PDA

View Full Version : தொடரும் தலைமுறை!



lenram80
10-02-2011, 12:04 PM
ஆல மர நிழலில் தொட்டிலில்
அழுது தொங்கி இருப்பான்!

வயல் வெளி வெயிலில் களைத்தவள்
வற்றிய நெஞ்சோடு வருவாள் !

இல்லாத பாலை பொய்யாகச் சப்பி
பசி மயக்கத்தில் பகல் மறப்பான்!

அவனுக்கு பால் என்பதே வாளாகிக் கொன்றது!
வாழ்வென்பது பாழாகிப் போனது!

எப்படியோ ஈரப்பதம் கொண்டு
ஏழு வரை வளர்ந்து விட்டான்!

அரவணைத்த அம்மாவும் போய்விட
பசி என்ற மிருகம்
வயிற்றில் வயலின் வாசிக்க

நாடே எரிமலையாய் தீய்க்க
பஞ்சம் தத்து எடுத்தது!
வஞ்சகம் நட்பு கொடுத்தது!

அடுத்தவன் தூக்கம்
இவனுக்கு துவக்கம்!

தெரியாமல் எடுத்தவன்
தெரிந்தே அடிக்க ஆரம்பித்தான்!

கேட்ட போது வராதவை
பறித்த போது பயந்து வந்தது!

பாசறை நிரம்பிற்று!
பொன்னாலும் புகழாலும்!

எனக்கும் கொஞ்சம் கொடு
எனப் புறட்டவன் இப்போது
எவனுக்கும் எதையும் கொடுப்பதில்லை!

இதோ அடுத்த குழந்தை
அதே ஆல மர நிழலில் தொட்டிலில்
அழுது கொண்டிருக்கிறது!

கீதம்
11-02-2011, 05:08 AM
சுயம் துறந்த சூழல் மறந்த சுயநலவியாதியால்
தொற்றும் அவலத்தைச் சாற்றும் கவிதைக்குப்
பாராட்டுகள் லென்ராம் அவர்களே.

ஜானகி
11-02-2011, 05:15 AM
இந்த அவலத்தைப் போக்கும் வழியையும் சொல்லிவிடுங்கள்.... இல்லாமை போல இயலாமையின் ரணமும் கொடியது....தொடரவேண்டாம் இந்தத் தலைமுறை.....தொடரட்டும் சமூகச் சீர்திருத்தம்...

நாஞ்சில் த.க.ஜெய்
11-02-2011, 07:03 AM
நாடோடிகளின் வாழ்வின் உண்மை வரிகள் ...தொடருங்கள்

M.Jagadeesan
11-02-2011, 09:45 AM
கொடிது! கொடிது!! வறுமை கொடிது!
வறுமையே குற்றங்களின் தாய்!

உமாமீனா
13-02-2011, 07:00 AM
இதுவும் ஒரு சக்கரமையா - இதை தடுக்க முடியாதையா.

lenram80
14-02-2011, 02:57 PM
மிக்க நன்றி கீதம், ஜானகி , ஜெய், ஜெகதீசன் மற்றும் உமாமீனா

அக்னி
14-03-2011, 03:13 PM
திருடுவது தவறு.
பசிக்குத் திருடுவது யார் தவறு?

முதற்தவறு,
ஆலமரத்தைச் செவிலியாக்கியது...

ஆலிலைகளின் ஆலவட்டத்தில்
விழுதுகளிற் தொட்டில் கட்டித்
தொங்கவிடப்படுவது,
கவிதைக்கும், களிப்பிற்கும்
நன்றாகத்தான் இருக்கும்...
ஆனால்,
இதுவே பச்சிளம்சிசுவின்
முழு வாழ்வென்றாகையில்
எப்படி நன்றாகும்...



எப்படியோ ஈரப்பதம் கொண்டு
ஏழு வரை வளர்ந்து விட்டான்!

இந்த வரிகள் மனம்பிழியக்
கண்களில் ஈரப்பதன்...

சமூக அவலம் ஒன்று, வலிந்துருவாக்கப்படும் அவலம் சொல்லும் கவிதை...

பாராட்டு லெனின்...

கலாசுரன்
15-03-2011, 04:02 AM
ரொம்ப நல்லா இருக்கு :)

sarcharan
15-03-2011, 04:16 AM
கவிதை நன்று
வறுமை கொடிது