PDA

View Full Version : இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமா?



p.suresh
10-02-2011, 12:30 AM
இன்னும் சற்று நாட்களில் கிரிக்கெட்டின் கோலாகல திருவிழாவான உலகக்கோப்பை துவங்கவிருக்கிறது.

தலைமை மாண்பில் சிறந்து விளங்கும் தோனி தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது

இதுவரை சொந்த ம்ண்ணில் எந்த hostம் வெற்றி கண்டதில்லை என்பதற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா?

முதலில் இந்திய அணியைப் பற்றி பார்ப்போம்.

வீரர்கள் பின்வருமாறு;

MSதோனி,
சச்சின்
வீரேந்திர சேவாக்
காம்பீர்
யுவராஜ்சிங்
சுரேஷ் ரெய்னா
வீராட் கோலி
யூசுப் பதான்
ஹர்பஜன்சிங்
சாந்த்
ஜாஹீர்கான்
ஆஷிஷ் நேஹ்ரா
முனாஃப் பட்டேல்
சாவ்லா
அஸ்வின்

பவுலர்களைப் பற்றி;

இங்குள்ள கட்டப்பிட்சுகளில் விக்கெட்டை எடுப்பதைவிட ரன்னைக் கட்டுப்படுத்துவதே பவுலர்களின் தலையாய கடமையாக இருக்கும்.

இந்தியஅணியின் முதுகெலும்பே ஜாஹீர்தான். இவருடைய reverse swing பந்துகள் மிகப் பிரபலம்,முதல் breakthrough கொடுப்பதும் இவரே.

முனாஃப் ஒரளவுக்கு சுமாராக போட்டாலும்,இவர் ஃபீல்டிங் செய்வதை பார்க்க நமக்கு envas மாத்திரை தேவை.

கடைசி நேரத்தில் சீக்குக்கோழி பிரவீனுக்குப் பதிலாக வந்த சண்டைக்கோழி சிறீசாந்த்தின் tempermentஐ கட்டுப்படுத்துவதுதான் தோனிக்கு தலைவலியாக இருக்கும்

"இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்" என்று ஒஜாவைக் கழட்டிவிட்டதால் சாவ்லாவுக்கு வாய்ப்பு.தான் தேர்வு செய்யப்பட்ட ஆனந்தத்தில் சாவ்லா கேவிக்கேவி அழுதிருப்பார்.

அஸ்வினின் carromball தனித்துவம். powerplayல் இவர் நிச்சயம் கைக்கொடுப்பார்.

தூஸ்ராவுக்கு பெயர்பெற்ற ஹர்பஜன் இப்போதெல்லாம் அந்நியனின் splitpersonality போல் தன்னை பேட்ஸ்மேனாக உருகொண்டு, வெளுத்து கட்டுகிறார். உண்மையில் எதிரணிக்கு throng in the flesh என்பதைப் போல சிம்மச்சொப்பனமாக இருப்பார்.

ஒரு சில ஒவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றுவார்.

நேஹ்ரா தேவையற்ற ஒரு தேர்வு.

பேட்ஸ்மேன்களைப் பற்றி;

"தலைக்கன ஆட்டக்காரர் என பெயர்பெற்ற யுவராஜ் ஒரே ஒவரில் 6 சிக்ஸர் அடித்த்தோடு கிரிக்கெட்டுக்கு hall of fame வாங்கி விட்டதைப் போல் தெரிகிறது

shortpitch பந்துகளை எப்படி ஆடுவதே என்று தெரியாத ரெய்னா கட்டப்பிட்சுகளில் ராஜா. அதிலும் middle stumpக்கு இலக்கு நோக்கி வரும் பந்தை midwicket திசையில் தூக்கி சிக்ஸருக்கு அடிப்பதில் வல்லவர்.

இந்தக் கோப்பையில் கவனிக்கப்பட வேண்டியவர் இவரே.

தோனி தன் சிகையலங்காரத்தை மாற்றியதோடு மட்டுமின்றி தன் ஆட்டத்தன்மையையும் மாற்றிக் கொண்டு விட்டார். இவர் பழைய மாதிரி அடித்து ஆட வேண்டும்.

வீராட் top formல் இருந்தாலும் விளையாட வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை.

சோவாக்,காம்பீர் match winnerகள். காயமின்றி உலகக்கோப்பை முழுவதும் தாக்குப்பிடிப்பார்களா என்பது சந்தேகமே.

யுசுப் ipl formஐ இப்போதுதான் international மேட்சுகளிலும் காட்டுகிறார். இவர் களத்தில் நீடிக்கும்வரை நம்பிக்கையோடு இருக்கலாம்.

பிறகு

அட....

நம்ம சச்சின்......

மூன்று பேருக்கு retirement கிடையாது. ஒருவர் சச்சின், அடுத்தது ரஜினி இன்னொருவர் பெயரைச் சொன்னால் திரியைப் பூட்டவேண்டி வரும்.

இதுவே கடைசி உலகக்கோப்பை என்பதால் கோப்பையைப் பெற்றுத்தர முனைப்புடன் ஆடுவார். ஆனால் எதிர்ப்பார்ப்பை எப்படி சமாளிப்பார் என்று தெரியவில்லை.

இதில் பாரத ரத்னா, IAF honorary post என்று ஏகப்பட்ட buildup வேறு.


இனி கலந்துக் கொள்ளூம் அணிகள் பற்றி;


நியுஜிலாந்து;

சமீப காலமாக killer instinctடுடன் தோற்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

பாக்கிஸ்தான்;

அடுத்து யார் கேப்டன் என்று இவர்களுக்குள் bet கட்டிக்கொண்டால் உண்டு.உலகக்கோப்பைப் போட்டியில் நம்மை இவர்கள் வென்றதே இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

ஆஸ்திரேலியா;

"அப்பெல்லாம் ஒரு காலத்திலே" என்று பழம்கதையை பேசும் நிலைக்கு ஆளாகி விட்டார்கள்.


மற்ற அணிகள் கலந்துக்கொண்டாலும் அவர்கள் அனைவரும் ஒட்டப்பந்தையத்தில் விரட்டிக்கொண்டே ஒடும் வீரர்களைப் போல


இனி அரையிறுதி அணிகளைப் பற்றி;


இங்கிலாந்து;

90களில் தாத்தாக்களை வைத்து ஆடி வந்த அணி இப்போதுதான் பேரன்களை வைத்து ஆடுகிறது.துடிப்புள்ள இந்த அணி கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்படுகிற்து.

ஆனால் கட்டப்பிட்சுகளையும்,வெயிலையும். ரசிகர்களின் கூச்சலையும் எப்படி எதிர்கொள்வார்கள் எனத் தெரியவில்லை.

சவுத் ஆப்ரிக்கா;

best chokers.. இக்கட்டான தருணத்தில் "நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு?"என்று தோற்றுப் போவார்கள்

இறுதி அணிகளாக


இலங்கையும், நாமும்தான்(எனக்கு தேசப்பற்று ஜாஸ்தி என்ன செய்ய)


இறுதி ஆட்டத்தில் நாம் ஜெயிப்போமா என்று தெரியாது. ஆனால் தோற்க மாட்டோம். என்ன குழப்புகிறேனா



பின்ன.....


நம்ம பயபுள்ளங்க கல், பாட்டில தூக்கிப்போட்டு மேட்ச நிறுத்திடமாட்டங்க????????????


இந்திய அணி வெற்றி பெற தமிழ்மன்றம் சார்பில் வாழ்த்துக்கள்.

(இது என் முதல் முயற்சி. பிழையிருப்பின் பொருத்தருள்க)

அன்புரசிகன்
10-02-2011, 12:50 AM
அவுஸ்திரேலிய அணியை மட்டமாக எடைபோடவேண்டாம். டெஸ்ட்போட்டியி்ல் சறுக்கினாலும் அண்மையில் நடந்த 7 ஒருநாள் தொடரில் 6-1 என்ற வீகிதத்தில் இங்கிலாந்தை வென்றிருக்கிறார்கள். ஆரம்ப ஆட்டக்காரர் முதல் இறுதி பந்துவீச்சாளர் வரை வெளுத்துக்கட்டுகிறார்கள்.

மார்க் ஹஸி இம்முறை இடம்பெறமாட்டார் என்பது தான் இப்போதய குறை.
இங்கிலாந்தும் குறைந்தது அல்ல. முதல் 7 விக்கட்டுக்கள் வீழும் வரை இங்கிலாந்தின் வெற்றிவாய்ப்பு அதிகமே.

இலங்கை இந்தியா பாக்கிஸ்தானில் பெரிய அணி மாற்றம் இல்லை. ஓட்டங்களை குவித்தால் நிச்சயம் வெற்றி தான். 180 ஓட்டங்கள் பெற்றுவிட்டு பந்துவீச்சாளர்களில் குறை சொல்லி ஏது பயன். இப்போ 20-20 யிலே 200 ஐ எட்டுகிறார்கள்.:)

வெப்ப மாற்று முறையை கொண்டு பந்து மட்டையில் எந்தப்பாகத்தை தொட்டது என்று அறியும் hotspot முறை இம்முறை உலகக்கிண்ணத்தில் இடம்பெறாது என்பது ஆட்டக்கார்களுக்கு கிடைத்த இன்னொரு வரம்.
பேர்முடாவிடம் தோற்காதவரை இந்தியாவின் வெற்றிவாய்ப்பு அதிகமே. காரணம் சொந்த மண் என்பது. ஆனால் அண்மையில் தோனியின் பேட்டிப்படி தாங்கள் அண்மைக்காலமாக இந்திய மண்ணில் விளையாடாதது சற்று வருத்தம் என்று கூறுகிறார். பார்க்கலாம்.

aren
10-02-2011, 01:34 AM
என்னுடைய சாய்ஸ் இந்தியா ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்றில் ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இங்கிலாந்தோ அல்லது பாகிஸ்தானோ கருப்பு குதிரையாக போட்டியை வென்றாலும் வெல்லலாம்.

இப்பொழுது இருக்கும் அணிகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல, ஆகையால் ஒவ்வொரு போட்டியிலும் முனைப்புடன் ஆடும் அணியே கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும்.

வெறும் பழைய ரெக்கார்டை மட்டுமே வைத்து ஒரு அணியை தேர்வு செய்யமுடியாது.

பார்க்கலாம் எப்படி ஆடுகிறார்கள் நம் இந்தியர்கள் என்று.

ஓவியன்
10-02-2011, 02:19 AM
இந்திய அணித் தெரிவில் சாவ்லாவைத் தவிர பெரியதாக குறைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, ஆனால் பிரவீன் ஆட முடியாமல் போனது நிச்சயம் இழப்புத்தான்.

இந்திய அணி பலமான அணியாகத் தெரிகிறது, ஹர்பஜனும் அஸ்வினும் சுழல்பந்து வீச்சுக்கு இருக்க, சாவ்லாவுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதுதான், அதனிலும் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளர்கள் எத்தனை பேர் இந்திய அணியில் இருக்கிறார்கள், அட நம்ம யூவி கூட தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அருமையாக பந்து வீசி இருந்தாரே...!! :)

யூசுப்பதான் அருமையான ஒரு finisher ஆக உருவெடுத்திருக்கிறார், அவர் இப்போது ஆடி வரும் இடமே அவருக்கு உகந்தது, கடைசி பத்து ஓவர்களில் மிகவும் உபயோகப்படுவார், ஆனால் அவரது இந்த ஃபோர்ம் உலகக் கோப்பையிலும் நிலைக்க வேண்டும்.

இந்திய அணிக்காக ஆடப் போகும் பதினொருவரில் ஷேவக், காம்பீர், சச்சின்,தோனி, ஷாஹீர், ஹர்பஜன், பதான், (நெகரா/பட்டேல்/ஸ்ரீசாந்த்), (அஸ்வின்/சாவ்லா) என்ற ஒன்பது பேருக்கான தெரிவு நிச்சயமாக இருக்குமென நான் நம்புகிறேன். அடுத்த இருவருக்கான தெரிவுக்கு மூன்று பேர் போட்டியிடலாம் யூவி, விராட், ரெய்னா. விராட் இருக்கும் ஃபோர்மில் அவரை தவிர்க்க முடியாது, ஆக போட்டி என்னவோ யூவிக்கும் ரெய்னாவுக்கும் தான். நான்கு முழு நேர பந்து வீச்சாளர்களுடன் அணி களமிறங்கும் பட்சத்தில் பகுதி நேர பந்து வீச்சாளர்கள் தேவையென்பதால் ரெய்னாவிலும் யூவிக்கு அதிக வாய்ப்புள்ளது, பார்க்கலாம்.

ராஜாராம்
10-02-2011, 03:46 AM
உங்கள் முதல் முயற்சி 'சிக்சர்'தான்.
வாழ்த்துக்கள்.
அருமையாக விளக்கி இருக்கிறாய் சுரேஷ்.கிரிக்கெட்டைப் பற்றி எனக்கு ஏதும் தெறியாது என்பது உனக்குத் தெரியும்.எனக்கே ஓரளவு புரிந்துவிட்டது.:icon_b:

malarvizhi69
10-02-2011, 04:17 AM
ம்ம்ம் ....பார்ப்போம் ...இந்தியா,தென்னாப்ரிக்கா ,ஆஸ்திரேலியா மூன்றுமே நல்ல பார்மில் உள்ள அணிகள் தான்.ஆஸ்திரேலியாவை என்றுமே நம்ப முடியாது.நம்ப சச்சினுக்கு தான் பொறுப்புகளை அதிகமாக்குகிறார்கள்.அவரை பற்றி எழுதி எழுதியே அவரை டென்ஷன் பண்ணிடுவாங்க போல நம்ம ஆளுங்க.....

Dr.M.SIVABHARATHY
10-02-2011, 05:30 AM
எதார்த்தமாகவும் , நகைச்சுவையாக மற்றும் எல்லோர்க்கும் எளிதில் புரியும்படியாக இருந்ததது.கண்டிப்பாக இந்தியா தான் வெல்லும்.
பாலாஜி ஸ்ரீனிவாசன் .கோ

நாஞ்சில் த.க.ஜெய்
10-02-2011, 12:54 PM
உலக கோப்பை நடத்திய நாடுகளில் இலங்கை மட்டுமே நடத்திதோடல்லாமல் கோப்பையும் வென்றுள்ள அணி .தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் நெகரா மற்றும் பியுஸ் சாவ்லா இருவருடைய தேர்வும் தவறானதாக கருதுகிறேன் .ஏன்னெனில் சமீபத்தில் நடந்த ஒரு சில போட்டிகளை தவிர பல போட்டிகளில் நெகராவின் பந்துவீச்சு மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது அது மட்டுமின்றி இவருடைய பந்துபிடிக்கும் விதம்(Fielding) மிகவும் மோசம் .பல விளையாட்டு களத்தில் பந்துகளை கோட்டை விட்டுள்ளார்..மேலும் இவர் சிறிது நேரம் களத்தில் நின்று ஒரு சில ஓட்டங்கள் எடுத்துவிடுவாரா என்பதே சந்தேகம் ..பிரவீன் குமார் அவருடைய இழப்பு பந்துவீச்சில் ஒரு பாதிப்பு தான் ..மற்றபடி இந்த கோப்பைக்கான அணிவீரகள் சரியான விகிதத்தில் கலந்த கலவையாக உள்ளது ..இதிலும் யுவராஜ் சிங் மற்றும் ரெய்னா இருவருக்கும் தான் போட்டி அதிகம் இருக்கும் என் நினைக்கிறேன் ..யுவராஜ் சிங் பதிலாக களம் கண்ட கோக்லி தற்போது இருக்கும் சூழலில் அவருடைய சிறப்பான ஆட்டம் அவருடைய இடத்தை உறுதி செய்கிறது ..இதுபோன்று சிறப்பான ஆட்டம் தொடர்ந்தால் இந்திய அணியின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று....

கௌதமன்
10-02-2011, 04:23 PM
இப்போதுள்ள அணி ஒரு சரியான விகித்தில் அமைந்திருக்கிறது.

வழக்கம் போல திறமையான மட்டையடி வீரர்களின் வரிசை.

பழுதில்லாத அளவு பந்து வீச்சாளர்களின் தேர்வு. இந்த நிலையான பந்து வீச்சாளர்களில் யாராவது சொதப்பினால் பந்து வீச பல பகுதி நேர பந்து வீச்சாளர்கள்.ஐ.பி.எல். 20-20 மூலம் அஸ்வின் கடைசி ஓவரை வீசும் அளவுக்குத் தேறிவிட்டார்.
சாவ்லாவின் தேர்வு எல்லாரையும் போலவே என்னையும் ஆச்சர்யபடுத்துகிறது.[இளைஞர்! நன்றாக விளையாடுவார் என்று நம்புவோம்.]


முக்கியமான விஷயங்கள்:

உள்ளூர் ஆட்டக்களங்கள், திறமையான வீரர்கள் என்பவையைத் தாண்டி பல விஷயங்கள் நமக்கு வெற்றிக்கான வாய்ப்பைப் பலப்படுத்துகின்றன.

1) குழுவாக விளையாடுதலும், தனிநபரை மட்டுமே அணி நம்பியிருக்கிறது என்பதை மாற்றியதும்.

2) இப்போதுள்ள இந்திய வீரர்களுக்கு தன்னம்பிக்கை உடல்மொழியில் தெரிகிறது. [ஆட்டத்தில் இது மிக முக்கியம். எடுத்துக்காட்டாக ஸ்ரீநாத் சிறந்த பந்து வீச்சாளர், ஆனால் அவரது உடல்மொழி எதிராளியை பயப்படுத்தாது. எதிராளி அவரது பந்தை அடித்து விட்டால், இவர் உடைந்து விடுவார். அதே சமயம் சில வீரர்கள் உடல்மொழியாலே எதிராளியை ஒரு வழியாக்கி விடுவார்கள். இதற்கு எடுத்துக்காட்டு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு]

3) பதற்றப்படாத அணியின் தலைமை.

4) எதிர்த்துப் போராடும் போர்க்குணம். தற்சமயம் இந்திய அணி இரண்டாவதாக மட்டையடிக்கும் போதும், அதிக ஓட்டங்களை துரத்தும் போதும், கைவசம் குறைந்த அளவு விக்கெட்டுகளை வைத்திருந்தாலும் சிறப்பாக விளையாடுகிறது. [யூசுஃப் பதான், ஹர்பஜன் சிங்கின் சமீபத்திய துரத்தல் ஆட்டங்கள் சிறந்த உதாரணங்கள்]

5) சமீபத்திய வெற்றிகள் தந்த உற்சாகம்.

6) கிர்ஸ்டனின் சமரசம் செய்யாத பயிற்சி முறைகள்.

அமரன்
10-02-2011, 08:57 PM
ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பும், அதனை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற அணியின் நினைப்பும், கடைசி உலகக் கிண்ணத்தையாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தையும், பயிற்சியாளர் பணியிலிருந்து விலகும் தருணம் எனும் மனநிலையும் இந்தியாவின் பலவீனங்கள்.

நல்ல முறையில எழுதி இருக்கீங்க சுரேஸ்.

p.suresh
10-02-2011, 11:36 PM
உலக கோப்பை நடத்திய நாடுகளில் இலங்கை மட்டுமே நடத்திதோடல்லாமல் கோப்பையும் வென்றுள்ள அணி .

1996ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையை இந்தியா,பாகிஸ்தான் மற்றும் இலங்கை கூட்டாக நடத்தினாலும்,

காலிறுதி,அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களை இலங்கை சொந்த மண்ணில் ஆடாமல் கோப்பையை வென்றது.

ராஜாராம்
11-02-2011, 03:58 AM
ஆமாம்!!!...ஆமாம்!!!!!..,,உண்மை...உண்மை...உண்மை....!!!!!!!

ஓவியன்
13-02-2011, 03:27 PM
இன்றைய பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சாவ்லா..!! :)

அணித் தெரிவாளர்களின் எண்ணம் சரிதான் போலிருக்கின்றது. :)

Nivas.T
15-02-2011, 09:32 AM
இந்தியாவுக்கு வாய்ப்பு பிரகாசம் ஆனால் உறுதியாக கூற முடியாது

இங்கிலாந்து, தென்னப்ரிக்கா, இலங்கையும் நல்ல வலுவான அணிகள் அதனால் நிச்சயமாக சொல்ல முடியாது.

கம்பீர், யுவராஜ் நல்ல பார்மில் இல்லை, ரொய்னா அவ்வப்போது நம்பிக்கை இழக்கச் செய்கிறார், பதான் எப்போதாவதுதான் ஆடுகிறார். மிடிலாடார் சிறிது பிரச்சனையகவே உள்ளது.

சாவ்லா அனுபவம் குறைவு, ஹர்பஜன் சிறிது காலமாக மட்டை வீச்சில் கவனம் செலுத்துவது நிறையா, குறையா என்பதுபோல் உள்ளார். நெஹரா உலகக்கோப்பை அனுபவம் உள்ளதால் இணைக்கப் பட்டுள்ளார் பயன் தரலாம். முனாப் லைன், லெங்க்த் இருந்தாலும் ரன்கள் அதிகம் விட்டுக்கொடுக்கிறார்.

இந்தியாவின் பலமான விடயங்கள்

போட்டிகள் அனைத்தும் ஆசியாவில் நடப்பதால் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனம் அதிலும் இலங்கை சவாலாக இருக்கும்

சச்சின், சாகிர் என இரண்டு அனுபமுள்ள சிங்கங்கள், சேவாக் அதிரடி நாயகன், அஸ்வின் வித்தியாசமான பந்துவீச்சு, தோனி விக்கெட் கீப்பர், கேப்டன் அணியின் நபிக்கை நாயகன். நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலி. யுவராஜ், சேவாக், யூசுப், ரைனா ஆகியோர் பகுதி நேர பந்து வீச்சு.

ஸ்ரீதர்
15-02-2011, 11:01 AM
ஒரு நாள் ஆட்டங்களில் அன்றைய தினம் யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி கிட்டும் என்பது என் எண்ணம்.

ஆகவே முன்பு நடந்தவைகளை வைத்து குறிப்பிட்ட அணிதான் வெற்றி பெரும் என கணிக்க முடியாது.

யார் கண்டது ??? 20 / 20 உலகக்கோப்பையை வென்றது போல பாகிஸ்தானுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

ஆடுகளங்களின் தன்மை ஆசிய அணிகளுக்கு உகந்ததாக இருப்பது அனைத்து ஆசிய அணிகளுக்குமே சாதகமான அம்சம்தான். ஆனால் அனைத்து களங்களிலும் நன்றாக ஆடும் திறமை ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு உண்டு.

ஆகவே ஆசிய அணிகள் ,தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு சமமான வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன்.

உமாமீனா
15-02-2011, 11:13 AM
எனக்கு பிடிக்காத விசயங்களில் ஒன்றான பகுதிக்குள் நுழைந்து விட்டேன் மன்னிக்கவும்....:smilie_bett: உடு ஜூட்

ஓவியன்
18-02-2011, 03:54 PM
ஒரு வழியாக உலகக் கோப்பையின் முதல் போட்டி நாளை தொடங்க இருக்கின்றது, பலமான துடுப்பாட்ட வரிசையுடனான இந்திய அணியும், பல சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டதும், பல சகலதுறை ஆட்டக்காரர்களைக் கொண்டதுமான பங்காளாதேஷ் அணியும் களத்தில் சந்திக்கின்றன...

எல்லோரைப் போலவும் ஒரு இரசிகனாக நானும் ஆட்டத்தைக் காண தயார்..!! :)

இதே திரியில் உலகக் கோப்பை பற்றிய எல்லா விடயங்களையும் அலசலாமென நம்புகிறேன்.

அமரன்
18-02-2011, 04:53 PM
அலசுங்க.. அலசுங்க...

இந்திய, வங்க அணிகளின் பலம் பலவீனம் பற்றி முதல்ல சொல்லுங்கள்.

p.suresh
19-02-2011, 05:35 AM
இதே திரியில் உலகக் கோப்பை பற்றிய எல்லா விடயங்களையும் அலசலாமென நம்புகிறேன்.
ஆஹா.... அருமையான யோசனை.அவ்வாறே செய்வோம்

சில தகவல்கள்:
http://www.pricecomparrison.net/wp-content/uploads/2010/12/world-cup-2011-cricket.jpg
இந்த உலகக்கோப்பையின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் டையில் முடிந்தால் super over முறைப்படி வெற்றி நிர்ணயிக்கப்படும்.

umpire decision review system காலிறுதியிலிருந்து அறிமுகம் செய்யப்படும்.

அடுத்த உலகக்கோப்பையிலிருந்து பங்கு பெறும் அணிகளின் எண்ணிக்கைப் பத்தாக குறைக்கப்படுகிறது.

ஓவியன்
19-02-2011, 05:52 AM
இந்தியாவின் பலமே பலமான துடுப்பாட்ட வரிசைதான். ஷஹீர் இன்று இந்திய பந்து வீச்சுத் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது இன்னொரு பலம்.

சொந்த மண்ணிலே விளையாடுவதால் தனிப்பலம் பெறுவார்கள் பங்களாதேஷ் அணியினர். அதிலும் சென்ற தடவை உலகக் கோப்பையில் இந்திய அணியினரை வெற்றியீட்டிய எண்ணமும் இந்திய அணியினரை மன ரீதியில் பாதித்தால் அது பங்களாதேஷ் அணிக்கு சாதகம் தான்.

எல்லாவற்றிலும் மேலாக சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைந்த அணிக்கு தற்போது கலக்கி வரும் சகல துறை வீரர் சாஹிப் தலைமை தாங்குவது இன்னொரு பலம்.

Nivas.T
19-02-2011, 06:08 AM
இந்தியா பலம்பொருந்திய அணிதான் என்பதில் சிறிது ஐய்யமில்லை

ஆனாலும் பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது
இந்திய அணியைபோல் இதுவும் இளம் வீரர்களைக் கொண்டது

இந்த உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணி ஒரு அதிர்ச்யளிக்கும் அணியாக விலங்கு

போட்டி நிச்சயம் சுவாரஸ்யமாகவும் பலமானதாகவும் இருக்கும்

ஓவியன்
19-02-2011, 07:07 AM
நாணய சுழற்சியில் வெற்றியிட்டிய பங்களாதேஷ் அணி களத்தடுப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளது. :)

Nivas.T
19-02-2011, 07:52 AM
இந்தியா 35/0 (3.4)

அமரன்
19-02-2011, 06:39 PM
சேவாக் இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்த்தேன். தவறிட்டுதே.

நல்ல ஆரம்பம் இந்தியாவுக்கு!

Hega
19-02-2011, 07:57 PM
உலகக் கோப்பை கிரிக்கெட்: அணிகளின் பலம், பலவீனம்


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம்வாய்ந்த அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் கணிக்கப்பட்டுள்ளன.


அணியின் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல


அவுஸ்திரேலியா
பலம்: பேட்டிங்தான் ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில், அதாவது அதிகமாக ரன்களை எடுத்துக் குவிக்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த அணி. இளம் வீரர்கள் அதிகம் உள்ளது கூடுதல் பலம். எந்த சூழ்நிலையிலும் சமாளித்து விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் உண்டு.

எதிரணிகளின் வியூகங்களை உடைத்து பேட்டிங்கில் சாதனை புரியும் ஷேன் வாட்சன் இந்த அணியின் மிகப்பெரிய பலம். மூன்றாவது முறையும் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியுடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கும். கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், டேவிட் ஹஸ்லியும், கேமரோன் வொய்ட்டும் ரன்களைக் குவிப்பதில் சமர்த்தர்கள்.

பலவீனம்: பந்து வீச்சு சிறப்பாக இல்லாதது பெரிய பலவீனம். பொலிங்கர் தவிர மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். ஆரம்பப் பந்து வீச்சில் சமர்த்தரான ஸ்விங்கர் ஷான் டெய்ட் தன்னுடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினரைப் பயமுறுத்தக் கூடும் என்றாலும் ஸ்பின்னர்கள் இல்லாத குறை அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலவீனம். குறிப்பிட்டுக் கூறும்படியான சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. மூத்த வீரர்களான பாண்டிங், கிளார்க், பிரெட் லீ, வாட்சன் ஆகியோரின் ஆட்டத்தையே அணி பெருமளவில் சார்ந்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் களமிறக்கப்பட்ட மோசமான "உலகக் கோப்பை அவுஸ்திரேலிய அணி' இதுதான் என்பது விமர்சகர்களின் கணிப்பு.

சிறப்பு: தொடர்ந்து 2 உலகக் கோப்பையை வென்றுள்ளதால் அவுஸ்திரேலிய அணிக்கு பொறுப்பு கூடியுள்ளது. முன்பு இருந்தது போல சிறப்பான அணியாக இல்லாவிட்டாலும் ஆட்டத்தைத் திசை திருப்பும் வெற்றி வீரர்கள் இருக்கின்றனர். இறுதிச் சுற்று வரை இந்த அணி முன்னேறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


இந்தியா
பலம்: தொடக்க, நடுவரிசை ஆட்டக்காரர் (1 முதல் 7 வரை) சிறந்த பேட்ஸ்மென்களாக உள்ளது இந்திய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது. பெüலிங் எக்கானமியில் இரண்டாவது இடத்தில் உள்ளது அனுபவம் வாய்ந்த வீரர்கள், பெரிய ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வரும் அணி.

நெருக்கடியான சூழ்நிலையிலும் அணியை சிறப்பாக வழிநடத்தும் கேப்டன் தோனி ஆகியவை அணியின் பலம். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கெளதம் கம்பீர் மூவரும் இந்திய அணியின் துடுப்பாட்டத்திற்கு மிகப்பெரிய பலம். விராட் கோலி நான்காவது ஆட்டக்காரராகவும், யுவராஜ் சிங் ஐந்தாவதாகவும், கேப்டன் தோனி ஆறாவதாகவும், யூசுப் பதான் ஏழாவதாகவும் ஒரு பலமான ரன்களை எடுக்கும் பேட்டிங் பட்டாளம் இந்திய அணியின் தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.

பந்துவீச்சு என்று எடுத்துக் கொண்டாலும், வேகப்பந்துவீச்சில் ஜாகீர் கானின் திறமைக்கு முன் ஆரம்ப ஆட்டக்காரர்கள் பலரும் திணறாமல் இருக்க முடியாது. ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, அஸ்வின் ஆகிய மூவரும் சுழல்பந்து வீச்சில் சமர்த்தர்கள். கடந்த இரண்டாண்டுகளாக சாவ்லா களத்தில் இல்லை என்பது பலவீனம். இருந்தாலும் புதியவரவாக இருந்தாலும் களத்தில் தனது சுழல்பந்துவீச்சால் அசத்துகிறார் என்பது கண்கூடான உண்மை.

பலவீனம்: மற்ற அணிகளை ஒப்பிடும் போது விரைவாக விக்கெட்டை வீழ்த்தும் பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறை. வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்ததாதும் பலவீனம். ஹர்பஜன் சிங்கையும், அஸ்வினையும் நம்பித்தான் இந்திய அணியின் பந்துவீச்சு உள்ளது என்பது பலவீனம்.

சிறப்பு: முந்தைய உலகக் கோப்பை அணியைக் காட்டிலும் பலமானதாக உள்ளது. பலமான பேட்டிங் வரிசை உள்ளதால் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. தோனியின் அமைதியான, அரவணைப்பான கேப்டன்ஷிப் அணிக்கு பெரிய பிளஸ். அனைத்தும் சரியாக நடந்தால் விமர்சகர்கள் கணித்தபடி இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறும்.


இலங்கை
பலம்: பந்து வீச்சில் உலகின் நம்பர் 1 அணி. அதே போல எக்கானமி ரேட்டிலும் முதலிடம். அனுபவ வீரர்கள், வெற்றியை நோக்கி தொடக்கத்தில் இருந்தே முன்னேறுவது, உள்ளூர் சூழலில் விளையாடுவது ஆகியவை அணிக்கு பலம் சேர்க்கிறது.

லசித் மலிங்காவும், முத்தையா முரளீதரனும் பந்துவீச்சுக்கு வலு சேர்ப்பவர்கள். இந்திய அணி எந்த அளவுக்கு பேட்டிங்கில் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பந்துவீச்சில் பலமான அணி இலங்கை அணி. நுவன் குலசேகரா, ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆடுகளத்துக்கு ஏற்ப பந்துவீசும் ஆட்டக்காரர்கள். அதிகமாக பாராட்டப்படாவிட்டாலும் ரங்கனா ரெஹாத்தின் இடதுகைப் பந்துவீச்சு வெளியூர் அணிக்கு சவாலாக இருக்கக்கூடும்.

பலவீனம்: தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகளில், பேட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ள அணி இலங்கை தான். நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடத் திணறும் வீரர்கள். மோசமான ஸ்டிரைக் ரேட்.

சிறப்பு: 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் 2007-ல் சிறப்பாக விளையாடியது இலங்கை. ஆனாலும் இப்போது மோசமாக விளையாடி வருவது அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது. அரை இறுதி வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது. முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


இங்கிலாந்து
பலம்: தனிப்பட்ட சில வீரர்கள் சிறப்பாக ஆடுவது அணியின் மிகப்பெரிய பலம். முக்கியமாக நடுவரிசையில் டிராட், பீட்டர்சன், பிராட், ஸ்வான் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிக்கின்றனர். பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது. ஒருநாள் ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்பதை தெரிந்து வைத்துள்ள அணி.

பலவீனம்: ஸ்டிரைக் ரேட் குறிப்பிடும் வகையில் இல்லை. அணியின் கூட்டு முயற்சியாக இல்லாமல், ஒரு சில வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே வெற்றி பெறுகிறது.

சிறப்பு: டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடும் இந்த அணி, ஒரு நாள் போட்டிகளில் சோபிக்கத் தவறி வருகிறது. சில தனிப்பட்ட வீரர்களின் ஆட்டத்தைத் தவிர மற்றவர்களின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சித் தோல்விகளைத் தரக்கூடிய அணியாக இருக்கிறது இங்கிலாந்து. அதிர்ஷ்டம் இருந்தால் அரை இறுதி வரை முன்னேறும், அவ்வளவே.


மேற்கிந்தியத் தீவுகள்
பலம்: கெய்ல், பிராவோ, சந்தார்பால் ஆகியோர் அணியின் பலம். திடீர் அதிரடியால் வெற்றி பெறும் அணி.

பலவீனம்: தரவரிசையில் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சும் இரண்டுமே தகராறு. எப்போது, எப்படி விளையாடிவார்கள் என்று யாருக்குமே தெரியாது.

சிறப்பு: கோப்பையை வெல்ல 70 சதவீத வாய்ப்பு இந்த அணிக்கு இருப்பதாக முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார். ஆனாலும் கால் இறுதி வரை முன்னேறுவதே சிரமம் என்பதுதான் விமர்சகர்களின் கருத்து.

தென் ஆப்பிரிக்கா
பலம்: தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவருவதும், வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருப்பதும் இந்த அணியின் முக்கிய பலம். தொடக்க பேட்ஸ்மேன்களும், நடுவில் களம் இறங்குபவர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் களம் இறங்கிச் சிறப்பாக விளையாடும் செல்லும் ஜேக்கஸ் காலிஸ், ஹஷிம் ஆம்லா வெற்றிகரமான கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோர் அணியை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றுவார்கள்.

பலவீனம்: நெருக்கடியான சூழ்நிலையில் காலிஸ் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடுவது இல்லை. சராசரி என்ற நிலையில் உள்ள ஸ்டிரைக் ரேட், நடுவரிசை, பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடாதது, சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது, காலிஸையே பெருமளவில் சார்ந்திருப்பது ஆகியவை அணியின் பலவீனம்.

சிறப்பு: வெல்வதற்கு சிறந்த, கடினமான அணி என்ற பெயரை பெற்றுள்ளது. இருந்த போதும் எதிரணி வலிமையானதாக இருந்தால் அதை எதிர்கொள்ளும் நிதானம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இல்லை என்பது பார்வையாளர்களின் கணிப்பு. நெருக்குதல் காரணமாக சில சமயங்களில் தோல்வி ஏற்படுகிறது. ஜாக்ஸ் காலிஸ் அணியின் நம்பிக்கை நாயகன். கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


நியூசிலாந்து
பலம்: ஸ்டிரைக் ரேட், எகானமியில் 3-வது இடம். நெருக்கடியை சமாளித்து ஆடும் திறன். வலுவான பேட்டிங், தனிப்பட்ட முறையில் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவது இவையே இந்த அணியின் முக்கிய பலம்.

பலவீனம்: பெரிய போட்டிகளிலோ, தொடர்களிலோ வெற்றி பெற்றதில்லை. இந்திய அணியைப் போன்றே இங்கும் விரைவில் விக்கெட்டை வீழ்ந்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை.

சிறப்பு: சிறப்பாக விளையாடினால் மட்டுமே அரை இறுதி வரை முன்னேறலாம் என்று கணிக்கப்பட்டுள்ள அணி நியூஸிலாந்து. ஆனாலும் அணி சிறப்பாக இல்லாதது நியூஸிலாந்துக்கு பின்னடைவாக உள்ளது. சமீபத்திய தொடர்களில் ஏற்பட்ட படுதோல்விகள் அந்த அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது.


பாகிஸ்தான்
பலம்: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள போதிலும், பந்து வீச்சு பலத்தில் 3-வது இடத்தில் உள்ளது. நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடக் கூடிய அணிகளில் இதுவும் ஒன்று. சூதாட்ட சர்ச்சைக்குப்பின் கிடைத்துள்ள வெற்றிகளால் பெற்ற உத்வேகம் அணியின் முக்கிய பலம்.

பலவீனம்: சிறப்பாக ஆடாத பேட்ஸ்மேன்கள். சராசரிக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட், கூட்டு முயற்சி...இப்படியாக, தொடர்ந்து சிறப்பாக ஆடமுடியாமல் தவிக்கும் அணி. முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களம் இறங்குவதால் நெருக்கடி.

சிறப்பு: களத்தில் ஆக்ரோஷம் காட்டுவதில் பாகிஸ்தான் அணிக்கு நிகர் அதுவே. சொல்லும்படியான வீரர்கள் இல்லை. ஆனாலும் அணியின் பலவீனத்தால் கால் இறுதிக்கு மேல் முன்னேறாது என விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

http://www.lankasrisports.com/view.php?223Q04Yc202OmD1c4e2ASOlJbcbeeCAAaddecKMCK0bcddlOK0e4d7DmA23024m40o42

Hega
19-02-2011, 08:01 PM
உலக கிண்ண கிரிக்கெட் : இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்


உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் இன்று சனிக்கிழமை தொடங்குகிறது.


முதல் ஆட்டத்தில் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன. வங்கதேச தலைநகர் டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்ளா மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. சொந்த மண்ணில் ஆடுவதால் ரசிகர்களின் ஆதரவு வங்கதேச அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். எனினும் பலம் மிக்க இந்திய அணியை வெல்வதென்பது அவ்வளவு சுலபமல்ல.

இரு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இந்திய அணி களம் இறங்குகிறது. சேவாக், சச்சின், கம்பீர், கோலி, தோனி, யுவராஜ் சிங், பதான் என இந்திய பேட்டிங் வரிசை முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவாக உள்ளது. பந்து வீச்சில் ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், முனாப் படேல், நெஹ்ரா, ஸ்ரீசாந்த் ஆகியோருடன் சிறப்பாக உள்ளது.

வங்கதேச அணியில் கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன், முகமது அஷ்ரப்ஃவுல், தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால், விக்கெட் கீப்பர் ரஹிம் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள். வேகப்பந்து வீச்சில் மொர்டாசா, இளம் வீரர் ஹுசைன், சுழற்பந்து வீச்சில் ஷாகிப், அப்துல் ரசாக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒருநாள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் ஷாகிப்-அல்-ஹசன் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் வங்கதேச அணிக்கு பலம் சேர்க்கும் விஷயம். பயிற்சி ஆட்டங்களைப் பொறுத்தவரை வங்கதேசம் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது.

உலகக் கோப்பைக்கு முன் நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர்களில் வங்கதேசம் சிறப்பான வெற்றிகளைப் பெற்ற உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்.

Hega
19-02-2011, 08:02 PM
இந்தியா - வங்கதேசம் இன்று

இந்தியா 370 ரன் குவிப்பு: ஷேவாக் மற்றும் கோக்லி சதம்


தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும், தெண்டுல்கரும் களம் இறங்கினர். இந்தியா 8.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்னை தொட்டது.

சிறப்பாக விளையாடிய சச்சின் 28 ரன்னில் ரன் அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 69 ரன்னாக இருந்தது. அடுத்து சேவாக்குடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார்.

சேவாக் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரை சதம் அடித்தார். இந்தியா 14.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. கம்பீர் 33 ரன் எடுத்திருக்கும் போது அவுட் ஆனார். அப்போது இந்தியா 23.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் எடுத்திருந்தது.

அடுத்து 3 வது விக்கெட் ஜோடியாக சேவாக்குடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் வங்காளதேச பந்துவீச்சை விளாசி தள்ளினர். சேவாக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 94 பந்தில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் சதம் அடித்தார்.

அப்போது இந்தியா 31.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி வந்த சேவாக் 175 ரன் குவித்து அவுட் ஆனார். அடுத்து யூசுப் பதான் களம் இறங்கினார்.

வீராட் கோலியும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கடைசி பந்தில் யூசுப்பதான் அவுட் ஆனார். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன் குவித்தது. வீராட் கோலி 100 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.


http://www.lankasrisports.com/view.php?223Q04Yc202OmD1c4e2oSOlJbcbeeCAAaddecKMCK0bcddlOK0e4d7DmA33024m40o42

Hega
19-02-2011, 08:09 PM
வங்காளதேசத்தை பழி தீர்த்த இந்தியா : சேவாக்கின் அதிரடியால் அதிர்ந்த மைதானம்


இந்தியா- வங்காளதேசம் மோதும் முதல் போட்டி இன்று மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்தது. பூவா தலையா வென்ற வங்காளதேசம் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர், சேவாக், கம்பீர், வீரட் கோக்லி, யுவ்ராஜ் சிங், தோனி, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஸ்ரீசந்த், ஜாகீர்கான், முனாப் பட்டேல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ரெய்னா சேர்க்கப்படவில்லை. 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும், டெண்டுல்கரும் களம் இறங்கினர். முதல் ஓவரை சேவாக் சந்தித்தார். முதல் பந்திலே பவுண்டரியுடன் ரன் கணக்கைத் துவக்கினார். சேவாக்கும் டெண்டுல்கரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இந்தியா 8.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடிய சச்சின் 28 ரன்னில் ரன் அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 69 ரன்னாக இருந்தது. அடுத்து சேவாக்குடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார். சேவாக் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 14.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. கம்பீர் 33 ரன் எடுத்திருக்கும் போது ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 23.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் எடுத்திருந்தது.

அடுத்து 3-வது விக்கெட் ஜோடியாக சேவாக்குடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் வங்காளதேச பந்துவீச்சை விளாசிதள்ளினர். சேவாக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 94 பந்தில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் சதம் அடித்தார். அப்போது இந்தியா 31.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி வந்த சேவாக் 175 ரன் குவித்து ஆட்டமிழந்ததார். அடுத்து யூசுப் பதான் களம் இறங்கினார். வீராட் கோலியும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கடைசி பந்தில் யூசுப்பதான் ஆட்டமிழந்தார்.

இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன் குவித்தது. வீராட் கோலி 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பின்னர் 371 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம், கெய்ஸ் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்ரீசந்த் வீசினார்.

முதல் ஓவரில் 8 ரன் எடுக்கப்பட்டது. இண்டாவது ஓவரை ஜாகீர்கான் வீசினார். இதில் 5 ரன் எடுக்கப்பட்டது. ஸ்ரீசந்த் வீசிய 5 ஓவரில் வங்காளதேசம் 24 ரன் சேர்த்தது. 4.5 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 6.5 ஓவரில் 56 ரன்னாக இருக்கும்போது 34 ரன் எடுத்த கெய்ஸ் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து 2 விக்கெட் ஜோடியாக தமிம் உடன் ஜுனைத் சித்திக்கு சேர்ந்தார்.

இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். ஜீனைத் சித்திக் 37 ரன்கள் (52 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய ஷாகிப், தம்மிம் இக்பாலுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார். தம்மிம் 70 ரன்கள் எடுத்திருந்த போது பட்டேல் பந்தில் யுவராஜ் சிங்கால் ஆபாரமாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டம் இழந்தார். 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை 32.1 ஒவரில் எடுத்தது.

பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தமையினால் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா அணி 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.175 ரன் அடித்த வீரேந்திர சேவாக் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.


http://www.lankasrisports.com/photos/full/cricket/worldcup_india1.jpg


http://www.lankasrisports.com/photos/full/cricket/worldcup_india2.jpg


http://www.lankasrisports.com/view.php?223Q04Yc202OmD1c4e2ySOlJbcbeeCAAaddecKMCK0bcddlOK0e4d7DmA33024m40o42

ஓவியன்
27-02-2011, 07:28 AM
பலமான (!) இந்திய அணி இன்று இங்கிலாந்து அணியினை எதிர்கொள்ளுகிறது, ஆஸஸ் தொடரில் வெற்றியீட்டினாலும் தொடர்ந்த ஒரு நாள் போட்டியில் மோசமாக அடிவாங்கிய கையுடன் உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கின்றனர் இங்கிலாந்து அணியினர். பயிற்சிப் போட்டியி நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியினர் திக்கித் திணறி வெற்றியீட்டியதும் மறக்க முடியாதது. ஆனாலும் Andrew Strauss தலமையிலான அணியினை அப்படியொன்றும் குறைத்து மதிப்பிட முடியாது தான். தேவையில்லாமல் மோசமான பந்துகளுக்கு மட்டையை நீட்டித் தேவையே இன்றி ஆட்டமிழக்கும் வழக்கமுடைய பீட்டர்சன் ஆரம்ப துடுப்பாட்டக் காரராக களம் இறங்குவது இங்கிலாந்து அணிக்கு பலமா, பலவீனமா என்பது இன்று தெரியும். சிறிய இடைவேளைக்கு பின் மீள களமிறங்கும் Stuart Broad (யூவி ஆறு ஆறு அடிக்க மாட்டாரில்லே) உம் சொற்ப கால இடைவேளையில் தன்னை நிரூபித்த Jonathan Trott உம் இங்கிலாந்து அணியில் இன்று கவனிக்கப்பட வேண்டியவர்களென நம்புகிறேன்.


பிந்திக் கிடைத்த தகவல்கள்


Stuart Broad சுகவீனம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டாராமிலே..!! :cool:

நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.:)

ஓவியன்
27-02-2011, 07:45 AM
இது எப்படியிருக்கு..... :D , இயக்குனர் பாலாவின் படப் பிடிப்பில் இருந்தவர்கள் எப்படியோ பெங்களூர் சின்னசுவாமி ஸ்டேடியத்துள் வந்திட்டாங்க போல... :D


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/129116.jpg


நன்றி - கிரிக்கின்ஃபோ.

aren
02-03-2011, 03:56 AM
ஆஸ்திரேலியா இதுவரை ஆடிய ஆட்டங்களில் நன்றாகவே ஆடியிருக்கிறார்கள். அதேபோல் பாகிஸ்தானும் தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாகவே ஆடியிருக்கிறார்கள்.

இங்கிலாந்துடன் மாட்சை டய் செய்தது இந்தியாவிற்கு ஒரு இழப்பே. யூடிஆர்எஸ் சொதப்பியதன்மூலம் இந்தியாவின் எதிர்ப்பு இன்னும் வலுவாகவே இருக்கும். யார் இதை சப்போர்ட் செய்து பேசினாலும் இந்தியா இந்த விஷயத்தை மீண்டும் கொண்டுவந்து இதை தடுத்துவிடும் என்றே நினைக்கிறேன்.

அடுத்த இரண்டு வாரத்தில் இன்னும் சரியான நிலமை தெரியவரும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆதவா
02-03-2011, 04:03 AM
ஆஸ்திரேலியா இதுவரை ஆடிய ஆட்டங்களில் நன்றாகவே ஆடியிருக்கிறார்கள். அதேபோல் பாகிஸ்தானும் தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாகவே ஆடியிருக்கிறார்கள்.

இங்கிலாந்துடன் மாட்சை டய் செய்தது இந்தியாவிற்கு ஒரு இழப்பே. யூடிஆர்எஸ் சொதப்பியதன்மூலம் இந்தியாவின் எதிர்ப்பு இன்னும் வலுவாகவே இருக்கும். யார் இதை சப்போர்ட் செய்து பேசினாலும் இந்தியா இந்த விஷயத்தை மீண்டும் கொண்டுவந்து இதை தடுத்துவிடும் என்றே நினைக்கிறேன்.

அடுத்த இரண்டு வாரத்தில் இன்னும் சரியான நிலமை தெரியவரும் என்று எதிர்பார்க்கிறேன்.

அண்ணா, (இன்றைக்கு தினசரியில்,) உலகக்கோப்பையில் சூதாட்டம் நடந்திருப்பதாகக் ஐசிசி சந்தேகப்படுகிறதாம்... குறிப்பாக ஆஸி - ஜிம்பாப்வே, பாகிஸ்தான் - இலங்கை, இந்தியா - இங்கிலாந்து மேட்ச்களில்....

ஷேன் வார்ன், மேட்ச் நடப்பதற்கு 7 மணி நேரம் முன்னர், “இந்த் போட்டி டையில் முடியும்” என்று கணித்திருக்கிறார்!!!
--------------------------------
எல் பி டபிள்யூ வை விடுங்க, ரெண்டு கேட்சே அண்ணன் தோனி காதில கேட்கலயாம்.. நான் மேட்சைப் பார்த்துட்டு இருக்கறப்ப, பேடுல பட்டு போயிருக்கும்னு நினைச்சேன். ஆனா பேட் அப்படின்னு இப்போத்தான் தெரிஞ்சது.

ஓவியன்
02-03-2011, 04:41 AM
ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கட் வீரரே வேண்டியதற்கும் மேலாக ஊதியமாகக் கிடைக்கும் இந்தக் காலத்தில் இந்திய கிரிக்கட் வீரர்கள் வேண்டுமென்றே பணத்துக்காக அதுவும் ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி வாய்ப்பினை இழந்தார்கள் என்ற வாதத்தினை என்னால் ஏற்க முடியவில்லை.

அதுவும் பாகிஸ்தானிய வீரர்களுக்கு அண்மையில் கிடைத்த தண்டனைக்கும் பிறகு அவ்வாறான சம்பவங்கள் இந்திய வீரர்களிடை நடக்குமென நான் நினைக்கவில்லை. ஐபிஎல் போன்ற பணம் கொழிக்கும் போட்டியில் விளையாடாத நாட்டு கிரிக்கட் வீரர்கள் பெட்டிங் போன்ற தவறான விடயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்கலாம், ஆனால் நன்றாக பணம் கொழிக்கும் இந்திய வீரர்கள் அவ்வாறான விடயங்களில் ஈடுபட வேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

(பாகிஸ்தானிய அணித்தலைவர் அப்ரிடியின் ஆண்டு வருமானத்தை விட உலகக் கோப்பை அணியில் இல்லாத நம்ம ரோகித் சர்மாவின் ஆண்டு வருமானம் அதிகமாக இருக்குமென நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.:D)

அத்துடன் இவ்வாறான விடயம் நடந்ததாலேயே இங்கிலாந்து போட்டியினை சமப்படுத்தியது என்று சொல்லி அருமையாக விளையாடிய இங்கிலாந்து அணியினரின் திறமையை நான் கொச்சைப் படுத்தவும் விரும்பவில்லை.

அன்புரசிகன்
02-03-2011, 05:00 AM
இந்த செய்தியை வெளியிட்டது இலங்கையில் ஒளிபரப்பாகும் ITN. இது அரச தொலைக்காட்சி சேவையில் ஒன்று.

அண்மையில் ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டிகளில் மக்கள் எவரும் பார்வையிட வராததால் பாடசாலை மாணவர்களுக்கு KFC புரியாணி இலவசமாக வழங்கி வரவழைக்கப்பட்டனர். அத்துடன் பொதுமக்களும் இலவசமாக பார்வையிட திறந்துவிடப்பட்டது. இந்தமுறை பொதுமக்கள் யாரும் தங்கள் இசைக்கருவிகளை பாவிக்கக்கூடாது என்றும் சர்வதேச துடுப்பாட்ட சபை சொன்னாலும் இலங்கையில் அது தளர்த்தப்பட்டிருந்தது. இந்த போட்டிகளை ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் நடத்துவது பற்றி அறிவித்திருந்தாலும் இடையில் தூரப்பிரச்சனைகளை கருத்தில் கொண்டு போட்டி நடத்துவது பற்றி கலந்தாலோசித்தார்கள். பின்னர் இலங்கை அதிபரின் தலையீட்டில் இது உறுதி செய்யப்பட்டது.

கொழும்பிலிருந்து ஏறத்தாள 250 km தொலைவிலுள்ள இந்த விளையாட்டரங்கிற்கு கொழும்பு மற்றும் சுற்றுப்புற சூழலிலுள்ளவர்கள் அவ்வளவு தூரம் பயணம் செய்து திரும்புவது இலங்கையை பொறுத்தவரை பெரிதும் சாத்தியமல்ல. (ஏறத்தாள கதிர்காமம் சென்றுவருவது போன்று)
ICC ற்கு ஏற்பட்ட நட்டத்தினை இலங்கை அதிபர் தனிப்பட்ட ரீதியில் சீர் செய்தாலும் சில சர்ச்சைகளை மழுப்ப இந்த செய்தியை விட்டிருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட இலங்கை வீரர்கள் மஹெல மற்றும் சமரவீர ஆகியோர் ஐதேக கட்சி ஆதரவாளர்கள். (கூட்டி கழிச்சு பார்த்தா................... )

sarcharan
02-03-2011, 05:07 AM
கேள்வி: இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமா?
பதில்: வெல்லாது

ஓவியன்
02-03-2011, 05:12 AM
கேள்வி: இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமா?
பதில்: வெல்லாது

பதிலுக்கான உங்கள் விளக்கத்தையும் தந்தால் நன்றாக இருக்குமே.. :)

sarcharan
02-03-2011, 06:09 AM
பதிலுக்கான உங்கள் விளக்கத்தையும் தந்தால் நன்றாக இருக்குமே.. :)
அதுதான் எல்லோருக்கும் தெரியுமே...:p

ஓவியன்
02-03-2011, 07:06 AM
இந்திய அணியினரின் துடுப்பாட்ட வரிசையின் பலத்துக்கு இணையாக பந்து வீச்சு பலமாக இல்லாமையே இந்திய அணியின் தற்போதைய பிரச்சினை. பிரவீன் குமாரின் வெற்றிடம் தெளிவாகத் தெரிகின்றது அணியில், ஹர்பஜனையும் ஷாஹீரையும் தவிர வேறு எந்த பந்து வீச்சாளரையும் இந்திய அணியில் முழுமையாக நம்ப முடியவில்லை. பகுதி நேர பந்து வீச்சாளர்களையும் நம்ப முடியவில்லை, இந்த நிலையில் நான்கு முழு நேர பந்து வீச்சாளர்களுடன் மட்டும் களமிறங்குவது ஆரோக்கியமான விடயமாகத் தெரியவில்லை, இனி வரும் போட்டிகளில் ஐந்து முழு நேர பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதே நலமாகப் படுகிறது.

aren
02-03-2011, 11:17 AM
நிச்சயம் இந்திய வீரர்கள் இந்த மாதிரியான பெட்டிங்கில் எல்லாம் ஈடுபடமாட்டார்கள், காரணம் அவர்களுடைய இழப்பு கோடியில் போட முடியும்.

அன்புரசிகன்
02-03-2011, 09:09 PM
நேற்றய இங்கிலாந்து அயர்லாந்து போட்டிகளை பார்த்தால்......... பெட்டிங் என்று அதையும் சொல்லிடுவாங்க...

ஆனால் ஒருவிடையம். நெல்சன் நம்பர் என்பது உண்மையிலேயே தூரதிஷ்டத்தை கொடுக்குமா?
காரணம் நேற்று இங்கிலாந்து ஒருதடவை 111-1 என்று இருந்தது. அடுத்த பந்தில் பீட்டர்சன் தொலைந்தார். :D இங்கிலாந்துதம் தோற்றது.

aren
03-03-2011, 01:59 AM
இந்தப் போட்டிகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிகிறது. ஆகையால் இந்தியா ஒவ்வொரு ஆட்டத்தையும் கவனித்து ஆடவேண்டும்.

ஆதவா
03-03-2011, 04:15 AM
நேற்றய இங்கிலாந்து அயர்லாந்து போட்டிகளை பார்த்தால்......... பெட்டிங் என்று அதையும் சொல்லிடுவாங்க...

ஆனால் ஒருவிடையம். நெல்சன் நம்பர் என்பது உண்மையிலேயே தூரதிஷ்டத்தை கொடுக்குமா?
காரணம் நேற்று இங்கிலாந்து ஒருதடவை 111-1 என்று இருந்தது. அடுத்த பந்தில் பீட்டர்சன் தொலைந்தார். :D இங்கிலாந்துதம் தோற்றது.

இங்கிலாந்தின் ஃபீல்டிங்கை கவனித்தீர்களா? எவ்வளவு அழகான கேட்சுகளை பிடிக்காமல் விட்டார்கள்? ப்ரயர் நிறைய தவறுகளை செய்திருந்தார். இந்தியாவிடம் ஆடியபோதிரிந்த effort இங்கிலாந்திடம் நேற்று இல்லை. அயர்லாந்தைப் பொறுத்தவரையில் ப்ரயன் சகோதர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளீப்படுத்துவார்கள்தான், இல்லை என்று சொல்லவில்லை. தவிர பெங்களூரு பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமானது.. எனினும் இங்கிலாந்தின் மிகமோசமான ஃபீல்டிங் மற்றும் ப்ந்துவீச்சுதான் அது தோற்க காரணம்!!! இப்பொழுதும் எனக்கு சந்தேகம் இருக்கிறது... பெட்டிங் இருக்குமோ என்று...

அன்புரசிகன்
03-03-2011, 04:30 AM
நான் கேட்டதற்கு பதில சொல்லுங்க ஆதவா:D.. நெல்சன் இலக்கம் கிரிக்கட் ஐ பொறுத்தவரை உண்மையிலேயே தூரதிஷ்டமானதா???

ஓவியன்
03-03-2011, 05:27 AM
எனது அலுவலகத்தில் ஐரிஸ் காரர்கள் அதிகமாக வேலை செய்கிறார்கள், என்னுடன் இணைந்து ஒன்றாக பணி புரிபவரும் ஒரு ஐரிஸ்காரர்தான். அவர்களின் நாட்டில் கிரிக்கட்டுக்கு அவ்வளவு முக்கியம் கொடுப்பதில்லை. காரணம் , கிரிக்கட் இங்கிலாந்து நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்டதென்பதுதான். :)

இங்கிலாந்திடமிருந்து போராடி சுதந்திரம் பெற்றதால் இங்கிலாந்து என்றாலே வெறுப்பு அவர்களுக்கு. கிரிக்கட் மேல் அதீத விருப்பு இல்லாமல் போனாலும் நேற்றைய போட்டி இங்கிலாந்துடன் என்ற போது மிகுந்த ஆர்வமாக இருந்தார்கள், கிட்டத்தட்ட இந்தியா-பாகிஸ்தான் இடை நடக்கும் போட்டியைப் போல கருதியிருந்தார்கள்.

பாகிஸ்தானுடன் ஆடுகையில் இந்திய வீரர்கள் எப்படி முழு வீச்சுடன் விளையாடுவார்களோ அந்த வேகம் ஐரிஸ் வீரர்களிடமிருந்தது. அதனால் போராடி வென்றார்கள், மாறாக இங்கிலாந்து அணியினரிடம் அவர்களது பெரிய இலக்கு தந்த நம்பிக்கையும் ஜூஜூபி அணி தானே என்ற குறைத்து மதிப்பீடும் தோல்விக்கு வழி வகுத்திருந்தது.

பெட்டிங்கில் சோரம் போயிருந்தால் இங்கிலாந்து அணியினர் ஐரிஸ் அணியினருக்கு எதிராக இத்தனை பெரிய ஓட்ட எண்ணிக்கையை குவித்திருப்பார்களா..?? :confused:

ஆதவா
03-03-2011, 08:39 AM
நான் கேட்டதற்கு பதில சொல்லுங்க ஆதவா:D.. நெல்சன் இலக்கம் கிரிக்கட் ஐ பொறுத்தவரை உண்மையிலேயே தூரதிஷ்டமானதா???

ஒருமுறை கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அம்பயர் டேவிட் ஷப்பர்ட் குதிப்பதைப் போல பாதம் உயர்த்தினார். எனக்கு முதலில் தெரியவில்லை, தினமலர் என்று நினைக்கிறேன். அந்த பத்திரிக்கையில் 111-1 பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். ஷப்பர்ட் இந்தமாதிரி 111, 222, 333 போன்று வந்தால் குதிப்பாராம்... ஆனால் ஓரிருமுறை 111-1 எனும் நிலைதாண்டி வந்த அணிகளைப் பார்த்திருக்கிறேன். (கூகுலாத்தாவிடம் கேட்டுச் சொல்கிறேன்.)

111 எனும் எண் பெயில்ஸ் இல்லாமல் ஸ்டம்ப்ஸ் மட்டும் உள்ளதைக் குறிப்பிடுதாம். பேட்ஸ்மென்களுக்கு ஆகாது என்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை... ஒருவேளை அந்த எண்ணுக்கு உள்ள அர்த்தத்தால் பேட்ஸ்மென்கள் பதட்டத்துடன் ஆடி அவுட் ஆகும் சூழ்நிலை வரலாமோ என்னவோ?

நாஞ்சில் த.க.ஜெய்
03-03-2011, 08:56 AM
வெற்றி பெரும் நிலைக்கேற்றாவாறு ஓட்டங்கள் எடுத்த ஒரு அணி இதுபோன்று அதிர்ச்சி தோல்வி அடைவதற்கு முழு காரணம் அவர்களுடைய தவறான ஓட்டங்கள் தடுப்பு வியூகம் மற்றும் பந்துவீச்சு அதையும் விட சிறந்த ஓன்று எதிரணிவீரர் ஒ பிரயான் என்பவரின் சிறந்த ஆட்டம் தான் .இது போன்ற ஒரு தவறான மூடநம்பிக்கை வெற்றி பெற்ற சிறந்த அணியினை தரம் தாழ்த்தி கூறுவது போல் உள்ளது என்னதான் இருந்தாலும் வெற்றிபெற்ற அணியின் சிறந்த ஆட்டத்தினை பாராட்டாமல் இருக்க முடிவதில்லை ...

ஆதி
03-03-2011, 09:17 AM
இந்திய அணியினரின் துடுப்பாட்ட வரிசையின் பலத்துக்கு இணையாக பந்து வீச்சு பலமாக இல்லாமையே இந்திய அணியின் தற்போதைய பிரச்சினை. பிரவீன் குமாரின் வெற்றிடம் தெளிவாகத் தெரிகின்றது அணியில், ஹர்பஜனையும் ஷாஹீரையும் தவிர வேறு எந்த பந்து வீச்சாளரையும் இந்திய அணியில் முழுமையாக நம்ப முடியவில்லை. பகுதி நேர பந்து வீச்சாளர்களையும் நம்ப முடியவில்லை, இந்த நிலையில் நான்கு முழு நேர பந்து வீச்சாளர்களுடன் மட்டும் களமிறங்குவது ஆரோக்கியமான விடயமாகத் தெரியவில்லை, இனி வரும் போட்டிகளில் ஐந்து முழு நேர பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதே நலமாகப் படுகிறது.

நான்கு பந்துவீச்சாளர்களே போதுமானது ஓவி, பிரச்சனை அதுவல்ல..

நான்கில் இருவரே வேகப்பந்து வீச்சாளர்கள், நெகுராவை உள்ளிறக்கி இருந்திருந்தாள், கெடுபிடியை அதிகமாகி இருக்க முடியும், இனி வரும் போட்டிகளில் அதை செய்ய வேண்டும்..

பகுதி நேர பந்து வீச்சாளர்கள் என்று பார்த்தால், நால்வர் முன்பே இருக்கிறார்கள், யுவராஜ், சேவக், யூசப்பதான், டெண்டூல்கர்..

டெண்டூல்கரை பந்து வீச சொல்லி எல்லாம் கஸ்டப்படுத்த இயலாது, மீதம் இருப்பவர் மூவர், சேவக், யுவராஜ், யூசப் மூவருக்கும் ஆளுக்கு 3 ஓவர்கள் தரளாம்..

மீதமுள்ள ஒன்றை மூன்று ஓவரில் கொடுக்கப்பட்டிருக்கும் ரன் மற்றும் எடுக்கப்பட்டிருக்கும் விக்கட் கணக்கை கொண்டு யாருக்கு என்று தீர்மானிக்கலாம் கொடுக்கலாம்..

வேகப்பந்து வீச்சாளர்கள், ஜாகிருக்கு பழைய பந்தை கையாள தெரிந்த அளவுக்கு, மற்றவர்களுக்கு அது கைவருவதில்லை, இதை வேக பந்து வீச்சாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்...

நடுமத்தியில் இருக்கும் பத்து ஓவர்களை, 7 பந்து வீச்சாளர்களையும் கொண்டு குழப்பி வீசி சோதித்துப்பார்க்கலாம்...

ஆதவா
03-03-2011, 09:42 AM
. ஆனால் ஓரிருமுறை 111-1 எனும் நிலைதாண்டி வந்த அணிகளைப் பார்த்திருக்கிறேன். (கூகுலாத்தாவிடம் கேட்டுச் சொல்கிறேன்.)


http://static.cricinfo.com/db/PICTURES/CMS/111400/111494.jpg

தேடியதில் கிடைத்தது!!
இங்கிலாந்து ஆஸ்திரேலியா 3வது போட்டி, ஓவல் மைதானத்தில், வருடம் : 2005
222-2 எனும் நிலையிலிருக்கும்பொழுது விக்கெட்டை இழக்கவில்லை ஆஸி!

ஆதவா
03-03-2011, 09:50 AM
நான்கு பந்துவீச்சாளர்களே போதுமானது ஓவி, பிரச்சனை அதுவல்ல..

நான்கில் இருவரே வேகப்பந்து வீச்சாளர்கள், நெகுராவை உள்ளிறக்கி இருந்திருந்தாள், கெடுபிடியை அதிகமாகி இருக்க முடியும், இனி வரும் போட்டிகளில் அதை செய்ய வேண்டும்..

பகுதி நேர பந்து வீச்சாளர்கள் என்று பார்த்தால், நால்வர் முன்பே இருக்கிறார்கள், யுவராஜ், சேவக், யூசப்பதான், டெண்டூல்கர்..

டெண்டூல்கரை பந்து வீச சொல்லி எல்லாம் கஸ்டப்படுத்த இயலாது, மீதம் இருப்பவர் மூவர், சேவக், யுவராஜ், யூசப் மூவருக்கும் ஆளுக்கு 3 ஓவர்கள் தரளாம்..

மீதமுள்ள ஒன்றை மூன்று ஓவரில் கொடுக்கப்பட்டிருக்கும் ரன் மற்றும் எடுக்கப்பட்டிருக்கும் விக்கட் கணக்கை கொண்டு யாருக்கு என்று தீர்மானிக்கலாம் கொடுக்கலாம்..

வேகப்பந்து வீச்சாளர்கள், ஜாகிருக்கு பழைய பந்தை கையாள தெரிந்த அளவுக்கு, மற்றவர்களுக்கு அது கைவருவதில்லை, இதை வேக பந்து வீச்சாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்...

நடுமத்தியில் இருக்கும் பத்து ஓவர்களை, 7 பந்து வீச்சாளர்களையும் கொண்டு குழப்பி வீசி சோதித்துப்பார்க்கலாம்...

என்னைப் பொறுத்தவரை ஓவியன் சொல்வது சரியென்றுதான் சொல்லுவேன். இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் இரண்டு+இரண்டு பந்துவீச்சாளர்களுடன் இறங்கினது கொஞ்சம் யோசிக்க வைத்தது. ஆனால் வேறுவழியுமில்லை. பிட்ச், பேட்டிங்கிற்கு சாதகமானது, பந்துவீச்சு எடுபடாது, ஜாஹீரை விட்டால் நல்ல பவுலர்கள் கிடையாது. ஆஷிஷ் நெஹ்ராவுக்கு காயம், பிரவின் ஆட்டத்திலேயே இல்லை... ஸ்ரீசாந்த் இருந்திருந்தால் இங்கிலாந்து ஜெயித்தேயிருக்கும்.

ஆதி
03-03-2011, 10:03 AM
இந்திய அணி என்றுமே பேட்டிங்கை நம்பியே களமிறங்கும், அது போல் பந்து வீச்சாளர்கள் என்றால் எல்லா காலத்திலும் ஒரே ஒருவரே சோபித்திருப்பார், அப்படி இருக்க 5 பந்துவீச்சாளர் என்ன 6 பேர் வைத்துக் கொண்டால் கூட வேலைக்கு ஆகாது, இந்தியாவின் எந்த கேப்டனும், முன்னால் கேப்டனும் பேட்டிங் வரிசை பற்றி பேசுவார்களே ஒழிய பந்துவீச்சை நம்பி இருக்கிறோம் என்று சொல்ல மாட்டார்கள்..

அப்படி இருக்க 7+4 சரியே..

ஆனால் 3 வேக பந்து வீச்சாளர்கள் கட்டாயமிருக்க வேண்டும்..

ஸ்பின்னை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் முக்கியதுவம் தர வேண்டும், மிட் ஆர்ம் மீடியம் இது இந்தியாவுக்கு என்னவென்றே தெரியாது..

முன்பு ராபின் சிங்கும், கங்குலியுமே மிட் ஆர்ம் மீடியம் வீச இருந்தார்கள், அவர்களும் எப்போதாவது வீசுவார்கள்..

பந்துவீச்சில் வெரைட்டி நம்மிடமில்லை, ஸ்பின் இல்லை என்றால் பேஸ் அவ்வளவுதான்..

நம் பலவீனம் என்றால் இதுவே ஒழிய, ஆள்கணக்கில் அது இல்லை..

மற்ற அணிகளில் மிட் ஆர்ம் மீண்டியம் வீசுபவர்கள் ஆல் ரௌண்டர்களாக இருப்பார்கள், இந்தியாவில் கங்குலி, ராபின் சிங்குக்கு பிறகு அப்படியாரும் இல்லை, யாவரும் ஸ்பின் வீசுபவர்களே..

ஆதவா
03-03-2011, 11:47 AM
இந்திய அணி என்றுமே பேட்டிங்கை நம்பியே களமிறங்கும், அது போல் பந்து வீச்சாளர்கள் என்றால் எல்லா காலத்திலும் ஒரே ஒருவரே சோபித்திருப்பார், அப்படி இருக்க 5 பந்துவீச்சாளர் என்ன 6 பேர் வைத்துக் கொண்டால் கூட வேலைக்கு ஆகாது, இந்தியாவின் எந்த கேப்டனும், முன்னால் கேப்டனும் பேட்டிங் வரிசை பற்றி பேசுவார்களே ஒழிய பந்துவீச்சை நம்பி இருக்கிறோம் என்று சொல்ல மாட்டார்கள்..

அப்படி இருக்க 7+4 சரியே..

ஆனால் 3 வேக பந்து வீச்சாளர்கள் கட்டாயமிருக்க வேண்டும்..

ஸ்பின்னை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் முக்கியதுவம் தர வேண்டும், மீடியம் பேஸ், மிட் ஆர்ம் மீடியம் இது எல்லாம் இந்தியாவுக்கு என்னவென்றே தெரியாது..

முன்பு ராபின் சிங்கும், கங்குலியுமே மிட் ஆர்ம் மீடியம் வீச இருந்தார்கள், அவர்களும் எப்போதாவது வீசுவார்கள்..

பந்துவீச்சில் வெரைட்டி நம்மிடமில்லை, ஸ்பின் இல்லை என்றால் பேஸ் அவ்வளவுதான்..

நம் பலவீனம் என்றால் இதுவே ஒழிய, ஆள்கணக்கில் அது இல்லை..

மற்ற அணிகளில் மிட் ஆர்ம் மீண்டியம் வீசுபவர்கள் ஆல் ரௌண்டர்களாக இருப்பார்கள், இந்தியாவில் கங்குலி, ராபின் சிங்குக்கு பிறகு அப்படியாரும் இல்லை, யாவரும் ஸ்பின் வீசுபவர்களே..


வாட்சன், காலிஸ், மாதிரி ஒரு ஆள் இந்தியாவுக்கு இருந்தால் சரியாக இருக்கும்... அதுசரி, இந்தியாவில் எல்லாருமே சச்சின் ஆகத்தான் விரும்புகிறார்கள், யார் கபில்தேவ் ஆகவேண்டுமென நினைக்கிறார்கள்??

ஆதி
03-03-2011, 11:58 AM
கபில் காலத்தில் மனோஜ் பிரபாகர் ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்குவார், அவரும் பேஸ் பௌலர் தான்.. அதற்கு பிறகு அப்படி யாரும் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை..

இந்தியாவின் சிறந்த மட்டைக்காரர்கள் என்று பட்டியல் போட்டால் பல் பெயர் கிடைக்கும், பந்து வீச்சாளர்கள் என்றால்..

கபில், ஸ்ரீநாத், ஜாஹிர் இப்படி கைவிரல் எண்ணிக்கை நிறைய கூட ஆளில்லை இது மாறாதவரை பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டே ஆடவேண்டியதுதான்...

கௌதமன்
03-03-2011, 12:30 PM
7 + 4 என்பது எப்போதும் கைகொடுப்பது இல்லை.

4 பந்து வீச்சாளர்களில் ஏதாவது ஒருவர் சொதப்பினாலும், பகுதி நேர பந்து வீச்சாளர்களைக் கொண்டு சமாளிக்க முடியாது. (இங்கிலாந்துடனான விளையாட்டில் இது நன்றாகத் தெரிந்தது.)

நல்ல ஃபார்மில் மட்டையாளர்கள் இருந்தால் 5 பேரே போதும். இருந்தாலும் ஒரு பாதுகாப்புக்காக 6 என்று வைத்துக்கொண்டால் 6 + 5 என்ற ஃபார்முலாவே கைகொடுக்கும்.

அதிகமான மட்டையாளர்கள் இருந்தால் கொஞ்சம் பொறுப்பின்மை வரும் என்பது இங்கிலாந்துடனான விளையாட்டில் 45 ஓவர்களுக்கு மேலே நன்றாகத் தெரிந்தது. 338 ஓட்டங்கள் என்பது பெரிதென்றால், அதே இங்கிலாந்துடன் அயர்லாந்து பொளந்து கட்டியதைப் பார்த்தீர்களா?

ஃபீல்டிங்கைப் பொறுத்தவரை நாம் இன்னும் வளர வேண்டியுள்ளது. ஆசிய அணிகளில் இலங்கை மட்டுமே ஃபீல்டிங்கில் கொஞ்சம் தேறும். ஆரம்பத்திலிருந்தே ஃபீல்டிங் நமக்கு தகராறு. யுவராஜ், கையிஃப், ஜடேஜா, ராபின்சிங், அசாரூதீன் என்று அப்பப்போ நமக்கு ஆபூர்வமாக நல்ல ஃபீல்டர்கள் கிடைப்பார்கள். அது போதாது.

இங்கிலாந்துடனான மேட்சில் ஹர்பஜன் கொஞ்சம் முயற்சித்திருந்தால் அந்தக் கேட்சை பிடித்திருக்கலாம்.

ஃபீல்டிங்கில் நாம் தடுக்கும் ஒவ்வொரு ஓட்டமும், நாம் எடுக்கும் ஓட்டத்துக்கு இருமடங்குக்கு சமம். நாம் ஓட்டங்களைத் தடுப்பதன் மூலம் எதிராளியை விளையாட்டில் தவறு செய்யத் தூண்டுகிறோம்.

நமக்கு இப்போது தேவை
6 + 5 அணி.
கொஞ்சம் பொறுப்பாக ஃபீல்டிங்.
ஆட்டத்தைப் பொறுத்து அமைக்கும் வியூகம்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஃபிட்னெஸ்.

ஜெயஹோ இந்தியா!

ஆதி
03-03-2011, 12:48 PM
உங்கள் கருத்து சரிதான் கௌதம், என் கேள்வி என்னவென்றால், சரியான பந்துவீச்சாளர்களே இல்லாத நிலையில் யாரை கொண்டு வீச செய்வது..

7 + 4 என்பதே இப்போதைக்கு சரி..

5 - இப்படி வச்சுக்கலாம்

இப்ப கூட நம்ம ஆளுங்க என்ன செய்வாங்க தெரியுமா, 3 பேஸ் 2 ஸ்பின் என்றுதான் கணக்கு வைப்பாங்க, ஏன்னா நம்ம பேஸ் வீச்சாளர்களை நம்ப இயலாது, 3 வரும் ஒரே நேரத்தில் சொதப்புவார்கள்..

பேட்ஸ்மேன் போல பந்து வீச்சாளர்களுக்கும் ஒருமுகப்படுதல் அவசியம், ஆனால் இரண்டு பந்து கோட்டில் போட்டுவிட்டாலே மூன்றாம் பந்தை வெளியில் வீசுவார்கள் நம்மவர்கள், நெருக்கடியான பல சூழலில் ஆஸி காரர்கள் ஸ்டம்புக்கு பந்துவீச ஆரம்பிப்பார்கள், விளையாட்டும் அவர்களின் கைகளுக்குள் சென்றுவிடும், ஆனால் நம்மவர்கள் இன்னும் பதட்டத்துடன் பந்து வீசு துவங்கிவிட்டுவார்கள், அழுத்தத்தையும், பதட்டத்தை மறைத்துக் கொண்டு நமக்கு பந்து வீச தெரியாது..

தொடு கோட்டை விட்டு வெளிவந்து ஒரு பேட்ஸ்மேன் வீச ஆரம்பித்தால் நமக்கு பயம் வந்துவிடும், இதுவே ஆஸி காரர்களாய் இருந்தால் அதை பேட்ஸ்மேனின் பலவீனமாய் ஆக்கிவிடுவார்கள்..

முந்தைய ஒரு உலக கோப்பையும், எல்லோரும் வெளியேற, ஜடைஜாவும், ராபின் சிங்கும் விளாசி கொண்டிருப்பார்கள், மெக்ரா வந்து ராபின்ன் சிங் விக்கட்டை வீழ்த்துவார், இந்த தன்நம்பிக்கை நம்மிடம் மிக குறைவு..

நாம் 7 பேட்ஸ்மேன்களுடன் இறங்குவதே நமக்கு நம் மீது நம்பிக்கை இல்லாததால் தான்..

p.suresh
03-03-2011, 11:32 PM
7வதாக களம் இறங்கும் மட்டையாளருக்கு பேட் செய்ய 2 அல்லது 3 ஒவர்களே கிடைக்கும் பட்சத்தில் 7+4 வியூகம் பலனைத் தராது.

பகுதி நேர பந்து வீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த பயன்படுவார்களேயன்றி விக்கெட் எடுக்க அல்ல.

slog ஒவரில் வாக்கார் யூனுஸ் போல் கால் கட்டை விரல் நகத்தைப் பெயர்க்கும் யாக்கர் போட நம்மிடம் பவுலர்கள் இல்லை.

நம் ஃபீல்டிங்கின் போது எதிரணியினர் ஒரு ரன்னை இரண்டாகவும், இரண்டை மூன்றாகவும் எளிதில் மாற்றுகின்றனர். அவர்களுக்கு நெருக்கடி தருவதில்லை.

330 ரன்கள் இலக்கையே துரத்தி விடுவதால் target அமைப்பதில் அணித்தலைவர்கள் குழம்பித்தான் போவார்கள்.

ஆமிர்,ஆசிப்,பட்டுக்கு நிகழ்ந்ததைப் பார்க்கும் போது இனி வீரர்கள் பெட்டிங்கில் ஈடுபடுவார்கள் எனத் தோன்றவில்லை.

சேவாக் போன்றவர்களே தன் திறமையை நம்பாமல் நம்பர் போடாத தன் சட்டையை நம்புவது சிரிப்பைத்தான் தருகிறது.

ஓவியன்
06-03-2011, 07:21 AM
இன்றைய ஐயர்லாந்துடனான போட்டியில் அஸ்வினையும் இணைத்து அஸ்வினுக்கு புதிய பந்தினை வீசக் கொடுத்து வாய்ப்பளித்துப் பார்க்கலாமே...?? :)

கௌதமன்
06-03-2011, 04:57 PM
அயர்லாந்து அணியுடன் இந்தியா ஆடி ஒரு வழியாக ஜெயித்து விட்டது. அதைவிட தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து விளையாட்டு நன்றாக இருந்தது.

அயர்லாந்து அணி அருமையான அணியாக மாறி வருவதை பார்க்க முடிந்தது. பாராட்டுக்கள்.

பங்களாதேஷ், இங்கிலாந்து அணியுடன் விளையாடிய விளையாட்டுகளில் மட்டையடியில் ஜொலித்த இந்தியா, ஏனோ அயர்லாந்து அணியுடனான விளையாட்டில் மட்டையடியில் எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை என்றே தோன்றுகிறது. பந்து வீச்சில் முன்னேற்றம் தெரிந்தது. யுவராஜ் நன்றாக வீசினார்.

இந்திய அணியின் பந்து வீச்சும், மட்டையடியும் இணைந்து ஜொலித்தால் தான் உலகக் கோப்பையை ஜெயிக்க முடியும்.


பாகிஸ்தான் முக்கிய விளையாட்டு வீரர்கள் இல்லாத நிலையிலும் ஒரு உத்வேகத்துடன் விளையாடுகிறது. இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற்ற விதம் பாராட்டுக்குரியது.


சுருக்கமாக இப்போதுள்ள நிலையில் காலிறுதியில் நுழையும் எல்லா அணிகளுக்கும் வாய்ப்பு சமமாக இருப்பதாகவே எண்ணுகிறேன்.

M.Jagadeesan
07-03-2011, 12:26 AM
கத்துக்குட்டி அயர்லாந்திடமே போராடி வெல்லுகின்ற இந்திய அணி
ஜாம்பவான்களான பாகிஸ்தானையும்,ஆஸ்திரேலியாவையும் எப்படி
எதிர்கொள்ளப் போகிறதோ?

அன்புரசிகன்
07-03-2011, 01:10 AM
கத்துக்குட்டி அயர்லாந்திடமே போராடி வெல்லுகின்ற இந்திய அணி
ஜாம்பவான்களான பாகிஸ்தானையும்,ஆஸ்திரேலியாவையும் எப்படி
எதிர்கொள்ளப் போகிறதோ?
இந்த வார்த்தை பிரயோகம் அயர்லாந்துக்கு பிரயோகித்தது தவறு என்று நினைக்கிறேன். :D

தாமரை
07-03-2011, 05:58 AM
தோனியின் சில வியூகங்கள் இன்னும் வெளியில் தெரியாதவாறு அவர் மர்மம் காக்கிறார்.

அஸ்வின் காலிறுதிப் போட்டிகளுக்குப் பின்பே களமிறக்கப் படுவார். அவரின் புதிய பந்து வீச்சு நுட்பங்கள் மற்ற நாடுகளுக்குத் தெரியாத வண்ணம் இரகசியம் காக்க விழைகிறார் தோனி.

அதே போல் ஆஷிஷ் நெஹ்ரா வீணாக தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பந்து வீசி தன்னுடைய உடல்வலுவை இழப்பதிலும் தோனிக்கு விருப்பமில்லை என்று தோன்றுகிறது.

காலிறுதியில் இருந்து ஒவ்வொரு போட்டியும் மிக மிக முக்கியமானது என்பதால் அதுவரை முழு பலம் நிறைந்த அணியை தோனி களமிறக்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது.

நல்ல ஃபீல்டிங் இருந்தால், பந்து வீச்சின் உண்மை பலம் தெரியும்.

இன்றைய சூழ்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டி தவிர்க்க முடியாத ஒன்று போலத்தான் தோன்றுகிறது.

தாமரை
07-03-2011, 08:05 AM
7வதாக களம் இறங்கும் மட்டையாளருக்கு பேட் செய்ய 2 அல்லது 3 ஒவர்களே கிடைக்கும் பட்சத்தில் 7+4 வியூகம் பலனைத் தராது.

பகுதி நேர பந்து வீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த பயன்படுவார்களேயன்றி விக்கெட் எடுக்க அல்ல.


நாம என்ன வச்சிகிட்டா வஞ்சனை பண்ணறோம்?

இருக்கறதை வச்சுதான் திட்டம் போட முடியும். வேகப் பந்து வீச்சாளர் வேண்டும் என்றால் அவர்களை வளர்க்க நம்மிடம் திட்டம் இருக்கணும்.

உடல் உறுதிப் பயிற்சி, நுட்பங்கள் பயிற்சி, சத்தான உணவு இப்படி அடிப்படையில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களை நம்ம வாரியம் வளர்ப்பது இல்லை. எங்கயோ யாரோ வளர்த்து வச்சிருந்தா புடுங்கி வந்து நட்டுப் பெருமைப்பட்டுக்கலாம் என்கிற மனப்பான்மை உதவாது.

சட்டியில இருந்தாதானே ஆப்பையில் வரும்..

வெறுந்தண்ணி விட்டா சோறு வெந்திடுமா என்ன? அரிசி வேணுமில்ல...

ஆதவா
07-03-2011, 08:18 AM
இங்கிலாந்துடன் மாட்சை டய் செய்தது இந்தியாவிற்கு ஒரு இழப்பே. யூடிஆர்எஸ் சொதப்பியதன்மூலம் இந்தியாவின் எதிர்ப்பு இன்னும் வலுவாகவே இருக்கும். யார் இதை சப்போர்ட் செய்து பேசினாலும் இந்தியா இந்த விஷயத்தை மீண்டும் கொண்டுவந்து இதை தடுத்துவிடும் என்றே நினைக்கிறேன்.




2.5 மீட்டர் ரூல் மாற்றம் செய்யப்பட்டிருக்கு அண்ணா. இந்தியாவுக்கு இதில் வெற்றிதான். அதன்ப்டி ஐரிஷ் வீரர் குசக், அவுட் ஆகியிருக்கிறார்..

ஓவியன்
07-03-2011, 08:30 AM
உடல் உறுதிப் பயிற்சி, நுட்பங்கள் பயிற்சி, சத்தான உணவு இப்படி அடிப்படையில்..

ஒன்றை விட்டிட்டீங்களே, வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற எத்தனை மைதானங்கள் இந்தியாவில் இருக்கின்றன, எல்லாவற்றையும் ஸ்பின்னினா எப்படி..?? :D

தாமரை
07-03-2011, 08:39 AM
ஒன்றை விட்டிட்டீங்களே, வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற எத்தனை மைதானங்கள் இந்தியாவில் இருக்கின்றன, எல்லாவற்றையும் ஸ்பின்னினா எப்படி..?? :D

மைதானங்கள் ஸ்பின்னுவதில்லை. நாமதான் அதை அப்படித் தயார் பண்ணறோம்.. அதற்கு அடிப்படைக் காரணம் நம்மகிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இருப்பது.

என்னதான் ஸ்பின்னினாலும் 20 ஓவர்கள் வேகப்பந்து வீச்சாளர்களால் வீசப்பட வேண்டியது இருக்கு. வேகப் பந்து வீச்சுக்கு உதவாத மைதானங்களில் கூட ஸ்டெயின், மோர்கல், ஜான்சன், மலிங்கா போன்றோர் மிரட்டறாங்களே!!! முதலில் வேகமாக, துல்லியமாக போடப் பயிலட்டும். அதுக்கு பின்னாடி மைதான்ங்களை உண்டாக்கிக்கலாம்.

ஓவியன்
07-03-2011, 08:56 AM
முதலில் வேகமாக, துல்லியமாக போடப் பயிலட்டும். அதுக்கு பின்னாடி மைதான்ங்களை உண்டாக்கிக்கலாம்.

அதுவும் சரிதான், ஒரு ஷஹீரை மட்டும் நம்பி இருந்தால் எப்படி..??, வேகப்பந்து வீச்சாளர்களும், வேகபந்து வீசக் கூடிய சகல துறை ஆட்டக்காரர்களும் இந்திய அணியின் தற்போதைய தேவையாகத் தெரிகிறது.

வேகப்பந்து வீச்சாளர்கள் நிரம்பிய தென்னாபிரிக்க அணி மூன்று முழு நேர சுழற்பந்து வீச்சாளர்களை நம்பி விளையாடுகையில் இந்திய அணியோ பந்து வீச்சாளர்கள் தெரிவின் திணறுவது என்னவோ உண்மைதான்.

ஆதி
07-03-2011, 09:11 AM
ஒன்றை விட்டிட்டீங்களே, வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற எத்தனை மைதானங்கள் இந்தியாவில் இருக்கின்றன, எல்லாவற்றையும் ஸ்பின்னினா எப்படி..?? :D

இந்தியாவை பொருத்தவரை வேகப்பந்து மைதானங்களை உருவாக்க இயலாது, வேறு நாட்டில் இருந்து மண் கொணர்ந்து உருவாக்கினாலும், நம் தட்ப வெக்க சூழலால் பழையபடியே மாறிவிடும்..

இந்திய மண்ணுக்கு ஸ்பின் பொருந்துது அவ்வளவு தான் ஒழிய, மைதானங்கள் ஸ்பின்னர்களுக்காக உருவாக்கப்படவில்லை..

ஸ்பின் மைதானமான சென்னையில் வார்னேவின் பந்துகள் பல பௌண்ட்ரிக்கு வெளியே உலவியதை நாம் பார்த்திருக்கிறோம்..

இந்திய துணைக்கண்டங்களின் மைதானங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோப்பிப்பதற்கு முகாந்திரம், நிலப்பரப்பின் தன்மை ஒழிய, பிரத்தேகமாக ஸ்பின்னுக்காக இந்த மைதானங்கள் தயார் செய்யப்பட்டதல்ல..

ஓவி, யாரு போட்டாலும் பந்து சுழலும், அதனாலத்தான் ஸ்பின்கள் இங்கு அனாவஸ்யம், ஆட்சியை கூட மக்கள் ஸ்பின் பண்ணித்தான் அமைக்கவிடுறாங்க, ஆட்சிக்கு வந்த பின் ஆட்சியாளர்களும் மக்களை ஸ்பின் பண்றாங்க..

சோ ஸ்பினே, நம் கலாச்சாரம், நம் பாரம்பரியம், நம் தொன்மை, நம் பெருமை, நம் நிலைமையும்....

ஸ்பின்னும் ஸ்பின் சார்ந்த நிலமுமே இந்திய துணைகண்டம்..

ஓவியன்
07-03-2011, 09:33 AM
இந்திய துணைக்கண்டங்களின் மைதானங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோப்பிப்பதற்கு முகாந்திரம், நிலப்பரப்பின் தன்மை ஒழிய, பிரத்தேகமாக ஸ்பின்னுக்காக இந்த மைதானங்கள் தயார் செய்யப்பட்டதல்ல....

ஒரு சின்ன சந்தேகம் ஆதா, இந்தியாவுக்கு அருகாமையிலுள்ள பாகிஸ்தானிலிருந்து மட்டும் எப்படி வேகப்பந்து வீச்சாளர்கள் புதிது, புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்...?? :cool:

தாமரை
07-03-2011, 09:43 AM
ஒரு சின்ன சந்தேகம் ஆதா, இந்தியாவுக்கு அருகாமையிலுள்ள பாகிஸ்தானிலிருந்து மட்டும் எப்படி வேகப்பந்து வீச்சாளர்கள் புதிது, புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்...?? :cool:

அங்கே தெரு விளையாட்டுகளில் கூட வேகமும் முரட்டுத்தனமும்தான் பந்து வீச்சின் அடிப்படை.. அதற்கேற்ப அவர்கள் உணவு அவர்களை வலுவாக வைத்திருக்கிறது. கூடவே பாகிஸ்தான் கடக ரேகைக்கு வடக்கில் அமைந்திருப்பதாலும் பாலைவனமாக இல்லாததாலும் அங்கே நிலவும் வெப்ப நிலை அவர்களை திடமானவர்களாக வைத்திருக்கிறது.

நம்ம ஊரு வெயிலுக்கு 5 ஓவர் போட்டாலே பஞ்சரான பலூன்கள் ஆகிவிடுவோம்.

இரண்டாம் ஆனால் முக்கியமான காரணம் மகாத்மா காந்தி!!!

அவர்தான் இராட்டையைச் சுற்றச் சொன்னார் (ஸ்பின்னிங்)
அஹிமசையாய் இருக்கச் சொன்னார்

தாமரை
07-03-2011, 09:48 AM
இந்தியாவை பொருத்தவரை வேகப்பந்து மைதானங்களை உருவாக்க இயலாது, வேறு நாட்டில் இருந்து மண் கொணர்ந்து உருவாக்கினாலும், நம் தட்ப வெக்க சூழலால் பழையபடியே மாறிவிடும்..

இந்திய மண்ணுக்கு ஸ்பின் பொருந்துது அவ்வளவு தான் ஒழிய, மைதானங்கள் ஸ்பின்னர்களுக்காக உருவாக்கப்படவில்லை..

ஸ்பின் மைதானமான சென்னையில் வார்னேவின் பந்துகள் பல பௌண்ட்ரிக்கு வெளியே உலவியதை நாம் பார்த்திருக்கிறோம்..

இந்திய துணைக்கண்டங்களின் மைதானங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோப்பிப்பதற்கு முகாந்திரம், நிலப்பரப்பின் தன்மை ஒழிய, பிரத்தேகமாக ஸ்பின்னுக்காக இந்த மைதானங்கள் தயார் செய்யப்பட்டதல்ல..

ஓவி, யாரு போட்டாலும் பந்து சுழலும், அதனாலத்தான் ஸ்பின்கள் இங்கு அனாவஸ்யம், ஆட்சியை கூட மக்கள் ஸ்பின் பண்ணித்தான் அமைக்கவிடுறாங்க, ஆட்சிக்கு வந்த பின் ஆட்சியாளர்களும் மக்களை ஸ்பின் பண்றாங்க..

சோ ஸ்பினே, நம் கலாச்சாரம், நம் பாரம்பரியம், நம் தொன்மை, நம் பெருமை, நம் நிலைமையும்....

ஸ்பின்னும் ஸ்பின் சார்ந்த நிலமுமே இந்திய துணைகண்டம்..

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களை இந்தியாவில் தயார் செய்ய முடியும்

காற்றின் ஈரப்பதம்
பிட்சின் ஈரப்பதம்
பிட்ச் செய்த மண்ணின் ஒட்டும் தன்மை
பிட்சில் வளர்க்கும் புல் வகை
வெப்பம்

இப்படி சில பல விஷயங்களைக் கருத்தில் கொண்டால் இந்தியாவில் வேகப் பந்து பிட்சுகளை தயார் செய்யலாம்.

ஆதி
07-03-2011, 09:51 AM
ஒரு சின்ன சந்தேகம் ஆதா, இந்தியாவுக்கு அருகாமையிலுள்ள பாகிஸ்தானிலிருந்து மட்டும் எப்படி வேகப்பந்து வீச்சாளர்கள் புதிது, புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்...?? :cool:

ஓவி பந்து வீச்சாளருக்கு முக்கிமனான தேவை மனஒருமுகம், அது இந்திய பந்துவீச்சாளர்களை விட பாக்கிஸ்தானியர்களிடம் அதிகம் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்..


நல்லா கவனிச்சுப் பார்த்திருந்திங்கனா ஒரு விடய புலனாகி இருக்கும், ஆட்ட துவக்கத்திலேயே மூன்று விக்கட்டுக்களை இழந்துவிட்டால் கூட இந்தியாவிடம் 250க்கு மேல் ஓட்டங்கள் எடுத்துவிட முடியும், காரணம் மெத்தனம், மனவொருமை இல்லாதது, எதிரணியின் மீது அழுத்தத்தை திணித்து தினறடிக்க தெரியாதது, வெள்ளை பந்தையும், சிவப்பு பந்தையும் கையாளத் தெரியாமை, புதியப்பந்தையும், பழையப்பந்தையும் கையாள தெரியாமை, மைதானங்களின் தன்மையை அவதானிக்க தெரியாமை, மைதானங்களுக்கு ஏற்ப பந்து வீச தெரியாமை, இதைவிட கொடுமை ஃபீல்டிங் செட்டப்புக்கு ஏற்ப பந்துவீசாமை(இதை தான் ஒருமுகமின்மை என்று சொன்னேன்) ஆப்-சைடில் ஃபீல்டர்களை நிறுத்திவிட்டு லெக் சைடில் பந்துவீசும் சுதப்பல்கள் இந்திய வீரர்களிடம் அதிகம்...

ஆதி
07-03-2011, 10:00 AM
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களை இந்தியாவில் தயார் செய்ய முடியும்

காற்றின் ஈரப்பதம்
பிட்சின் ஈரப்பதம்
பிட்ச் செய்த மண்ணின் ஒட்டும் தன்மை
பிட்சில் வளர்க்கும் புல் வகை
வெப்பம்

இப்படி சில பல விஷயங்களைக் கருத்தில் கொண்டால் இந்தியாவில் வேகப் பந்து பிட்சுகளை தயார் செய்யலாம்.

இந்த யோசனைகள் முன்பே கருத்தில் கொள்ளப்பட்டன, சில ஆய்வுகளும் நடந்தன பலனில்லை..

முன்பு பொதிகையில் ஸ்ரீகாந், குட்நைட் க்ரிகட் சேட் நடத்தினார், இந்த கேள்வி பலராலும் எழுப்பப்பட்ட போது, அவர் இது குறித்த பல தகவல்களை சொல்லிவார், நியூஸ்லாந் அப்படித்தான் மாற்றினார்கள், ஆனால் அது போல் நம்மால் செய்ய இயலாது என்று சொல்கிறார்கள்.. நம்மிடம் பணமில்லாமல் இல்லை, ஸ்பாண்சர்களும் அதிகம் இருந்தாலும் எந்த பலனும் இருக்க போவதில்லை என்பதாலேயே, இதன் பொருட்டான எந்த முனைவும் இல்லாமைக்கு காரணம்..

ஓவியன்
07-03-2011, 10:10 AM
ஆட்ட துவக்கத்திலேயே மூன்று விக்கட்டுக்களை இழந்துவிட்டால் கூட இந்தியாவிடம் 250க்கு மேல் ஓட்டங்கள் எடுத்துவிட முடியும், காரணம் மெத்தனம், மனவொருமை இல்லாதது, எதிரணியின் மீது அழுத்தத்தை திணித்து தினறடிக்க தெரியாதது...

இதற்கான பிரதான காரணம் ஒன்று அல்லது இரண்டு பந்து வீச்சாளர்கள் அருமையாக வீச மற்றவர்கள் சொதப்புவது என நான் நினைக்கின்றேன். ஷஹீரும், ஹர்பஜனும் 3-4 ஓட்ட சராசரியில் பந்து வீசியிருந்தால் ஸ்ரீசாந்த் 9-10 சராசரியில் பந்து வீசுவார்... :D:D:D

அப்போது எதிரணி இலகுவாக 250 க்கு மேல் ஓட்டங்களைக் குவித்திருப்பார்கள்.

தென்னாபிரிக்க அணியினைப் பார்த்தால் மோர்கலும், ஸ்டெயினும், டிசொத்சோபி ( உச்சரிக்க மட்டுமில்ல எழுதவும் முடியலை இந்த பெயரை..!! :D), போத்தா என்று அட்லீஸ்ட் நான்கு பேர் தொடர்ச்சியாக அருமையாக வீசுவார்கள். அதனை விட ஸ்காலிஸ் ஒரு பக்கத்தில் பந்து வீச எப்போதும் தயாராக இருப்பார், இது போன்ற நல்ல நிலை இந்திய அணியிடம் தற்போது இல்லை என்பதே என் எண்ணம்.

அதாவது இன்னமும் நன்றாக பந்து வீசக் கூடிய பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்குத் தேவை, முக்கியமாக வேகப் பந்து வீச்சாளர்கள்.

எனக்கிருக்கும் ஒரே கேள்வி இதுதான் `பந்து வீச்சில் எல்லா வகைப் போட்டிகளிலும் ஒரு அஸ்வின் வேகமாக முன்னேற்றம் காட்டும் போது, அபிமன்யூ மிதுனால் ஏன் வேகமாக முன்னேற முடியாமல் இருக்கிறது..??` (இங்கே அஸ்வினை இளம் சுழல் பந்து வீச்சாளர்களையும், மிதுனை இளம் வேகப்பந்து வீச்சாளர்களையும் குறிக்க மாத்திரம் பயன்படுத்தினேன்)

ஆதி
07-03-2011, 10:49 AM
அதற்கு தாமரையண்ணாவின் பதிலிருக்கே ஓவி..

முந்தைய ஒரு உலக கோபையில் 6 விக்கட்கள் வீழ்த்திய பிறகு நெஹ்ராவின் நிலைமை என்ன ஆனது என்று பார்த்திருப்பீர்கள், அன்று அவர் வீசிய அத்தனை பந்துகளும் 140 மேல் வீசப்பட்டவை, உடல்வலிமையும் வேணுமில்லையா ?

ஓவியன்
07-03-2011, 10:57 AM
அதற்கு தாமரையண்ணாவின் பதிலிருக்கே ஓவி.?

அதனை ஏற்றுக் கொண்டேன் ஆதன், ஒரு ஷஹீரை உருவாக்க முடிந்த நம்மால் ஏன் இன்னமும் இரண்டு ஷஹீரை உருவாக்க முடியவில்லை என்பதே என் ஆதங்கம். :)

sarcharan
07-03-2011, 11:01 AM
நேற்றைய ஆட்டம் அபாரம். இந்தியா ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இல்லாதிருந்தது.. ஆனால் யுவராஜ் சிங் அதை முறியடித்துவிட்டார்...

Nivas.T
07-03-2011, 11:04 AM
இரண்டாம் ஆனால் முக்கியமான காரணம் மகாத்மா காந்தி!!!

அவர்தான் இராட்டையைச் சுற்றச் சொன்னார் (ஸ்பின்னிங்)
அஹிமசையாய் இருக்கச் சொன்னார்

:D:D:D:D:D:D

ஆதி
07-03-2011, 11:06 AM
நல்ல யோசித்து பாருங்க ஓவி..

கபில் - ஸ்ரீநாத் - ஜாஹிர்

ஸ்ரீநாத் என்ன ஆனார் என்று நமக்கு தெரியும்..

இந்தியாவின் சிறந்த வேக பந்து வீச்சாளர்கள் பட்டியலே இவ்வளவுதான்..

எல்லாரும் வேகமாக போடனும் என்று அவசியமில்லை, ஆனால் மெக்ரா மாதிரி ஸ்டைலை மாற்றிக்கலாம் இல்லையா..

அதுக்கு மனவொருமுகம் வேணுமே..

மந்திரி மூளை ஆடுகளத்தில் உதவாது, தளபதி மூளை சண்டை போடவே உதவும், ராஜா மூளை இருந்தா தான் சமாளிக்க முடியும், இப்போதைக்கு தோனியிடம் ராஜா மூளை இருக்கு, அதை புரிஞ்சுக்காத தளபதிகள் எல்லாம் ராஜாவாக ஆசைபட்டு உள்நாட்டு கலவரத்தை தூண்டுவதும் இந்தியாவின் ஒரு பலவீனமே...

ஆதி
07-03-2011, 11:10 AM
நேற்றைய ஆட்டம் அபாரம். இந்தியா ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இல்லாதிருந்தது.. ஆனால் யுவராஜ் சிங் அதை முறியடித்துவிட்டார்...

அதுக்கு காரணம், யுவராஜ் ஆடவரும் இடத்துக்கு இருக்கும் போட்டி, அவர் தன்னை நிரூப்பித்தே ஆகனும் இல்லை என்றால் ரெய்னா உள்ள வந்திடுவார்..

கோலி தன் இடத்தை தக்க வச்சுக்கிட்டார், இப்போதைக்கு யுவராஜுக்கும், ரெய்னாவிற்கும் தான் போட்டி, தொடர்ச்சியான அரை சதங்களால், யுவராஜும் தன் அபாயக் கட்டத்தை தாண்டிட்டார்..

யாருக்கும் அடிப்பட்டால் ஒழிய இனி ரெய்னா முக்கியமான ஆட்டங்களில் உள்ளே வரமாட்டார்...

ஓவியன்
07-03-2011, 11:13 AM
யாருக்கும் அடிப்பட்டால் ஒழிய இனி ரெய்னா முக்கியமான ஆட்டங்களில் உள்ளே வரமாட்டார்...

அப்படி ஒரு வேளை வந்தால் அவரும் நன்றாக ஆடுவார், அவரும் தன்னை நிரூபிக்கணுமே.. :cool:

ஓவியன்
07-03-2011, 11:15 AM
நல்ல யோசித்து பாருங்க ஓவி..

கபில் - ஸ்ரீநாத் - ஜாஹிர்...

பாவம் வெங்கடேஸ் பிரசாத்தையும் சேர்த்துக்கலாம், அந்த அமீர் சோகைலின் கொட்டத்தை அடக்கினதுக்காகவேனும்.. :D:D:D

தாமரை
07-03-2011, 11:36 AM
அதனை ஏற்றுக் கொண்டேன் ஆதன், ஒரு ஷஹீரை உருவாக்க முடிந்த நம்மால் ஏன் இன்னமும் இரண்டு ஷஹீரை உருவாக்க முடியவில்லை என்பதே என் ஆதங்கம். :)


ஜாகீர்கானை நாம உருவாக்கினோமா? என்ன கொடுமை இது?

அவர் தன் சுய முயற்சியால் உருவானார். சொல்லப்போனால் இளம் வீரர்களை வளர்க்கக் கூடிய அமைப்பு நம்மிடம் இல்லவே இல்லை.

ஓவியன்
07-03-2011, 11:54 AM
ஜாகீர்கானை நாம உருவாக்கினோமா? என்ன கொடுமை இது?.

அவரது திறமைக்கு வாய்ப்புக் கொடுத்தது நாம தானே...

:icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03:

அக்னி
07-03-2011, 12:15 PM
அவரது திறமைக்கு வாய்ப்புக் கொடுத்தது நாம தானே...

:icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03:

ஓவியன் மலையைக் குடைந்து ரோட்டு போடுறாருன்னுதானே இவ்ளோ நாளா நெனச்சுக்கிட்டிருந்தேன்...
இவரு கிரிக்கெட் டீமே போடுறாரே...

ஓவியன் அப்பிடியே நம்ம செல்வாவையும் டீமுக்குள்ளார இழுத்துவிடுங்க...
நல்ல மெல்லிய பையன்... ஓடியாடி விளையாடுவானாக்கும்...

ஓவியன்
07-03-2011, 12:22 PM
ஓவியன் அப்பிடியே நம்ம செல்வாவையும் டீமுக்குள்ளார இழுத்துவிடுங்க...
நல்ல மெல்லிய பையன்... ஓடியாடி விளையாடுவானாக்கும்...

நோ ரெக்கமண்டேஷசன்..!!, :icon_nono:

இப்படி சிபாரிசு பண்ணினவங்களை வைத்து நாம எப்படி கோப்பையை ஜெயிக்கிறதுண்றேன்..!! :huh:

திறமைக்கு மட்டும் தான் வாய்ப்பளிக்கப்படும். :icon_shout:

அக்னி
07-03-2011, 12:53 PM
நோ ரெக்கமண்டேஷசன்..!!, :icon_nono:

இப்படி சிபாரிசு பண்ணினவங்களை வைத்து நாம எப்படி கோப்பையை ஜெயிக்கிறதுண்றேன்..!! :huh:

திறமைக்கு மட்டும் தான் வாய்ப்பளிக்கப்படும். :icon_shout:

முடியல... :mad:

அடேய்... எடுங்கடா அதை... :violent-smiley-010:

இது வேணாம்... மத்ததை எடுங்கடா... :waffen093:

ஓவியரே அப்படியே நில்லும்... வந்துட்டேயிருக்கன்... :auto003:

தாமரை
07-03-2011, 01:04 PM
நோ ரெக்கமண்டேஷசன்..!!, :icon_nono:

இப்படி சிபாரிசு பண்ணினவங்களை வைத்து நாம எப்படி கோப்பையை ஜெயிக்கிறதுண்றேன்..!! :huh:

திறமைக்கு மட்டும் தான் வாய்ப்பளிக்கப்படும். :icon_shout:

இதான் இதைத்தான் சொன்னேன்.. யாராவது எங்கியாவது போய் கத்துகிட்டு திறமையை வளர்த்துகிட்டு வரணும்..

இவங்க வாய்ப்பு மட்டும் குடுப்பாங்களாம்..

திறமையை கண்டுபிடிச்சி, வளர்க்க உதவமாட்டாங்க...:icon_b::icon_b::icon_b:

ஆதவா
07-03-2011, 01:27 PM
இதான் இதைத்தான் சொன்னேன்.. யாராவது எங்கியாவது போய் கத்துகிட்டு திறமையை வளர்த்துகிட்டு வரணும்..

இவங்க வாய்ப்பு மட்டும் குடுப்பாங்களாம்..

திறமையை கண்டுபிடிச்சி, வளர்க்க உதவமாட்டாங்க...:icon_b::icon_b::icon_b:

அண்ணா, பலமுறை நான் நினைத்ததுண்டு... ஏன் நம் அணியில் மட்டும் சரியான ஆள் ரவுண்டர்களே சிக்கமாட்டேன்கிறார்கள் என்று.. (பேட்டிங் மற்றும் சீம்) வாட்சன் மாதிரியோ, காலிஸ் மாதிரியோ ஒரு மனுஷன் இருந்தால் 7+4, 6+5 என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லைதானே.. தவிர, எனக்குத் தெரிந்து ஆஸி, மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளில் இந்த பிரச்சனை இல்லை என்றே நினைக்கிறேன். இவ்விரு அணிகளையும் ஆட்களையும் பார்த்தால் கடாய் மாதிரி இருப்பார்கள். நல்ல உடல்வலு, எதிரணியினர் பார்த்தாலே பயப்படும் திடகாத்திரமான உடம்பு, எங்கிருந்துய்யா புடிக்கிறீங்க என்று சொல்லும்படியான ஆட்டத்திறன்!!! தவிர ஒரு ஆளுக்கு இன்னொரு ஆள் மாற்று சரியாக இருக்கிறார்கள். ஆஸியை எடுத்துக் கொண்டால், பொலிங்கர், ஜான்ஸன், டைட், லீ, வாட்சன் என்று ஐந்து பேர் சீமர்ஸ். பொலிங்கரைத் தவிர மற்ற அனைவரும் டீமில் உண்டு. தெ.ஆ விலும் அதே கதிதான். நம் அணியில் பேட்டிங்கில் வேண்டுமானால் அப்படி மாற்று ஆள் இருக்கலாம், ஆனால் வெல் பேலன்ஸ்ட் டீமாக உருவாக்க ஏன் யாரும் நினைப்பதில்லை? பேட்டிஙே போதும் என்று நினைத்துக் கொண்டார்களா?

தாமரை
07-03-2011, 01:40 PM
இந்தியாவில் 100 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் 15-20 பேர்கள்தான் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும். அதிலும் 15 பேருக்குத் தான் நல்ல வருமானம் இருக்கும்.

எனவே வாய்ப்புகள் குறைவு என்பதால் பலபேர் அதற்காக முயற்சி செய்வதே இல்லை. இன்றைய ஐ.பி.எல் லினால் ஒரு அணிக்கு 20 பேர் என 200 பேருக்கு கிரிக்கெட் விளையாட்டினால் வருமானம் கிடைக்கும்.

எனவே பிராபபளிட்டி விகிதாச்சாரத்தின் படி வெற்றி வாய்ப்பு மிகவும் மங்கலாக இருப்பதால் பலர் தங்கள் பிள்ளைகளை கிரிக்கெட்டை தங்கள் தொழிலாகக் கொள்வதில்லை. ஒரு விளையாட்டு என்ற அளவில் அதை கொள்வதினால் சிறந்த வீரர்கள் குறைவாகவே உருவாகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தால்

தெண்டுல்கர், கங்கூலி, திராவிட், இலக்ஷ்மண், அசாருதீன், ஜெடஜா என ஆறு பேட்டிங் வாய்ப்புகள் அடைபட இந்திய அணியில் இடம் பிடிப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

இதைத் தீர்க்க ஒரே வழி ஒவ்வொரு ஐபிஎல் அணியும் வருடத்துக்கு 12 வயதிற்குட்பட்ட 5 பேரை தத்தெடுக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல பள்ளியில் கல்வி, சிறந்த உடற்பயிற்சி, கிரிக்கெட் பயிற்சி, உணவு உறைவிடம் தரவேண்டும்.

இவர்களைக் கொண்டு அவர்கள் எதிர்கால வீரர்களை வளர்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் வேலைக்கும் வாழ்க்கைக்கும் உத்திரவாதம் கிடைப்பதாலும், சரியான வயதில் சிறந்த உணவு, உடற்பயிற்சி, விளையாட்டு நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப் படுவதால்...

சிறந்த வீரர்கள் கிடைப்பார்கள்.

சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்.

ஆதி
07-03-2011, 02:38 PM
உண்மைதான் அண்ணா...

மற்ற அணிகளிடம், ஓராண்டு திட்டம், ஐந்தாண்டு திட்டம் என்று மையில்கல் உண்டு, இவ்வாறான இலக்குகள் நம்மிடம் இந்திய அணியிடமும், அதை மேலாளுவர்களிடமும் இல்லை..

நீங்கள் சொல்வதை செயல் படுத்த, இலக்குகளும் அதை அடையும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது..

ஷீ-நிசி
07-03-2011, 04:03 PM
அண்ணா, பலமுறை நான் நினைத்ததுண்டு... ஏன் நம் அணியில் மட்டும் சரியான ஆள் ரவுண்டர்களே சிக்கமாட்டேன்கிறார்கள் என்று.. (பேட்டிங் மற்றும் சீம்) வாட்சன் மாதிரியோ, காலிஸ் மாதிரியோ ஒரு மனுஷன் இருந்தால் 7+4, 6+5 என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லைதானே.. தவிர, எனக்குத் தெரிந்து ஆஸி, மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளில் இந்த பிரச்சனை இல்லை என்றே நினைக்கிறேன். இவ்விரு அணிகளையும் ஆட்களையும் பார்த்தால் கடாய் மாதிரி இருப்பார்கள். நல்ல உடல்வலு, எதிரணியினர் பார்த்தாலே பயப்படும் திடகாத்திரமான உடம்பு, எங்கிருந்துய்யா புடிக்கிறீங்க என்று சொல்லும்படியான ஆட்டத்திறன்!!! தவிர ஒரு ஆளுக்கு இன்னொரு ஆள் மாற்று சரியாக இருக்கிறார்கள். ஆஸியை எடுத்துக் கொண்டால், பொலிங்கர், ஜான்ஸன், டைட், லீ, வாட்சன் என்று ஐந்து பேர் சீமர்ஸ். பொலிங்கரைத் தவிர மற்ற அனைவரும் டீமில் உண்டு. தெ.ஆ விலும் அதே கதிதான். நம் அணியில் பேட்டிங்கில் வேண்டுமானால் அப்படி மாற்று ஆள் இருக்கலாம், ஆனால் வெல் பேலன்ஸ்ட் டீமாக உருவாக்க ஏன் யாரும் நினைப்பதில்லை? பேட்டிஙே போதும் என்று நினைத்துக் கொண்டார்களா?

ஆதவா....

எல்லா திறமையுமே நம்ம கிட்ட இருந்தா அப்புறம் எல்லா போட்டியும் இந்தியா மட்டும்தான் வெற்றிபெற முடியும்..

நம்ம கிட்ட இருக்கற பேட்டிங் வலிமைக்கு ஈடு இல்லை எந்த அணிக்கும்..

ஆஸ்திரேலியா, கிட்ட இருக்கற பவுலிங் மத்த அணிகள் கிட்ட எதிர்பார்க்கமுடியாது..

தென் ஆப்ரிக்காகிட்ட இருக்கற ஆல்ரவுண்டர்கள் மாதிரி ,மற்ற அணிகளுக்கு கிடையாது..

அயர்லாந்து அருமையான பீல்டிங்

இப்படி ஒவ்வொரு அணிகளும் ஒவ்வொரு விஷயத்துல ஸ்பெஷலிஸ்ட்.

நம்ம கிட்ட நல்ல பேட்டிங் லைன் இருக்கு, சிறந்த ஸ்பின்னர்கள் இருக்காங்க.. ஃபீல்டிங் ஓ.கே...

பவுலிங் வீக்தான்.. ஆனா பாரு அயர்லாந்து சேஸ் செய்யுது இங்கிலாந்து டார்கெட்ட..

இங்கிலாந்து பவுலர்கள் நம்மாளுங்கள் விட சொதப்பல் பவுலர்களா?

எல்லாமே சரியா அமைஞ்சிட்டா நமக்கு மட்டும்தான் உலககோப்பை கொடுத்துகிட்டே இருக்கனும்...

ஓவியன்
07-03-2011, 04:24 PM
எல்லாமே சரியா அமைஞ்சிட்டா நமக்கு மட்டும்தான் உலககோப்பை கொடுத்துகிட்டே இருக்கனும்...

அப்படிப் போடுங்க ஷீ..!! :icon_b:

சரி அதிருக்கட்டும், நலமா ஷீ...?

ஷீ-நிசி
07-03-2011, 04:46 PM
அப்படிப் போடுங்க ஷீ..!! :icon_b:

சரி அதிருக்கட்டும், நலமா ஷீ...?

நலமே ஓவி!.... வீட்ல எல்லாரும் செளக்கியமா?!! :)

செல்வா
07-03-2011, 06:13 PM
போட்டிகள் துவங்குமுன் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளும் ஒவ்வொன்றாகக் கழண்டு விழுந்து கொண்டிருக்கிறது.

xavier_raja
08-03-2011, 05:40 AM
சொல்வதற்கு கஷ்டமாக இருந்தாலும் உண்மை இதுதான்.. இந்தியா உலக கோப்பையை வெல்வது பத்திரிகைகளிலும் மற்றும் விளம்பரங்களிலும் தான்... காரணம் நம்முடைய படு மோசமான பில்டிங் மற்றும் ஒன்றுக்கும் உதவாத பௌலிங்... ஆகவே "வி ஆர் நாட் deserved for தி வேர்ல்ட் கப்" :(

ஆதவா
08-03-2011, 06:08 AM
சொல்வதற்கு கஷ்டமாக இருந்தாலும் உண்மை இதுதான்.. இந்தியா உலக கோப்பையை வெல்வது பத்திரிகைகளிலும் மற்றும் விளம்பரங்களிலும் தான்... காரணம் நம்முடைய படு மோசமான பில்டிங் மற்றும் ஒன்றுக்கும் உதவாத பௌலிங்... ஆகவே "வி ஆர் நாட் deserved for தி வேர்ல்ட் கப்" :(

இன்னும் நம்பிக்கை இருக்குங்க... கவலைப்படாதீங்க. இந்தியா மட்டுமல்ல, ஆஸி, தெ.ஆ, இலங்கை, பாக், போன்ற நாடுகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதில் ஒருமுறை கூட வென்றிராத தெ.ஆப்பிரிக்கா வென்றால் நன்றாகத்தான் இருக்கும்.. (இருந்தாலும் இந்தியாவை விட்டுக் கொடுக்க மாட்டோம் கவ்லைப்படாதீங்க)

aren
08-03-2011, 07:44 AM
அண்ணா, பலமுறை நான் நினைத்ததுண்டு... ஏன் நம் அணியில் மட்டும் சரியான ஆள் ரவுண்டர்களே சிக்கமாட்டேன்கிறார்கள் என்று.. .

நம் நாட்டிலும் இருந்திருக்கிறார்கள் ஆதவா. அபிட் அலி, சலீம் துரானி, சந்தீப் பட்டீல், மொஹூந்தர் அமர்நாத், மனோஜ் பிரபாகர் ஆகியோர் இருந்திருக்கிறார்கள், ஆனால் நம் மக்கள் அவர்களுக்கு சரியான சந்தர்பங்களைக் கொடுக்கவில்லை.

இந்த காலத்தில் அபிஷேக் நய்யார், ராஜகோபாலன் சதீஷ், கணபதி விக்னேஷ், ரஜாத் பாட்டியா போன்றோர் நன்றாக பந்துவீசவும், மட்டையடிக்கவும் தெரிந்தவர்கள். ஆனால் இவர்களுக்கு சரியான பயிற்சிகள் கொடுத்தால் இவர்களையும் நல்ல ஆல்ரவுண்டர்களாக ஆக்கமுடியும். ஆனால் ஏனோ இந்திய கிரிக்கெட் வாரியம் செய்ய மறுக்கிறது.

செல்வா
08-03-2011, 11:08 AM
இந்த காலத்தில் அபிஷேக் நய்யார், ராஜகோபாலன் சதீஷ், கணபதி விக்னேஷ், ரஜாத் பாட்டியா போன்றோர் நன்றாக பந்துவீசவும், மட்டையடிக்கவும் தெரிந்தவர்கள். ஆனால் இவர்களுக்கு சரியான பயிற்சிகள் கொடுத்தால் இவர்களையும் நல்ல ஆல்ரவுண்டர்களாக ஆக்கமுடியும். ஆனால் ஏனோ இந்திய கிரிக்கெட் வாரியம் செய்ய மறுக்கிறது.

அரசியல் அரசியல்
எங்கும் எதிலும்
அரசியல்....!

ஓவியன்
08-03-2011, 12:15 PM
ஐந்து ஓவர்களில் 100 ஓட்டங்களைக் குவிக்க முடியுமா...??, இன்று இலங்கையில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணியினர் கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 100 ஓட்டங்களைக் குவித்து 302 என்ற பெரிய இலக்கினை எட்டியுள்ளார்கள்.

சிவா.ஜி
08-03-2011, 12:24 PM
வரும்.................ஆனா..............வராதுன்னு சொல்ற மாதிரி...இந்தியா ஜெயிக்கும்............ஆனா........என்னத்த சொல்ல.....

ஆதவா
08-03-2011, 12:30 PM
ஓவி... கடைசி ஐந்து ஓவர்கள், T20 பார்த்தமாதிரி இருந்தது!!
இன்றைக்கு நியூஸி வெற்றி என்று எதிர்பார்க்கிறேன்.

47வது ஓவரில் 28 ரன்கள்!!
49 வது ஓவரில் 30 ரன்கள்!

ங்கொய்யால.... இரண்டே ஓவரில் 58 ரன்கள்!!! விளங்குமா??

சிவா.ஜி
08-03-2011, 12:35 PM
இன்னைக்கு டெல்லி எஃபெம்ல கிரிக்கெட் பத்தி ஒரு நிகழ்ச்சி கேட்டேன். அதுல சில நேயர்களிடம் நியூசிலாந்து எவ்ளோ ரன் குவிக்கும்ன்னு கேட்டிருந்தாங்க. ரெண்டு பேரு 300 அடிக்கும்ன்னு சொன்னாங்க...ஆனா அப்பவும் பாகிஸ்தான்தான் ஜெயிக்கும்ன்னு சொன்னாங்க. ஏன்னு கேட்டா...அஃப்ரிடியும், யூனுஸ்கானும் நல்ல ஃபார்ம்ல இருக்காங்க...அது மட்டுமில்ல கைமல் கண்டிப்பா செஞ்சுரிதான்...அதனால பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்ன்னு சொன்னாங்க. முதல் பாதி சரியாகிடிச்சு....அடுத்த பாதி.....பார்ப்போம்.

ஆதி
08-03-2011, 12:48 PM
23/2, 6.4 ஓவர்க்கு பாக், பயமும், பதட்டமும் அதிகமாக இருக்கும் இனி...

ஆதி
08-03-2011, 12:53 PM
என்ன நடக்குது 7.1 ஓவருக்கு 24/4 பாக்

ஓவியன்
08-03-2011, 03:09 PM
விளங்குமா??

ஹீ, ஹீ..!!!

பாகிஸ்தான் அணி விளங்காதென்றே தெரிகிறது ஆதவா, ஆனால் இந்த ரசாக் என்னமா போராடிட்டிருக்கிறார் மனுஷன்..!! :icon_b:

சிவா.ஜி
08-03-2011, 03:22 PM
ஆமாங்க ஓவியன்......இன்னும் போராடுறாங்க.......ரசாக்கும்....உமர்குல்லும் முயற்சி பன்றாங்க.....பாப்போம்....!!

சிவா.ஜி
08-03-2011, 03:28 PM
அப்துல் ரசாக் அவுட். இனி பாகிஸ்தான் நிலை....????

Nivas.T
08-03-2011, 03:32 PM
ஆமாங்க ஓவியன்......இன்னும் போராடுறாங்க.......ரசாக்கும்....உமர்குல்லும் முயற்சி பன்றாங்க.....பாப்போம்....!!

பாக் 192 / 10

சிவா.ஜி
08-03-2011, 03:33 PM
அம்புட்டுதேன்.....பாகிஸ்தான் காலி. அதென்னவோ தெரியல...இவங்க தோத்தா....ரொம்ப சந்தோஷமா இருக்கு. நியூஸிலாந்து 110 ரன் வித்தியாசத்துல ஜெயிச்சிருக்காங்க. சூப்பர்.

மதி
08-03-2011, 03:38 PM
தற்சமயம் ஆஸ்டிரேலியாவும் இந்தியாவும் மட்டும் தான் எந்த ஆட்டத்திலேயும் தோற்கவில்லை.. பார்க்கலாம் எவ்வளவு நாள் நீடிக்குதுனு..

Nivas.T
08-03-2011, 03:39 PM
அம்புட்டுதேன்.....பாகிஸ்தான் காலி. அதென்னவோ தெரியல...இவங்க தோத்தா....ரொம்ப சந்தோஷமா இருக்கு. நியூஸிலாந்து 110 ரன் வித்தியாசத்துல ஜெயிச்சிருக்காங்க. சூப்பர்.

:D:D:D:D:D:D

அமரன்
08-03-2011, 05:53 PM
தற்சமயம் ஆஸ்டிரேலியாவும் இந்தியாவும் மட்டும் தான் எந்த ஆட்டத்திலேயும் தோற்கவில்லை.. பார்க்கலாம் எவ்வளவு நாள் நீடிக்குதுனு..

அதிஷ்டவசமாகவையும் சேருங்க சார்.

ஆதவா
09-03-2011, 08:42 AM
அஸ்வின் இறங்குவதாக எதிர்பார்க்கப்பட்டு நெஹ்ரா மட்டுமே இறங்கியிருக்கிறார். படேலுக்கு ஓய்வு!

43/0.... Szwarczynski யும் (என்னா பேருய்யா??) கேப்டன் Barresi யும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்!

சாயங்காலம் சந்திப்போம்!!!

ஓவியன்
09-03-2011, 08:50 AM
அஸ்வின் இறங்குவதாக எதிர்பார்க்கப்பட்டு நெஹ்ரா மட்டுமே இறங்கியிருக்கிறார். படேலுக்கு ஓய்வு!

தாமரை அண்ணா கூறியதுதான் சரியாக இருக்குமென நினைக்கிறேன், காலிறுதியில் தான் அஸ்வினைப் பார்க்க முடியும் போலிருக்கு ஆதவா.

ஓவியன்
13-03-2011, 07:06 AM
நேற்றைய தென்னாபிரிக்க அணியுடனான இந்திய அணியின் தோல்வி மீண்டும் ஒரு முறை 7+4 வீரர் தெரிவு சரியானது அல்ல எனக் காட்டியுள்ளதாக எனக்குப் படுகிறது. துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயற்பட முடியாத பட்சத்தில் வெற்றிக்குப் போராட பந்து வீச்சாளர்களை 5 பேராக மாற்றலாம் போலுள்ளது.

கௌதமன்
13-03-2011, 03:04 PM
இந்தியாவுக்கு இந்தத் தோல்வி அவசியம்.

லீக் ஆட்டத்தில் ஏற்படும் தோல்வி தவறுகளைத் திருத்துவதற்கு வாய்ப்பைக் கொடுக்கும். கடைசி ஓவர்களை வீசுவதற்கு சிறப்பான பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதை இந்த போட்டியும் நிரூபிக்கிறது.

ஹர்பஜானின் பந்து வீச்சும் சாதாரணமாகவே இருக்கிறது.

ஏற்கனவே சொன்னது போல் இந்த உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு காலிறுதியில் நுழையும் அனைத்து அணிகளுக்கும் சமமாக இருப்பதாகவே எண்ணுகிறேன்.

ஓவியன்
14-03-2011, 04:37 AM
இந்த தடவை உலகக்கோப்பை வெல்ல தகுதியான அணிகளென எல்லோரும் குறிப்பிட்ட அணிகளில் அவுஸ்திரேலிய அணி இருக்கவில்லை. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் லீக் போட்டிகளைப் பார்த்தால்..... :eek:

இந்த தடவையும் கோப்பையை தமதாக்கும் விருப்பில் விளையாடிக் கொண்டிருப்பது தெரிகிறது.

மீள ஃபோர்முக்கு வந்த பாண்டிங், கிளார்க், மீள அணியினுள் நுளைந்த ஹசி ஏற்கனவே கலக்கிக் கொண்டிருக்கும் வாட்சன் என மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் இந்த முறையும்... :frown:

ஆதி
14-03-2011, 09:58 AM
ஆஸ்திரேலிய வீரர்களிடம் டெடிக்கேஷன் அதிகம், ஆஸ்திரேலிய வீரர்கள் களியாட்டங்களை அதிகம் விரும்புகிறவர்கள், அவர்கள் எந்த ஊருக்கு விளையாட்டுப்பயணம் செய்தாலும், பாதுகாப்புறைகள் அதிகம் கொண்டு செல்ல கூடியவர்கள், ஆனால் உலக கோப்பை விளையாட்டுக்கு அவர்கள் செல்லும் போது இது போன்ற விடயங்களை அவர்கள் யோசிப்பது கூட இல்லை, விளையாட்டும் அதன் வெற்றியும் மட்டுமே அவர்களின் நோக்கமும், இலக்குமாக இருக்கும்..

ஆதலால் அவர்கள் எப்ப ஃபார்முக்கு வருவாங்க என்றெல்லாம் சொல்லவே முடியாது..

-----------------------------

இந்தியாவின் தோல்வி பேட்டிங்கால் நிகழ்ந்ததே அன்றி போலிங்கால் நிகழ்ந்ததல்ல..

இந்தியாவை பொறுத்தவரை போலிங் வீச ஆட்கள் இல்லை, 6 பௌலர்களுடன் சென்றாலும் பௌலிங் சிறப்பாக அமைந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது, 7 + 4 என்பது பௌலிங்கில் உள்ள "-" சரி செய்யவே, அந்த பொறுப்பு பேட்ஸ்மேன்களுக்கு இல்லாதவரை இந்திய அணியால் தம் குறைகளை சரி செய்ய இயலாது..

இந்திய மைதானங்களில் விளையாடுவதால் இந்திய அணியின் உற்சாக அதிகமாக உள்ளது, பேட்ஸ்மேன்கள் பந்தை காற்றுவெளியில் சுழலவிடுவதையே அதிகமாய் கருத்தில் கொண்டு கவனம் செலுத்துகிறார்களே அன்றி ரன் சேர்க்கவல்ல என்பது வருந்த தக்க செய்லாக உள்ளது..

ஓபனிங் பேட்ஸ்மேன்கள் மூவரும் பொறுப்போடு ஆடி 260-க்கு மேல் சேர்த்தப்பின் 29 ரன்களுக்க்கு 9 விகட்டுகள் என்றால் என்ன சொல்வது..

யூசோப் பதான் அடுத்த ஆட்டத்தில் இருப்பது சந்தேகம், ரெய்னா உள்ளே வர அதிக வாய்ப்புக்கள் உள்ளது, 3 ஸீமர் 1 ஸ்பின்னர் சரியானதே..



தென்னாப்ரிகாவோடு விளையாடிய மைதானத்தை பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும், அது முழுக்க முழுக்க தட்டையான மைதானம், பௌலர்களுக்கு எந்த விதத்திலும் சாதகமாக இருக்க போவதில்லை, முதல் பேட்டிங், 2-ஆம் பேட்டிங் அல்ல 6-வது பேட்டிங் பிறகு அந்த பிச் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தான் இருக்கும், ஆதலால் அதில் பௌலிங் வச்சு சாதிப்பதற்கெல்லாம் ஒன்றுமில்லை..

அதனால் தான் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார், என்றாலும் பேட்ஸ் மேன்கள் அதிக குஷியால் ஆடியதே இந்த பிரச்சனை, ரன் சேர்க்க எண்ணாமல் ரசிகர்களுக்காக ஆடினார்கள் அதுவே அன்றைய வீழ்ச்சிக்கான காரணம்... 2 டவுனில் யூசோபை இறக்கி இருக்க கூடாது, அவருக்கு இன்னும் அந்த தெளிவு வரவில்லை..

அவர் ஆடுவது சர்வதேச க்ரிகட், 10 ஓவர்களுக்கு முன் அவரை இறக்குவது அவருக்கு அதிக ஸ்டிரைக் கிடைக்கும் என்பதால் தான் அதை புரிந்து கொண்டு ஆடாமல் வந்தவுடனே வீச ஆரம்பிப்பதை மிக மிக முதிர்ச்சியற்றதனம் என்ற சொல்ல வேண்டியிருக்கிறது...

ஓவி, 5+6 என்று இறங்கினாலும் இந்தியாவில் பௌலிங்கில் சோபிக்க முடியாது, என்ன வச்சுக்கிட்ட வஞ்சன பண்றோம் சொல்லுங்க, இல்லாதத கொண்டுவா கொண்டுவா என்றால் என்ன செய்வது..

பாஸ்டீவ்களை வைத்து நெகடீவ்களை சரி செய்ய முயல்வதே ராஜதந்திரம், நெகடீவ்களை சரி செய்ய இப்ப நேரமில்லை, பாஸ்டீவ்களை சரியாக பயன்படுத்துவது தற்போதைக்கு சால சிறந்தது..

aren
14-03-2011, 11:37 AM
இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் ஆடிய ஆட்டத்திற்குப் பிறகு இந்தியா உலகப்கோப்பையை ஜெயிப்பது என்பது நடக்காத காரியம் என்றே தெரிகிறது. ஒரு சில மட்டையாளர்களே நன்றாக விளையாடுகிறார்கள், அவர்கள் அடிக்காவிட்டால் இந்தியா துவண்டுவிடுகிறது. அதேபோல் அவர்களின் பந்துவீச்சு மகா மட்டமாக இருக்கிறது.

அடுத்த உலகக்கோப்பையாவது நமக்கு கிடைக்கட்டும்.

ஆதவா
14-03-2011, 11:45 AM
இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் ஆடிய ஆட்டத்திற்குப் பிறகு இந்தியா உலகப்கோப்பையை ஜெயிப்பது என்பது நடக்காத காரியம் என்றே தெரிகிறது. ஒரு சில மட்டையாளர்களே நன்றாக விளையாடுகிறார்கள், அவர்கள் அடிக்காவிட்டால் இந்தியா துவண்டுவிடுகிறது. அதேபோல் அவர்களின் பந்துவீச்சு மகா மட்டமாக இருக்கிறது.

அடுத்த உலகக்கோப்பையாவது நமக்கு கிடைக்கட்டும்.

நீங்க வேணூம்னா பாருங்க... இதே நெஹ்ராவையோ அல்லது இந்திய பந்துவீச்சையோ கொண்டாடும் நேரம் வரும்@@
கப் வாங்குவதற்கான தகுதி இன்னமும் இருக்கு!!
அநேகமா இந்தியாவோட உண்மையான ஆட்டம் காலிறுதியிலிருந்து துவங்கும்!!! (பின்னே அரையிறுதியில் முடியவும் வாய்ப்பிருக்கு :D)

ஆதவா
14-03-2011, 12:00 PM
ஆதி... ஆஸ்திரேலியா ஏன் தொடர்ந்து ஜெயிக்கிறதுங்கறதுக்கு நீங்கள் சொன்ன காரணங்களோடு, அவர்கள் வெல் பேலன்ஸ்டு டீம்!. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள்....
அவர்கள் அணியில் தனிமனித சாதனையைக் காட்டிலும் மொத்த அணியின் சாதனைதான் பிரம்மாண்டமாக இருக்கிறது!!

நேற்றுடன் ஆஸ்திரேலியாவுக்கு 33 தொடர் வெற்றிகள்!!

அவ்வ்!! இந்தமுறை கப் வாங்கிட்டா, பாண்டிங் யாராலயும் தகர்க்கவேமுடியாத சாதனையை நிகழ்த்திடுவார். தொடர்ந்து 3 முறை கப் வாங்கிய ஒரே காப்டன். இதுவரைக்கும் இந்த தொடர்ல தோல்விஐத் தழுவாத ஒரே டீம்!!! ஆஸி!!!
ஆனா பாகிஸ்தான்கிட்ட ஆஸி தோற்கும்ங்கறது என்னோட கணிப்பு.. பார்ப்போம்!!!

ஆதி
14-03-2011, 12:06 PM
ஆதி... ஆஸ்திரேலியா ஏன் தொடர்ந்து ஜெயிக்கிறதுங்கறதுக்கு நீங்கள் சொன்ன காரணங்களோடு, அவர்கள் வெல் பேலன்ஸ்டு டீம்!. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள்....
அவர்கள் அணியில் தனிமனித சாதனையைக் காட்டிலும் மொத்த அணியின் சாதனைதான் பிரம்மாண்டமாக இருக்கிறது!!

நேற்றுடன் ஆஸ்திரேலியாவுக்கு 33 தொடர் வெற்றிகள்!!



இவை அனைத்துக்கும் டெடிக்கேஷன் மற்றும் காண்சென்ட்ரேசன் தானே ஆதவா முக்கியமான மூலக்காரணம்...

ஷீ-நிசி
14-03-2011, 11:49 PM
நீங்க வேணூம்னா பாருங்க... இதே நெஹ்ராவையோ அல்லது இந்திய பந்துவீச்சையோ கொண்டாடும் நேரம் வரும்@@
கப் வாங்குவதற்கான தகுதி இன்னமும் இருக்கு!!
அநேகமா இந்தியாவோட உண்மையான ஆட்டம் காலிறுதியிலிருந்து துவங்கும்!!! (பின்னே அரையிறுதியில் முடியவும் வாய்ப்பிருக்கு :D)

என்னடா ஆதவா இவ்வளவு ஆதரவா இந்தியாவிற்கு பேசறியேனு பார்த்தேன்.. காலிறுதியில் தொடங்கி அரையிறுதியில் முடியும்னு எவ்வளவு வில்லத்தனம்.. :sprachlos020:

ஆதவா
17-03-2011, 04:23 AM
இன்றைய தினமலரில் நான் சந்தேகித்ததைப் போலவே, “நாடகத்தனம்” நிகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். எவ்வளவு தூரம் உண்மையெனத் தெரியவில்லை!!! ஆனால் சாத்தியமுண்டு!

அப்படியெனில் இந்தியா பைனலுக்கு உறுதி,. கப்பு வாங்குமா என்று தெரியாது!

ஓவியன்
17-03-2011, 06:05 AM
ஆதி... ஆஸ்திரேலியா ஏன் தொடர்ந்து ஜெயிக்கிறதுங்கறதுக்கு நீங்கள் சொன்ன காரணங்களோடு, அவர்கள் வெல் பேலன்ஸ்டு டீம்!!

இந்த கருத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது ஆதவா, அதாவது அவுஸ்திரேலிய அணி ஜெயிக்கும் ஒரே காரணத்தால் அதனை வெல் பேலன்ஸ்டு டீம் என சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களது சுழல் பந்து வீச்சு துறை மிகவும் பலவீனமானது, ஜேசன் க்ரீஸாவையும், ஸ்மித்தையும் வைத்துக் கொண்டு ஏதோ சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரையும் விட டில்ஸானும், யுவராஜூம், அப்ரிடியும் நன்றாக சுழல் பந்து வீசுகிறார்கள்...

அத்துடன் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அவர்களது துடுப்பாட்ட வீரர்களும் இன்னமும் மிக சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களை சந்திக்கவில்லை (இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி துடுப்பெடுத்தாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அன்றைய போட்டியில் இலங்கை அணி முரளி, ஹேரத், மெண்டிஸ் என மூன்று சுழல் பந்து வீச்சாளர்களை வைத்திருந்தது).

இந்த உலகக் கோப்பை அணிகளிலுள்ள முன்னணி அணிகளில் இலங்கை அணியை மட்டும் ஓரளவு வெல் பேலன்ஸ்டு டீம் என கூறலாம்.

ஆதவா
17-03-2011, 06:53 AM
ஓவி... நான் 2007 ஆஸியைச் சொன்னேன். தவிர, இப்பொழுதும் அவர்கள் நம்பர் ஒன் தானே!! சுழல் துறையை வேகத்தை வைத்து ஈடுகட்டுகிறார்கள்!! விரைவில் வார்னே அளவுக்கு (இல்லாட்டியும்) ஒரு பவுலரை ஆஸி உருவாக்கும்!!