PDA

View Full Version : கபாடியும் - கிரிக்கெட்டும் சிறப்பு கண்ணோட்டம்



dhilipramki
09-02-2011, 05:08 AM
கபாடியும் - கிரிக்கெட்டும் சிறப்பு கண்ணோட்டம்

ஒரு காலத்தில் ஹாக்கி என்பது இந்திய மண்ணுக்குரிய விளையாட்டாக இருந்தது. ஹாக்கி என்றால் இந்தியா, இந்தியா என்றால் ஹாக்கி என்று கூறும் அளவுக்கு ஓங்கு புகழ் பெற்றிருந்தது. பாகிஸ்தான் பிரிவினைக்குப்பிறகு அதில் தொய்வு ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த விளையாட்டில் அடி எடுத்து வைத்த நாடுகள் எல்லாம் முன்னணியில் ஒளிர்கின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சடுகுடு (கபடி) என்பது இந்த மண்ணுக்குரிய சிறப்பான வீரமும், விவேகமும் செறிந்த விளையாட்டாகும். ஆற்று மணலிலும், கட்டாந்தரையிலும், உபகரணங்கள் எதுவும் தேவையின்றி மிக எளிதாகக் கோடு கிழித்துக்கொண்டு ஆடும் விளையாட்டாகும்.

என்ன கொடுமை என்றால் இப்பொழுது கிராமப்புறங்களில், வயல்களில்கூட கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக் கிறார்கள். காரணம், இந்த ஊடகங்கள்தான்.

கபாடி விளையாட்டில் இதுவரை 20 நாடுகள் பங்கு கொண்டு வருகின்றன. இன்னும் 12 நாடுகள் கூடுதலாகப் பயிற்சி கொள்ளுமானால், ஒலிம்பிக்கில் இடம் பிடித்து விடும் - அப்படி ஒரு நிலை வரும்பொழுது தமிழ் மண்ணின் புகழ் பாரெல்லாம் பட்டொளி வீசும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.

இந்த நேரத்தில் நாட்டின் முக்கிய பொது தேர்வுகள் நடைபெறும் காலகட்டத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தேவையா?

அன்புரசிகன்
09-02-2011, 06:04 AM
இந்த உலகக்கோப்பை துடுப்பாட்டத்திற்கும் பொதுத்தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைக்கிறேன். காரணம் இதே போட்டி வேறு நாட்டில் நடந்தால் தொலைக்காட்சி முன்னால் உட்காரமாட்டீர்களா???

மாறாக வெளிநாட்டவர் வருகையால் வருமானமும் பொருளாதாரமும் தான் உயரும்.

யதார்த்தத்துக்கு வாருங்கள் நண்பரே... குறை கூறுவது அனைவராலும் இயன்றது. விவேக் சொல்வது போல் கல் எறிந்தால் அதை வைத்து வீடு கட்ட கத்துக்கணும்.

dhilipramki
09-02-2011, 06:22 AM
வேறு நாட்டில் நடந்தால் தொலைக்காட்சி முன்னால் உட்காரமாட்டீர்களா??? - அன்புராசிகன்

விவரம் தெரிந்த பத்து வயது சிறுவன் முதல் மரியாதைக்குரிய வயோதிகர் வரை நம் வீடுகளில் தொலைக்காட்சி முன்னே ஆமர்ந்து ஒரு துடிப்போடு கிரிக்கெட் பார்ப்போம், ஆனால் அதுவே ஒரு ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுகளை ஏன் அப்படி பார்ப்பதில்லை?

காரணம் - அது என்னப்பா!! இது மாதிரி வருமா சொல்லு !!

என்று சொல்லி சொல்லி நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி யை விடுத்து, அந்நிய விளையாட்டாம் கிரிக்கெட் மேல் அவ்வளவு மோகம் ஏன்?

குறை கூறுகிறீர் என்று சொல்லாமல் திரும்பி பாருங்கள்!

மிக சரியாக தேர்வுகளின் போது கிரிக்கெட் விளையாட்டுகள் அமைவது இயற்கையானது என்று சொல்லிக்கொள்ளலாம், ஆனால் தேர்வுக்கு படிப்பதை விட்டு அதன் மீது கவனம் செலுத்திகிறார்கள் நமது மாணவ செல்வங்கள்.

பெற்றோர்கள் அதட்டி படிக்க சொன்னாலும் 100இல் 90 மாணவர்கள் அதையே நினைத்து பெற்றோர் திட்டுகிறார்கள் என்று கோபம் அடைந்து பதிப்பின் மீது கவனம் இழக்கிறார்கள் வருங்காலத்தின் விடிவெள்ளிகள்.

கபடி, ஓட்டம், கில்லி, போன்ற நமது தமிழ் கிராமத்து விளையாட்டுகள் மறைந்து வருகிறதே. ஒரு பந்தும், மட்டையும் மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தால், உடலுக்கும் உள்ளத்துக்கும் என்றும் இளமையை தரும் தமிழ் கலாசார விளையாட்டு எப்படி உலக மயம் அடைவது.

தமிழ் மன்றத்தில் நாம் விவாதம் செய்வதால் மட்டும் தமிழும், தமிழ்த் தோன்றிய வரலாறும் நிலக்காது தோழர்களே, மன்னிக்க வேண்டும்

சற்று சிந்தனை செய்யுங்கள். நன்றி

M.Jagadeesan
09-02-2011, 06:42 AM
மெகா சீரியல்கள் வீட்டுக்குக் கேடு.
கிரிக்கெட் விளையாட்டு நாட்டுக்குக் கேடு.

அன்புரசிகன்
09-02-2011, 07:25 AM
இந்த நேரத்தில் நாட்டின் முக்கிய பொது தேர்வுகள் நடைபெறும் காலகட்டத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தேவையா?


விவரம் தெரிந்த பத்து வயது சிறுவன் முதல் மரியாதைக்குரிய வயோதிகர் வரை நம் வீடுகளில் தொலைக்காட்சி முன்னே ஆமர்ந்து ஒரு துடிப்போடு கிரிக்கெட் பார்ப்போம், ஆனால் அதுவே ஒரு ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுகளை ஏன் அப்படி பார்ப்பதில்லை?


உங்களது பதிவை நீங்களே மீள படியுங்கள். இந்த நேரத்தில் இந்த போட்டி அவசியமா என்பது உங்கள் கேள்வி. இப்போ வேறு ஆதங்கமும் படுகிறீர்கள்.

அப்படியானால் பொதுத்தேர்வு காலத்தில் ஹாக்கி விளையாட்டுப்போட்டி நடத்தலாமா? பொதுத்தேர்வுக்காலங்களில் சின்னப்பிள்ளைகள் தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் ஹொக்கி விளையாட்டு பார்க்க அமரலாமா???

அதனால் தான் சொன்னேன். இந்தப்போட்டி இந்தியாவில் நடந்தாலும் ஒன்று தான். அந்தாட்டிக்காவில் நடந்தாலும் ஒன்றுதான்.

இலங்கையில் எல்லை எனப்படும் போட்டிக்கு மவுசு இல்லை தான். (baseball) ஆனால் வெளிநாடுகளில் அது பிரபலம். அது போலத்தான்.

பனிக்கட்டிகள் மீது சறுக்கி ஹொக்கி விளையாடும் விளையாட்டு மேற்கு உலகில் பிரமாதம். ஆகவே தேசிய விளையாட்டு எது என்பதிலும் மக்களுக்கு பொழுதுபோக்கு நாட்டம் எங்கு உள்ளதோ அங்கு தான் கவனம் செலுத்துவார்கள். அதில் தவறு இருப்பதாக நான் உணரவில்லை.

ஆடத்தெரியாதவனுக்கு மேடைசரியில்லை என்பது போல் படிப்பில் கோட்டை விடுவதற்கு சின்னத்திரையையும் துடுப்பாட்டப்போட்டியையும் கையில் எடுப்பது...

துடுப்பாட்டப்போட்டி பார்த்து பரீட்சையில் கோட்டைவிட்டதாக நான் அறிந்தில்லை. அதற்கு மன்றத்திலுள்ள பல மூத்த உறவுகள் சான்று. மாறாக சாதித்து தான் உள்ளார்கள்.

விளையாட்டு திரிப்பகுதியில் சில திரிகள் அதற்கு சான்று.

குறைகூறுவது இயல்பு என்று நான் உங்களை குறை கூறியதற்கு உங்களின் பதில் எவ்வாறு அமைந்துள்ளதோ அதுவே நான் கூறியதற்கு சான்று. (இப்போ நானும் அதைத்தான் செய்கிறேன். :D)

dhilipramki
10-02-2011, 02:47 AM
பொது தேர்வின் போது ஹாக்கி போட்டிகளை நடத்த வேண்டும் என்று நான் கூறியதாக கூறுவது தவறு.

தேர்வின் பொழுது மட்டும் ஏன் இந்த போட்டிகள் நடத்தபடுகின்றன? என்பது தான் ஏன் கேள்வி

மற்றும் கிரிக்கெட்டுக்கு மட்டும் இவ்வளுவு செலுவும் விளம்பரமும் இருப்பது ஏன்?

தேசிய விளையாட்டு ஹாக்கி ஒலிம்பிகில் பதக்கங்களை வெல்லாதது ஏன்?


மெகா சீரியல்கள் வீட்டுக்குக் கேடு.
கிரிக்கெட் விளையாட்டு நாட்டுக்குக் கேடு. - M.Jagadeesan

இந்த பதில் போதுமே !!! நன்றி M.jagadeesan

அன்புரசிகன்
10-02-2011, 04:05 AM
1. நீங்கள் கூறியதாக நான் கூறவில்லை. அப்படி கூறலாமா என்பது தான் நான் கூறியது.
2. தேர்வு நடப்பதற்கும் இந்தப்போட்டிகள் நடப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீங்கள் இதுவரை அறியாதவரை பதக்கங்கள் பற்றி பேசி பலனில்லை. மொட்டைக்கும் முழம்காலுக்கும் முடிச்சுப்போட்டுக்கொண்டிருந்தால் பதக்கம் மட்டுமல்ல முருகன் டாலர் கூட கிட்டாது.

இந்திய மக்களிடம் குறை காணும் நீங்கள் இந்தியன் என்ற எல்லைக்குள் இல்லையா??? மற்றவரிடம் சுட்டுவிரலை நீட்டும் போது மற்றய 3 விரல்களும் உங்களை நோக்கி உள்ளதே. அறியவில்லையா???

dhilipramki
10-02-2011, 04:36 AM
இந்தியனாக இருப்பதால் தான் இந்தியர்கள் மேல் குறைக்கான்பதாக தெரிந்தால் நல்லது,
தவிர மற்ற நாடினார் மேல் குறைக் காணவில்லையே:D

சுட்டுவிரலை நீட்ட வில்லை, முழு கையையும் நீட்டி பேசுகிறேன் என்றாள் போதுமா..

நம்மிடம் குறை இருக்கிறது என்று நம்மில் ஒருவர் சொன்னால் அது என்ன அந்த விசியம் எதை சுட்டிக்காண்பிக்கிறது என்று சிறிதளவாவது பார்க்க வேண்டுமே தவிர,
கேலி செய்து "நாட்டுப் பற்று இருக்கிறதா உனக்கு" என்று பார்த்தால் வேதனையே.

மேல்நாடுகளில் நமது நாட்டவர்க்கு இருக்கும் மரியாதை எப்படி என்பதும் நான் நன்றே அறிவேன் என்பதால் இந்தியன் என்பவர்களில் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது நினைப்பேன்.

அதை மற்றவர்களிடம் சொல்லும் முன்பு நான் 100இல் ஒரு பங்காவது கடைப்பிடிப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி.

மீண்டும் விவாதம் செய்ய விரும்பவில்லை நன்றி:)