PDA

View Full Version : மனம் ஒரு குழந்தை;பாகம்;1ராஜாராம்
13-02-2011, 01:03 PM
நன்றி
*******
டாக்டர்.கே.கோபாலக்கிருஷ்ணன்.(மனநல மருத்துவர்)திருச்சி.
டாக்டர்.என்.மணி.(மனநல மருத்துவர்)கும்பகோணம்.
டாக்டர்.ருத்ரன்(மனநல மருத்துவர்)சென்னை.
டாக்டர்.கே.ஜி.ரமோநாராயாணா(மனநல மருத்துவர்)கொச்சின்.
**************************************************************
(மனிதனது மனம் ஒரு குழந்தையே.அதனை பக்குவமாய் அரவணைத்து,பக்குவமாய் கொண்டுசெல்வது ,நமது கைகளில்தான் இருக்கிறது.நம்முடைய அரவணைப்புகள் கிட்டாமல் போகும்போது,....நம் மனம் தன்னை இழக்கிறது,செய்வது அறியாது துடிக்கிறது.

ஆம்....உடலுக்கு வரும் நோய்கள் போலவே,மனிதனது மனதிற்கும் நோய்கள் வருவதுண்டு.
அப்படிப்பட்ட நோய்களைப் பற்றி விரிவானப் பார்வையில் ,சித்தரிக்கப்பட்டதே....இந்தப் படைப்பு.இது ஒரு தொடர் கட்டுரை)
***************************************************************

1)மனசோர்வு(DEPRESSION)
************
அண்றாட வாழ்வில், நாம் அதிகம் பயன்படுத்தும்..3வார்த்தைகள்.
1)"டென்ஷன்....ஒரே டென்ஷனா இருக்கு..",
2)"என்னான்னு தெரியலை... ரெண்டு நாளா,மனசு டல்லாவே இருக்கு",
3)"மனசு ஒரே குழப்பமா இருக்கு...மைன்டே ஜாம் ஆனாமனதிரி இருக்கு",

நாம் வாழும் சமூகமும்,நம்மை சார்ந்த மக்களும்,இவற்றிர்க்கு காரணமாகலாம்...
இது இயல்பான ஒன்று.மனதை பாதிக்காத விஷயம்.

ஆனால்....இந்த சுபாவங்கள் எல்லைமீறி செல்லும்போது....மனிதனது மூளையில் ஏற்படும் ரசாயாண மாற்றமே....இவ்வகை மனநோயிற்கு காரணம் ஆகிறது.

மனசோர்வுகள் இரண்டு வகைப்படும்.
முதலாவது மனச்சோர்வு:-ஒரு தோல்வியினால்,,..அல்லது ஒரு இழப்பினால் ஏற்படும் ,சோகமான மனநிலையில் ஏற்படுவது

இதை ஒரு மிதமான மனச்சோர்வு என்பார்கள்.

எனது மொபைல் ஷாப்பிற்கு ,பாடல்களை மெமரிக்கார்டில் பதிவு செய்ய வரும் ஒருசிலர்,
"சார்...இந்த மெமரிக்கார்ட் முழுதும், சோகப் பாடல்களை பதிவு செய்து தாருங்கள்...",என்பார்கள்.
"ஏன் சோகப்பாடலா கேட்கிறீர்கள்",என்று நான் விளையாட்டாய் கேட்ப்பதுண்டு.
அதற்கு அவர்கள் தரும் பதில்,
"எனக்கு சோகப் பாடல்கள் தான் பிடிக்கும்...ராத்திரி நேரத்திலே ...அந்தப்பாடல்ளை கேட்டுக்கொண்டே தூங்கிருவேன்",
இந்த முதலாவது மனசோர்வினை,ஆங்கிலத்தில்
"REACTIVE DEPRESSION"அல்லது "SECONDARY DEPRESSION".......என்பார்கள்.

இவ்வகை மனச்சோர்வில் இருப்பவர்களுக்கு,
அமைதியான இடம்,
சோகத்தை பிரதிபலிக்கும்,ஒலி,அல்லது,ஒளி(திரைப்படங்கள்),
ஆறுதலான வார்த்தைகள்,
அவர்களது சோகத்தை பங்குகொள்ளும் மனிதர்கள்,
இவற்றில்மட்டுமே ஈடுபாடு இருக்கும்.
இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
எனினும்,நம்பிக்கையின்மை,சிறுசிறு விஷயங்களுக்கு கூட கண்ணீர் விடுவது,வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட இயலாமை,தன்னைத்தானே பரிதாபமாக எண்ணிக்கொள்ளுதல் ......இப்படிப் போன்ற குணாதீசியங்கள்,வாழ்வின் முன்னேற்றங்களுக்கு தடையாகலாம்.

எனவே...
ஒருசிலருக்கு,முறையான ஆலோசனையும்,ஆரம்ப காலக்கட்டங்களில் மருந்துகளும் தேவைப்படலாம்.

மனநல மருத்துவர்களிடம்,கவுன்சிலிங்(கலந்தாய்வு) செய்துக்கொள்வது சிறப்பானது.

(அயல்நாடுகளில் மனநலமருதுவரிடம் கலந்தாய்வு,கவுன்சிலிங்,செய்வது பொதுமருத்துவமாய் உள்ளது.ஆனால்,..நம் நாட்டில் அது சரியானவிதத்தில் மக்களைச் சென்றடையவில்லை,என்றே எண்ணுகிறேன்.
ஒருவர்,கலந்தாய்விற்கு மனநலமருத்துவரைச் சென்றுப்பார்த்தாலே...."அவன் மென்டல் ஆயிட்டான்,... அவனுக்கு கழன்டுப்போச்சு...ஒருமாதிரியா ஆயிட்டான்...',இப்படி மனநோயாளிகளைப் புண்படுத்தும் அநாகரீக வார்த்தைகளும்,கேலி கிண்டல்களுமே,தான் அதிகம் உள்ளது

இரண்டாம் வகை மனச்சோர்வு;தீவிரமான மனச்சோர்வு என்பார்கள்....
ENDOGENOUS அல்லது PRIMARY DEPRESSION

இது உடலில் ஏற்படும் ரசாயண மாறுதல்களினாலும்,குறிப்பாக,நரம்புகளில் செய்தி பரப்பு நிலைகளில் ஏற்படும் ரசாயாண மாறுதல்களினால் ஏற்படும்.ஆண்,பெண்,இருவருக்கும் ஏற்படும் இந்த மனச்சோர்வு,பெண்களிடம் அதிகமாக காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இத்தகைய இரண்டாம்நிலை மனச்சோர்வு,பெரும்பாலும்,
20வயதிலிருந்து....40வயதுகளில் அதிகம் ஏற்படுவதாக மருத்துவச் சான்றுகள் கூறுகின்றன.
இதற்கு உடனடி சிகிச்சை தராவிடில்,...தற்கொலைக்கான சாத்தியங்கள் பெரும்பாலும் ஏற்படும்.

"ஏன் ஒருமாதிரி இருக்கே?",

"என்னான்னு எனக்கே தெரியல",

"வீட்டில பிரச்சனையா?",

"இல்லையே...",

"ஆப்பிஸில் ஏதும் பிரச்சனையா?",

"இல்லை...",

"பணக்கஷ்ட்டம்மா...?",

"இல்லையே...",

" அப்படின்னா...என்னதான் ஆச்சு உனக்கு?",

"சரியா தூக்கம் வரலை...டாய்லெட் போனா கஷ்ட்டம்மா இருக்கு....திடீருன்னு அழுகை வருகிறமாதிரி இருக்கு....பின்மண்டை பாரமாக இருக்கு....வெறுத்துப் போனமாதிரி இருக்கு....பசிக்கவில்லை....வேலையில் கவனமே இல்லாமப் போச்சு....ஏதோ ஒரு பதட்டம் வருது....தெம்பே இல்லமல் இருக்கு...செத்துப்போயிடலாமான்னு தோணுது......",
ஆம்.......இவையே...அதீத மனச்சோர்விற்கான அறிகுறிகள்.

இந்நிலை உருவாக வாழ்க்கையில் இவர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்காது.சுகமான,வாழ்க்கையில் கூட இது உருவாகும்.
பரம்பரையாக வரக்கூடிய நோயென்றுக்கூட இதைச் சொல்லலாம்.
தையிராய்டு சுரப்பியின் குறைவால்கூட இது தோன்றலாம்.

இதற்கு சிகிச்சை மிக அவசியம்...

சிகிச்சைக்குமுன் மனநல மருத்துவரின் கலந்தாய்வு மிகமிக முக்கியம்.
வெறும் தூக்கமாத்திரைகளோ,...மதுவோ....புகையோ....ஆறுதலான வார்த்தகளோ....இதற்கு உதவாது.
மனநல நிபுனர்களின் நேரிடை சந்திப்பும்,கலந்தாய்வும்,அவர்கள் கொடுக்கும் மாத்திரைகளும்,மனவியலாளர் ஆலோசனையும்,மட்டுமே இதற்கு ஒரேஒரு தீர்வு,...

(எனது இந்தப் படைப்பு,தகவல்கள் தரும் கட்டுரை வடிவம் மட்டுமே.மனநல நோய்களுக்கான சிகிச்சைகளுக்கோ...ஆலோசனைகளுக்கோ...இது உகந்தது அல்ல).........................(மனம் ஒரு குழந்தை...............தொடரும்)

உமாமீனா
14-02-2011, 02:09 AM
இவ்வளவு விசியம் இருக்கா? எழுதுங்கள் மேற்கொண்டு படித்து தெரிந்து கொள்வோம் - பயனுள்ள பதிப்பு

முரளிராஜா
14-02-2011, 05:32 AM
மனசோர்வு அனைவருக்கும் சில சமயங்களில் வருவதுதான் என்றாலும் அது வருவதர்க்கான காரணங்களை விரிவாக விளக்கியுள்ளாய் ராஜாராம். உனது அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்.

ராஜாராம்
14-02-2011, 06:01 AM
நன்றி உமாமீனா அவர்களுக்கும்,என் நண்பன் முரளிராஜாவிற்கும்.

vseenu
26-09-2011, 08:50 AM
அனைவரையும் மருத்துவமனை செல்ல சொல்கிறீர்களே நியாயமா?