PDA

View Full Version : குயிலைக் கண்டேன்.........



Nanban
02-12-2003, 01:45 PM
மழை ஓய்ந்த
நேரம் தான்
எனக்குப் பிடிக்கிறது.....

தெருவை
கழுவி
ஓடும்
நீர்.

அன்றுதான்
அம்பலமாகும் -
குயிலாய்
இத்தனை நாளும்
ஒலித்த
உன் கொலுசு.......

இக்பால்
02-12-2003, 01:52 PM
ஏன்? அன்றுதான் கொலுசிற்குறிய முகத்தைப் பார்க்க முடியுமா?
நல்லாத்தான் இருக்கு. இன்னும் கொஞ்சம் பெரிசா கொடுக்கலாமே!
-அன்புடன் இக்பால்.

சேரன்கயல்
02-12-2003, 02:00 PM
மழையில் ஆடை நனையாமலிருக்க கொலுசு அம்பலமாகும் கதையை கவிதையாக்கிய நண்பனின் கண்களில் நானும்...

Nanban
02-12-2003, 02:03 PM
நன்றி, இக்பால், சேரன் கயல்.........

பொறுமையாக உட்கார்ந்து தொகுத்து வெளியிட முடியவில்லை...... அத்தனை அவசரம்........ ஆதலால் எழுத எழுத வெளியீடுகள்........

இக்பால்
02-12-2003, 02:04 PM
சேரன்கயல் தம்பி... :)

ஆங்...அப்படியா சேதி?

எனக்கு ஏன் அப்படி மூளை வேலை செய்யவில்லை?!

அருமையான கவிதை. பாவம் நண்பர் நண்பன்.

என் முதல் விமர்சனத்தைப் பார்த்து வெறுத்து இருப்பார்!! :(

-அன்புடன் அண்ணா.

Nanban
02-12-2003, 02:12 PM
சேரன்கயல் தம்பி... :)

பாவம் நண்பர் நண்பன்.

என் முதல் விமர்சனத்தைப் பார்த்து வெறுத்து இருப்பார்!! :(

-அன்புடன் அண்ணா.

நீங்கள் சரியாக நினைத்ததாகத் தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.............

இக்பால்
02-12-2003, 02:15 PM
போங்க நண்பர் நண்பன்... நீங்க காலைத்தான் பார்ப்பீர்கள்
என நான் கனவிலும் நினைக்கவில்லை. என் மனம் முகத்தை
மட்டும்தான் கற்பனை செய்து பார்த்தது.-அன்புடன் இக்பால்.

சேரன்கயல்
02-12-2003, 02:21 PM
கொலுசு சத்தம் கேட்டு பழகி விட்டன காதுகள்...ஓசையின் உருவத்தை கண்களும் பார்க்க...மழை விட்ட நேரம் வசதியாக்கியது...

பாரதி
02-12-2003, 03:44 PM
அருமை நண்பரே... கொலுசைக் காண இயற்கையை தூது விடலாம் போல..!

Nanban
02-12-2003, 04:18 PM
மழை விடு தூது.........

இளசு
02-12-2003, 08:43 PM
குயிலின் சிறப்பம்சம் சொல்லும்
முதல் மரியாதை பாடல் வரி....

குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா???


இந்தக் கொலுசுக் குயிலின் குரல் மட்டும் பலதினங்கள்...
அந்தக் குயிலின் அபூர்வ முக தரிசனங்கள்...?
வருணன் மனம் வைத்தால் மட்டும் வாய்க்கும் வரங்கள்.

இனிய பார்வை - இயல்பான நிகழ்வு.

பாராட்டுகள் நண்பனுக்கு..

puppy
02-12-2003, 08:47 PM
ரசிக்கும் காட்சிபா.....நன்று நண்பனே.......

Nanban
03-12-2003, 04:30 AM
நன்றி, இளசு, பப்பி அவர்களே.........

அமரன்
24-11-2007, 07:47 AM
வெள்ளத்திலாடை நனையாதிருக்க
தூக்கிப்பிடித்து தத்தித் தாவுகையில்
செவி தேக்கிய குயிலின் முகம்
விழியை விழிக்க வைத்தது..

அருமையானகவிதை.

ஆதி
24-11-2007, 08:02 AM
மழை ஓய்ந்த
நேரம் தான்
எனக்குப் பிடிக்கிறது.....

தெருவை
கழுவி
ஓடும்
நீர்.

அன்றுதான்
அம்பலமாகும் -
குயிலாய்
இத்தனை நாளும்
ஒலித்த
உன் கொலுசு.......

வாய்ப் பிழந்த
சிப்பிகளாய் உன் கொலுசுகள்
வறண்ட என் செவிகளில்
விழும் துளிகளாய்
அதன் ஒலிகள்..

வாழ்த்துக்கள் நண்பரே..

-ஆதி