PDA

View Full Version : பேருந்துப் பயணங்கள்..!



பிரேம்
11-02-2011, 10:35 AM
வழிகள் கொண்ட இருபுறங்கள்..
வாசனை கொண்ட பச்சை மரங்கள்..
அரட்டை நண்பர்களின் அறிமுகம் கொடுத்து..
அழகான நாட்களை பரிசாகக் கொடுத்தது
இந்த பேருந்து பயணம்...

நில்லாமலே வழியோடு ஓடிவிடும்
மரங்களைப்போல...
சோகங்கள் துக்கங்கள் எல்லாம்..
சொல்லாமலே சென்றன..

கவிதையென்று நான் நினைத்து
கண்ட கண்ட சொற்கள் சேர்த்து...
காதலி காண வேண்டும் என
கண்படும் இடமெல்லாம்.. கிறுக்கி வைத்த..
பின் சீட்டு கிறுக்கல்கள்..

அழகு தேவதை..
அவளின் பார்வையில் கிறங்கி..
அடுத்த நிறுத்தத்தில் இறங்கி
அசடு வழிந்த கணங்கள்...

அவளின் தந்தையை அறிந்து..
இருக்கையில் இடம் கொடுத்து..
பயணச்சீட்டும் நானே எடுத்து..வாழ்க்கை
பயணத்திற்கு சீட்டெடுக்க...
புன்முறுவலுடன் அவர் செய்த
கை அசைவில் தெரிந்தது என் காதலுக்கான
பச்சைக்கொடி..

பேருந்தின் சக்கரங்கள் காணும்
மேடு பள்ள ஏற்றத் தாழ்வுகளை..
பயணிக்கும் மனித மனங்கள்..
காண்பதில்லை..கானவிடுவதுமில்லை..
இந்த பயணம்..

நான் கொண்ட ஞாபகங்களை சேர்த்து..
வழிகளில் என் விரல் கோர்த்து..
என்னோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது..
இந்த பேருந்து பயணங்கள்..

M.Jagadeesan
11-02-2011, 11:20 AM
கருத்து நன்றாக உள்ளது.எதுகை, மோனையோடு இருந்தால்
பொன்மலர் நாற்றமுடைத்து என்பதுபோல அழகாக இருக்கும்.
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்!

Nivas.T
11-02-2011, 01:02 PM
உங்கள் அனுபவம் கவிதை இரண்டும் அழகு
நன்றி பிரேம்

கீதம்
11-02-2011, 10:42 PM
பேருந்துப் பயணமே உங்கள் காதல் பயணத்துக்கு பேருந்து சக்தி அளித்திருக்கிறது என்கிறீர்கள். பாராட்டுகள் பிரேம்.

உமாமீனா
12-02-2011, 02:24 AM
சொந்த அனுபவமோ? அருமை. வாழ்த்துக்கள்

பிரேம்
13-02-2011, 11:10 AM
நன்றி..ஜெகதீசன் சார்..கீதம் மேடம்..நிவாஸ் சார்..& umameena .