PDA

View Full Version : பூவினால் ஓர் காயம்[காதலர்தின கவிதை]



inban
13-02-2011, 03:28 PM
மனதை தாளிட்டவளே
காலத் துளிகளை
விரயமாக்கிவிட்டாய்

கல் எனும் மனதில்
எறும்பாய் ஊர்ந்தேன்
நீதான்
தத்துவத்தையே
தகர்த்துப் போய்விட்டாய்

பெண்ணே
என் சகாராவை பிளந்தோடி
சட்டென்று வற்றிப்போன
நைல் நீ

பூ சூடுபவளே
என் இதயமும்
பூ போலத்தானே
இதையும் சூடிஇருந்தால் என்னவாம்?

என்காதல் கேணியில்
கல் எறிந்தவளே
உன் அலையில்
என் கரைகள்
சிதைக்கப் பட்டதைப்பார்

அந்த ஆடிக்காற்றில்
அனாதையான
உன் கூந்தல் முடிகளில்
முத்துக்களை சேகரித்திருக்கிறேன்

உன்னோடு பேச வந்து
முகம் நோக்கா போனதுண்டு,
உன்னை தொட வந்து
நிழலேனும் தீண்டியதில்லை

முதலில் முரடன் என்றாய்,
பிறகு கோழை என்றாய்,
இப்போதோ
பைத்தியமென்கிறாய்...

கட்டுப்பாடுகளும் சமூகமும்
கைவிலங்காக
சிறை கூடமாய்
உன் நினைவுகள்

போகட்டும்!
எல்லாம் போகட்டும்!!
என்மரிப்பிலாவது
சிதையோடு
உன் நினைவுகளும்
புதைந்து போகட்டும் .

பிரேம்
13-02-2011, 11:58 PM
அருமை..காயமும்..கவிதையும்..

முரளிராஜா
14-02-2011, 01:23 AM
காதல் கவிதைகள் தொடரட்டும்.

உமாமீனா
14-02-2011, 02:15 AM
காயம் காயம் தான் - மருந்து போடவேண்டும் (அதாவது காலம் என்ற மருந்து)

dellas
22-02-2011, 09:51 AM
மனதை தேற்றுங்கள் இன்பன். தடுமாறா உங்கள் காதல் தடம்மாறாமல் இருந்தால், வழிமாறாமல் உங்கள் கைகளில் வரும். வாழ்த்துக்கள்.

Nivas.T
22-02-2011, 10:40 AM
காயத்தின் வலி கவிதையாய் கரைந்து போகட்டும்
கண்களின் கண்ணீர் கசிந்து ஓடட்டும்
இதயம் இறுதியாய் அமைதி காணட்டும்
கனவுகள் புதிதாய் பூக்கட்டும்

வலியை உணர்த்தும் கவிதை

ஆனால் அழகு பாராட்டுகள் இன்பன்

inban
22-02-2011, 12:32 PM
நன்றி நண்பர்களே