PDA

View Full Version : காயப்பட்டு வெளியேற்றம்



ஆளுங்க
07-02-2011, 05:04 PM
இந்தியாவின் அதிக வெற்றிகளைக் குறித்த அணித்தலைவராக விளங்கிய சவுரவ் கங்குலி தான் மட்டைப்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTW89KBy3yO9gTWo0XM45CK52TnTQzVSKvDqPd1G_9STWiF71z6RTi_1JKhxA

ஏற்கனவே, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் இனி எந்த போட்டியிலும் விளையாடுவது இல்லை என்று முடிவு செய்து உள்ளார்..

IPL போட்டிகளில் தேர்வாகாதால், அவர் இந்த முடிவை எடுத்து உள்ளதாக தெரிகிறது!!

மேலும் படிக்க:
http://in.yfittopostblog.com/2011/02/07/sourav-ganguly-retires-from-all-cricket-breaking-news/

p.suresh
08-02-2011, 12:40 AM
எந்த முதலுக்கும் முடிவு என்று ஒன்று உண்டு.தான் தலைமை வகுத்த டெஸ்ட் போட்டிகளில் சரியான தருணத்தில் டிக்ளேர் செய்து இந்திய அணி வெற்றிக்கு வழி வகுத்தவர் தன் ஓய்வு பற்றி தவறான நேரத்தில் டிக்ளேர் செய்ததால் அவமானத்துக்குள்ளானார்.

எனினும் அந்நிய மண்ணில் இந்திய அணி சோபிக்க ஆரம்பித்தது இவர் தலைமையில்தான் என்ற அழியாப்புகழ் இவருக்குண்டு.

ஆஃப் சைடில் எத்தனை ஃபீல்டர்களை போட்டாலும் நுணுக்கமாக squarecut செய்து பந்தை லாவகமாக எல்லைக்கோட்டிற்கு இவர் விரட்டும் லாவகத்தை இனி காணமுடியாது.

இனி வர்ணனையாளர்,பயிற்சியாளர் போன்ற ரூபங்களில் பரிமளிப்பார் என்று நம்புவோம்.

நாஞ்சில் த.க.ஜெய்
08-02-2011, 09:05 AM
கொகத்தா இளவரசர் எனும் மணி மகுடத்தில் ஒரு வைர கல்லாய் ஜொலித்த இவர் பெரும்பாலான வெளிநாட்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற மூலாதாரமாக விளங்கி தன்னுடைய அணித்தலைவர் பணியினை சிறப்புற செய்தார் என்கையில் இவரை மிகவும் பாராட்டலாம் ..இவருடைய வீழ்ச்சிக்கு காரணம் ஒருவகையில் அவர்தான் என்றாலும் மற்றொரு வகையில் கிரேக் சேப்பல் தான் முக்கிய காரணம் இவருடைய பயிற்சியாளர் அணுகுமுறையில் தான் அவர் பல போட்டிகளில் சரிவரவிளையாடாமல் அணியை விட்டே நீக்கபட்டார் ..இந்த நேரத்தில் அவர் சிறப்புற விளையாடி இருப்பார் என்றால் அவருக்கு இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காது ..அவருடைய இந்த முடிவு ஏற்க்கதக்கதுதான் அதே நேரத்தில் மிகவும் முன்னதாக இதனை எடுத்திருக்க வேண்டும் ..மனதளவில் காயம்பட்ட அவருடைய இந்த முடிவு அவருக்கு வருத்தமாகத்தான் இருக்கும் .அதே நேரத்தில் அவருடைய அணுகு முறை வேகமான இந்த போட்டிக்கு உதவாது என்பதையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்...அவருடைய ஒய்வுக்கு என் வாழ்த்துகள் ....

Nivas.T
08-02-2011, 09:23 AM
இது இந்திய கிரிகெட் ரசிகர்களுக்கு ஒரு வருந்தத்தக்க செய்தி, இருப்பினும் காலத்தின் கட்டாயம்

கௌதமன்
08-02-2011, 02:04 PM
இலங்கையுடனான ஒரு போட்டியில் அவர் முன்சென்று அடித்து அரங்கத்துக்கு வெளியே அனுப்பிய பந்துகள் நம் நினைவைவிட்டு அகலாது. ஒரு தலைமைக்குரிய ஆளுமையை அவர் நல்ல முறையில் களத்தில் வெளிகாட்டியவர். ஆஃப் சைடில் ஒரு சுவரே கட்டி வைத்தாலும் அதை உடைத்து தூளாக்கும் அவரது ஆட்டமுறை கண்கவரக்கூடியது. இனி களத்துக்கு வெளியே இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார். இருக்க வேண்டும்.

M.Jagadeesan
08-02-2011, 02:21 PM
ஒரு மனிதன் புகழின் உச்சியில் இருக்கும்போது ஓய்வு பெறுவதுதான்
நல்லது.இது டெண்டுல்கருக்கும் பொருந்தும்.

மதி
08-02-2011, 04:00 PM
இது தவறான செய்தி என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

http://www.cricbuzz.com/cricket-news/36075/ganguly-dismisses-retirement-reports

ஆளுங்க
11-02-2011, 12:17 PM
இது தவறான செய்தி என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.


புதிய செய்திக்கு நன்றி!!

நாஞ்சில் த.க.ஜெய்
11-02-2011, 03:55 PM
இந்த செய்தி தவறாக இருந்தாலும் அந்த முடிவு சரியானது இதனை தாண்டியும் அவர் விளையாடுவார் என்றால் அவருடைய ஆட்டம் மிகவும் மேம்பட்டிருக்கவேண்டும் அவ்வாறிருந்தால் அவருக்கு (கவுரவம் )மிகவும் நன்று ...