PDA

View Full Version : என்னில் மறக்கமுடியாத மனிதர்கள்:1ராஜாராம்
08-02-2011, 04:57 AM
(இது ஒரு உண்மை சம்பவம்.
இதில் வரும் நபர்களின் பெயர்களும் ஊரின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கதைவடிவமாக மாற்றுவதற்காக நடையும் நேரிடை வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
என் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணின் கதை.மற்றபடி,பெண் இனத்தை தாழ்த்தியோ,ஆண் இனத்தை உயர்த்தியோ,இதில் குறிப்பிடவில்லை )திருச்சி:(தில்லை நகர் .ஆகஸ்ட்டு 1988)

பானு&சிவா இருவரும் கணவன் மனைவி.
சிவா தனியார் நிறுவன ஊழியர்.பானு சிவாவுடன் வேண்டா வெறுப்புடன் குடும்பம் நடத்தி வந்தாள்.சிலசமயங்களில் இருவருக்கும் சண்டை எல்லைமீறி நடப்பதுண்டு.
அப்பொழுதெல்லாம் பானு,
"இனிமே உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்ல...சனியனே!!இந்தா நீ கட்டின தாலிய நீயே எடுத்துக்க",
என்று தாலியை கழட்டி வீசுவாள்.
பிறகு கோபம் தனிந்ததும் வீசிய தாலியை மீண்டும் மாட்டிக்கொள்வாள்.இப்படி பலமுறை அவள் தாலியை வீசிஎரிவதை பார்த்த சிவாவின் மனது நொந்து கிடந்தது .

சிவாவை பொறுத்தவரை,மிகவும் பொறுமையானவன்,எந்த கெட்டபழக்கவழக்கமும் இல்லாதவன்,மிகவும் இரக்க குணம் படைத்தவன்.பானுவுக்கு ,ஆடம்பர வாழ்க்கைமேல் இருந்த பேராசையும் ,மற்றவர்கள் வசதியாய் வாழ்வதைபோல் தானும் வாழவேண்டும் என்ற வெறியும்தான்,
அவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு வர முக்கிய காரணம்.\
ஒரு சராசரி மனிதன் தனது குடும்பத்திற்கு செய்யவேண்டிய அத்தனை சௌகரியங்கள் அனைத்தையும் சிவா தன் மனைவிக்கு செய்திருந்தான்.அப்படி இருந்தும் பானுவின் தேவைகள் திருப்தி அடையவில்லை.(2.08 1988...காலை 8 மணி.காவேரி ஆடிப்பெருக்கு திருநாள் அன்று).

பானு வழக்கம்போல் சிவாவுடன் சண்டைப்போட்டுக்கொண்டு இருந்தாள்.
"நாளும் கெழமயா எல்லாரும் பொண்டாட்டிக்கு புதுசா பொடவை எல்லாம் எடுத்து தரங்க ,இங்கதான் ஒரு எழவையும் காணோம்.இந்த சனியன் புடிச்ச தாலிய எப்ப என் கழுத்துல கட்டுனியோ அப்பவே எனக்கு தர்ரித்ரியம் புடிச்ருச்சு",
என்று மாமூலாக கட்டிருந்த தாலிய கழட்டி வீசினாள்.
"உனக்கு நான் என்ன கொரவச்சேன்,நீ கேட்டதெலாம் வாங்கித்தானே தரேன்.சின்னவிஷயம் இதுக்குகூடவா தாலிய கழட்டி ஏறியறது",
என்று நொந்த மனதுடன் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான் சிவா.(02 .08 1988.அன்று மாலை 5 மணி.திருச்சி காவேரி படித்துரையில்)

மக்கள் அனைவரும் காவேரி ஆற்றில் பூஜை புனஷ்க்கரங்களை சந்தோஷமாக செய்துகொண்டு இருந்தனர்.தங்களது வேண்டுதளைகளை மனதில் சும்மந்தவனம் ,வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி காவேரி ஆற்றில் மிதக்கவிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது அனைவரது கவனத்தையும் சிதரடிக்கும்வனம்,
,"ஐயையோ !!,என் தாலி ஆத்துல விழுந்த்ருச்சு",என்று பானு கூச்சல்லிட்டாள் .
"என்ன என்னாச்சு பானு",என்று பதறியபடி அவளருகே சென்றான் சிவா ."ஆத்துல முங்கி எழும்போது தாலி கழண்டு ஆத்துல விழுந்த்ருச்சு",என்றவள்
"ஐயோ அஞ்சு பவுனு செயினுயா, சும்மா ஜடம்மாட்டம் நிக்காம ஆத்துல நீந்தி தேடுயா",என்று சிவாவை ஆற்றில் வேகமாக தள்ளினாள்.

"அடப்பாவமே !!நல்லநாள் அதுவுமா அந்த பொண்ணோட தாலி இப்படியா போவனும்",என்று ஒருசிலர் அவள்மீது அனுதாபத்தோடு முனுமுனுத்தனர்.
அங்கிருந்த ஆண்களில் சிலரோ தம்மால் இயன்ற அளவு ஆற்றில் நீந்தி அந்த தாலிய மீட்க்க போராடினர் .

"கடவுளே எங்கப்பா கஷ்டப்பட்டு செஞ்சுப்போட்ட தாலி அது .அதுவும் 5 பவுனு .என் புருஷனக்கு அதை மறுபடி செஞ்சுப்போடகூட வக்குகிடையாது.அந்த தாலி மறுபடி எனக்கே வந்துரனும் சாமி ".
என்று பானு மனதுக்குள் வேண்டிக்கொண்ட மறுநிமிடமே ..
,"எம்மாடி உன் தாலி கிடைச்சிடுச்சிம்மா ",என்று கூட்டத்தில் இருந்து ஒரு பெண் சந்தோஷமாய் சப்தமிட்டாள்.

''நெசமாவா'',என்று சத்தம்வந்த திசை நோக்கி திரும்பினாள் பானு ."யக்கா,இந்தாக்கா உன் தாலி செயின்னு ,ஆத்தோட போயிருக்க வேண்டியது ,நல்லவேளையா ஆத்துக்கு அடியில உள்ள பாசி செடியில மாட்டிக்கிட்டு கெடந்தது",
என்று ஈரம் சொட்ட சொட்ட ஒரு 17 வயது சிறுவன் ,பானுவை நோக்கி அவளது தாலி செயினை நீட்டினான் .
"தம்பி நீ நல்ல இருக்கனுமப்பா!!,"என்று மேலும் எதுவும் பேசமுடியாமல் அவனை கண்ணீருடன் கட்டியணைத்தாள் பானு .
"நீ கும்புடற சாமீ உன்ன கைவிடல தாயீ,உன் புருஷனுக்கு ஆயுசு கெட்டி ",என்று அருகில் நின்ற பாட்டி ஒருத்தி பானுவின் தலையை வருடினாள்.

"உன் ஊட்டுக்கறாரு எங்கம்மா",என்று அந்த பாட்டி கேட்டதும்தான் ,பானுவுக்கு அவளது கணவன் சிவாவின் நினைவே வந்தது .
அவளுக்காக ஆற்றில் குதித்த அனைவரும் கரைக்கு வந்துவிட்டனர் .ஆனால் அவளால் ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிவாமட்டும் கரைக்கு வரவில்லை.


(02 .08 .1988 .அன்று இரவு 11 மணி.காவேரி கறையோரம் )

சிவாவின் பிரேத உடல்மட்டும் ஆற்றோரமாய் கரை ஒதுங்கியது . ஆம், அவனுக்கு நீந்த தெரியாது என்பதுகூட பானுவுக்கு தெரியாது.


(03 .08 .1988 . மறுநாள் காலை 9 மணி)

சிவாவின் இறுதி சடங்கிற்காக ஊரே ஒன்று கூடி இருந்தது.
"பாவம் நல்ல மனுஷன் போய் சேந்துட்டான்".
"புருஷனே போனப்பறம் தாலி இருக்குறதும் ஒன்னுதான் இல்லாததும் ஒன்னுதான்...என்ன பொம்பளையோ அவ "....
"கிடைத்த வாழ்கையை சந்தோஷமா வாழாமல்...தான் தலையிலேயே மண்ணப் போட்டுக்கிட்டாள்",..இப்படி
சிவாவிற்கு அஞ்சலி செலுத்த பலரும் பலவிதமாக முனுமுனுத்துக்கொண்டு இருந்தனர்..........

உமாமீனா
08-02-2011, 05:09 AM
இப்படியும் சில ஜென்மங்கள், ஜீவன்கள் நம்மோடு உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. இரு மனம் இணைவதுதான் திருமணம் என்பார்கள் ஆனால் நாட்டில் இன்று 90 % பேரின் வாழ்கை ஏதோ வாழனும் கெளரவம், மரியாதை,சமுகம் என்பதற்காக வாழ்கிறார்கள் அம்புட்டுதான்

ரங்கராஜன்
08-02-2011, 05:27 AM
88 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இன்னும் மனதில் இருக்கிறது என்றால், கண்டிப்பாக அது உங்களை மிகவும் பாதித்த சம்பவம் தான்....... எங்களையும்.....

வாழ்த்துக்கள்...... தொடருங்கள் காத்திருக்கிறோம் உங்களின் மறக்க முடியாத மனிதர்களை பற்றி தெரிந்துக் கொள்ள...

நாஞ்சில் த.க.ஜெய்
08-02-2011, 09:21 AM
இதனை முன்பே தங்களது ப்ளாக் சென்று படித்துள்ளேன் ..பதிவு நிகழ்ந்து நாட்கள் பலவாயினும் இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன .. மனதை நெகிழவைத்த இச்சம்பவம் பார்த்து அவ்வாறான பெண்கள் திருந்துவர் எனில் பாதிக்கபட்ட ஆண் வர்க்கத்தினருக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் ,,,

ராஜாராம்
08-02-2011, 12:10 PM
நண்பர்கள்..திரு ரெங்கராஜன் அவர்களுக்கும்,திரு ஜெய் அவர்களுக்கும்,எனது மனமார்ந்த நன்றிகள்.

முரளிராஜா
08-02-2011, 01:40 PM
கிடைத்த வாழ்க்கையையும் அல்லது வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி கொள்ளாத சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
(அதில் நீயும் ஒருவன் ராஜாராம். இது வழக்கமான நகைச்சுவைக்காக அல்ல. இது உன்னை அறிந்த உண்மையான நண்பனாக)

ராஜாராம்
08-02-2011, 01:47 PM
[QUOTE=முரளிராஜா;512170]
(அதில் நீயும் ஒருவன் ராஜாராம். இது வழக்கமான நகைச்சுவைக்காக அல்ல. இது உன்னை அறிந்த உண்மையான நண்பனாக)[/QUOTE

நன்றி முரளிராஜா.ஒருசிறு திருத்தம்..
கிடைத்த வாழ்க்கையை நான் இழக்கவில்லை...அதுதான் என்னை இழந்துவிட்டது.
"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும்மில்லை
நடந்ததையே நினத்திருந்தால் அமைதி என்றுமில்லை...",

அக்னி
11-02-2011, 07:18 PM
தங்கத்தில் ஆசை... தங்கவில்லை வாழ்க்கை...

வேண்டா வெறுப்புடன் கடமைக்குக் குடும்பமாக இருப்பதிலும்,
பிரிந்திருப்பது மேலானது...

ரஜினியின் பஞ்ச் டயலாக் நொந்த டயலாக்காக மாறி அதுவா வருது...
அதிகமா ஆசைப்படுற பொம்பளையும், அவசியத்துக்குக் கோபப்படாத ஆம்பளையும்
சந்தோஷமா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை...
(முக்கிய குறிப்பு: இது இந்தப் பதிவுக்கு மட்டுமே)

sarcharan
14-02-2011, 09:32 AM
இம்மாதிரி பெண்களை எல்லாம் இரக்கமில்லாமல் சித்ரவதை செய்யணும்.. அப்போ தன் பெண்ணினம் திருந்தும்..

இது போன்ற பெண்கள் புல்லுரிவிகள் போல நல்ல பெண்களையும் கெடுத்து விடுவார்கள்

கலைவேந்தன்
22-04-2012, 02:56 PM
மனதை அசைத்த நிகழ்வு. வருத்தமே மேலிட்டது அந்த பெண்மேல். கிடைத்த வாழ்க்கையை மனதார அனுபவிக்கத்தெரியாத முட்டாள் பெண்.

நன்றி ராஜாராமன்..!

Dr.சுந்தரராஜ் தயாளன்
22-04-2012, 03:02 PM
இதை படித்தவுடன் மிகவும் வருத்தம் அடைந்தேன். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களிலும் சிலர் இதுபோல் இருக்கிறார்கள்.:confused::eek:

aren
23-04-2012, 06:23 AM
உங்கள் பதிவைப் படித்தவுடன் மனதை என்னவோ செய்கிறது. பாவம் சிவா.

ravikrishnan
23-04-2012, 10:56 AM
எதிர்பார்க்காத நெஞ்சை வருடும் முடிவுகள்,இது பலரது வாழ்வில் தற்போதும் நடந்துகொண்டுதான்,இருக்கிறது.என்னசெய்வது. எவ்வளவு எதுத்துசொன்னாலும் யோசிக்காத பெண்மை, அவசரபுத்தி வாழக்கைக்கு உதவாது. என்பதை உணர்த்தும் கருத்துகள், அருமை பதிவுக்கு நன்றி!!!!