PDA

View Full Version : அறிவதென்று...?

பிரேம்
13-02-2011, 11:51 PM
தான் கொண்ட காதலுக்காய்..
மேகத்திலிருந்து விடுபட்டு..
மண்ணோடு விழுகின்றன மழைத்துளிகள்..
விழுந்த துளிகளுக்கு விடைகொடுத்து..
மீண்டும் மேகத்தோடு சேர்த்துவிடுகிறது மண்..
துளியின் காதலை மன்ணறிவது எப்போது..

கொட்டித் தீர்த்த மழையின்
ஞாபகமாய்.. மரக்கிளை சேர்த்து வைத்த
சில துளிகள்..நில்லாமலே சென்று விடுகின்றன..
துளிகளுக்கு தெரியுமா கிளையின் காதல்..

கிளையோடு வாழவே..
கனிகள் விரும்பினாலும் கூட...
காலம் வந்தபின் கனிகளை
கைவிடுகிறன கிளைகள்...
கனியின் காதலை கிளையறியுமா..

நாளெல்லாம்..
அலையின் காதலை சொல்லாமல் சொன்னாலும்..
அடிப்பதாய் வந்து உரசிச் சென்றாலும்...
அதனின் காதல் அசட்டயாக்கப் படுகிறதே..
கரை அறியுமா அலையின் ஆவலை..

காண்பதெல்லாம் அவளாய் தோன்ற - அவள்
கண்முன் தோன்றினால் மட்டும்..
காட்டமாய் பார்க்கிறாள்..-
கடவுளே...இந்த
கனவுக் காதலை...அந்த
கண்மணி அறிவதென்று...

அதுசரி..
காலமே இந்த காதலென்று..
கடவுளே கண்ணீர் விட்டாலும்கூட
விடைகொடுத்த விழிகளை..
விரக்தியோடு பார்க்குமே துளிகள்..
கண்ணீரின் காதலை கடவுள் அறிவாரா..

முரளிராஜா
14-02-2011, 05:38 AM
அருமையான கற்பனை நண்பரே. மேலும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்

கீதம்
14-02-2011, 07:31 AM
கலித்தொகையில் ஒரு பாடல் உண்டு. தன் மகள் அவள் காதலனுடன் செல்கிறாளென்பதை அறிந்த செவிலித்தாய் அவர்களிருவரையும் தேடிப்போகும் வழியில் எதிர்ப்படும் அந்தணரிடம் விசாரிக்க அவர் சொல்லுவார்,

"அம்மா, அப்படிச் செல்வது அறமே ஆதலால் அவர்களைத் தடுக்கவில்லை. மலையில் பிறக்கும் சந்தனத்தால் அதைப் பூசுவோர்க்கல்லாது மலைக்கு உண்டாகும் பயன் என்ன? கடலில் பிறக்கும் முத்தால் அதை அணிபவர்க்கன்றி கடலுக்கு உண்டாகும் பயன் என்ன? யாழிடத்தே பிறந்தாலும் அவ்வோசை அதைக் கேட்பவர்க்கல்லாது யாழுக்கு உண்டாகும் பயன் என்ன? அதுபோல் உன் மகளும் பயன்படும் பருவத்தில் உனக்கு உதவமாட்டாள். கற்புடையவளாய் தன் கணவனோடு போனாள். அவளை நினைத்து வருந்தவேண்டாம்."

சேருமிடம் சேர்வதில்தான் பிறவியின் பயன். நீங்கள் சொல்பவை எல்லாம் பிறந்தவீட்டுடன் அல்லவா காதல் கொண்டு புகுந்தகம் செல்ல மறுக்கின்றன! நல்ல கற்பனை. பாராட்டுகள் பிரேம்.

govindh
14-02-2011, 08:10 AM
காதலென்று...
அறிவதென்று...?!

அருமை...
பாராட்டுக்கள் பிரேம்.

பிரேம்
14-02-2011, 10:00 AM
கலித்தொகையில் ஒரு பாடல் உண்டு. தன் மகள் அவள் காதலனுடன் செல்கிறாளென்பதை அறிந்த செவிலித்தாய் அவர்களிருவரையும் தேடிப்போகும் வழியில் எதிர்ப்படும் அந்தணரிடம் விசாரிக்க அவர் சொல்லுவார்,

"அம்மா, அப்படிச் செல்வது அறமே ஆதலால் அவர்களைத் தடுக்கவில்லை. மலையில் பிறக்கும் சந்தனத்தால் அதைப் பூசுவோர்க்கல்லாது மலைக்கு உண்டாகும் பயன் என்ன? கடலில் பிறக்கும் முத்தால் அதை அணிபவர்க்கன்றி கடலுக்கு உண்டாகும் பயன் என்ன? யாழிடத்தே பிறந்தாலும் அவ்வோசை அதைக் கேட்பவர்க்கல்லாது யாழுக்கு உண்டாகும் பயன் என்ன? அதுபோல் உன் மகளும் பயன்படும் பருவத்தில் உனக்கு உதவமாட்டாள். கற்புடையவளாய் தன் கணவனோடு போனாள். அவளை நினைத்து வருந்தவேண்டாம்."

சேருமிடம் சேர்வதில்தான் பிறவியின் பயன். நீங்கள் சொல்பவை எல்லாம் பிறந்தவீட்டுடன் அல்லவா காதல் கொண்டு புகுந்தகம் செல்ல மறுக்கின்றன! நல்ல கற்பனை. பாராட்டுகள் பிரேம்.

மிக்க நன்றி..கீதம் மேடம்.

Nivas.T
14-02-2011, 11:19 AM
பிரிவில்தான் காதலின் ஆழம் காணலாம்

பிரிவு என்பது காதலின் வலியை உணர்த்தும் கருவி

நல்லதொரு கவிதை பிரேம்
பாராட்டுக்கள்

பிரேம்
14-02-2011, 11:51 PM
பிரிவில்தான் காதலின் ஆழம் காணலாம்

பிரிவு என்பது காதலின் வலியை உணர்த்தும் கருவி

நல்லதொரு கவிதை பிரேம்
பாராட்டுக்கள்

நிவாஸ்-ன்னாவுக்கு நன்றிகள் பல...