PDA

View Full Version : தமிழன் தோல்வியடையும் 10 பலவீனங்கள்

உமாமீனா
10-02-2011, 07:21 AM
1.ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தா அது எவனா இருந்தா என்ன ,எந்த சின்னம்னு சொல்லுங்க தம்பி நச்சுன்னு குத்திடுறேன்... நீங்க கொடுத்த காசுக்கு துரோகம் பண்ண மாட்டேனுங்க.. என்ற ராஜ விசுவாசத்துடன் சுயநலமாய் நடந்து கொள்வது...பக்கத்து வீட்டுக்காரனுக்கும் தகவல் சொல்லி கொடுத்த காசுக்கும் மேல் கூவுவது...

2 .எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதாவிஜயகாந்த்,சரத்குமார்,கார்த்திக்.டி.ராஜேந்தர்,பாக்யராஜ் என சினிமாவில் இருந்து வருபவர்களுக்காக குறிப்பிட்ட ஓட்டு சதவீதத்தை ஒதுக்கி கொடுப்பது...எதுக்குடா கூடுறானுக என புரியாமல் குஸ்பூ வந்தாலும் ஆயிரம் பேர்,கார்த்திக் வந்தாலும் 1000 என கூட்டத்தை கூட்டி இது ஓட்டாய் மாறுமோ என குழப்பி யடிப்பது

3.மட்டன் பிரியாணி,குவார்ட்டர்....ஊர்சுத்தி பார்த்தல் என வகையாக ஒவ்வொரு கட்சிகூட்டத்துக்கும் சென்று வருவது....ஜெயலலிதாவுக்கும் 10 லட்சம் கூட்டம்,கருணாநிதிக்கும் 10 லட்சம் கூட்டம்....விஜயகாந்துக்கும் 10 லட்சம் ..(அவர் கூட்டத்தை பார்த்து இன்னொரு கட்டிங் அடிச்சிருப்பாரு)மொத்த ஓட்டும் 10 லட்சம்....ஏண்டா இப்படி டரியல் பண்றீங்க?

4.அந்த காலத்துல ஜெயலலிதா..இப்போ குஷ்பூ...கவர்ச்சி அரசியல்னு தனி கேட்டகிரி உருவாக்கி வெச்சி எண்டர்டைன்மெண்ட் அரசியல் தனி டிராக்ல ஓட்டுறானுக...தமிழன் பலவீனத்தை எப்படியெல்லாம் கில்லாடித்தனமா ஓட்டா மாத்துறானுக.....இவ்வளவு ரணகளத்துலியும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதா தமிழா

5..தனி ஈழம்னா என்ன...ஈழத்தமிழனுக்கும் நமக்கும் என்ன உறவு...இது பத்தி அக்கறையே இல்லாம இலங்கையில் கொத்து கொத்தா செத்து போனாங்களே..அதை கொஞ்சமும் கண்டுக்காம, தமிழன்...கொத்துக்கறி தின்னுட்டு மப்புல தூங்குறது..

6.சினிமா வுல நடிச்சவனுக்கு, அரசியல்ல நுழைய தகுதி உடையவன்னு நம்புறது...சினிமா ஹீரோ...தான் முதல்வர் ஆகி மக்களையும் காப்பாத்த முடியும்னு நிஜமா நம்புறது...அய்யோ திருந்துங்கடா..விஜய் எல்லாம் நாளைய முதல்வராடா...உணர்ச்சி வசப்படாதீங்கடா..அடங்குங்கடா...

7.பொங்கல் தினத்தை தமிழ் புத்தாண்டா மாத்தினாலும், தீபாவளியை போகியா மாத்துனாலும் அதுக்கேத்த மாதிரி தன் புரோகிராமை மாத்திகிற அடிமை புத்தி..யோசிங்கடா...எதிர்ப்பு தெரிவிங்கடா..கலைஞருக்கு தெரியாததா உனக்கும் எனக்கும் தெரியும் நு நம்மையும் கூட்டாளியாக்குற கெட்ட சாதி பயலுக.....

8.வந்தாரை வாழ வைப்பான்..இவன் வெளியூர் போயி செருப்படி வாங்குவான்

9.தமிழன் பேர் மட்டும்தான் இருக்கு...கம்பங்கூழ் ,இட்லி போய் ஃப்ரைட்ரைஸ்,பப்ஸ் கலாசாரத்துக்கு மாறிட்டான்..கூகிளில் தமிழச்சி என தேடி பார்த்து அதில் இணைய தள எழுத்தாளர் தமிழச்சியையும்,தமிழச்சி தங்க பாண்டியன் (தமிழக அர்சின் வீட்டு வசதி வாரியத்திடம் சமூக சேவகர் என சான்றிதழ் கொடுத்து ஓசி வீடு வாங்கினாரே)..இவர்கள் தமிழச்சிகள்,புலியை முறத்தால் அடித்து துரத்தியவர்கள் என நம்பும் அப்பாவி தமிழன்..

10.யார் எதை சொன்னாலும் வாயில ஈ நுழையிற மாதிரி வேடிக்கை பார்ப்பான்..தனக்கு ஒரு ஆபத்துன்னா உடனே எஸ்கேப் ஆகிடுவான்..நல்லவன்..அப்பாவி....இவன் காசை ஊரே திங்கும்...அடுத்தவன் காசுக்கு ஆசைப்படக்கூடாதுன்னு அப்பத்தா சொல்லியிருக்கு என்றும்..,ஈ,எறும்புக்கு கூட துரோகம் பண்ணினதில்லை என்றும் கடைசி வரை அப்பாவியாக வாழ்ந்து மறைய கூடிய நிறைய நல்லவன் தமிழன்.

நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

கௌதமன்
10-02-2011, 05:36 PM
மன்னிக்க வேண்டும் தோழி! வேறு பதிவிலிருந்து வெட்டி ஒட்டினாலும், நானும் ஒரு தமிழன் என்ற முறையில் இந்த எதிர்வினைப் பதிவை மன்றத்தில் வைக்கிறேன்.

1.ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தா அது எவனா இருந்தா என்ன ,எந்த சின்னம்னு சொல்லுங்க தம்பி நச்சுன்னு குத்திடுறேன்... நீங்க கொடுத்த காசுக்கு துரோகம் பண்ண மாட்டேனுங்க.. என்ற ராஜ விசுவாசத்துடன் சுயநலமாய் நடந்து கொள்வது...பக்கத்து வீட்டுக்காரனுக்கும் தகவல் சொல்லி கொடுத்த காசுக்கும் மேல் கூவுவது...

ரூபாய் கொடுத்தால் தமிழன் ஓட்டுப்போடுவான் என்பது ஒரு மாயை. 1996, 2001, 2006 தேர்தல்களில் அன்றைய ஆளுங்கட்சிகளால் பணம் கொடுக்கப்பட்டது. முடிவு வேறு மாதிரியாகவே இருந்தது. பணம் வாங்கியவர்கள் எல்லாரும் பணம் கொடுத்தக் கட்சிக்குக் ஓட்டுப் போடுவார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

2.எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதாவிஜயகாந்த்,சரத்குமார்,கார்த்திக்.டி.ராஜேந்தர்,பாக்யராஜ் என சினிமாவில் இருந்து வருபவர்களுக்காக குறிப்பிட்ட ஓட்டு சதவீதத்தை ஒதுக்கி கொடுப்பது...எதுக்குடா கூடுறானுக என புரியாமல் குஸ்பூ வந்தாலும் ஆயிரம் பேர்,கார்த்திக் வந்தாலும் 1000 என கூட்டத்தை கூட்டி இது ஓட்டாய் மாறுமோ என குழப்பி யடிப்பது

சினிமாவிலிருந்து வருபவர்களுக்கு குறிப்பிட்ட ஓட்டுசதவீதம் என்பது சரியல்ல. எம்.ஜி.ஆரால் கலையுலக வாரிசு என அறிவிக்கப்பட்ட பாக்யராஜின் அரசியல் என்ன ஆனது. சரத்குமார், கார்த்திக்கின் ஓட்டுகள் சினிமா ஓட்டுகளா என்பது தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சினிமாவிலிருந்து சட்டென ஆட்சிக்கு வரவில்லை. அவர்கள் கட்சி பணியாற்றி கட்சியில் செல்வாக்கை வளர்த்தே மக்கள் செல்வாக்கை பெற்றார்கள். விஜயகாந்த் மட்டும் தான் இதில் விதிவிலக்கு. ஆனால் அதுவும் சினிமா கவர்ச்சியால் என்று பொத்தாம்பொதுவாக கூற முடியாது, திராவிடக் கட்சிகளுக்கு ஒரு மாற்றாகத்தான் மக்களில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். இவரும் கூட்டணி, பங்கு என்று போனால் சில இடங்களை வெல்லலாம், ஆனால் இவரது தனிப்பட்ட மக்கள் செல்வாக்குக் குறையும் என்றுதான் எண்ணுகிறேன்.

3.மட்டன் பிரியாணி,குவார்ட்டர்....ஊர்சுத்தி பார்த்தல் என வகையாக ஒவ்வொரு கட்சிகூட்டத்துக்கும் சென்று வருவது....ஜெயலலிதாவுக்கும் 10 லட்சம் கூட்டம்,கருணாநிதிக்கும் 10 லட்சம் கூட்டம்....விஜயகாந்துக்கும் 10 லட்சம் ..(அவர் கூட்டத்தை பார்த்து இன்னொரு கட்டிங் அடிச்சிருப்பாரு)மொத்த ஓட்டும் 10 லட்சம்....ஏண்டா இப்படி டரியல் பண்றீங்க?

இது கட்சித் தலைவர்களுக்கேத் தெரியும், எது கூடியக் கூட்டம், எது கூட்டப்பட்டக் கூட்டம் என்று. இன்று கட்சி மாநாடுகளுக்கு மக்களைத் திரட்டுவது ஒரு வியாபாரம். அதுவும் நடக்கட்டுமே, பத்திரிக்கைகளும் வாழும்.

4.அந்த காலத்துல ஜெயலலிதா..இப்போ குஷ்பூ...கவர்ச்சி அரசியல்னு தனி கேட்டகிரி உருவாக்கி வெச்சி எண்டர்டைன்மெண்ட் அரசியல் தனி டிராக்ல ஓட்டுறானுக...தமிழன் பலவீனத்தை எப்படியெல்லாம் கில்லாடித்தனமா ஓட்டா மாத்துறானுக.....இவ்வளவு ரணகளத்துலியும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதா தமிழா

கவர்ச்சியை விடுங்க! இறந்து போன வீரப்பன், ஆட்டோ சங்கர், இப்போதுள்ள X, Y & Z யாரு வந்தாலும் கூட்டம் கூடும் ஓட்டா மாறுமா?

5..தனி ஈழம்னா என்ன...ஈழத்தமிழனுக்கும் நமக்கும் என்ன உறவு...இது பத்தி அக்கறையே இல்லாம இலங்கையில் கொத்து கொத்தா செத்து போனாங்களே..அதை கொஞ்சமும் கண்டுக்காம, தமிழன்...கொத்துக்கறி தின்னுட்டு மப்புல தூங்குறது..

------பதில் இருக்கிறது. மன்றத்தில் பதிவேற்றினால் பலரது மனது காயப்படும். அதனால் வேண்டாம்..........

6.சினிமா வுல நடிச்சவனுக்கு, அரசியல்ல நுழைய தகுதி உடையவன்னு நம்புறது...சினிமா ஹீரோ...தான் முதல்வர் ஆகி மக்களையும் காப்பாத்த முடியும்னு நிஜமா நம்புறது...அய்யோ திருந்துங்கடா..விஜய் எல்லாம் நாளைய முதல்வராடா...உணர்ச்சி வசப்படாதீங்கடா..அடங்குங்கடா...

தயவு செய்து 1% அல்லது 2% மக்களை ஒட்டுமொத்த தமிழகமாக நினைக்காதீர்கள்! [அப்படி இருந்தால் தொடர்ந்து 5 படங்கள் தோல்வியடையாது.]இன்னொரு விஷயம் சினிமாவுல நடிக்கிறது ஒரு தகுதிக் குறைவான விஷயமென்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள். என்னை யாரென்று உங்களுக்குத் தெரியாது அதனால் என் கருத்துக்கள் உங்களைப் பாதிக்காது, ஆனால் ஒரு நடிகனாக இருந்து கொண்டு நான் பொதுவான மக்கள் பிரச்சனையைப் பேசினால் கண்டிப்பாக அதன் தாக்கம் இருக்கும். எடுத்துக்காட்டாக ரஜினிகாந்த குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுப்பதன் அவசியத்தை தொலைக்காட்சியில் விளக்கியபிறகு அதன் தாக்கத்தால் போலியோ மருந்து கொடுப்பது பல மடங்கு அதிகரித்தது வரலாறு.

7.பொங்கல் தினத்தை தமிழ் புத்தாண்டா மாத்தினாலும், தீபாவளியை போகியா மாத்துனாலும் அதுக்கேத்த மாதிரி தன் புரோகிராமை மாத்திகிற அடிமை புத்தி..யோசிங்கடா...எதிர்ப்பு தெரிவிங்கடா..கலைஞருக்கு தெரியாததா உனக்கும் எனக்கும் தெரியும் நு நம்மையும் கூட்டாளியாக்குற கெட்ட சாதி பயலுக.....

தயவு செய்து இதிலுள்ள அரசியலை புறந்தள்ளுங்கள். தை முதல் நாள் கருணாநிதியின் பிறந்த நாள் அல்ல! சித்திரை ஒன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளுமல்ல. 1920 - 30 களில் தமிழறிஞர்களால் எடுக்கப்பட்ட முடிவை இப்போதுதான் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழனாக இருந்து அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள். வேண்டுமானால் நீங்கள் எந்த நாளையையும் வீம்புக்காகவாவது கொண்டாடுங்கள். தமிழ் ஒரு நீச மொழி என்று சொல்லுங்கள். தமிழில் அர்ச்சித்தால் கடவுளுக்கு ஆகாது என்று ‘ அடிமை புத்தி ‘ இல்லாமல் சொல்லுங்கள்.

8.வந்தாரை வாழ வைப்பான்..இவன் வெளியூர் போயி செருப்படி வாங்குவான்

தமிழனுக்கு என்று ஒரு பொது அடையாளம் இருந்தால் இப்படி ஒரு கேள்வி எழுந்திருக்காது. [7 வது பதிவிலிருந்து முரண்படுகிறீர்கள்]. மற்றவர்கள் தங்கள் மாநிலத்தால், மொழியால் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். ஆனால் இங்கு சாதியால், கட்சியால், தமிழுணர்வின்மையால் பிரிந்து கிடக்கிறார்கள். உணர்வு உள்ளவர்களும் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். பீகாரிலிருந்தும், ஜார்க்கண்டிலிருந்தும், மேற்கு வங்காளத்திலிருந்தும் குடும்பத்தை விட்டு இங்கு கூலி வேலை செய்பவர்கள் பெரிதாக என்ன வாழ்ந்து விட்டார்கள். அல்லது இங்கிருந்து மென்பொருள் வேலைக்கு செல்பவர்கள் என்ன தாழ்ந்து விட்டார்கள். இன்று உலகமே சுருங்கி விட்டது. அனைவரும் கூடி வாழ்வதும், அப்படி வாழ்ந்தாலும் அடையாளத்தைத் தொலைக்காமலிருப்பதும் தான் பெருமை. செருப்படி வாங்குவது தமிழ்ன் மட்டுமல்ல, மும்பையில் பீகாரிகள், குஜராத்திகள் என்று எல்லாருமே வாங்குகிறார்கள். ஆகவே இது பொதுப்பிரச்சனை.

9.தமிழன் பேர் மட்டும்தான் இருக்கு...கம்பங்கூழ் ,இட்லி போய் ஃப்ரைட்ரைஸ்,பப்ஸ் கலாசாரத்துக்கு மாறிட்டான்..கூகிளில் தமிழச்சி என தேடி பார்த்து அதில் இணைய தள எழுத்தாளர் தமிழச்சியையும்,தமிழச்சி தங்க பாண்டியன் (தமிழக அர்சின் வீட்டு வசதி வாரியத்திடம் சமூக சேவகர் என சான்றிதழ் கொடுத்து ஓசி வீடு வாங்கினாரே)..இவர்கள் தமிழச்சிகள்,புலியை முறத்தால் அடித்து துரத்தியவர்கள் என நம்பும் அப்பாவி தமிழன்..

அம்மா என்று வலைத்தளத்தில் தேடினால் என்ன வரும் என்று நம் மன்றப் பதிவிலேயே உள்ளது. அதனால் எல்லாரும் அதை நம்பி விடுவார்கள் என்று பொருள் அல்ல. வீட்டு வசதி வாரியத்திலிருந்து யாருக்கும் இலவசமாக வீடு கொடுக்கப் படுவதில்லை. சந்தை விலையிலேயேக் கொடுக்கப் படுகிறது. நீங்கள் குறிப்பிடுவது போல சில பிரிவினருக்கு முன்னுரிமைத் தரப்படலாம். ஆனால் அதில் அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், ... என்று பலர் உண்டு. சிலசமயம் அந்த பணத்தைக் கட்ட முடியாமல் ஒதுக்கப்பட்ட வீடுகளை திருப்பிக் கொடுத்ததும் உண்டு.

10.யார் எதை சொன்னாலும் வாயில ஈ நுழையிற மாதிரி வேடிக்கை பார்ப்பான்..தனக்கு ஒரு ஆபத்துன்னா உடனே எஸ்கேப் ஆகிடுவான்..நல்லவன்..அப்பாவி....இவன் காசை ஊரே திங்கும்...அடுத்தவன் காசுக்கு ஆசைப்படக்கூடாதுன்னு அப்பத்தா சொல்லியிருக்கு என்றும்..,ஈ,எறும்புக்கு கூட துரோகம் பண்ணினதில்லை என்றும் கடைசி வரை அப்பாவியாக வாழ்ந்து மறைய கூடிய நிறைய நல்லவன் தமிழன்.

மனிதனின் பல குணங்களில் இதுவும் ஒன்று. ஆனால் தமிழர்களுக்குப் பொதுவானது எப்படி சொல்ல முடியும். என்னுடன் பல மாநிலத்தவர் பணி புரிகின்றனர். அவர்கள் தமிழர்களை பற்றி நல்லபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். பஞ்சாபிகளைப் பற்றியும்(சர்தாஜி ஜோக்), தெலுங்கர்களைப் பற்றியும் பல கதைகளை நகைச்சுவைக்காக கூறுவோம். அது போன்று தமிழர்களை பற்றிக் கூறுவதாக நகைச்சுவையாக இதை எடுத்துக்கொள்கிறேன்.

நன்றி!

நாஞ்சில் த.க.ஜெய்
11-02-2011, 07:25 AM
பதிவின் ஒரு சில சாராம்சம் உண்மைதான் ஆனால்ஒரு சிலர் தவிர அரசியல் ஒரு சாக்கடை அதில் இறங்கி தன்னை கறைபடுத்திகொள்ள விரும்பாத ஓர் தமிழனும் இவ்வாறு என் கூறும் உங்கள் பதிவின் (பதிவு வேறு ஒருவருடயதாக இருந்தாலும்) சாராம்சம் மற்றும் கூறியவிதம் தவறு ..இன்றைய நடிகர்களின் செல்வாக்கு எவ்வாறு என்பது வரும் தேர்தல் நிகழ்வில் தெரிந்து விடும் ..காத்திருப்போம் ..மற்றொன்று தமிழனின் மனிதம் இது தமிழனின் மாண்பு ...இலங்கை தமிழனின் வலிதனில் பங்கெடுக்கும் அவனால் இயன்றதை செய்யும் நம் தமிழன் வேறு என்ன செய்ய முடியும்...இன்றைய அரசின் நிலைப்பாடு அன்றைய புலிகளால் கொல்லப்பட்ட அரசியல் தலைவர் பாதிப்பில் இருந்து மீண்டு இன்னும் நிகழ காலத்திற்கு வரவில்லை மற்றொன்று சீனா ஆதிக்கத்திற்கு இலங்கை போய்விடகூடாது என்ற நிலையில் இவ்வாறு விட்டு கொடுக்கும் அரசின் மனவுறுதியில் இந்திய அரசினை எதிர்க்கும் ஒரு சிறு பிள்ளைபூச்சி (இலங்கை)யின் கொழுப்பு ..இதனை தாண்டி என்ன செய்ய வேண்டும் என்பது உங்கள் எண்ணம் நண்பரே?(இது உங்களுக்கல்ல உண்மை பதிவினை பதிவிட்ட நண்பருக்கு )

ஆளுங்க
12-02-2011, 07:35 AM
நண்பர் கெளதமன் அழகாக பின்னூட்டம் எழுதி இருக்கிறார்...

தமிழரைத் தரைக்குறைவாக பேசாதீர்!!