற்றிய மேலதிக விபரங்களுக்கு
click hear--> voipcheap (http://www.voipcheap.com/) , voipwise (http://www.voipwise.com/) , smartvoip (http://www.smartvoip.com/) , சும்ப்லோ (http://www.rynga.com/)

நன்றி :tamil25.blogspot

அன்புரசிகன்
14-02-2011, 09:38 PM
மறுப்பதற்கு மன்னிக்க நண்பரே... இந்த உலகத்தில் எதுவுமே இலவசம் இல்லை.

நீங்கள் fring அல்லது எந்த வெய்ப் வசதி பயன்படுத்தி இலவசமாக ஒரு அலைபேசிக்கோ தொலைபேசிக்கோ அழைக்க வேண்டும் எனில் (கனடா ஐரோப்பிய சிங்கப்பூர் அமெரிக்கா அவுஸ்திரேலிய மேசை தொலைபேசிகளுக்கும் கனடா அமெரிக்கா சிங்கப்பூர் அலைபேசி உள்ளடங்கலாக...) குறைந்தபட்சம் 10 யூரோவுக்கு நீங்கள் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும். இலவசமாக என்றால் pc to pc call அடிப்படையில் நீங்கள் அழைக்கலாம். உதாரணமாக உஙகளது voip id க்கு என்னுடைய voip id யிலிருந்து இலவசமாக அழைக்கலாம். அல்லது கணக்கு ஆரம்பித்து முதல் 5 நிமிடங்கள் கதைக்கலாம். அவ்வளவே...
உதாரணமாக நீங்கள் தந்த சுட்டியிலிருந்து...
http://www.voipcheap.com/en/faq.html
சென்று படியுங்கள். அந்த பக்கத்தின் அடியில் அவர்களது terms and condition இருக்கும்.


* Max 300 minutes per week of free calls, measured over the last 7 days and per unique IP address. Unused free minutes cannot be taken to the following week(s). If limit is exceeded the normal rates apply. With your FREE DAYS you can call for free to all the destinations listed as free! when you have no FREE DAYS left the normal rates apply. You can get extra Freedays by buying credit

இங்கே free minutes என்பது அந்த 10 யூரோ செலவழித்து 90 நாட்க்களுக்கு இலவச நிமிடங்களாக பெறுவது.

உமாமீனா
15-02-2011, 02:36 AM
இந்த உலகத்தில் எதுவுமே இலவசம் இல்லை.

இங்கே free minutes என்பது அந்த 10 யூரோ செலவழித்து 90 நாட்க்களுக்கு இலவச நிமிடங்களாக பெறுவது.


அன்புரசிகன் கூறுவது 100 /100 சரியே

aren
15-02-2011, 02:56 AM
உங்களிடம் ஐபோன் இருந்தால் வைபர் மூலம் இன்னொரு ஐபோனிற்கு இலவசமாக பேசமுடியும், ஆனால் நீங்கள் 3ஜீ அல்லது வைஃபையில் கனெக்ட் செய்திருக்கவேண்டும்.

ஆப்பிள் Appstore சென்று அங்கே Viber என்று Search செய்யுங்கள். அதை download
செய்து இலவசமாக இன்னொரு ஐபோனில் இந்த வைபரை வைத்திருப்பவருடன் இலவசமாக பேசமுடியும். என் மகள் கணடாவிலிருந்து என்னுடன் இப்படி இலவசமாக பேசுகிறார்கள்.

அன்புரசிகன்
15-02-2011, 03:19 AM
உங்களிடம் ஐபோன் இருந்தால் வைபர் மூலம் இன்னொரு ஐபோனிற்கு இலவசமாக பேசமுடியும், ஆனால் நீங்கள் 3ஜீ அல்லது வைஃபையில் கனெக்ட் செய்திருக்கவேண்டும்.

ஆப்பிள் Appstore சென்று அங்கே Viber என்று Search செய்யுங்கள். அதை download
செய்து இலவசமாக இன்னொரு ஐபோனில் இந்த வைபரை வைத்திருப்பவருடன் இலவசமாக பேசமுடியும். என் மகள் கணடாவிலிருந்து என்னுடன் இப்படி இலவசமாக பேசுகிறார்கள்.

ஆம். அது ஏறத்தாள pc to pc calls / msn messenger/skype போன்றது அண்ணா... அந்த வசதி இந்த fring or voip இலும் உண்டு. ஆனால் இங்கு கூறுவது அதுவல்ல. அதாவது ஒரு ID க்கு தான் அழைக்க முடியுமே தவிர ஒரு அலைபேசிக்கு அல்ல. விபர் மூலம் ஒரு குறிப்பிட்ட அலபேசி இலக்கத்திற்கோ அல்லது மேசை தொலைபேசி இலக்கத்திற்கோ அழைக்க முடியாது.

பாலகன்
15-02-2011, 03:26 AM
ஆக எதுவுமே இலவசம் இல்லை :)

நாஞ்சில் த.க.ஜெய்
15-02-2011, 09:09 AM
நண்பர் அன்புரசிகன் அவர்களுக்கு என் நன்றிகள் ...இது போன்ற பின்னோட்டம் அவசியம் வரவேற்கப்படும் ..இவ்வாறு கூறும் போது ஒரு பதிவின் உண்மைநிலையினை அனைவரும் ஏதுவாக இருக்கும் ... நீங்கள் கூறுவது உண்மை voip id யில் ஒருவருடன் மற்றொருவர் பேசுவது என்பது ...இந்த பதிவின் உண்மையை நான் இதுவரை ஆராய்ந்து பார்க்கவில்லை இந்த பதிவினை பொருத்தவகையில் என் எண்ணம் என்னவென்றால் தொலைபேசியில் பேசுபவர்கள் கண்டிப்பாக இணைய தொடர்பில் இருக்கவேண்டும் என்பதுதான் ...நண்பர் ஆரோன் கூறுவது போல் தான் இந்த பதிவின் உண்மை இருப்பதாக கருதுகிறேன் ..இதில் நமக்கு ஆகும் செலவு என்னவென்றால் நாம் பயன்படுத்தும் இணையத்தினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்பதாக தான் அமையும் ..

ஒரு ID க்கு தான் அழைக்க முடியுமே தவிர ஒரு அலைபேசிக்கு அல்ல. விபர் மூலம் ஒரு குறிப்பிட்ட அலபேசி இலக்கத்திற்கோ அல்லது மேசை தொலைபேசி இலக்கத்திற்கோ அழைக்க முடியாது.

இதில் நீங்கள் கூறும் ID என்பதன் விளக்கம் எனக்கு சரிவர புரியவில்லை..ஏனெனில் தற்போது நாம் தொடர்புகொள்ளும் அனைத்து வகையான தொடர்புகளும் ஒரு அடையாள எண்ணுடன் தான் தொடர்பு கொள்ள படுகிறது ..குறிப்பாக ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினியை தொடர்பு கொள்ளும் போது அதனதன் இன்டர்நெட் ப்ரொடோகால் எனப்படும் IP எண்ணின் மூலம்தான் தொடர்புகொள்ளபடுகிறது ...அதுபோல்தான் அலைபேசி அழைப்பும் இதில் ஒருவிடயம் என்னவன்றால் இதில் பத்து இலக்க எண்ணின் மூலம் தொடர்புகொள்கிறோம் ...கணினியிலிருந்து ஒரு அலைபேசியினை தொடர்பு கொள்ளும்போதும் கூட கணினியானது அந்த அலைபேசி எண்ணினை ஒரு IP முகவரியாக கொண்டுதான் தொடர்புகொள்கிறது ...இதில் மற்றொரு விடயம் என்னவென்றால் ஒரு சாதாரண அலைபேசி மூலம் அல்லது ஒரு மேசை தொலைபேசி மூலம் கணினியினை தொடர்புகொள்ளமுடியாது என்பதுதான் ..
எந்த வொரு பொருளும் இலவசமாக முழுவதும் கிடைப்பதில்லை .அவ்வாறு யாரும் வழங்குவதும் இல்லை ..வழங்கும் ஒருசிலரும் அவர்களுக்கு பயன்படும் வகையில் தான் நமக்கு தருகிறார்கள் என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும் ..இந்த பதிவின் முக்கிய சாரம்சமே தொடர்புகொள்கிறோம் அது இலவசமாக இது எவ்வாறு எனும் போது அதற்க்கான செலவுதனையும் நாம் மறைமுகமாக இணையத்தின் மூலம் அளிக்கின்றோம் என்று தான் நினைக்கிறன் ...

நண்பர்களின் பின்னோட்டதிரிக்கு என் நன்றிகள் ....

அமரன்
15-02-2011, 11:13 AM
அன்பு சொல்வது சரியே.

உண்மைத் தன்மை உரசப்படவும் இன்னும் சில பயன் மிகு தகவல்களை அறிந்து கொள்ளவும் உதவிய திரி.

நன்றி நண்பர்களே

அன்புரசிகன்
15-02-2011, 11:20 AM
ஐடி என்று நான் கூறியது பயனாளர் பெயரை தான்.

உதாரணமாக ஒரு பயனாளர் பெயரிலிருந்து இன்னொரு பயனாளர் பெயருக்கு இலவசமாக அழைக்க பல மென்பொருட்க்கள் உண்டு. இதற்கு நீங்கள் கூறியது போல் இணைய இணைப்பு மட்டுமே தேவை.

தவிர இரு பயனாளர் பெயரிலிருந்து ஒரு அலைபேசிக்கோ அல்லது ஒரு மேசை தொலைபேசிக்கோ அழைக்க நிச்சயம் கட்டணம் செலுத்தவேண்டும்.

ஆரன் அண்ணா சொன்ன விபர் ID to ID வகை தான். ID to phone அல்ல.

விபர் ஏறத்தாள ஸ்கைப் போன்றது. அவ்வளவே. உங்களுடைய skype ID க்கு என்னுடைய skype id மூலம் தொடர்பு கொள்வது. இதற்கும் இணைய இணைப்பு மட்டுமே தேவை....

அமரன்
15-02-2011, 11:23 AM
சரி. சரி. உங்க விபரைத் தாறது

அன்புரசிகன்
15-02-2011, 11:28 AM
சரி. சரி. உங்க விபரைத் தாறது
பெயர்: உங்களுக்கு தெரிந்ததே
வயது 22
நட்சத்திரம் ஆயிலியம்
இராசி கடகம்
எதிர்பார்ப்பு... : உங்களுக்கு தெரியாததா???:lachen001:

அக்னி
15-02-2011, 01:51 PM
அன்பு சொன்னது 100% உண்மை.
இலவசம் என்று ஏதுமில்லை. தவிர, குறித்த ஒரு நாட்டின் வீட்டுத் தொலைபேசிகளுக்கு நீங்கள் தொடர்ச்சியாக அழைத்தால்,
குறித்த வரையறையின் பின் அதற்கும் சதங்களில் அறவிடுவார்கள்.

ஒன்றல்ல... இரண்டல்ல... voip குடும்பத்தின் பலரைப் பயன்படுத்தியவன் என்ற வகையிற் கூறுகின்றேன்.
இதுவும் இலவசம் இல்லை. ஆனால், குறைந்தசெலவில் சிறந்தபயன் எனலாம்.

*****


விபர் மூலம் ஒரு குறிப்பிட்ட அலபேசி இலக்கத்திற்கோ அல்லது மேசை தொலைபேசி இலக்கத்திற்கோ அழைக்க முடியாது.

சரி. சரி. உங்க விபரைத் தாறது

பெயர்: உங்களுக்கு தெரிந்ததே - புதுப்பெயராக் கிடக்குதே.
வயது 22 - எத்தனை வருஷத்துக்கு முதல்?
நட்சத்திரம் ஆயிலியம் - இதெதுக்கு?
இராசி கடகம் - இதுவேறயா?
எதிர்பார்ப்பு... : உங்களுக்கு தெரியாததா???:lachen001: - ஓ... இதுக்குத்தானா... பெயர்ப்பொருத்தம் ஓ கே...

அப்போ உங்க விபரத்தைத் தாறது... :cool:

matheen
03-11-2011, 02:10 PM
இப்படி எத்தனயோ தடவ முயற்சி செஞ்சாச்சி

நாஞ்சில் த.க.ஜெய்
04-11-2011, 12:18 PM
செய்த முயற்சியினை இங்கே பகிர்வின் இன்னும் பலருக்கு உதவுமே தோழர் ...