PDA

View Full Version : உலக நாடுகளின் பழமொழிகள்:பாகம்1:



ராஜாராம்
12-02-2011, 02:44 PM
(திரு.எஸ்.ஏ.சுலைமான்,எம்.ஏ.அவர்கள் தொகுத்து வழங்கிய,
"பழமொழி ஆயிரம்",
என்ற புத்தகத்தில் இருந்த,உலக நாடுகளின் பழமொழிகளில் சிலவற்றை,உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)


1)"ஒரு ஏழை மற்றொரு ஏழைக்கு உதவும் போது
கடவுளே சிரிக்கின்றான்".............................................(இங்கிலாந்து)

2)"உன் அன்பை மனைவியிடம் காட்டு
உன் இரகசியங்களை தாயிடம் கூறு"............................(அயர்லாந்து)

3)"பணம் அறிஞர்களுக்குச் சேவை செய்கிறது
முட்டாளை ஆட்சி செய்கிறது.......................................(பிரான்ஸ்)

4)"வெள்ளி பேசும்போது முட்டள்கள் கவனிக்கிறார்கள்
தங்கம் பேசும்போது அறிஞர்கள்கூட கவனிக்கிறார்கள்"...(ஜெர்மனி)

5)"மனசாட்சி ஆயிரம் சாட்சிகளுக்குச் சமம்"..................(இத்தாலி)

6)"ஒரு வெளவால் வீட்டிற்கு இன்னொரு வெளவால்
வந்தால்.அதுவும் தொங்கிக் கொண்டுத்தான்
இருக்கவேண்டும்".......................................................(இலங்கை)

7)"கவலைக்கு மருந்து ,
அதைக் காலின் கீழ் போடுவதுதான்".............................(அயர்லாந்து)

8)"வாழ்கையில் எதுவும் நடக்கலாம்
பணக்காரன் கூட ஏழையின் வீட்டு கதவை
தட்டும் நேரம் வரலாம்.................................................(ரஷ்யா)

9)"பச்சை இலைகளே எரிந்தால்
காய்ந்த இலைகள் எம்மாத்திரம்?".................................(நைஜீரியா)

10)"தீய செயல்களை பனிக்கட்டியின்மேல் எழுது:
நல்ல செயல்களை பாறையின்மேல் எழுது".................(எஸ்த்தோனியா)

11)"ஞானம் மறைந்துவிடவில்லை
ஞானிகள் மறைந்துவிட்டார்கள்"..................................(இந்தியா)

12)"ஆத்மாவின் நோய்களே பாவங்கள்".......................(பிலிப்பைன்ஸ்)


தொடரும்.....

முரளிராஜா
12-02-2011, 03:07 PM
பழமொழிகள் அருமை
அது சரி இந்த பழமொழிதான் எனக்கு புரியவில்லை

"உன் அன்பை மனைவியிடம் காட்டு
உன் இரகசியங்களை தாயிடம் கூறு"

இந்த பழமொழியில் இரகசியங்களை மனைவியிடம் கூறாதே என்று சொல்லியிருந்தால் ஏற்று கொள்ளளாம் அதைவிடுத்து மேலே சொன்ன பழமொழியை பார்த்தால் தாய்க்கு அன்பு தேவையில்லை என்பது போல அல்லவா உள்ளது. அதற்கான பதிலை ராஜாராம் தருவாரா? (மாட்னியா, காப்பியடிச்சி போட்டில மரியாதையா விளக்கத்தை சொல்லு).

உமாமீனா
13-02-2011, 02:31 AM
எல்லா நாட்டு பழமொழிகளையும் தெரிந்துகொள்வோம் -



(மாட்னியா, காப்பியடிச்சி போட்டில மரியாதையா விளக்கத்தை சொல்லு).

காப்பி அடிச்சி போட்டதுன்னு சொல்லிட்டு விளக்கம் கேட்டால் எப்படி? லொள்ளுதானே -ராசாவே வம்புக்கு இழுகலேன்னா தூக்கம் வராதோ உமக்கு