PDA

View Full Version : வரதட்சணை



M.Jagadeesan
09-02-2011, 12:02 PM
கண்ணே! நீ என் கரம் பற்ற
காணிக்கை தர வேண்டுமென
என்னைப் பெற்றவர்கள்
உன்னைப் பெற்றவரிடம் கேட்கின்றார்.

உன்னைப் பெண் பார்க்க வந்தபோது
எனக்குச் சொந்தமான இதயத்தை
உன்
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திட்டேன்
மண்டபத்துக்கு எனைமணக்க வரும்போது
மறவாது அதைமட்டும் கொண்டு வந்தால்
அதுபோதும்!

malarvizhi69
09-02-2011, 01:43 PM
அற்புதம்....

M.Jagadeesan
09-02-2011, 01:48 PM
அற்புதம்....

நன்றி! மலர்விழி69 அவர்களே!

முரளிராஜா
09-02-2011, 01:55 PM
அருமையாய் இருக்கிறது கவிதை.
எனக்கு சொந்தமான இதயத்தை உன் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று
சொன்ன நீங்கள் யாரிடம் விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று
சொல்லவில்லையே?:lachen001::lachen001:

M.Jagadeesan
09-02-2011, 02:00 PM
அருமையாய் இருக்கிறது கவிதை.
எனக்கு சொந்தமான இதயத்தை உன் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று
சொன்ன நீங்கள் யாரிடம் விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று
சொல்லவில்லையே?:lachen001::lachen001:

அப்படிச் சொல்லாமல் இருப்பதுதான் கவிதைக்கு அழகு!

முரளிராஜா
09-02-2011, 02:07 PM
அய்யா,
நான் ஒரு நகைச்சுவைக்காகத்தான் அவ்வாறு பின்னுட்டமிட்டேன்
தவறிருப்பின் மன்னிக்க.

கௌதமன்
09-02-2011, 02:12 PM
கண்ணே! நீ என் கரம் பற்ற
காணிக்கை தர வேண்டுமென
என்னைப் பெற்றவர்கள்
உன்னைப் பெற்றவரிடம் கேட்கின்றார்.

உன்னைப் பெண் பார்க்க வந்தபோது
எனக்குச் சொந்தமான இதயத்தை உன்
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திட்டேன்
மண்டபத்துக்கு எனைமணக்க வரும்போது
மறவாது அதைமட்டும் கொண்டு வந்தால்
அதுபோதும்!

மீதிக் கணக்கை என் பெற்றோரும்
உன் பெற்றோரும் பார்த்துக்கொள்ளட்டும்

என்று முடித்துக்கொள்ளலாமா நண்பரே?

M.Jagadeesan
09-02-2011, 02:20 PM
கெளதமன் அவர்களே!
கவிதையில் எல்லாவற்றையும் சொல்லமுடியுமா?
அதனால்தான் உங்கள் யூகத்திற்காக சிலவற்றை விட்டுவிட்டேன்.

dellas
09-02-2011, 02:51 PM
வரதட்சணை மோகம் இருக்கத்தான் செய்கிறது . அது இதயமானாலும் கூட. நன்று.

M.Jagadeesan
09-02-2011, 02:54 PM
நன்றி! டெல்லாஸ்

ஜானகி
09-02-2011, 04:17 PM
இதயம் இல்லாதபோதே இத்தனை இரக்கமா...?

அடகு வைத்த உங்கள் இதயத்தை திருப்பிக் கொண்டுவரும்போது, தட்சிணையாகக், கூடை கூடையாக, அன்பும், பாசமும் கிடைக்க வாழ்த்துகிறேன் !

அக்னி
09-02-2011, 04:57 PM
வரதட்சணை கொஞ்சம் கௌரவமாய்த் தெரிந்ததாலோ,
சீதனம் என்கின்றார்கள் பரவலாய்...

சீதனம்...
பெயரில் மட்டுமே
அவ(ள்)மதிக்கப்படும்
பெருந்தனம்...

உன் பெற்றோரிடமிருந்து
சீதனத்தின் ஆதிக்கம்...
நீ அறிந்தோ அறியாமலோ
உன்னிடமிருந்து ஆணாதிக்கம்...


கண்ணே! நீ என் கரம் பற்ற

என்றவனே,
“நான் உன் கரம் பற்ற”
என்றிருப்பின்,
உன் இதயம் மாற்றித்
தந்திருப்பேன் என் இதயம்...

உன் ஆணாதிக்க இதயமும், பேசிய பேரங்களும்
எம் வரவேற்பறையிற்தான் இன்னமும் கிடக்கின்றன...

ஒட்டடை தட்டும்முன் வந்து அள்ளிச்செல்...

அல்லது,
இந்தப்புதுமைப்பெண்ணுக்கான ஆணாகி வா...

வருகின்றேன்
நம் மணவறைக்கும்.., உன் இதயவறைக்கும்...

காதல் கவிதைக்குள் வராமல்
தலைப்பை இன்னமும் குதறிக் கிழித்துத் தொங்கப்போட்டிருக்கலாமே அன்பரே...

வரதட்சணைக்குள்
அவளுக்கு
வருமா காதல்...

M.Jagadeesan
09-02-2011, 11:53 PM
இதயம் இல்லாதபோதே இத்தனை இரக்கமா...?

அடகு வைத்த உங்கள் இதயத்தை திருப்பிக் கொண்டுவரும்போது, தட்சிணையாகக், கூடை கூடையாக, அன்பும், பாசமும் கிடைக்க வாழ்த்துகிறேன் !

வாழ்த்துக்கு நன்றி! ஜானகி அவர்களே!