PDA

View Full Version : மானமும் மறத்தமிழனும்

M.Jagadeesan
08-02-2011, 11:58 AM
சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற மன்னன் தொண்டியைத் தலை நகராகக்
கொண்டு சேர நாட்டை ஆண்டுவந்தான்.இம்மன்னனுக்கும்,சோழமன்னன் செங்கணான்
என்பவனுக்கும் கழுமலத்தை அடுத்த திருப்போர்ப்புறம் என்ற இடத்தில் போர் நடந்
தது.அதில் இரும்பொறை தோற்றான்.செங்கணான் இவனைக் குணவாயிற்கோட்டம்
என்ற இடத்தில் சிறை வைத்தான்.ஒரு நாள் இவனுக்கு நீர் வேட்கை மிகுந்தது.
சிறைக் காவலனை அழைத்து நீர் தருமாறு கேட்டான்.அவன் அலட்சியமாக மிகவும்
காலம் தாழ்ந்து நீரைக் கொண்டுவந்தான்.இரும்பொறை அவமானத்தினால் குன்றிப்
போனான்.அந்நீரை உண்ணாது உயிர் நீத்தான்.உயிரை நீப்பதற்கு முன்பாகத் தன்
எண்ண ஓட்டங்களை ஒரு கவிதையாக எழுதி வைத்தான்.

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளின் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம்இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் உலகத் தானே?

தெளிஉரை:பண்டைக்காலத்தில் மன்னர்கள்,தம் மரபில்,குழந்தை இறந்து பிறந்தாலும்
அல்லது தசைப் பிண்டம் பிறந்தாலும், அதை வாளால் வெட்டிப் பிளந்து அடக்கம்
செய்வார்கள்.போரில் வாளால் வெட்டுண்டு மடியாத என்னை சங்கிலியால் கட்டப்
பட்ட நாய்போலத் துன்புறுத்தி சிறையிலே அடைத்துள்ளனர்.வயிற்றில் ஏற்பட்ட
தீயைத் தணிக்கவேண்டி நீரை யாசித்து உண்ணும் இயல்புடையவரை அம்மன்னர்கள்
இவ்வுலகத்தில் பெற்றெடுப்பாரோ?

நய உரை:ஞமலி= நாய் ஊன் தடி=உயிரற்ற தசைப்பிண்டம்.
மகா அலெக்ஸாண்டர். தன்னால் சிறை பிடிக்கப்பட்ட போரஸ் மன்னனை ஒரு
மன்னனுக்கு உரிய மரியாதையோடு நடத்தினான். ஆனால் செங்கணான், இரும்பொ
றையை அவ்வாறு நடத்தவில்லை.ஒரு சிறைக் கைதியைவிடக் கேவலமாக
நடத்தினான்.எனவேதான் மானம் இழந்து மன்னன் இரும்பொறை உயிர்வாழ விரும்
பவில்லை.

மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

உமாமீனா
08-02-2011, 12:03 PM
இதனால் உணர வேண்டிய கருத்து மானம் - அது மறதமிழனுக்கு தானே, நமக்கில்லை - இப்படியெல்லாம் இலக்கிய சங்க காலத்தில் இப்ப ஏட்டுடன் சரி - பகிர்வுக்கு நன்றி

நாஞ்சில் த.க.ஜெய்
08-02-2011, 12:08 PM
உண்மை ...மானம் என்பது உயிரினும் மேலானது அன்றைய மன்னர்களுக்கு...ஆனால் நாட்டை ஆளும் மன்னர்கள் இன்று ...

M.Jagadeesan
08-02-2011, 12:11 PM
இதனால் உணர வேண்டிய கருத்து மானம் - அது மறதமிழனுக்கு தானே, நமக்கில்லை - இப்படியெல்லாம் இலக்கிய சங்க காலத்தில் இப்ப ஏட்டுடன் சரி - பகிர்வுக்கு நன்றி

மானமுள்ளவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. விழுக்காடு வேண்டுமானால் குறை
வாக இருக்கலாம்.மனைவியின் தவறான நடத்தைக்காகவும், கணவனின் தவறான*
நடத்தைக்காகவும் தற்கொலை செய்துகொள்பவர்களை நீங்கள் செய்தித் தாள்களில்
படிப்பது இல்லையா?

உமாமீனா
08-02-2011, 12:16 PM
உண்மை ...மானம் என்பது உயிரினும் மேலானது அன்றைய மன்னர்களுக்கு...ஆனால் நாட்டை ஆளும் மன்னர்கள் இன்று ...

மானமுள்ளவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. விழுக்காடு வேண்டுமானால் குறை
வாக இருக்கலாம்.மனைவியின் தவறான நடத்தைக்காகவும், கணவனின் தவறான*
நடத்தைக்காகவும் தற்கொலை செய்துகொள்பவர்களை நீங்கள் செய்தித் தாள்களில்
படிப்பது இல்லையா?

என்னுடைய கருத்தை தோழர் ஜெய் வேறு வடிவில் பதிவு செய்துள்ளார்

நீங்க புரிந்து கொண்ட விதம் வேறு - உங்கள் கருது நீங்க புரிந்த விதத்தில் எனக்கும் உடன் பாடே

M.Jagadeesan
08-02-2011, 12:20 PM
உண்மை ...மானம் என்பது உயிரினும் மேலானது அன்றைய மன்னர்களுக்கு...ஆனால் நாட்டை ஆளும் மன்னர்கள் இன்று ...

மானம் என்பது மன்னர்களுக்கு மட்டுமல்ல! மனிதனாகப் பிறந்த அனைவருக்கும்
வேண்டும் என்பதே இப்பாடலின் பொருள். மன்னனும் மனிதன் தானே!

dhilipramki
08-02-2011, 12:37 PM
மானமும் அறிவும் மனிதற்கு அழகு !! - தந்தை பெரியார்

M.Jagadeesan
08-02-2011, 12:49 PM
மானமும்,அறிவும் மனிதனுக்கு அழகு! இதை எப்படி மறுக்கமுடியும்?

நாஞ்சில் த.க.ஜெய்
08-02-2011, 01:47 PM
மானம் என்பது மன்னர்களுக்கு மட்டுமல்ல! மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் வேண்டும் என்பதே இப்பாடலின் பொருள். மன்னனும் மனிதன் தானே!

நீங்கள் கூறுவது மனிதருக்கு ... நான் கூறுவது மனிதன் எனும் போர்வையில் திரியும் மனிதம் மறந்தவர்களை பற்றி .....

M.Jagadeesan
09-02-2011, 03:48 AM
மனிதத் தன்மையை மறந்தவர்களை மனிதன் என்று அழைக்கக்கூடாது.
மிருகம் என்றுதான் அழைக்கவேண்டும்.மிருகங்களுக்கு மானம் தேவை
இல்லை.

dhilipramki
09-02-2011, 04:37 AM
சிரிக்க தெரிந்த மிருகம் மனிதன் என்பார்களே?

அப்படின நானும் மிருகமா!!!!!:eek:

M.Jagadeesan
09-02-2011, 05:35 AM
ஒவ்வொரு மனிதன் உள்ளேயும் ஒரு மிருகம் தூங்கிக்கொண்டு இருக்
கிறது.சமயம் வரும்போது அது வெளிப்படும்.

நாஞ்சில் த.க.ஜெய்
09-02-2011, 08:30 AM
மனிதத் தன்மையை மறந்தவர்களை மனிதன் என்று அழைக்கக்கூடாது.
மிருகம் என்றுதான் அழைக்கவேண்டும்.மிருகங்களுக்கு மானம் தேவை
இல்லை.
நண்பரே !நானும் கூற வந்தது அது தான்