PDA

View Full Version : நான் ஒரு நட்சத்திரம்.........



Nanban
02-12-2003, 02:09 PM
ஒரே வானில்
சூர்யனும் சந்திரனும்
எழுவதில்லை -

நான் நட்சத்திரம்
ஆகிவிடுகிறேன் -

நீ
வானத்தில்
நிலவாக வருகையில்......

இக்பால்
02-12-2003, 02:13 PM
எதற்கும் நான் மேகமாக வருகிறேன். :)

அருமை நண்பர் நண்பன்.-அன்புடன் இக்பால்.

Nanban
02-12-2003, 02:23 PM
மேகக்கூட்டங்கள்
கீழே
உலகத்தை
மூடி வைக்கட்டும்.......

நாம் காதல் புரிவோம்
மேலே.......

(நண்பர் இக்பால் என்னை மடக்குவதிலேயே குறியா இருக்கிறீங்க...... போல....... ம்...... ஆகட்டும் பார்க்கலாம்....... சண்டையிட்டுக் கொள்ளாமலே சவால்களைச் சந்திப்பது எப்படி என்று எல்லோரும் நம்மைப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.........)

இக்பால்
02-12-2003, 02:26 PM
அதேதான் என் எண்ணமும்.
ஆனால்
உங்களை மட்டும்
மூடி வைத்தால்...
உலகத்தை மூட
தேவையில்லையே!

Nanban
02-12-2003, 02:30 PM
அதேதான் என் எண்ணமும்.
ஆனால்
உங்களை மட்டும்
மூடி வைத்தால்...
உலகத்தை மூட
தேவையில்லையே!

ஆகாயாத்தில்
தோன்றும்
அத்தனை
நட்சத்திரங்களும்
நான் தான்.......

மீனவனின்
வலை கொண்டு
விண்மீன்களை
மூடுவது முடியுமா?

சேரன்கயல்
02-12-2003, 02:31 PM
நட்சத்திரங்கள் பல
உன்னவனாய் நான்...
நிலவாக நீ...
விண்வெளியில் காதல்...
நல்லா இருக்கு நண்பன்...
(நல்ல வேளை இங்கே பெண்கள் யாரும் இல்லை, இருந்தா ஏன் காதலியை துணைக்கோளா சொன்னீங்கன்னு கேப்பாங்க)

இக்பால்
02-12-2003, 02:54 PM
ஓ...இது நல்லா இருக்கே... நிலா ஒரு துணைக்கோளா?
பெண்கள் எதற்கு? தம்பி... நீங்களே போதும்.-அண்ணா.

Nanban
02-12-2003, 03:02 PM
ஓ...இது நல்லா இருக்கே... நிலா ஒரு துணைக்கோளா?
பெண்கள் எதற்கு? தம்பி... நீங்களே போதும்.-அண்ணா.

அமெரிக்காவும்,
ரஷ்யாவும்,
ஐரோப்பியக் கூட்டமைப்பும்
சீனாவும், ஜப்பானும்
பின்னர் நாமும்
அனுப்பிய துணைக்கோள்கள்
இன்று குப்பையாய்
வான்வெளியில்......

இனி புதிதாகப் போகும்
துணைக்கோள்கள்
பழைய குப்பைளுடன் மோதி
உயிரிழக்காத
தொழில்நுட்பத்திற்கு
எல்லா நாடுகளுக்குள்ளும் போட்டி......

இந்திய விஞ்ஞானிகளுக்கும்
இதுவே சவாலாக
முதல் குடிமகன் பணித்தது -

ஆம் -
பெண்கள் துணைக்கோள்கள்
என்றால்
இனி விண்வெளியிலும்
இடம் கிடைக்கப் போட்டியாக......
நிகழும் சக்களத்தி சண்டை......

சேரன்கயல்
02-12-2003, 03:13 PM
அடடே...
தொடரும் அசத்தல்...
அழகாய் சொல்லும் நண்பன்...கலக்குங்கள்...

பாரதி
02-12-2003, 03:23 PM
ஒரே வானில்
சூர்யனும் சந்திரனும்
எழுவதில்லை -

நான் நட்சத்திரம்
ஆகிவிடுகிறேன் -

நீ
வானத்தில்
நிலவாக வருகையில்......


அன்பு நண்பரே,
ஒரே வானத்தில்தான் சூரியனும் சந்திரனும் இருக்கின்றன. சூரியனும் ஒரு நட்சத்திரமே...இல்லையா..? கவிதைக்கு தடையில்லைதான்.. ஆனாலும் சும்மா... கேட்கிறேன். உங்கள் கவிதையைப் படித்ததும் எனக்குத் தோன்றியது இது.

ஒரே வானில் எழுந்தாலும்
சூரியனும் சந்திரனும் போல்
எப்போதும் சந்திப்பதில்லை.

நான் தந்த வெளிச்சம் என்றாலும்
உன்னைப் பிரிந்தே இருப்பதால்தான்
நான் தினமும் உருகுகிறேன்.

ஆகையால்
நான் நட்சத்திரம்
ஆகிவிடுகிறேன் -

நீ
வானத்தில்
நிலவாக வருகையில்......

Nanban
02-12-2003, 03:32 PM
அருமை பாரதி.........

சந்தித்துக் கொள்ளாததைத் தான், ஒரே வானில் எழுவதில்லை என்று எழுதினேன். சூரியனும் ஒரு நட்சத்திரம் தான். ஆகையால், நட்சத்திரம் என்று சொல்லிக் கொள்வதால், நஷ்டம் என்பதும் இல்லை தான்.......

நீங்கள் எழுதியதும் சரிதான்......

நன்றாக இருக்கிறது...... பாராட்டுகள்......

சேரன்கயல்
02-12-2003, 03:35 PM
சூப்பர் பாரதி...

பாரதி
02-12-2003, 03:39 PM
அன்பு நண்பரே... எப்போதாவதுதான் படித்து பதில் எழுத வேண்டும் போல தோன்றும். உடனே எழுதி விட்டேன். தவறாக எழுதியிருந்தால் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். நன்றி.

Nanban
02-12-2003, 04:04 PM
அன்பு நண்பரே... எப்போதாவதுதான் படித்து பதில் எழுத வேண்டும் போல தோன்றும். உடனே எழுதி விட்டேன். தவறாக எழுதியிருந்தால் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். நன்றி.

அய்யோ....... not at all....... பதில் எழுதியது தான் சந்தோஷமாக இருக்கிறது......

இளசு
02-12-2003, 07:50 PM
இயற்பியல்..... கொஞ்சி புதுக்கவிதையாய் இங்கே பொங்கி வழிய
நண்பன் - பாரதியின் கூட்டுச் சிந்தனை - அறிவுக்கு விருந்து.

Nanban
03-12-2003, 04:49 AM
காலை எழுந்து கவிதைப் பக்கம் பார்த்தால், அத்தனை கவிதைகளுக்கும் கருத்து பக்கத்தில் பெயர் இளசு........ ம்ம்ம்ம் நன்றாகத் தான் இருக்கிறது - ஒரு புறம் நண்பன் - மறுபுறம் இளசு...........

எழுதி முடிக்க நான் பட்ட கஷ்டத்திற்கு சற்றும் குறையாத பணி உங்களுடையது

நனறிகள் .............இத்தனையும் பொறுமையாகப் படித்தமைக்கு........

அமரன்
24-11-2007, 07:37 AM
காதலில் தொடங்கி
அறிவியல் தொட்டு..
காதலி துணையாக்கிவிட்டு.
சக்களத்தி சண்டை வரை
சுவாரசியம் குன்றாத இழை..