PDA

View Full Version : உளி...



Nivas.T
12-02-2011, 07:06 AM
கனவுகளோடு கட்டப்பட்ட வாழ்க்கையை
சுமந்து சுமந்து கூனிக் குறுகிப் போகும்
தருணமெல்லாம் நம்பிக்கையை என்னுள்
விதைத்தது அவமானங்கள்

வெற்றி விரைவில் வந்து சேரும்
என்னும் செய்தியை விரைந்து வந்து
சொன்னது தோல்விகள்

இதயம் இறுகிப்போய்
கனத்து கனத்து ஒடிந்துவிழ முயலும்
ஒவ்வொரு சமயமும் இளகச் செய்தது
இழிச்சொற்கள்

இப்படி என்னை சிறுது சிறுதாய்
செதுக்கி சிற்பமாய் செய்தது
சமுதாயம்...

உமாமீனா
12-02-2011, 08:17 AM
எவ்வளவு அழகாக சொன்னிர்கள் வாழ்க்கையை

பிரேம்
12-02-2011, 08:28 AM
புடமிடப்பட்ட வாழ்க்கை..கவிதை அருமை..:aktion033:

Nivas.T
12-02-2011, 08:31 AM
எவ்வளவு அழகாக சொன்னிர்கள் வாழ்க்கையை

மிக்க நன்றி உமாமீனா

Nivas.T
12-02-2011, 08:32 AM
புடமிடப்பட்ட வாழ்க்கை..கவிதை அருமை..:aktion033:

பாராட்டுக்கு நன்றி பிரேம்

ஜானகி
12-02-2011, 09:02 AM
தன்னம்பிக்கையை ஊட்டும் உங்கள் கவிதையைப் படிக்கும்போது, தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் மனிதனின்...[ பெண்ணின்...? ] சிலையைப் பார்ப்பது போல இருக்கிறது. அருமை ! துவண்ட உள்ளங்களுக்கு ஊக்கமளிக்கும் மருந்தாகும்...

Nivas.T
12-02-2011, 11:44 AM
தன்னம்பிக்கையை ஊட்டும் உங்கள் கவிதையைப் படிக்கும்போது, தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் மனிதனின்...[ பெண்ணின்...? ] சிலையைப் பார்ப்பது போல இருக்கிறது. அருமை ! துவண்ட உள்ளங்களுக்கு ஊக்கமளிக்கும் மருந்தாகும்...

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஜானகி