PDA

View Full Version : துரியோதனன் வீட்டில்..........



Nanban
02-12-2003, 03:49 PM
எல்லோரும் ஒன்றுபோல இருப்பதில்லை...... சில வீட்டில் பெற்றவர்களும், மற்றவர்களும் நண்பர்களாய்......

அப்படி ஒரு வீட்டில்.........

உதை வாங்காமல் வந்தா சரி.... என்று சிரித்துக் கொண்டே எங்களை வேடிக்கைப் பார்ப்பர்........

சிக்கலாக்கிக் கொள்ளாமல் துணையாக நின்றவர்களும் அவர்களே......


துரியோதனன் வீட்டில்..........

அடிக்கடி கூடும்
நண்பன் வீடு.....
கதை பேசும் நேரம்
காதில் விழும்
உயிர்ப்புள்ள
பாடல்கள்.....

கலாய்க்கும்
சங்கேத சங்கீதம்...
நண்பனின் அம்மா
அதட்டலில்
அடங்கும் குரல்...

கண் பார்த்து
சிரிக்கும் விஷமம் -
கூடிய நண்பர்களுக்கெல்லாம்
கலக்கும் வயிற்றை
எங்கே
அம்மா முன் போட்டு
உடைத்து விடுவாளோ என....

அம்மாவே சொல்வார்கள் -
எல்லாம் தெரியும்
எனக்கும் அக்காவுக்கும்
யார் யார்
எந்தெந்த பெண்ணை
பார்க்கிறீர்கள் என்று........

பாரதி
02-12-2003, 03:54 PM
கவிதை சரிதான் நண்பரே.... தலைப்புதான் ஏனிப்படி..? எனக்கு சரியாக புரியவில்லை.

இக்பால்
02-12-2003, 03:57 PM
எப்படியோ வீட்டுக்குள்ளே விடுகிறார்களே.

-அன்புடன் அண்ணா.

Nanban
02-12-2003, 04:01 PM
கவிதை சரிதான் நண்பரே.... தலைப்புதான் ஏனிப்படி..? எனக்கு சரியாக புரியவில்லை.

துரியோதனன் - நட்புக்கு இலக்கணமானவன்........

தன் மனைவியின் இடுப்பைப் பிடித்த நிலையில் கர்ணனைப் பார்த்த பொழுதில் கூட எடுக்கவோ, கோர்க்கவோ என்று கீழே கிடக்கும் முத்துகளைச் சுட்டி நகைப்பவன்........

அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் கர்ணனும், துரியோதனனின் மனைவியும் பின்னர் தான் இயல்பு நிலைக்குத் திரும்புவர்.......

தன் மனைவியையும் நண்பனையும் சந்தேகிக்காதவன்......

அதுபோலத் தான் - அந்த வீட்டிலும்.......

யாரும் யாரையும் சந்தேகிப்பதில்லை........

அதுசரி, நான் இதை எழுதியது, டீனேஜில் சில பின்னோக்கிய பார்வைகளுக்காக.....

தவறிப்போய் தனித்தலைப்பாக்கி விட்டேன்.......

பாரதி
02-12-2003, 04:04 PM
மிக்க நன்றி நண்பரே... இப்போதுதான் சரியான முறையில் விளங்கியது.

சேரன்கயல்
02-12-2003, 04:05 PM
அந்த நண்பர் குழுவில் செல்லப்பிள்ளையாக நீங்கள் மாட்டிய அனுபவம் உண்டா நண்பரே...
அது ஒரு அன்பான இம்சை...

கவிதையில் எனக்கும் சில ஆண்டுகளின் பின்னோக்கிய சிந்தனைகள்...நன்றி உங்களுக்கு...

Nanban
02-12-2003, 04:10 PM
அந்த நண்பர் குழுவில் செல்லப்பிள்ளையாக நீங்கள் மாட்டிய அனுபவம் உண்டா நண்பரே...
அது ஒரு அன்பான இம்சை...

கவிதையில் எனக்கும் சில ஆண்டுகளின் பின்னோக்கிய சிந்தனைகள்...நன்றி உங்களுக்கு...

அந்தக் குழுவில் செல்லப் பிள்ளையாக மாட்டிக் கொண்டது தானே - மேலே கூறிய அனுபவம்........

சேரன்கயல்
02-12-2003, 04:22 PM
அதானே பார்த்தேன்....
என் அனுபவத்தில் நண்பனின் தாய் நான் திருமணம் முடித்து அவர்களின் அழைப்பின் பேரில் அவசரமாய் ஒரு மதிய உணவு சாப்பிட சென்றபோது...கண்கள் பனிக்க பல சம்பவங்களையும் என் மனைவிக்கு பறிமாறினார்...
இந்தப் பயலை எப்படித்தான் நீ வளைச்சி பிடிச்சியோ போ... என் மனைவியைப் பார்த்து சொன்னபோது...அசடு (நான்தான்) வழிந்தது இன்னும் நிழற்படமாய் மனதில்...

Nanban
02-12-2003, 04:24 PM
இந்தப் பயலை எப்படித்தான் நீ வளைச்சி பிடிச்சியோ போ... என் மனைவியைப் பார்த்து சொன்னபோது...அசடு (நான்தான்) வழிந்தது இன்னும் நிழற்படமாய் மனதில்...

:lol: :oops:
:D:D:D

இளசு
02-12-2003, 09:25 PM
நண்பனின் நண்பன் துரியோதனன் , அவன் குடும்பத்தினர்
இனிய சேரனின் நண்பனின் அன்னை....

எளிதாய் என்னைக் கவர்ந்துவிட்டனர்.

பரிமாறிய தோழர்களுக்கு பாராட்டும் நன்றியும்..