PDA

View Full Version : என்னால் மறக்கமுடியாத மனிதர்கள்:2ராஜாராம்
11-02-2011, 12:39 PM
இது ஒரு உண்மைச் சம்பவம்.சம்மந்தப்பட்ட,நபர்களது பெயர்களும்,ஊரின் பெயரும்,மாற்றம் செய்யப்பட்டுள்ளது.யாரையும் புண்பத்தவேண்டும் என்ற நோக்கில்,இப்படைப்பு, படைக்கப்படவில்லை.
கதைவடிவில் சித்தரிப்பதற்காக நேரிடை வசனங்களும்,நடையும் மாற்றப்பட்டுள்ளது))


(21.4.2003...சிதம்பரம் ,அருகே, பரங்கிப்பேட்டை..)

மங்களத்தின் ஒரே மகன் செல்வக்குமார் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தான்.கனவனை இழந்த மங்களத்திற்கு,அவளது மகன்,மருமகள்,அவளது பேரன் சக்தி,இவர்கள் மூவர்தான் ஆதரவாக அவள் எண்ணிய உறவுகள்.நாளடைவில்.....மங்களத்திற்கும்,அவளது மகனுக்கும்,ஒற்றுவராமல் போனது.
"வயசான காலத்தில,,...போட்டதை சாப்பிட்டுவிட்டு...ஒரு மூலையிலே படுத்து தூங்கவேண்டியதுதானே",..என்று அவளது மகன் கூற,
அதற்கு மங்களமோ
"மூலையிலே கிடக்க நான் என்ன?உன் வீட்டு நாயா?என் சொத்தெல்லாம் உனக்குத்தானேடா எழுதி வேச்சேன்..அப்படி இருந்தும் இப்படி பேசுறியே...நன்றி கெட்ட நாயே",என்று மங்களம் கண்ணீருன் சப்தமிட,
"இந்தே...என்ன ஓவரா பேசுரே.....நாயி...கீயினுல்லாம்...என் புருஷனை என் எதிர்லேயே திட்டுறியே...கெழ முண்டம்"என்று அவளது மருமகள் பதிலுக்கு காரசாரமாய் கூச்சளிட்டாள்.

அப்பா அம்மா பாட்டி போடும் சண்டையினைக் கண்டு ,10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த,மங்களத்தின் பேரன் சக்தி...திறுதிறுவென விழித்துக்கொண்டு ஒரு மூலையில் நின்றான்.

(29.05.2003.காலை 11மணி)
வழக்கம்போல,மங்களத்திற்கும் அவளது மகனுக்கும்,மருமகளுக்கும்,இடையே ஏற்பட்டக் கலவரம்,அத்துமீறி ஒருவருக்கு ஒருவர் ,வார்த்தைகள் தடிக்கும்வன்னம்,ஆனது.
ஒருக்கட்டத்தில்,இறுதியில் மங்களத்தின் மகன்,அவளை கண்மூடித்தனமாக அடித்து,அவளை வீட்டு வாசலின் வெளியேத்தள்ளினான்.
"டேய்...நீ நாசமாத்தான்டா போவே....உன் குடும்பம்மே மண்ணோட மண்ணாப் போயிடும்பாரு.....ஐயோ ஐயோ...என் வயிறு எரியுதேடா....சண்டாளா...நாசமாப்போடா....",என்று வாய்க்கு வந்தப்படி தன் மகனை சபித்துவிட்டு,...கைநிறைய மண்ணை வாரிவாரி இரைத்தாள்.

அதற்குப்பின் ....மங்களத்திற்கு ஆதரவு அளித்தது...பாண்டிச்சேரி தீபஒளி முதியோர் இல்லம்.(22.2.2005..பாண்டிச்சேரி..தீபஒளி முதியோர் இல்லம்...)
ஆதரவற்ற குழந்தைகள்,சிலரை அந்த முதியோர் இல்லத்திற்கு தஞ்சமாக அழைத்துவந்தார்...அந்த இல்லத்தின் நிறுவனர் சுந்தரமூர்த்தி.ஆம்...சுனாமியால் குடும்பங்களை இழந்தவர்கள்,..அந்த சிறுவர்கள்.அந்த சிறுவர்களைக் கண்ட ,முதியோர்கள்,சந்தோஷமாய் அவர்களை வரவேற்று,கொஞ்சி மகிழ்ந்தனர்.
அந்த சிறுவர்கள் கூட்டத்தில் இருந்து, ஓடோடி வந்த மங்களத்தின் பேரன்
"பாட்டி...!!!!",என்று கதறிஅழுதவன்னம்,...அவளை கட்டிஅனைத்தான்..
அவனைக்கணட,மங்களம்,ஒருநிமிடம் அதிர்ச்சியில் உறைந்தேப் போனாள்.
"பாட்டி...!!!!,போன வருஷம் வந்த சுனாமியில்...அப்பா அம்மா...ரெண்டுபேரும் கடலில் மூழ்கி செத்துப்போயிட்டாங்க,...நம்ம வீடு வாசல் எல்லாம் அழிஞ்சிப்போச்சு",...என்று அவன் கூறியதுதான் தாமதம்....
"ஐயையோ....செல்வக்குமாரு...என்னை விட்டு போயிட்டியேடா,,,...நான் சபித்தது...என் புள்ளைக்கு பலித்துவிட்டதே...ஐயையோ,...என் புள்ளைய நானே சபித்துக் கொன்னுட்டேனே...நான் பாவி நான் பாவி...புள்ளையக் கொன்னப் பாவி",...என்று தலையில் அடித்துக் கொண்டு,
"உன் குடும்பம் மண்ணா போகனும்னு சொன்னேன் அது நடந்துப்போச்சே,....நான்தான்டா பாவி..",கதறி அழுதவன்னம் மயங்கி விழுந்தாள்.

இன்று
(11.02.2011...பெங்களூர்)

தான் கோபத்தில் திட்டிய வார்த்தைகள்,மகனுக்கு நடந்துவிட்டதை எண்ணி வருந்திய மங்களம்,அந்த முதியோர் இல்லத்தை விட்டு வெளியேறினாள்.தன் மகனது வசம்சம் தழைக்கவேண்டும்.அது மண்ணோடு மண்ணாக ஆனது என்று ஆகக்கூடாது என்று எண்ணினாள்..
தனது பேரனுக்காக,புதிய வாழ்க்கையைத் தொடங்கினாள்.அடுக்குமாடி குடுயிருப்பில் வசிப்பவர்கள்.,,வீடுகளில் வீட்டு வேலை செய்துக் கொண்டு இருக்கிறாள்.மற்ற நேரங்களில்,அப்பளம்,வடகம்,செய்து,அதை கடைகளுக்கு விற்பனையும் செய்கிறாள்.
அவளதுப்பேரன்,தனியார் நிறுவனத்தில்,கணினித்துறையில் கைநிறைய சம்பாதிக்கின்றான்.

தன் பேரன் சக்திக்கு,நல்ல இடத்தில்திருமணம் செய்து,அவன் பெற்றெடுக்கும் பிள்ளையைப்(தன் மகனது வம்சத்தை),.. பார்த்த பிறகே....தான் கண்மூடவேண்டும்,என்று கடவுளிடம் தினம் வேண்டிக்கொள்கிறாள்.

பாரதி
11-02-2011, 01:37 PM
அன்பு நண்பரே,
உங்கள் மனதில் தங்கி இருப்பவர்களைப் பற்றி நீங்கள் நினைவுகூறி வருவதைப்படித்தேன். சிறிய வேண்டுகோள்: தலைப்பில் இருக்கும் என்னில் என்பதற்கு பதிலாக என்னால் என்று திருத்தினால் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
இத்திரியில் இருக்கும் தேதிகள் முரண்படுவது போல தோன்றுகிறது.

வார்த்தைகளுக்கும் வலிமை இருப்பதை நம்பத்தான் வேண்டும் போல..!

ராஜாராம்
11-02-2011, 02:09 PM
எனது படைப்பில் இருந்த தவறுகளை,நட்புடன் உடன் சுட்டிக்காட்டிய,பாரதி அவர்களுக்கு நன்றிகள்.படைப்பில்
தாங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை,திருத்தியும் மாற்றியும் அமைத்துள்ளேன்.
நன்றி

நாஞ்சில் த.க.ஜெய்
11-02-2011, 04:23 PM
தாயின் மனதினை நோகும் படி நடக்கும் மகன் ,(மரு )மகள் கள் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ..
அந்த தாயின் ஆசை நிறைவேறும் என் நம்புவோம் ...

அக்னி
11-02-2011, 05:39 PM
நாட்குறிப்பெழுதும் பழக்கம் இருக்கின்றதா ராஜாராம்...

நிஜவாழ்வின் பதிவுகள் தொடரட்டும்...

என்னைப்பொறுத்தவரையில்,
எந்த வரமும் தாயின் சாபத்தில் சக்தியற்றுப் போய்விடும்...

தாயைத் தந்தையை நோகடிப்பவர்களால், மற்றவர்களை எப்படிக் கனம் செய்யமுடியும்...?

இங்கு தாயின் சாபம் அக்குடும்பத்தை அழித்துவிட்டது என்பதைவிட,
அவர்கள் அத்தாய்க்குச் செய்த தீங்கின் பாவம்தான் அழித்துவிட்டது என்பேன்.

எத்தாயும் மனதாரத் தன் பிள்ளைகளைச் சபித்துவிடுவது இல்லை.

இன்னா செய்தாரை ஒறுத்து, அவர் நாண (இல்லையென்றாலும்) நன்னயம் செய்யும் தாய்..,
தாய்மையின் மேன்மைக்கு இன்னுமோர் சாட்சி...

நற்பதிவு... பாராட்டு...

கீதம்
11-02-2011, 10:21 PM
மனம் நெகிழ்த்திய பதிவு. இன்னமும் பல குடும்பங்களில் வயதான பெற்றோர் மூலையில் இருக்கும்படிதான் பணிக்கப்படுகின்றனர்.

அந்தப் பாட்டியின் செயற்தீவிரம் போற்றுதற்குரியது. நிச்சயம் அவர் ஆசை நிறைவேறும்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

p.suresh
11-02-2011, 11:20 PM
அந்த தாயின் வைராக்கியம் போற்றப்பட வேண்டிய ஒன்று. இச்சம்பவத்தைப் படிக்கும் போது

என்றோ கேட்ட கதை நினைவுக்கு வந்தது.

ஒருவன் தன் காதலி ஆசைப்பட்டாள் என்பதற்காக தன் தாயைக் கொன்று அவள் இதயத்தைக் கையில் கொண்டு சென்றானாம். போகும் வழியில் கல் தடுக்கி கீழே விழ

பதறிப் போன தாயின் இதயம் சொன்னதாம்,

"பாத்து மெல்ல போப்பா" என்று.

ஜானகி
12-02-2011, 12:51 AM
மனதில் வலியைக் கொடுக்கும் சம்பவம்....இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடக்கவேண்டாம் என்று இறைவனை வேண்டுவோமாக......

"யா காவார் ஆயினும் நா காக்க காவாக்கால்

சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு."

உமாமீனா
12-02-2011, 02:08 AM
வீடுகளில் வீட்டு வேலை செய்துக் கொண்டு இருக்கிறாள்.மற்ற நேரங்களில்,அப்பளம்,வடகம்,செய்து,அதை கடைகளுக்கு விற்பனையும் செய்கிறாள்.
அவளதுப்பேரன்,தனியார் நிறுவனத்தில்,கணினித்துறையில் கைநிறைய சம்பாதிக்கின்றான்.

தன் பேரன் சக்திக்கு,நல்ல இடத்தில்திருமணம் செய்து,அவன் பெற்றெடுக்கும் பிள்ளையைப்(தன் மகனது வம்சத்தை),.. பார்த்த பிறகே....தான் கண்மூடவேண்டும்,என்று கடவுளிடம் தினம் வேண்டிக்கொள்கிறாள்.

படிக்க படிக்க எழுத்துக்கள் மறைந்து விட்டன கண்கள் கலங்கிவிட்டது.
இந்த விடா முயற்சி நெகிழ வைக்கிறது - மேன் மேலும் சிறப்புடன் வாழ பிராத்திப்போம்

ராஜாராம்
12-02-2011, 04:23 AM
நன்றி..பாரதி அவர்கள்,கீதம் அவர்கள்,ஜானகி அவர்கள்,அக்னி அவர்கள்,ஜெய் அவர்கள்,சுரேஷ் அவர்கள்,உமாமீனா அவர்கள்,மற்றும் அணைத்து நண்பர்களுக்கும்.

(நண்பர் அக்னி அவர்களுக்கு,எனக்கு நாட்குறிப்பு எழுதும் வழக்கம் எனக்கில்லை.எனினும்,குறிப்பிடும்படியான நாட்களும்,சம்பவங்களும்,என் மனதில் பதிந்து விடுகின்றன்)

முரளிராஜா
12-02-2011, 12:30 PM
கதைகளையும், பல உண்மை சம்பவங்களையும் தமிழ் மன்றத்தில் அள்ளித் தெளிக்கும்
ராஜாராம், தொடரட்டும் இது போல் பல.
வாழ்த்துக்கள்

அக்னி
12-02-2011, 12:38 PM
நாட்குறிப்பாய் உங்கள் மனஏடு...
உங்கள் நினைவின் விதைகள் மன்றநிலத்திற் தொடர்ந்தும் துளிர்க்கட்டும்...

சூரியன்
12-02-2011, 01:15 PM
பெற்றோரை இப்படி புண்படுத்துவது இந்த நாட்களில் அதிகம் நடக்கின்றது இது குறைய வேண்டும்.

தனது பேரனுக்காக பாட்டி செய்த செயல் முயற்சி திருவினையாக்கும் என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன..

sarcharan
14-02-2011, 06:47 AM
தாய் தந்தையார் தங்களது சொத்துக்களை மரித்த பின்னர் தனது
வம்சத்தார்க்கு விட்டு செல்ல வேண்டும். பிள்ளைகளும் பெற்றவர்களை அன்போடு நடத்த வேண்டும்.

ஷீஜா ப்ரியா
14-02-2011, 01:22 PM
என்னால் (என் மனதில்)மறக்கமுடியாத ஒருவரைப் பற்றி சொல்கிறேன்,அதையும் உங்க பகுதியில் பப்ளிஷ் பன்னுங்க.

ரங்கராஜன்
15-02-2011, 07:06 AM
தொடர்ந்து உங்கள் பங்களிப்பை மன்றத்திற்கு அளியுங்கள்..... முரளி... ராஜா

ராஜாராம்
15-02-2011, 07:47 AM
நன்றி அருமை நண்பர் ரெங்கராஜனுக்கு,.
தங்கள்...,
புரளி..:aetsch013:மன்னிக்கவும்...முரளி.....ராஜா

பிரேம்
16-02-2011, 06:51 AM
பரங்கிப்பேட்டை-ல..எங்க மாமா வீடு
ஒன்னு இருக்கு..(மாமா பொண்ணும்தான்..:D)..ஞாபகப்படுத்திட்டிங்க..:frown:

கலைவேந்தன்
22-04-2012, 03:14 PM
மனம் நெகிழவைத்த மற்றொரு சம்பவம். இவைதான் இன்னும் தொடர்கின்றன என்பது மனது வருந்தற்குரியது.