PDA

View Full Version : கலாச்சாரத்துடன் காதலர்கள் தின வாழ்த்துக்கள்..ரங்கராஜன்
14-02-2011, 12:16 PM
கலாச்சாரத்துடன் காதலர்கள் தின வாழ்த்துக்கள்...

வணக்கம் மற்றவர்களின் கணவன்மார்களே.... மற்றவர்களின் மனைவிமார்களே..... மற்றவர்களுக்கு கணவனாகப் போகிறவர்களே....மற்றவர்களுக்கு மனைவியாகப் போகிறவர்களே..... அல்லது கடைசி வரை கல்யாணம் செய்துக் கொள்ளாமல், பெற்றவர்களுக்கோ, கடவுளுக்கும், மண்ணுக்கும் சொந்தமாகப் போகிறவர்களே........ உங்கள் அனைவருக்கும் கலாச்சாரத்திற்குட்பட்ட முறையில் காதலர்கள் தின வாழ்த்துக்கள்.... கலாச்சாரம் முக்கியம் இல்லையா.......

அப்புறம் காதலர்கள் தினம் எல்லாருக்கும் எப்படி போச்சு,.... கண்டிப்பாக எல்லாரும், காலையில் எழுந்து கோவிலுக்கு சென்று, சாமி கும்பிட்டு, கலாச்சாரத்தை பறைச்சாற்றும், மகாபாரதம் போன்ற நூல்களைப் படித்து விட்டு...... ஐய்யய்யோ அதில் கிருஷ்ணன் பல பெண்களுடன் இருந்து இருப்பானே,... அதுவும் வயதில் பெரியவர்களான, திருமணம் ஆன பெண்களுடன் இருந்து இருப்பானே... அண்ணன், தம்பிகள் ஐந்து பேரும் வெட்கமே இல்லாமல் ஓரே மனைவியுடன் வாழ்ந்தார்கள் ஆச்சே, இதைப் பற்றியெல்லாம் அதில் வருமே....ச்ச ச்ச கலாச்சாரத்தை கெடுக்கும் நூல்... இதில் ஒரு பங்கான கீதா உபதேசத்தை எப்படி தான் இந்துக்கள் மதிக்கிறார்களோ..... சரி அதை விட்டு விடுவோம்.

ராமாயணத்தை படிப்போம்...... ஐய்யய்யோ அதிலும் தசரதனுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனைவிகளாமே,.... அதற்கும் மேற்பட்ட வைப்பாட்டிகளாமே....கடைசி வரை அவர்கள் தசரதனுக்கு என்று மட்டும் வாழ்ந்து இருப்பார்களா என்ன.... இப்ப என்ன செய்வது... ஆக இதையும் விடு விடுவோம்...

குரான் படிக்கலாமா.... அதில் பிரச்சனையில்லை, மனமொத்த ஜோடிகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்துக் கொள்ளலாம் என்று இருக்கிறதே... நபிகள் பெருமானுக்கே 12 மனைவிகள் என்று கேள்விபட்டு இருக்கிறோமே.... (இல்லை என்று மறுப்பவர்கள், ஆதாரத்துடன் மறுக்கவும்)......... சோ இதிலும் கலாச்சாரம் இல்லை.... எப்படி இது இஸ்லாமியர்களுக்கு புனித நூலாக ஆச்சு...

பைபில் படிக்கலாமா..... எவன் ஒருவன் பாவம் செய்யவில்லையோ, அல்லது தப்பு செய்யவில்லையோ.... அவன் இவள் மீது கல்லெறியலாம்.... என்று ஒரு விபச்சாரியான மேரி மெக்டோலினுக்கு கர்த்தரே சப்போர்டு செஞ்சி இருக்காரே....... சோ உடனடியாக மூடி விடலாம்.... காரணம் பைபிலை படித்து நாமே நம்மை மாற்றிக் கொண்டு.....நன்மையை நோக்கி நடக்க ஆரம்பித்து விடுவோம்....வேண்டாம் வேண்டாம் உடனே மூடு அதை....

சரி டிவி பார்க்கலாம்,...... "மேகம் கருக்குது, மின்னல் அடிக்குது..... சாரல்"

"அடேங்கப்பா ஜோதிகாவின் நடனமே நடனம் தான், சின்ன வயசில் என்ன ஒரு டென்டர் கொக்கனட் போல இருக்கிறாள்....... ஐய்யய்யோ..... அவள் சூர்யாவின் மனைவி ஆயிற்றே...... நாம் ரசித்து விட்டோமே, டிவியைப் போட்டு உடைத்து விடலாமா.... மாடியில் இருந்து குதித்து விடலாமா....... சரி அதைப் பற்றி அப்புறம் முடிவெடுத்துக் கொள்ளலாம்...

"சரி குளிக்கலாம்,.... பாத்ரூமிற்கு சென்று தண்ணீர் ஊற்றி லக்ஸ் சோப்பை எடுத்து தேய்கும் போது, இந்த விளம்பரத்திற்கு ஐஸ்வரியா ராய் வருவா இல்ல, ஆமா என்ன அழகு அழகு...... ஐய்யய்யோ அவள் அபிஷேக் பச்சனின் மனைவி ஆச்சே..... தூக்கிப் போடு இந்த சோப்பை.....தமன்னா அல்லது அனுஷ்கா மாதிரி கல்யாணம் ஆவாதவங்க நடிச்சா நாம லக்ஸ் சோப்பு வாங்குவோம்....... அதுவரை பொன்வண்டு துணி சோப்பு போட்டு குளிக்கலாம்.... குளித்து முடித்தப்பின்..

நம்ம மனசு தான் கெட்ட மனசு அதனால் தான் இப்ப தோணுது. பத்திரிக்கை எடுத்து படிப்போம், கள்ளக்காதலன் கொலை,.... கள்ளக்காதலி கைது,.... மனைவி ரத்த வெள்ளதில் கிடந்தால்..... குழந்தையை விட்டு ஓடிய தகப்பன்.... குழந்தைகளுடன் ஓடிய மனைவி...... ச்ச கலாச்சாரம் இல்லாத பேப்பர்...... கசக்கி தூக்கி எறிந்து விட்டு.....

சரி இதிகாசம் எல்லாம் கட்டுக்கதைகள் என்று கூறி அதையும் தூக்கி ஓரமாக வைத்து வித்து விட்டோம்.... வேறு என்ன செய்யலாம்... திருக்குறள் படிக்கலாமா.... நம்ம திருவள்ளூவர் எல்லா விஷயத்தையும் பிச்சி பெடல் எடுத்து இருப்பாரே.....

‘பிறன் இல்விழையாமை' "பிறர்மனை நோக்காதீர்"

சூப்பரு மெட்டரு, நம்ம கலாச்சாரத்திற்கு ஏத்தமாதிரி சொல்றாருப்பா......

'நன்மைக்காக பொய் சொல்வது தப்பில்லை'

என்னப்பா இது, இந்த மெட்டரு நம்ம கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி இல்லையே.... தலையில் கை வைத்தபடி யோசித்துக் கொண்டே இருக்கும் போது.... திடீரென ஒருவர் எதிரில் தோன்றுகிறார்.

அழுக்கு துண்டை மட்டும் இடுப்பில் மட்டும் கட்டிக் கொண்டு, மொட்டை அடித்துக் கொண்டு, முகத்தை மொழ மொழ என்று மழித்துக் கொண்டு, கருப்பாக, 80 வயதை கடந்து..... என்னை பார்த்து

"ஐய்யனே..."

"என்னடா"

"பெரியவர்களை அப்படி எல்லாம் கூப்பிடக்கூடாதுப்பா"

"ஏ..ம்பா"

"திருக்குறளில் சொல்லி இருக்கு"

"டேய் அதுல ஆயிரம் சொல்லி இருக்கும் அதெல்லாம் நான் பாலோ பண்ண முடியுமா"

"ஏன் செய்ய முடியாது"

"எப்படிடா பண்ண முடியும், ஒரு எடத்துல பொய் சொல்லக்கூடாதுனு சொல்றான், ஒரு இடத்துல பொய் சொல்லலாம்னு சொல்றான், பிச்சை எடுக்காதேன்னு சொல்றான், ஆனா ஒரு இடத்துல தர்மம் பண்ணுனு சொல்றான்.... ஒரே குழப்பமா இருக்கு பெருசு..."

"இதெல்லாம் எந்த எடுத்தில் சொல்லப்படுகிறது என்று சொல்லேன்"

நான் தயங்கியவாரே.... "யோவ் பெருசு, எல்லான்னா, எல்லா இல்லையா... சிலது திருக்குறள்ல, சிலது ஆத்தீச்சூடில, சிலது தசாவதாரத்துல, சிலது எந்திரன்ல....." இப்படி நிறைய இருக்கு மச்சி....

"திருக்குறள் தெரியும்...... அதென்ன, ஆத்தீச்சூடி, தசாவதாரம், எந்திரன்..புரியவில்லையே"

"என்னது தசாவதாரம், எந்திரன் தெரியாதா.... ஆத்தீச்சூடியை விடு..... எந்திரன் கூடவா நீ பாக்குல...யோவ், 135 கோடி ரூபா செலவு தயாரிச்ச சூப்பர் படம் அது, அப்படியே டபுள் மடங்கு லாபத்தை அள்ளுனாங்கையா புரோடியூசருங்க........ படம் சூப்பரா போச்சு, தியெட்டர்ள நூறு நாள் ஒடுலன்னாலும், பேப்பர்ல நூறு நாளுக்கு மேல ஓடுது........ அதுக்குனு நீ எல்லா பேப்பர்லையும் பாக்க கூடாது.... குறிப்பிட்ட பேப்பர்ல தான் பாக்கனும்.....தியெட்டர்ல தான் ஓடலையே தவிர, டிவியில 5 நொடிக்கு ஒரு முறை ஓட்டி, பல லட்சம் தடவை ஓட்டிட்டாங்க.... இப்ப நிறுத்தினதுக்கு காரணம், ரீலு அந்து போச்சாம்..... அத ஒட்டறத்துக்குள்ள,,,, ஆடுகளம்னு ஒரு இலக்கியதரம் வாய்ந்த படம் வந்து இருக்கு........ இது ஒரு ஆறு மாசம் ஓடும்னு நினைக்கிறேன்.... டிவியில...... ஆமா இதெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்லனும் நீ யாரு, வாய பொலந்துட்டு நான் சொல்றதை கேட்டுட்டு இருக்க"

"நான் தான் கரிகாலன்"

"எந்த கரிகாலன்?"

"விவசாயி கரிகாலன்"

"விவசாயின்னா யாரு அழுக்கா, கோமணம் மட்டும் கட்டிகிட்டு, மாடு கூட வாழ்ந்துட்டு, வயல்லையே உக்கார்ந்து சாப்பிட்டு, லோனுக்காக பேங்கு வாசல்ல வந்து மாதக்கணக்கில் கிடையா கிடப்பார்களே அவங்களா நீ...... ஏதோ ஜனாதிபதி மாதிர சொல்ற"

"அவங்களுக்கே உணவு அளிப்பவர்கள் அப்பா நாங்கள்"

"யோவ், அவங்கெல்லாம், கேஎப்சி, டோமினாஸ் பிசா, மெக்டோனல்ஸ், பாஸ்தான்னு போயிட்டாங்கய்யா,....... நீ பேசறது பழைய டயலாகு, வேற மாத்து..... எதோ நீ பிசா டெலிவரி பாயா இருந்தா கூட இந்த வார்த்தையை சொல்லலாம்...நாங்களே காய்கறிகளை ரிலையன்ஸ், பழமுதிர்சோலை போன்ற இடத்தில் இன்போர்டு செய்யப்பட்ட காய்கறிகளை வாங்கிட்டு இருக்கோம்... சரி விவசாயி கரிகாலன்னா பெரிய இவனா நீ மெட்டருக்கு வாய்யா"

"சொல்கின்ற அளவுக்கு நான் பெரிய ஆளு எல்லாம் இல்லை அய்யனே, என்னுடைய 60 வயதுக்கு மேல, நான் என்னுடைய பட்டறிவையும், அனுவபத்தையும் வைத்து, சில வரிகள் எழுதிட்டு போனேன், அத படிச்சிட்டு நீங்க எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள் என்றஉ பார்த்து விட்டு போகலாம் என்று வந்தேன்,... அவ்வளவு தான்"

"எத பத்தி" சந்தேகத்துடன்.

"எல்லாவற்றையும் பற்றி"

"எத்தனை வரி"

"எட்டு பாகமாக, நிறைய"

"ஒரு வரி சொல்லு"

"நடுவில் தான் எழுதினேன், ஆண்டவனைப் பற்றி எழுதியதால், அதனையே முதலில் வரியாக வைத்து விட்டேன்......அகர முதல எழுதெல்லாம்........."

"சார் நீங்க திருவள்ளுவரா....."

"இல்லை நான் விவசாயி கரிகாலன்"

"சார் உங்கள திருவள்ளுவர்னு சொல்லி ஏமாத்திட்டாங்க சார்"

"யாரு"

"எங்க ஸ்கூல் வாத்தியாரு.., அதவிடுங்க, நீங்க வெள்ளை சட்ட... அது சட்ட இல்ல, ஒரு மாதிரி பாவடையும், துப்பட்டாவும் கலந்து ஒரு மாதிரி ஜூலியர் சீசர் டிரஸ் மாதிரி இருக்கும் சார், முக்கால்வாசி தமிழ் புத்தகத்தில உங்க போட்டோ தான், குஷ்பு போட்டோவை வைக்க சொல்லி நாங்க ஸ்ட்ரைக் கூட நடத்தினோம், மாத்த மாட்டேன்னு சொல்லிட்டாங்க..."

"ஜூலியர் சீசர், குஷ்பு யார்"

"அடப்போங்க சார் கஜினி சூர்யா மாதிரி நீங்க கேள்வி கேட்டுட்டே இருந்தா எப்படி, சரி ஏன் தாடி மீசையெல்லாம் இல்லாம, பிச்சைக்காரன் மாதிரி.... சாரி.... கையில ஓலைச்சுவடி, ஆணியெல்லாம்
காணும்"

"ஐய்யனே நான் ஒரு விவசாயி, தாடி மீசையெல்லாம் வைத்துக் கொண்டால் வியர்வை என்னை பிச்சி தின்று விடும், அப்புறம் நீ என்ன வேலை செய்கிறாய்"

"பத்திரிக்கைதுறையில் இருக்கிறேன்"

"கையில காகிதங்களைக் காணும்"

"மச்சி செம வாய்டா உனக்கு....... சாரி சார், எதோ வேகத்தில் மரியாதையில்லாமல் பேசி விட்டேன்.... அப்புறம் உங்க வீட்டுக்காரம்மா எப்படி இருக்காங்க......"

"செங்குவழையா நன்றாக இருக்கிறாள்"

"அப்ப வாசுகி யாரு சார்.... செட்டப்பா"

"வாசுகின்னா அப்படின்னா, அதற்கு முன் செட்டப்பு என்றால் என்ன"

"நாசமா போச்சு, சரி உங்க மனைவிக்கு செல்லப்பெயர் எதாவது உண்டா, அதான் மூடா... அந்த மாதிரி நேரத்துல..... இருக்கும் போது அழைக்கும் பெயர் எதாவது இருக்கா"

"அது நிறைய இருக்கிறது, தேனே, சக்கரவல்லிக்கிழங்கே, முத்தின சோளமே......"

"சார் போதும் போதும் நீங்க ரொம்ப ஏ வா பேசறீங்க, உங்க மனைவி பெயர் வாசுகின்னு சொன்னாங்க, கிணத்துல தண்ணி எறச்சிட்டு இருக்கும் போது நீங்க கூப்பிட்டா, அவங்க அப்படியே உட்டுட்டு ஓடி வருவாங்கலாம், கயிறு அப்படியே கீழப்போகாம நிக்குமானே"

"வாசுகியா அது யாருனு தெரியாது, ஆனால் கிணற்றில் என் மனைவி விட்டு வந்த கயிறு அப்படியே தான் நிற்கும்,... காரணம் நான் இருந்த காலத்தில் 4 அடியில் சுத்தமான நீர் கிடைக்கும், மரத்தால் ஆன பாத்திரத்தில் தான் நாங்கள் தண்ணி எடுப்போம், அதனால்
அது தண்ணீரில் முழுகாது...நான்கு அடி என்பதால் கயிறு இறங்காது... அவ்வளவு தான்"

"சார் நம்பவே முடியலை சார், நீங்க தான் திருவள்ளுவர்னு"

"நான் கரிகாலன்"

"அதான் அதான்,..... சரி 8 பாகம்னு சொன்னீங்க, பல ஆயிரம் குரள்னு சொன்னீங்க, எங்ககிட்ட வெறும் ஆயிரத்தி...... ஒரு நிமிஷம் இருங்க... 133 in the mind,
10 in the finger.... 0 போ ஒன்னு, கையில மீதி 13 ............ ஆஆஆஆஆ... 1330 குரள் தான் சார் இருக்கு......."

"என்னது 1330 குரள் தானா, நான் மொத்தம் எழுதியது, 5 ஆயிரத்திற்கு மேல்........ அப்பப்ப எழுதி நான் எங்காவது போட்டு விடுவேன்... கடைசியில் ஒரு வணிகன் தான் என்னிடம் வந்து என்னிடம் இருந்த மீறி ஏடுகளை கேட்டு வாங்கிச் சென்றான்....என்னுடைய மீதியை தருவதற்குள் அவன் இறந்து விட்டான்"

"நல்லவேளை சார், அத அவன் வாங்கவில்லை, 1330 குரள்களுக்கே எங்களுக்கு தாலி அறுந்து போயிடுது... சார்"

"சுலபம் தானே ஐய்யனே"

"சுலபமா, நீ வந்து எக்ஸாம் எழுதி பாரு, பல தமிழ் வாத்தியாருங்க... உன்னுடைய திருக்குறளை வைச்சி தான் எங்க மேல பழியை தீர்த்துக் கொள்கிறார்கள். ஒரு குரள் தப்பா போன அவன் பொண்டாட்டியை கை பிடிச்சி இழுத்த மாதிரி அடிக்கிறாங்க சார்..... ஆமா, உனக்கு எத்தனை பொண்டாட்டி....."

"அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய், ஐய்யனே"

"இல்ல, நீ காமத்துப்பால்ல பல மெட்டர் சொல்லி இருக்கியே, அதெல்லாம் கண்டிப்பா வாசுகி கிட்ட......"

"செங்......."

"ஆஆஆ அந்தம்மாக்கிட்ட தெரிஞ்சிக்கிறது கஷ்டமாச்சே.... அதுவும் அத்தனை சுவையும், அத்தனை ரகத்தையும் பத்தி பிச்சி உதறி இருக்கியே நீ .....எனக்கு அத படிக்கும் போதே சந்தேகம் தான்"

"அப்புறம், அந்த 834 குறளில் நான்......"

"டேய் டேய், நான் கேட்ட கேள்விக்கு பதிலே வரலையே..."

"எனக்கு நேரம் ஆச்சு, வீட்டில் பொன்விழியால் தேடுவாள்...."

"என்னது பொன்விழியாலா, அப்போ, செங்..... எதோ சொன்னியே..."

இதை கேட்டவுடனே உஷாரான திருவள்ளுவர் அலைஸ் கரிகாலன் காதில் எதோ ஒன்றை செல்போன் போல வைத்துக் கொண்டு

"ஹலோ ஹலோ, ஹலோலோலோலோலோ......ஐய்யனே இங்கு சிக்னல் கிடைக்கவில்லை, இதோ வந்துவிடுகிறேன்" என்று நகர ஆரம்பித்தார்.

"மிஸ்டர் திருவள்ளுவர், ... க க மிஸ்டர் கரிகாலன்... சார் சார்... டேய் டேய்...... டேய்.. பொன்விழியால்" என்று கத்திய என்னை நோக்கி, கோபத்துடன் திரும்பி வந்த திருவள்ளு.... வேண்டாம் கரிகாலன்.

"மற்றவர்களின் மனைவியை நினைப்பது தப்பு"

"யோவ் நான் எங்கையா நினைச்சேன்"

"இப்ப கூப்பிட்டல்ல, மனதில் நினைக்காமல் எப்படி கூப்பிட முடியும்...பிறர் மனையை நோக்குவது தப்பு"

"சரி நான் நோக்குல"

"சரி என் மனைவி பெயர் என்ன சொல்லு"

"எனக்கு தெரியாது"

"பொய் சொல்லுவதும் தப்பு தான்"

"நல்லதுக்காக பொய் சொல்லலாம் தப்பில்லை, நீ தான் சொல்லி இருக்கியே.."

"யார் நல்லதுக்கு"

"நம்ம நல்லதுக்கு தான், பேச்சி முத்திச்சுன்னா இருவருக்கும் இப்ப கைகலப்பு ஆகிடும்"

"சரி தான்"

"சரி நீ எழுதின மீதி அதிகாரம் பத்தி சொல்லவே இல்லையே"

"அது நிறைய..... காதல், களவை, ஏக்கம், தவறியஉறவு உள்ளிட்ட பலவற்றைப் பற்றி"

"அடப்பாவி, அதெல்லாம் எங்கே... காதலப்பத்தி உன்னுடைய கருத்து என்ன"

"அதெல்லாம் எங்க போச்சுன்னே தெரியலை.... எனக்கு திருவள்ளுவன், என்றும் என் மனையாளுக்கு வாசுகி என்று பெயர் வைத்தானே அவன்களைப் போய் கேளு.........காதல் என்பது தண்ணீரைப் போல"

"என்னது தண்ணியா.......அப்படின்னா"

"அப்படித்தான்"

"புரியலை"

"நாளைக்கு எவனாவது விளக்கம் எழுதுகிறேன் என்ற பெயரில் காதல் என்பது இளநீரைப் போன்றதுனு எழுதுவான் அவனைப் போய் கேளு"

"சரி மீதி குறள் எல்லாம் எங்கே"

"தொலைந்து விட்டது"

"அதையெல்லாம் தொலச்சிட்டு, பொன்விழியாலை மட்டும் பத்திரமா பாத்துக்கோ...... சரி தொலச்சது எல்லாம்....அதெல்லாம் காமத்து பாலுடன் பயங்கரமா இருக்குமா"

"படுபயங்கரமா இருக்கும்"

"மச்சி ஒண்ணு சொல்லேன்"

"மறந்துட்டேன்..." என்று நகர ஆரம்பித்தார்.....

"டேய் டேய் டேய்....."

"நான இன்டிக்கி நேரம் ஆவுத்தாந்தி, நின்னி நேனு ரோபு மீட் சேஸ்தானு" என்று பேசிக் கொண்டு போனார் கரிகாலன்...

"மச்சி நீ தமிழ் இல்லையா....... அடப்பாவி உன்னுடைய போட்டோ தாய்யா எங்க தமிழ்நாட்டு எல்லா எடத்திலையும் இருக்கு..."

"நேனு ஆந்திரா... தமிழ்நாடு பார்டரு"

"அப்ப மயிலாப்பூர்"

"அட்லன்டே" என்று சில அடி தூரம் நடந்துக் கொண்டே கேட்டார் கரிகாலன்.

" ஆஆஆஆ குட்லன்டே... சரி விடு.... எனிவே மிஸ்டர் கரிகாலன், ஊருக்கு உபதேசம் செய்தது போதும், இன்னைக்கு காதலர்கள் தினம், வாசுகியுடன் கொண்டாட முயற்சி செய்....அந்த பொன்விழியாலின் கணவனிடமும் இதை சொல்லிவிடு... தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலாச்சாரம் முக்கியம்...அட்வைஸ் பண்றவனைத் தவிர.."


இவ்வளவு நேரம் வரை கலாச்சார விதிமீறல்கள் இல்லாம் இந்த பதிவை படித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி... (இந்த பதிவை நீக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.... பொறுப்பாளர்களுக்கு ரிப்போர்ட்டு செய்ய வலது ஓரத்தில் இருக்கும் சிகப்பு கலர் ஆச்சர்யக்குறிப் போட்ட சிகப்பு பட்டனை அமுக்கவும்...... கலாச்சாரத்துடன் காதலர்கள் தின வாழ்த்துக்கள்)

சூரியன்
14-02-2011, 01:23 PM
முடியல ...
எப்படிதான் உங்கனால மட்டும் இப்படி முடியுது கொஞ்சம் சொல்லிகுடுங்க அண்ணா..:)

Nivas.T
14-02-2011, 03:49 PM
தங்க்ஸ்

சும்மா சொல்லக் கூடாது

பின்னீட்டீங்க

ஒரு பத்து "வால்காவிலிரிந்து கங்கை வரை" படிச்ச மாதிரி இருந்தது

என்ன ஒரு உண்மை

தங்க்ஸ்கு இணை தங்க்ஸ் மட்டுமே

Mano.G.
15-02-2011, 12:19 AM
தம்பி கோபம் புரிகிரது,
சாந்தம் சாந்தம் சாந்தம்,
நமக்கு சரியென பட்டது
மற்றவருக்கு தவறாக படலாம்
அதற்காக நாமே நம்மேல் கோபம்
கூடாது, கடந்த நமது சந்திப்பின் போது உங்களிடம்
கூறியதை நினவுப் படுத்தி பருங்கள்.

சாந்தம் சாந்தம் சாந்தம்

ரங்கராஜன்
15-02-2011, 02:06 AM
நன்றி தம்பி சூரியன்... பட்டும் படாமல் பின்னூட்டம் போட்டு விட்டு, பட்டுனு படித்தவுடன் எனக்கு போன் செஞ்சப்பாரு..... அதுக்கு.... ஹா ஹா ஹா.

தக்ஸ் : நன்றி நிங்வாஸ்.....

நிவாஸ் : என் பெயர் நிவாஸ்ங்க

தக்ஸ் : அதேபோல தான் என்னுடைய பெயரும் தக்ஸ் ங்க... தங்க்ஸ் இல்லை.... ஹா ஹா சும்மா தமாஸு..

பாராட்டுக்கு நன்றி நிவாஸ்...

ஹாய் மனோ அண்ணா.....

எப்படி இருக்கீங்க....உங்களையும் மறக்க முடியாது.... உங்களின் வார்த்தைகளையும் மறக்க முடியாது... சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனைக்கு பின் நான் மன்றத்திற்கு திரும்பி வந்ததற்கு முக்கிய காரணம் நீங்கள்.... நீங்கள் சொன்ன அன்று இரவே நான் மன்றத்திற்கு திரும்பி விட்டேன்.... அன்றிருந்து கோபத்தை பல மடங்கு குறைத்துக் கொண்டேன், மன்றத்தில் மட்டுமில்லை.... வாழ்க்கையிலும் தான் அண்ணா... சில நேரங்களில் நாம் உயிருடன் இருக்கிறோம்... என்பதற்கு கோபத்தை வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது....

இந்த பதிவிற்கும் என்னுடைய கோபத்திற்கு சம்பந்தம் இல்லை அண்ணா..... எதோ மனம் போன போக்கில் போட்ட பதிவு இது..... அவ்வளவு தான்...

நன்றி அண்ணா...

அக்னி
16-02-2011, 12:00 PM
இப்பதிவை இட்டதுமே வாசித்துவிட்டேன்.
பின்னூட்டத்திற்கு இப்போதுதான் வசதிப்பட்டது.

இதனை நகைச்சுவையாக மட்டும் நகைத்து வைத்தேன்.

அதற்குமேல் ஆழமாகிப் போக அல்லது ரசிக்க ஏதோ என்னைத் தடுக்கின்றது...

இதனையே, குற்றம் சொல்ல முடியாத வகையில் நீங்கள் சொல்லியிருக்கலாமோ
என்ற ஆதங்கமே இறுதியில் எனக்கு ஏற்பட்டது.
அது உங்களால் இயன்றதே.

சில நேரங்களில் வெளிப்படை என்பதும் மறைந்திருக்கவேண்டியது அவசியம்...

ரங்கராஜன்
17-02-2011, 03:59 PM
இப்பதிவை இட்டதுமே வாசித்துவிட்டேன்.
பின்னூட்டத்திற்கு இப்போதுதான் வசதிப்பட்டது.

இதனை நகைச்சுவையாக மட்டும் நகைத்து வைத்தேன்.

அதற்குமேல் ஆழமாகிப் போக அல்லது ரசிக்க ஏதோ என்னைத் தடுக்கின்றது...

இதனையே, குற்றம் சொல்ல முடியாத வகையில் நீங்கள் சொல்லியிருக்கலாமோ
என்ற ஆதங்கமே இறுதியில் எனக்கு ஏற்பட்டது.
அது உங்களால் இயன்றதே.

சில நேரங்களில் வெளிப்படை என்பதும் மறைந்திருக்கவேண்டியது அவசியம்...

உங்கள் கருத்துக்கு நன்றி.....

மன்னிக்கவும்.......உங்களுக்கு தோன்றியது எனக்கு தோன்றவில்லை.... ஒருவேளை தோன்றினால் மாற்றி அமைக்கிறேன்.... இந்த திரியை......

அமரன்
17-02-2011, 06:13 PM
உங்கள் கருத்துக்கு நன்றி.....

மன்னிக்கவும்.......உங்களுக்கு தோன்றியது எனக்கு தோன்றவில்லை.... ஒருவேளை தோன்றினால் மாற்றி அமைக்கிறேன்.... இந்த திரியை......

ரங்கா.

எப்போது எண்ணங்கள் எழுத்துகளாகி எங்களிடம் வந்ததோ,
அந்த நொடியிலிருந்து உங்களிடமிருந்த அவ்வெண்ணங்கள் தொடர்பான எல்லா உரிமைகளும்
வாசகர்களாகிய எம்மிடம் வந்து விட்டன.

அப்படி இருக்கும் போது
எப்படி நீங்கள் மாற்றி அமைக்கவோ, நீக்கவோ முடியும்.

இனிமேல் இந்த மாதிரிச் சிந்தனை உங்களில் ஊறவே கூடாது.

கண்ணதாசனின் பாடல்கள் பல
அந்த நேரத்து நெஞ்சலைகளில் நிழல் என்பார்கள்.
உங்கள் சொல்வனங்களும்
அவ்வாறே நீடித்து நிலைக்கட்டும்.

ரங்கராஜன்
18-02-2011, 06:02 AM
ரங்கா.

எப்போது எண்ணங்கள் எழுத்துகளாகி எங்களிடம் வந்ததோ,
அந்த நொடியிலிருந்து உங்களிடமிருந்த அவ்வெண்ணங்கள் தொடர்பான எல்லா உரிமைகளும்
வாசகர்களாகிய எம்மிடம் வந்து விட்டன.

அப்படி இருக்கும் போது
எப்படி நீங்கள் மாற்றி அமைக்கவோ, நீக்கவோ முடியும்.

இனிமேல் இந்த மாதிரிச் சிந்தனை உங்களில் ஊறவே கூடாது.புரிய வைத்ததற்கு நன்றி...... அமரா...

இனிமேல் அந்த தப்பை செய்ய மாட்டேன்....