PDA

View Full Version : கால விமோச்சனம்



கீதம்
13-02-2011, 07:44 PM
நிகழ்காலத்தின் நிலைவாயிலில் நின்றுகொண்டு
என்றேனும் ஓர்நாள் உறுதியாய் வரவிருக்கும்
என் விமோச்சனத்துக்காக தவமிருக்கிறேன்..
சாபவிமோச்சனமோ பாபவிமோச்சனமோ இல்லை…..
கால விமோச்சனம்!

காலத்தின் பிடியினின்று
என்னை விடுவிக்கும் விமோச்சனம்!
நெஞ்சப்பாறையில் பாசியெனப் படர்ந்துவிட்ட
அவநம்பிக்கை காரணமாய் வழுக்கத்துவங்கும்
வாழ்வாதாரத்தின் ஒரே பிடிப்பு!.

வரும் வரும் என்று பார்த்திருந்த காலமெல்லாம்
ஒரு மலைப்பாம்பைப்போலவே
சலனமேதும் உண்டாக்காமல் மெல்ல ஊர்ந்து
நிகழ்காலமென உருக்கொண்டுவிடுகிறது.
காலத்தின் சதியை உணருமுன்னரே
அதுவும் மரணித்து இறந்தகாலமாகிவிடுகிறது.

இறந்தகாலத்தின் எச்சங்கள் எதையும்
எடுத்தெறிய இயலாமல்
மன எரவாணத்தில் செருகியே வைத்திருக்கிறேன்.

சுமை தாங்காது எரவாணம் இடிந்து
வீழும் நாளொன்று நெருங்குவதை உணர்கிறேன்.
இருந்தும் ஏதேனும் சப்பைக்கட்டும்
சமாதானமும் சொல்லிக்கொண்டு….
சேமித்துக்கொண்டே இருக்கிறேன்,
தூக்கியெறியவேண்டிய நினைவுகளை!

யாவற்றுக்குமொரு கால விமோச்சனம் வரும்!
உயிர்க்குடில் பற்றியெரியும் நாள் வரும்!
அன்று….
பழுப்பேறிய பழந்தாள்களைப்போல
பிறர் பார்வைக்கு மறைக்கப்பட்ட இரகசியங்களும்
இத்துப்போன நினைவுகளும் கருகிச் சாம்பலாகும்!

பிரேம்
13-02-2011, 11:56 PM
கவிதை அருமை..மேடம்..எரவாணம்-ன்னா என்ன அர்த்தம்..?

முரளிராஜா
14-02-2011, 01:36 AM
கவிதை அருமை கீதம் அவர்களே.
எரவாணம் என்பது வீட்டு கூடத்தின் மேல் அமைக்கபட்டுள்ள மரத்தை அல்லது மேற்கூரையை தான் சொல்வார்கள்.

கீதம்
15-02-2011, 07:45 PM
கவிதை அருமை..மேடம்..எரவாணம்-ன்னா என்ன அர்த்தம்..?

நன்றி பிரேம், எரவாணம் என்பதன் பொருளை முரளிராஜா சொல்லியிருக்கிறார், பாருங்கள். கிராமங்களில் இதில்தான் தங்களுக்கு வரும் கடிதங்களை செருகிவைப்பார்கள். அந்த அர்த்தத்தை வைத்து எழுதப்பட்ட கவிதை இது.


கவிதை அருமை கீதம் அவர்களே.
எரவாணம் என்பது வீட்டு கூடத்தின் மேல் அமைக்கபட்டுள்ள மரத்தை அல்லது மேற்கூரையை தான் சொல்வார்கள்.

விளக்கத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி முரளிராஜா.

கௌதமன்
16-02-2011, 03:46 AM
இழந்துவிட்ட காலம் இறந்த காலம்,

வசந்தகால நிச்சயமற்றது வருங்காலம்.

கடந்த கால கவலை மறந்து

வருங்கால ஏக்கம் களைந்து

நிகழ்காலத்தில் நிம்மதி கிடைத்தால்

வாழ்க்கை நெஞ்சுக்கு இனிக்கலாம்

காலவிமோச்சனக் கவிதை மன்றத்துக்கு கிடைக்குமா?

.........பாராட்டுக்கள் கீதம்!

[ஆமாம் இப்படி முதல் பரிசுக்குரிய நல்ல கவிதைகளை இங்கேயே பதியம் போட்டால் நிர்வாகி அறிவித்த போட்டிக்கு வேறு வைத்திருக்கிறீர்களோ?]

கீதம்
16-02-2011, 05:06 AM
இழந்துவிட்ட காலம் இறந்த காலம்,

வசந்தகால நிச்சயமற்றது வருங்காலம்.

கடந்த கால கவலை மறந்து

வருங்கால ஏக்கம் களைந்து

நிகழ்காலத்தில் நிம்மதி கிடைத்தால்

வாழ்க்கை நெஞ்சுக்கு இனிக்கலாம்

காலவிமோச்சனக் கவிதை மன்றத்துக்கு கிடைக்குமா?

.........பாராட்டுக்கள் கீதம்!

[ஆமாம் இப்படி முதல் பரிசுக்குரிய நல்ல கவிதைகளை இங்கேயே பதியம் போட்டால் நிர்வாகி அறிவித்த போட்டிக்கு வேறு வைத்திருக்கிறீர்களோ?]

அசத்துகிறீர்கள் கெளதமன். கவிதை அழகு. பாராட்டும் நன்றியும்.

கவிதைப்போட்டியா? நான் பலமுறை முட்டி மோதியும் திறவாத கதவல்லவா அது? இந்தமுறையும் முட்டுதல் நிச்சயம்.

இளசு
11-04-2011, 09:04 PM
எரவாணம் --- எத்தனை காலமாச்சு இச்சொல் கேட்டு..
என் நினைவேடுகளும் தூசி தட்டப்பட்டு..
மனமெங்கும் தும்மல்கள்...


வாழ்த்துகள் கீதம்..



இனி கவிதை வாசித்து கனன்ற என் நெஞ்சுக்கு
என் எண்ணத் தெளிப்பு --



மறக்காமல், மறைவாய்ப் புதைத்த
நினைவேடுகளின் பாரம் தாங்காமல்
அரற்றும் நெஞ்சே......

உள்ளத்தில் நல்ல உள்ளம்..
நினைவுகளை மறக்கா உள்ளம்
உறங்காதென்பது அறிந்த நெஞ்சே....


காலவிமோசனம் வேண்டும் நெஞ்சே...
காலம் அதையே பரிசாய் அளிக்கட்டும்..

உடல் வாழும்போதே
மனம் மரித்து
நினைவேடுகள் அரித்து
கூடாய் நடமாடும்
Alzheimers வாராமல்...

நினைவுகளின் பாரம்
இறகுப்பொதியாய் அழுத்திய நிலையிலேயே
காலன் காலவிமோசனம் வழங்கட்டும்...


-----------------------------------------------

கீதம்
12-04-2011, 02:33 AM
எரவாணம் --- எத்தனை காலமாச்சு இச்சொல் கேட்டு..
என் நினைவேடுகளும் தூசி தட்டப்பட்டு..
மனமெங்கும் தும்மல்கள்...


வாழ்த்துகள் கீதம்..



இனி கவிதை வாசித்து கனன்ற என் நெஞ்சுக்கு
என் எண்ணத் தெளிப்பு --



மறக்காமல், மறைவாய்ப் புதைத்த
நினைவேடுகளின் பாரம் தாங்காமல்
அரற்றும் நெஞ்சே......

உள்ளத்தில் நல்ல உள்ளம்..
நினைவுகளை மறக்கா உள்ளம்
உறங்காதென்பது அறிந்த நெஞ்சே....


காலவிமோசனம் வேண்டும் நெஞ்சே...
காலம் அதையே பரிசாய் அளிக்கட்டும்..

உடல் வாழும்போதே
மனம் மரித்து
நினைவேடுகள் அரித்து
கூடாய் நடமாடும்
Alzheimers வாராமல்...

நினைவுகளின் பாரம்
இறகுப்பொதியாய் அழுத்திய நிலையிலேயே
காலன் காலவிமோசனம் வழங்கட்டும்...


-----------------------------------------------

கடைசி இரு பத்திகளின் அழுத்தம் கண்ணீராய் வெளியேற்றம். எத்தனை தத்துவார்த்தமான உண்மை. அழுந்தச் சொன்னதற்கு நன்றி இளசு அவர்களே.