PDA

View Full Version : நான் ரசித்தவை...



malarvizhi69
09-02-2011, 11:44 AM
1.கண்கள் செய்யும்
சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும்
ஆயுள் தண்டனை
"காதல் "


2.விக்கல் எடுக்கின்றது ,
ஆனால் தண்ணீர் குடிக்க மனமில்லை.
நினைப்பது நீ என்றால்
நீடிக்கட்டும் சில நிமிடங்கள் .......


3.அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு
பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை ".
காரணம் அவள் பேசியது English
பயபுள்ள மூச்சி விடாம பேசுறா ........


4.என் மரணம் கூட
உனக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வேன் ....
ஏன் என்றால்
என் நெற்றியில் உள்ள ஒரு ரூபாய்
காசையும் நீ ஆட்டைய போட கூடாது என்பதற்காக ........

முரளிராஜா
09-02-2011, 01:47 PM
அருமை தொடரட்டும் உங்கள் பகிர்வு

malarvizhi69
09-02-2011, 01:49 PM
நன்றி,முரளி......

M.Jagadeesan
09-02-2011, 01:56 PM
அழகாகத் தொடங்கிய காதல்கவிதை
கேவலம் ஒரு ரூபாய் காசுக்காகக்
காதலியைக் கொச்சைப் படுத்தியதைத்
தவிர்த்திருக்கலாம்.

பாராட்டுக்கள்!

malarvizhi69
09-02-2011, 02:05 PM
அழகாகத் தொடங்கிய காதல்கவிதை
கேவலம் ஒரு ரூபாய் காசுக்காகக்
காதலியைக் கொச்சைப் படுத்தியதைத்
தவிர்த்திருக்கலாம்.

பாராட்டுக்கள்!

வேறு வேறு சந்தர்ப்பங்களில் நான் ரசித்தவற்றை ஒன்றாக தொகுத்தால் அப்படி தெரிகிறது.

கௌதமன்
09-02-2011, 02:06 PM
நான்கையும் தனித்தனிக் கவிதைகளாகக் கொண்டால் அருமை. ஒரே கவிதையாகக் கொண்டால் இறுதியில் முரண்பாடு வருவது போலல்லவா இருக்கிறது.

பாராட்டுக்கள்!

உமாமீனா
10-02-2011, 06:04 AM
நச்சின்னு இருக்கு - காதலிக்காக இப்படி எல்லாமா வளிவான்க? பய புள்ளைங்களை திருத்தவே முடியாதுப்பா.

ஆதி
10-02-2011, 06:15 AM
நான்கும் நான்கு கவிதைகள்...

//விக்கல் எடுக்கின்றது ,
ஆனால் தண்ணீர் குடிக்க மனமில்லை.
நினைப்பது நீ என்றால்
நீடிக்கட்டும் சில நிமிடங்கள் .......//

எது சரி எது தவறு என்று புரியாதது காதல்..

மூடநம்பிக்கையை எதிர்த்து போராடுகிறவன் கூட, இந்த நம்பிக்கை கொண்டிருப்பான், அது தன் காதல்..

//3.அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு
பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை ".
காரணம் அவள் பேசியது English
பயபுள்ள மூச்சி விடாம பேசுறா ........//

ஆடுக*ள*ம் ப*ட*ம் ஞாப*க*த்துக்கு வ*ந்த*து...//4.என் மரணம் கூட
உனக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வேன் ....
ஏன் என்றால்
என் நெற்றியில் உள்ள ஒரு ரூபாய்
காசையும் நீ ஆட்டைய போட கூடாது என்பதற்காக ........
//

இது காதலி காதலன் என்று எந்த பால் குறிப்புமில்லை, இந்த கைவ்தையை எழுதியவனுக்கு நையாண்டி ஜாஸ்தியாக இருக்க வேண்டும்...

பகிர்வுக்கு நன்றி...