PDA

View Full Version : என் சொதப்பல் கவிதைகள்;-3



ராஜாராம்
09-02-2011, 11:02 AM
குழந்தைப் பிறந்தது...

கவிஞன் என்ற அன்னைக்கும்

கற்பனை என்ற தந்தைக்கும்

தமிழ் அன்னையின் கவிதை வடிவில்..............

அக்னி
09-02-2011, 11:12 AM
தமிழன்னைக்கும் கற்பனைத்தந்தைக்கும்
இக்கவிக்குழந்தை பிறந்திருந்தால்,
இன்னும் அழகாக இருந்திருக்குமோ...

ராஜாராம்
09-02-2011, 11:21 AM
தமிழன்னைக்கும் கற்பனைத்தந்தைக்கும்
இக்கவிக்குழந்தை பிறந்திருந்தால்,
இன்னும் அழகாக இருந்திருக்குமோ...

நிச்சயம் அருமையாக அழகாக இருந்திருக்கும்....
இது சொதப்பலில் பிறந்தக் குழந்தை...அதான்...
(நல்லவேலை.....இந்த பகுதிக்கு முரளிராசா வருவதற்குள்....நீங்க முதலில் வந்துட்டிங்க..):lachen001:

malarvizhi69
09-02-2011, 11:25 AM
ஆஹா ....ஒண்ணுமே புரியலையே.....என்ன ஆச்சு இந்த புள்ளைக்கி....இப்புடி பொளந்து கட்டுது...இந்த இம்சை அரசன வேற காணும்......நல்லருக்குபா.

அக்னி
09-02-2011, 11:28 AM
நிச்சயம் அருமையாக அழகாக இருந்திருக்கும்....
இது சொதப்பலில் பிறந்தக் குழந்தை...அதான்...
(நல்லவேலை.....இந்த பகுதிக்கு முரளிராசா வருவதற்குள்....நீங்க முதலில் வந்துட்டிங்க..):lachen001:

ஏதோ சொதப்பல் கவிதையில் இருக்கு...
என்னவென்று சொல்லத் தெரியாமற்தான் அப்படிப் பதிவிட்டேன்...
தப்பா நினைத்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்...

நல்லவேளைக்கு இட்டபதிவு நல்லவேலை
என்று சொல்லுறீங்களோ...

லகர ளகர ங்களைக் கொஞ்சம் கவனியுங்க ராஜாராம் சார்...

ராஜாராம்
09-02-2011, 01:40 PM
அக்னி சார் ,நீங்க என் தவறுகளை தாராளமாக சுட்டிக்காட்டுங்கள்,அதேசமயம் என்னை உரிமையோடு கலாய்க்கவும் செய்யுங்கள்.

முரளிராஜா
09-02-2011, 02:35 PM
தொடரட்டும் சொதப்பல் கவிதைகள்.
வாழ்த்துக்கள் ராஜாராம்.

ஆதி
09-02-2011, 02:53 PM
குழந்தை பிறந்தது...
கவிஞன் என்ற அன்னைக்கும்
கற்பனை என்ற தந்தைக்கும்
கவிதை வடிவில்...

கவிதை எந்த மொழியில் வேண்டுமானாலும் பிறக்கலாம், கவிஞனும், கற்பனையும், கருவும் அதற்கு தேவை. தமிழென்னும் வார்த்தையை(வெறும் வார்ததையை தாங்க) நீக்கிவிட்டால் கவிதை ஒரு வட்டத்துக்குள் சுழலாது...

ஆணும் பெண்ணும் கூடிய பிறகே கரு உருவாகிறது, அது வளர்ந்து பின் குழந்தையாய் பிறக்கிறது, கவிதையை பொருத்த அளவில் கருவுருவான பிறகு தான் கவிஞனும், கற்பனையும் கூடவே ஆரம்பிக்கிறார்கள், கூடிய உடனே கவிதையும் பிறந்துவிடுகிறது..


தொடர்ந்து எழுதுங்கள்...

அக்னி
09-02-2011, 04:08 PM
குழந்தை பிறந்தது...
கவிஞன் என்ற அன்னைக்கும்
கற்பனை என்ற தந்தைக்கும்
கவிதை வடிவில்...

நன்று ஆதன்...

இப்போது கவிக்குழந்தை அழகாகச் சிரிக்கின்றது...

ஜானகி
09-02-2011, 04:28 PM
பிறந்த குழந்தைக்குப் பேர் வைப்பதை விட்டு விட்டு, அம்மா யார், அப்பா யார் என்று பட்டிமன்றம் நடத்துகிறீர்களே...? பாவம் குழந்தை பயந்துவிடப் போகிறது...!

ராஜாராம்
10-02-2011, 03:35 AM
கவிதையை குறிப்பிட்ட மொழிக்குள் அடைக்க வேண்டாம்,என்று நண்பர் ஆதன் சொன்னது "'அருமையான"'குறிப்பு.நன்றி நண்பர் ஆதன்க்கு.

கவிதை வடிவில் குழந்தையை பிறக்க வைத்து அதை சிரிக்கவும் வைத்த அக்னி சார்,.....கலக்கிட்டிங்க....அருமை அருமை...

குழந்தை பயந்துவிடப் போகிறது,முதலில் அதற்கு பெயர் வைய்யுங்கள்,....என்று திருமதி ஜானகி அவர்கள் கூறிய பதிப்பு வாய்விட்டு சிரிக்கவைத்தது.


கவிதையை பட்டை தீட்டி ஜொலிக்கவைத்த,
திரு ஆதன்,நண்பர் அக்னி ,திருமதி ஜானகி,மூவருக்கும் நன்றிகள்.

உமாமீனா
10-02-2011, 05:46 AM
தொடரட்டும் சொதப்பல் கவிதைகள்.
வாழ்த்துக்கள் ராஜாராம்.

இப்படியா தொபக்கடிரன்னு காலில் விழுவது

ராஜாராம்
10-02-2011, 06:16 AM
இப்படியா தொபக்கடிரன்னு காலில் விழுவது

நம்பாதிங்க உமாமீன .....காலில் விழுவதுபோல் காலைவாரி விட்டுவிடுவாரு.....(வடிவேலு பாணயில் )வெரி டேஞ்சரஸ்.....பெள்ளோ...பீகேர்ஃப்புள்....

அமரன்
17-02-2011, 08:03 PM
இந்தத் திரி
பட்டறை ஆனதில் மகிழ்ச்சி.