PDA

View Full Version : என் சொதப்பல் கவிதைகள்;-1

ராஜாராம்
08-02-2011, 07:25 AM
என் காதலை உன்னிடம் சொல்ல
காத்திருந்தேன்,
உனது "சிக்னல்"கிடைப்பதற்காக..
இன்றேனும் காதலை சொல்வாயா என்றேன்...
"சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்",என்றாய்.
சிறிது நேரம் கழித்து முயற்சித்தேன்..
நீ.."மற்றொரு தொடர்பில்" இருப்பதை அறிந்தேன்.
என் காதலை......
"சிவிட்ச் ஆஃப்",செய்துவிட்டு...,
மவுனமானேன்....
(ஒரு மொபைல் ஷாப்,உரிமையாளரின் காதல் புலம்பல்)

(கவிதை எழுதிய அனுபவம் எனக்கில்லை.என் தவறுகளை கவிஞர்கள் பொறுத்தருளவும்)

உமாமீனா
08-02-2011, 08:27 AM
கவிதைகள் கைபேசி கடைக்காரனையும் விட்டு வைக்க வில்லையே

முரளிராஜா
08-02-2011, 08:47 AM
customer care க்கு கால் செய்துவிட்டு அதில் வரும் கம்ப்யூட்டர் வாய்சை நான் எவ்வளவு சொல்லியும் நம்பாம அத ஒரு பொன்னுன்னு நம்பி இப்படி கண்ணாபிண்ணான்னு கிறுக்கிகிட்டு இருக்கிய ராஜாராம். உன் அறியாமையை யாரிடம் சொல்வது.
(இது உன்னுடைய எத்தனையாவது காதலிக்கு எழுதபட்ட கவிதை என்பதை எனக்கு சொன்னா சவுகரியமா இருக்கும்)

உமாமீனா
08-02-2011, 09:06 AM
customer care க்கு கால் செய்துவிட்டு அதில் வரும் கம்ப்யூட்டர் வாய்சை நான் எவ்வளவு சொல்லியும் நம்பாம அத ஒரு பொன்னுன்னு

இதில் ஏதோ உள் குத்து இருக்குனு தோணுது - சமன் இல்லாமல் சம்மந்தமே இல்லாத ஒன்றை கூறுவதின் நோக்கம் என்னவோ?

முரளிராஜா
08-02-2011, 09:11 AM
தோழி புரியலையா?
நான் சொன்ன விசயத்தை அந்த கிறுக்கன் கவிதையோட ஒப்பிட்டு பாருங்க அப்ப புரியும்

நாஞ்சில் த.க.ஜெய்
08-02-2011, 09:43 AM
கவிதை எதார்த்தம்...ஒரு நெட்வொர்க் நமக்கு ஒத்துவரவில்லை எனில் மற்றொரு நெட்வொர்க்கு மாறவேண்டியது தானே நண்பரே ...

ராஜாராம்
08-02-2011, 10:02 AM
customer care க்கு கால் செய்துவிட்டு அதில் வரும் கம்ப்யூட்டர் வாய்சை நான் எவ்வளவு சொல்லியும் நம்பாம அத ஒரு பொன்னுன்னு நம்பி இப்படி கண்ணாபிண்ணான்னு கிறுக்கிகிட்டு இருக்கிய ராஜாராம்.

முரளிராசா
செல்போன் பிஸ்னஸ் பன்ற "....எனக்கேவா"....(முதலில் உன் நம்பரை பிளாக் பன்னின்னாதான் ஒழுங்குக்கு வருவ...)

எத்தனாவது காதலுன்னு கேட்டிருக்க?
1...2....3....4..5,6,7,8,9,10,11,12,13,14,....ஐயோ ஒரே கொழப்பம்மா இருக்க்குப்பா....யோசிச்சு சொல்ட்ரேன்

ராஜாராம்
08-02-2011, 10:07 AM
இதில் ஏதோ உள் குத்து இருக்குனு தோணுது - சமன் இல்லாமல் சம்மந்தமே இல்லாத ஒன்றை கூறுவதின் நோக்கம் என்னவோ?

பாருங்க உமாமீனா...எலிகேசி தொல்லை தாங்கலை

ராஜாராம்
08-02-2011, 10:13 AM
கவிதை எதார்த்தம்...ஒரு நெட்வொர்க் நமக்கு ஒத்துவரவில்லை எனில் மற்றொரு நெட்வொர்க்கு மாறவேண்டியது தானே நண்பரே ...

நண்பர் ஜெய் அவர்களே
சரியாக சொன்னீங்க...நெட்வொர்க்க மாத்தவேண்டியதுதான்....

ஆமாம் ...கவிதை எதார்த்தம்...ன்னு சொல்லிருக்கிங்களே...""என்னவெச்சு எதும் காமெடி கீமடி பன்னலயே..."'!!!!!!....

உமாமீனா
08-02-2011, 10:26 AM
customer care க்கு கால் செய்துவிட்டு அதில் வரும் கம்ப்யூட்டர் வாய்சை

தோழி புரியலையா?
நான் சொன்ன விசயத்தை அந்த கிறுக்கன் கவிதையோட ஒப்பிட்டு பாருங்க அப்ப புரியும்

முழங்கையுக்கும் முட்டுக்காளுக்கும் ஏன் முடிச்சி?

தொலைபேசியில் அழைக்கும் போது நடப்பதுக்கும் கஸ்டமர் கேர்க்கும் என்ன தொடர்ப்புன்னு?? அய்யா குட்டி பையா காதுல ஏற்கனவே குத்தியாச்சி

ராஜாராம்
08-02-2011, 10:37 AM
முழங்கையுக்கும் முட்டுக்காளுக்கும் ஏன் முடிச்சி?

தொலைபேசியில் அழைக்கும் போது நடப்பதுக்கும் கஸ்டமர் கேர்க்கும் என்ன தொடர்ப்புன்னு?? அய்யா குட்டி பையா காதுல ஏற்கனவே குத்தியாச்சி

குட்டி பையா..முரளிராசா...தோழி உமாமீனாவின் பதில்கள் உனக்கு போதுமா....
(ஹைய்யா....ஜாலி ஜாலி....முரளிராசா மட்டிக்கிட்டியா,,,,

முரளிராஜா
08-02-2011, 10:40 AM
நான் சொன்னதே புரியலைனா ரொம்ப கஷ்டம்,இது சம்பந்தமாக கிறுக்கன் உங்களுக்கு புரிய வைப்பார்.

உமாமீனா
08-02-2011, 10:56 AM
நான் சொன்னதே புரியலைனா ரொம்ப கஷ்டம்,இது சம்பந்தமாக கிறுக்கன் உங்களுக்கு புரிய வைப்பார்.

கழண்டு கிட்டு போற வேலையே ஆகாது - ஆரம்பிசியலே...அப்பு எங்க மாப்பு ஓடுறது..பதிலை சொல்லிட்டு போ போ..............போ......................

malarvizhi69
08-02-2011, 11:17 AM
customer care க்கு கால் செய்துவிட்டு அதில் வரும் கம்ப்யூட்டர் வாய்சை நான் எவ்வளவு சொல்லியும் நம்பாம அத ஒரு பொன்னுன்னு நம்பி இப்படி கண்ணாபிண்ணான்னு கிறுக்கிகிட்டு இருக்கிய ராஜாராம். உன் அறியாமையை யாரிடம் சொல்வது.
(இது உன்னுடைய எத்தனையாவது காதலிக்கு எழுதபட்ட கவிதை என்பதை எனக்கு சொன்னா சவுகரியமா இருக்கும்)

ஹா ஹா ஹா ...................நண்பா , சரியாக சொன்னீர்கள்....:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

ராஜாராம்
08-02-2011, 12:00 PM
ஹா ஹா ஹா ...................நண்பா , சரியாக சொன்னீர்கள்....:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

நான் பச்சப்புள்ள...எனக்கு ஒன்னுமேத் தெறியாது....அப்படியெல்லாம் தப்பா நெனைக்காதிங்க....(உங்களையெல்லாம் சமாளிக்கிறது......ரொரொரொரொம்ப.....கஷ்ட்டமா இருக்கே:frown:முடியல....முடியல....ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்சப்ப்ப்பபாபா!!!!:confused:

ராஜாராம்
08-02-2011, 12:02 PM
கழண்டு கிட்டு போற வேலையே ஆகாது - ஆரம்பிசியலே...அப்பு எங்க மாப்பு ஓடுறது..பதிலை சொல்லிட்டு போ போ..............போ......................

சபாஷ்ஷ்.....தோழி உமாமீனா.....

அக்னி
08-02-2011, 01:22 PM
மிஸ் கோல்களை
மிஸ் பண்ணாத
மிஸ்டர் ராஜாராம்...
மிஸ் கோல்கள்
அன்பில் வராவிடினும்,
அன்‘பில்’ நிச்சயம் வரும்...

customer care க்கு கால் செய்துவிட்டு அதில் வரும் கம்ப்யூட்டர் வாய்சை நான் எவ்வளவு சொல்லியும் நம்பாம அத ஒரு பொன்னுன்னு நம்பி இப்படி கண்ணாபிண்ணான்னு கிறுக்கிகிட்டு இருக்கிய ராஜாராம்.
இத எப்பிடி எடுத்துக்கிறது என்றுதான் புரியல...
பரிதாபமாவா... வயத்தெரிச்சலாவா...

dhilipramki
08-02-2011, 01:27 PM
என் சொதப்பல் என்று ஏன் சொல்ல வேண்டும்?
ஏன் புலம்பல் என்று தலைப்பிட வேண்டியயாது தானே!!! :lachen001::lachen001:
இன்றைய கால கவிதை வரிகள் அருமை

பகிர்வுக்கு நன்றி ராஜாராம் :)

முரளிராஜா
08-02-2011, 01:28 PM
உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் வயத்தெரிச்சல்தான்.
எதாவது கலகம் செய்யனும்னா சுலபமா ஐடியா வருது
கவிதை எழுதலாம்னு உட்காந்தா தூக்கம்தான் வருது

அக்னி
08-02-2011, 01:32 PM
அதுவாவது உங்களுக்கு வருதே என்று வயத்தெரிச்சற்பட்டுக் கலகம் செய்ய வாறாராம்.., ராஜாராம்...

முரளிராஜா
08-02-2011, 01:44 PM
அதுவாவது உங்களுக்கு வருதே என்று வயத்தெரிச்சற்பட்டுக் கலகம் செய்ய வாறாராம்.., ராஜாராம்...
என்ன கொடுமை சார் இது.
இந்த நல்லவனுக்கு,அப்பாவிக்கு யாருமே ஆதரவு இல்லையா.

அக்னி
08-02-2011, 01:48 PM
இந்த நல்லவனுக்கு,அப்பாவிக்கு யாருமே ஆதரவு இல்லையா.

இப்போ பெப்ரவரி தானே... மே வர்றதுக்கிடையில ஆதரவத் திரட்டிடலாம்...
கவலைப்படாதீங்க....

ராஜாராம்
08-02-2011, 01:58 PM
நன்றி நண்பர் திலிப்ராம்கி,நண்பர் அக்னி.

நண்பர் அக்னிக்கு,
எனக்கு வந்த
"மிஸ்"டு கோல்களை
மிஸ்ஸஸ் கோல்கள் ஆக்கலாம் ,
என்று பார்த்தால்,...முரளி போன்ற
"ராங்க்"கோல்கள் தொல்லைகள்
தொடர்பை துண்டிக்கின்றன.