PDA

View Full Version : யாரையும் காதலிக்காததில் இருக்கும் சுதந்திரம்



ஆதி
14-02-2011, 09:38 AM
யாரையும் காதலிக்காமல் இருப்பதில்
இருக்கும் சுதந்திரம்
இருப்பதில்லை
யாரையும் காதலிப்பதில்

உனக்கு பிடித்தமானவருக்கெல்லாம்
பாடும் வாழ்த்தட்டை ஒன்றையும்
ஸாக்குலெட்ஸ் சிலவும்
பரிசு பொம்மைகளும் வாங்கித்தரலாம்
உன்னை பிடித்தவர்களிடமிருந்தும்
இவற்றை நீ எதிர்ப்பார்க்கலாம்..


மீனுடனான தொட்டியொன்றை அளித்து
என்மேல் இவ்வாறே மேய்க்கின்றன
உன்கண்கள் எனலாம்

உன் செவ்விதழை மேலும் சிவப்பாக்கும்
இந்த லிப்ஸ்டிக் என்றாலும்
எனக்கு மிகப் பிரியமானது
உன் சாதாரண இதழ்களே என கவிதை சொல்லலாம்

உனக்கு தோன்றும் போது விருப்பமான ஒருத்தரை
அழைத்து காற்று முழுக்க
அரட்டை நப்பு விரிய அலைபேசலாம்
டேட்டிங் என்று ரெஸ்டாரண்ட் சென்று
ஐஸ்க்ரீம் உண்டு
பிணைந்து கொண்டு திரும்பி வரலாம்

இதழலைபாயும் நீள்முத்தத்தை,
நெருக்கமான தழுவலை
மோகப்பதம் மிதமாய் பரப்பும் பேச்சுக்களை
ஒன்றுகூடி ஒருமிக்கும் காமத்தை
யாதொரு தருணத்திலும்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்..

என்றாலும்
உன்னால் இயல்வதில்லை
யாரையும் காதலிக்காமலிருக்க
தீர்மானமாய் வேண்டுகிறாய்
நிச்சயமாய் உன்னை காதலிக்கும் ஒருத்தரை..

பிரேம்
14-02-2011, 09:51 AM
கவிதை அருமை..சார்..

முரளிராஜா
14-02-2011, 10:09 AM
நன்றாக உள்ளது கவிதை. வாழ்த்துக்கள்.

Nivas.T
14-02-2011, 10:58 AM
காதலை இன்னொரு கோணத்திலிருந்து உங்கள் பார்வை
அருமை ஆதன்

இப்போ காதலிக்கலாம்னு சொல்றீங்களா? இல்ல வேண்டாம்னு சொல்றீங்களா?

உமாமீனா
14-02-2011, 11:02 AM
உங்கள் பார்வை..... கவிதை......அருமை

மதி
14-02-2011, 02:38 PM
ஹாஹா... அந்த கடைசி பத்தி.. !! :D:D:D:D

நாஞ்சில் த.க.ஜெய்
14-02-2011, 03:32 PM
இனிமையான கவிதை நண்பரே!அதிலும் இறுதி நான்கு வரிகள் ஒரு கவிதையின் அழகு ..

கீதம்
15-02-2011, 08:12 PM
காதலிக்காதல்!
இவ்வார்த்தையில்
காதல் உண்டு,
காதலி உண்டு,
காதலனுக்கு மட்டும்
இடமொன்று இல்லை.
அதனால் கவலையும் இல்லை,
சுற்றுகிறானே சுதந்திரமாக!

காதலிக்காதலின் வரிகளை
கவனமாய்ப் பார்,
காதலி காதலி என்று
கதறுவதைக் கேள்!

இன்னுமென்ன தயக்கம்?
காதலி இனிதே!
இனிதே காதலி!

dellas
16-02-2011, 05:13 AM
காதல் செய்யச் சொல்கிறீர்களா? இல்லை காதலிக்காமல் இருக்கவேண்டாம் என்று சொல்கிறீர்களா?..கவிதை நன்று.

ஆதி
16-02-2011, 09:05 AM
பின்னூட்டிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

நேரியதாய் மையத்தை நோக்கி நகர்ந்து பயணிக்கும் கவிதைகள், மையத்திலிருந்து புரப்பட்டு மீண்டும் மையத்துக்குள்ளேயே முடியும் வட்டக்கவிதைகள், வாசகன் வாசிக்க வாசிக்க வார்த்தை வார்த்தையாய் வாசகனோடு இணைந்து மையகருத்தும் நகர்ந்திருக்கும் கவிதைகள், முன்னுக்குப்பின் வரிகளை மாற்றிப்போட்டு வாசகனை மையத்தை தேடவிடும் கவிதைகள் என்ற வகைகளில், எதிர்முனையில் இருந்து மையத்துக்கு நகர்ந்து வரும் கவிதையொன்றை எழுத முயன்ற முயற்சியே இக்கவிதை..

காதலிப்பது/காதலிக்கப்படுவது எவ்வளவு சுகமானதென்று எத்தனையோ கவிதைகள் உள்ளன, ஆனால் காதலிக்காததில் உள்ள வசதியை, கட்டுப்பாடின்மையை பற்றி பேசி கவிதையை காதலில் கொணர்ந்து முடித்து, இவ்வளவு இருந்து நாம் ஒருவரை காதலிக்கவும், நம்மை ஒருவர் காதலிக்கவுமே விரும்புகிறோம். காரணம், காதல் என்பது நுண்மீதமுமில்லாமல் நம்மை ஒப்படைத்து, நாம் காதலிப்பரை எந்த கேள்வியும் கேளாமல், எந்த உடன்படிக்கையையும் ஏற்படுத்தி தருவிக்க கூறாமல், எந்த நம்பிக்கையில் அடையாளத்தையும் கோராமல், எவ்வெதிர்ப்பார்ப்புமின்றி முழுமுற்றாய் சரணடைதல். அந்த ஒரு சரணடைதலின் தருணத்துக்காக நாம் காத்திருக்கிறோம், எந்த ஒரு சுதந்திரத்தையும் இழக்க தயாராக இருக்கிறோம், எவ்விதமான அடிமைத்தனத்தையும் ஏற்க துடிக்கிறோம், தன்கௌரவத்தை நாம் காதலில் கடைப்பிடிப்பதில்லை, எவ்வளவு தூரமும், எந்த விடயங்களையும் விட்டுக் கொடுக்கிறோம்..

இந்த காதலை செய்யாமலும்/கோராமலும்/எதிர்ப்பார்க்காமலும்/வேண்டாமலும் இருத்தல் நமக்கு சுலபமில்லாதது..

ஆதலால் காதல் செய் என்பதே கவிதையின் சாரம்...

அக்னி
09-03-2011, 10:06 AM
காதலை ஒதுக்கிவிட்டு
வாழ்வை முடித்துவிட முடியாது...

காதல் என்பது,
தவறாகப் பார்க்கப்பட காலம்தொட்டுக்,
காதல்
தவறாமற் சந்ததிகடத்தப்பட்டுக்
கொண்டுதான் இருக்கின்றது.

முதல் மனிதனுக்குக் காதல் வந்திருந்திருக்குமா
என்பது தெரியவில்லை...
ஆனால்
கடைசி மனிதனுக்குக் காதல் வந்தேயாகும்.
காதல் வரவில்லை என்றானால்,
அதுதான்
உலகத்தின்
கடைசி...

கடைசிப்பத்தி மிகவும் கவர்ந்தது.

பாராட்டு ஆதன்...

தாமரை
09-03-2011, 10:30 AM
யாரையும் காதலிக்காமல்
அப்படின்னு தலைப்பை வச்சிட்டு
எல்லோரையும் காதலிக்கறதில இருக்கிற வசதிகளை
பட்டியலிட்டு
சுயநலக் காதலைத்தான்
மனசு விரும்புதுன்னு சொல்லீட்டீங்களே ஆதன்..

ஆ!! தன் காதல்...

அக்னி
09-03-2011, 10:56 AM
அதுதானே அண்ணா,

காதலிக்காமல்
எப்படி ஆதனுக்குத் தெரிந்திருக்கும்
காதலிக்காததன் சுதந்திரம்...

ஆ!தன் காதல் என்று சரியாகத்தான் சொல்லிருக்கின்றீர்கள்... :p

மதி
09-03-2011, 12:51 PM
காதல்ன்னா??

அக்னி
09-03-2011, 01:12 PM
காதல்ன்னா??
அதுவா வரலைன்னா அப்பிடியே விட்டிடப்படாது மதி...
நாமளாத் தேடிப் போகணும்...

அப்பிடியும் கிடைக்கலேன்னாக் கூட,
பிரம்மச்சாரியத்தையோ, துறவையோ வாச்சும்
காதல் பண்ணனும்...

மதி
09-03-2011, 01:28 PM
பிரம்மச்சாரியத்தையோ, துறவையோ வாச்சும்
காதல் பண்ணனும்...
இத வேணா முயற்சி பண்ணலாம்..:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

தாமரை
09-03-2011, 04:04 PM
அதுவா வரலைன்னா அப்பிடியே விட்டிடப்படாது மதி...
நாமளாத் தேடிப் போகணும்...

அப்பிடியும் கிடைக்கலேன்னாக் கூட,
பிரம்மச்சாரியத்தையோ, துறவையோ வாச்சும்
காதல் பண்ணனும்...

இல்லாததை எப்படித் துறக்க முடியும் அக்னி?:confused::confused::confused::confused:

ஷீ-நிசி
09-03-2011, 04:34 PM
மீனுடனான தொட்டியொன்றை அளித்து
என்மேல் இவ்வாறே மேய்க்கின்றன
உன்கண்கள் எனலாம்

இந்த ஐடியா நல்லா இருக்கே..

நல்ல கவிதை ஆதன்..

அக்னி
09-03-2011, 04:40 PM
இல்லாததை எப்படித் துறக்க முடியும் அக்னி?:confused::confused::confused::confused:



இல்லாத தையில இருக்கிற தையைத் துறந்து ‘இல்லாத’ என்றாகலாமே... :redface:

ஓவியா
09-03-2011, 10:41 PM
யாரையும் காதலிக்காமல் இருப்பதில்
இருக்கும் சுதந்திரம்
இருப்பதில்லை
யாரையும் காதலிப்பதில்

உனக்கு பிடித்தமானவருக்கெல்லாம்
பாடும் வாழ்த்தட்டை ஒன்றையும்
ஸாக்குலெட்ஸ் சிலவும்
பரிசு பொம்மைகளும் வாங்கித்தரலாம்
உன்னை பிடித்தவர்களிடமிருந்தும்
இவற்றை நீ எதிர்ப்பார்க்கலாம்..


மீனுடனான தொட்டியொன்றை அளித்து
என்மேல் இவ்வாறே மேய்க்கின்றன
உன்கண்கள் எனலாம்

உன் செவ்விதழை மேலும் சிவப்பாக்கும்
இந்த லிப்ஸ்டிக் என்றாலும்
எனக்கு மிகப் பிரியமானது
உன் சாதாரண இதழ்களே என கவிதை சொல்லலாம்

உனக்கு தோன்றும் போது விருப்பமான ஒருத்தரை
அழைத்து காற்று முழுக்க
அரட்டை நப்பு விரிய அலைபேசலாம்
டேட்டிங் என்று ரெஸ்டாரண்ட் சென்று
ஐஸ்க்ரீம் உண்டு
பிணைந்து கொண்டு திரும்பி வரலாம்

இதழலைபாயும் நீள்முத்தத்தை,
நெருக்கமான தழுவலை
மோகப்பதம் மிதமாய் பரப்பும் பேச்சுக்களை
ஒன்றுகூடி ஒருமிக்கும் காமத்தை
யாதொரு தருணத்திலும்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்..

என்றாலும்
உன்னால் இயல்வதில்லை
யாரையும் காதலிக்காமலிருக்க
தீர்மானமாய் வேண்டுகிறாய்
நிச்சயமாய் உன்னை காதலிக்கும் ஒருத்தரை..


ஆதன், இப்படிதான் சிலர் காதல் புரிகின்றனர், அல்லது இப்படியெல்லாம் புரியலாம் என்று சிறு வகுப்பு நடத்தியது போல் உல்லது உள் விசயங்கள்.

ஆனாலுன் கவிதை செம்ம சூப்பர், நடமுறை வாழ்க்கைக்கு ஒத்து வருமானு மதிதான் கேட்கனும்.

செல்வா
10-03-2011, 03:04 AM
கவிதையின் கருவை அதன் வடிவமைப்பை ஆதனே விளக்கியாகி விட்டது...
நல்ல கவிதை ஆதன்.

இந்தக் கவிதையை வைத்து ஒரு கலகத்தைக் கிளப்ப நினைக்கிறேன் தனித் திரியாக.

வாழ்த்துக்கள் ஆதன்.... காதலிக்காமலே காதலிக்க.

தாமரை
10-03-2011, 03:14 AM
இல்லாத தையில இருக்கிற தையைத் துறந்து ‘இல்லாத’ என்றாகலாமே... :redface:

இல் + ஆத + தை...

அதாவது குடும்பம் உண்டாக்கும் தை மாதம்

அதாவது

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள். தை மாதம் அறுவடை முடிந்து கையில் நாலு காசு இருக்கும். வேலை வெட்டி அதிகம் இருக்காது. அதனால் அக்காலத்தில் கொண்டாட்டங்கள் விஷேஷங்கள் இருக்கும். தை பொறந்தா கல்யாணம் என்பது அதனால தான்.

இப்போ ஆத என்பதை ஆதன் என்பதன் மருவு எனக் கொண்டால்

இல் + ஆத + தை

இங்கே தை பிணைப்பு என்று பொருளாகிறது. ஆதவனுக்கும் அவன் மணையாளுக்கும் உள்ள பிணைப்பு என்று பொருளாகிறது.

அப்போ அதில் இருக்கும் தை - அதாவது பிணைப்பை அதாவது காதலை எடுத்து விட்டால்..

என்னே உமது வில்லத்தனம்:sauer028::sauer028::sauer028:

தாமரை
10-03-2011, 03:15 AM
கவிதையின் கருவை அதன் வடிவமைப்பை ஆதனே விளக்கியாகி விட்டது...
நல்ல கவிதை ஆதன்.

இந்தக் கவிதையை வைத்து ஒரு கலகத்தைக் கிளப்ப நினைக்கிறேன் தனித் திரியாக.

வாழ்த்துக்கள் ஆதன்.... காதலிக்காமலே காதலிக்க.

காதலிக்காமலேயே ஒரு காதல் தோல்வி!!!

ஏற்கனவே இந்த டைட்டிலை நான் ரிசர்வ் செய்து வச்சிருக்கேன்... :redface::redface::redface:

ஆதி
10-03-2011, 03:27 AM
//இந்தக் கவிதையை வைத்து ஒரு கலகத்தைக் கிளப்ப நினைக்கிறேன் தனித் திரியாக.

வாழ்த்துக்கள் ஆதன்.... //

எதுக்கு வாழ்த்துக்கள் டா, நீ பண்ண போற கலகத்துக்கா ?

ஆதி
10-03-2011, 03:29 AM
இல் + ஆத + தை...

அதாவது குடும்பம் உண்டாக்கும் தை மாதம்

அதாவது

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள். தை மாதம் அறுவடை முடிந்து கையில் நாலு காசு இருக்கும். வேலை வெட்டி அதிகம் இருக்காது. அதனால் அக்காலத்தில் கொண்டாட்டங்கள் விஷேஷங்கள் இருக்கும். தை பொறந்தா கல்யாணம் என்பது அதனால தான்.

இப்போ ஆத என்பதை ஆதன் என்பதன் மருவு எனக் கொண்டால்

இல் + ஆத + தை

இங்கே தை பிணைப்பு என்று பொருளாகிறது. ஆதவனுக்கும் அவன் மணையாளுக்கும் உள்ள பிணைப்பு என்று பொருளாகிறது.

அப்போ அதில் இருக்கும் தை - அதாவது பிணைப்பை அதாவது காதலை எடுத்து விட்டால்..

என்னே உமது வில்லத்தனம்:sauer028::sauer028::sauer028:

தை எடுத்துட்டா, இல் ஆதன் = இல்லாதன், மொத்தமா முடிச்சுவிட்டாச்சு...


கல்யாணமே இன்னும் பண்ல, அதுக்குள்ல டிவொஸ் வரைக்கும் கொண்டு போறாங்களே :(

மதி
10-03-2011, 04:29 AM
காதலிக்காமலேயே ஒரு காதல் தோல்வி!!!

ஏற்கனவே இந்த டைட்டிலை நான் ரிசர்வ் செய்து வச்சிருக்கேன்... :redface::redface::redface:
நான் பதிவு பண்ணி வச்சிருக்கறதால்ல நினைச்சுட்டு இருக்கேன்..:icon_b:

ஆக விரையில் ஆதன் இல்லாதன் ஆகப்போறாரு.. :icon_b::icon_b::icon_b:

மதி
10-03-2011, 04:30 AM
தை எடுத்துட்டா, இல் ஆதன் = இல்லாதன், மொத்தமா முடிச்சுவிட்டாச்சு...


கல்யாணமே இன்னும் பண்ல, அதுக்குள்ல டிவொஸ் வரைக்கும் கொண்டு போறாங்களே :(
டிவோர்ஸ் பண்ண கல்யாணம் ஆயிருக்கணுமா என்ன??:eek::eek:

ஆதி
10-03-2011, 04:33 AM
டிவோர்ஸ் பண்ண கல்யாணம் ஆயிருக்கணுமா என்ன??:eek::eek:

என்ன சொன்னேன் :)

ஆதி
10-03-2011, 04:38 AM
நான் பதிவு பண்ணி வச்சிருக்கறதால்ல நினைச்சுட்டு இருக்கேன்..:icon_b:

ஆக விரையில் ஆதன் இல்லாதன் ஆகப்போறாரு.. :icon_b::icon_b::icon_b:

இப்பவே இல்லாதன் தான் மதி, செல்வாவும், அண்ணாவும் ப்ளான் பண்றத பார்த்த இனியும் இல்லாதன் தான்

செல்வா
10-03-2011, 12:56 PM
இப்பவே இல்லாதன் தான் மதி, செல்வாவும், அண்ணாவும் ப்ளான் பண்றத பார்த்த இனியும் இல்லாதன் தான்

இல்லாதன் = இல் + ஆதன்
இல் - இல்லம், வீடு

வீடு - பெரிய வீடா , சின்ன வீடா....?

எந்த வீட்டீலிருக்கும் ஆதன் இல்லாதன் :)

ஆதி
10-03-2011, 01:01 PM
இல்லாதன் = இல் + ஆதன்
இல் - இல்லம், வீடு

வீடு - பெரிய வீடா , சின்ன வீடா....?

எந்த வீட்டீலிருக்கும் ஆதன் இல்லாதன் :)

இப்போதைக்கு எந்த வீடும் இல்லாதன்

ஆதவா
10-03-2011, 01:21 PM
ஆதவனுக்கும் அவன் மணையாளுக்கும் உள்ள பிணைப்பு என்று பொருளாகிறது.

அப்போ அதில் இருக்கும் தை - அதாவது பிணைப்பை அதாவது காதலை எடுத்து விட்டால்..

என்னே உமது வில்லத்தனம்:sauer028::sauer028::sauer028:

அய்யய்யோ.... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே!!

ஆதி
10-03-2011, 02:41 PM
அய்யய்யோ.... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே!!

இத பார்த்த ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி தெரியுதே!!

தாமரை
10-03-2011, 03:04 PM
அய்யய்யோ.... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே!!

இப்ப ஆகணுங்கறீயா இல்லை வேணாங்கறீயா?

தாமரை
10-03-2011, 03:07 PM
இல்லாதன் = இல் + ஆதன்
இல் - இல்லம், வீடு

வீடு - பெரிய வீடா , சின்ன வீடா....?

எந்த வீட்டீலிருக்கும் ஆதன் இல்லாதன் :)

அவர்தான் எதையும் தனக்குன்னு வெச்சுக்கிறதில்லையே (தப்புத் தப்பாவே அர்த்தம் வருதே... ஆதன் நீ நிஜமாவே பாவம்பா!!!)

அதாவது

இல்லா + தன் அப்படின்னு சொன்னேன்,

செல்வா
10-03-2011, 04:25 PM
இப்ப ஆகணுங்கறீயா இல்லை வேணாங்கறீயா?

இப்ப ஆக வேணாங்கறார்....!

அப்படித்தானே ஆதவா?

தாமரை
10-03-2011, 04:47 PM
இப்ப ஆக வேணாங்கறார்....!

அப்படித்தானே ஆதவா?

அப்போ அப்ப ஆயிருச்சா?