PDA

View Full Version : சாகாவரம்



ஆளுங்க
07-02-2011, 10:53 AM
அவன் கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான்...
கடவுள் அவன் முன் தோன்றினார்...

"பக்தா!! உன் தவம் கண்டு மெச்சினேன். உனக்கு வேண்டிய வரம் கேள்"
"கடவுளே!! எனக்கு சாகா வரம் வேண்டும்"

"பக்தா!! நான் பல யுகங்களாக கூறி வருவது போல சாகா வரம் மட்டும் கொடுக்க முடியாது. வேறு ஏதாவது கேள்"

"இறைவா!! இந்த பூமியில் தோன்றிய எந்த பொருளாலும்- உயிருள்ளதோ உயிர் அற்றதோ- நான் இறக்க கூடாது"

"அப்படியே ஆகட்டும்!! "
கடவுள் மறைந்தார்!!

அவன் சிரித்தான்..
"எப்படியோ கடவுளை ஏமாற்றி சாகா வரம் வாங்கி விட்டேன். இனி என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது"

தூரத்தில் ஒரு விண்கல் அவன் தலையைக் குறி வைத்து வேகமாக வந்து கொண்டு இருந்தது!!

உமாமீனா
07-02-2011, 11:01 AM
ஆண்டவனுக்கே அல்வாவா? வருது பாரு ஆப்பு - சொந்த காசில் சூன்யம் வைப்பது என்பது இப்படி தானோ

ராஜாராம்
07-02-2011, 11:04 AM
அருமையான கற்பனை

மதி
07-02-2011, 11:52 AM
நல்ல கதை நண்பரே!!

கௌதமன்
07-02-2011, 04:22 PM
இன்னைக்கு டிஸ்கவரி சானலில் பிளாக் ஹோல் பற்றிய டாக்குமெண்டரியைப் பார்த்தேன். நடக்கும் போலதான் தெரியுது. எதுக்கும் மொட்டை மாடியிலப் போய் பார்த்துக்கிட்டு படுக்கப் போறேன்.

கீதம்
07-02-2011, 07:40 PM
எப்படியெல்லாம் யோசிக்கறீங்க? சுவையான கதைக்குப் பாராட்டுகள்.

அமரன்
07-02-2011, 07:52 PM
மறுநாள் காலையில் பத்திரிகையில் செய்தி. விண்கல் தாக்கி வாலிபன் சாவு. அவன் பெற்றுவிட்டான் சாகாவரம்.

நேரம் போக்கத் தகுந்த கதை. பாராட்டுகள் நண்பா

நாஞ்சில் த.க.ஜெய்
11-02-2011, 05:08 PM
அருமையான சிறுகதை ...கதையின் முடிவு ..எக்காலத்திலும் இயலாத ஒன்றல்ல ....அவன் பெறும் அமரத்துவம்(சாகாவரம் ).....

அக்னி
11-02-2011, 05:22 PM
“வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு”
என்ற கூற்றுக்கு மிகவும் பொருத்தமிக்க கதை.

“உங்களுக்கு முன் நான் இறக்கக்கூடாது” என்று கடவுளிடம் வரம் கேட்டிருக்கலாமோ...

பாராட்டு அன்பரே...

Nivas.T
12-02-2011, 09:03 AM
எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்

நல்ல சிந்தனை

பாராட்டுக்கள் நண்பரே

sarcharan
14-02-2011, 12:10 PM
“வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு”
என்ற கூற்றுக்கு மிகவும் பொருத்தமிக்க கதை.

“உங்களுக்கு முன் நான் இறக்கக்கூடாது” என்று கடவுளிடம் வரம் கேட்டிருக்கலாமோ...

பாராட்டு அன்பரே...


இதை கேட்டதும் எனக்கு ஒரு பகிடி ஞாபகத்துக்கு வருது.

அமெரிக்க, ரஷிய மற்றும் இந்திய அதிபர்கள் கடவுளிடம் தங்களது நாடு எப்பொழுது முன்னேறும் என்று கேட்க சென்றார்களாம்.

அமெரிக்க அதிபர்: சுவாமி, என் நாடு முழுவதுமாக எப்பொழுது முன்னேறும்?
கடவுள்: இன்னும் 8 வருடங்கள் கழித்து

அமெரிக்க அதிபர் ஒருவேளை நான் உயிருடன் இருப்பேனோ இல்லையோ என்று கலங்கி சென்றார்

ரஷிய அதிபர்: சுவாமி, என் நாடு முழுவதுமாக எப்பொழுது முன்னேறும்?
கடவுள்: இன்னும் 15 வருடங்கள் கழித்து

ரஷிய அதிபர் ஒருவேளை நான் உயிருடன் இருப்பேனோ இல்லையோ என்று கலங்கி சென்றார்

இந்திய அதிபர்: சுவாமி, என் நாடு எப்பொழுது முன்னேறும்?
கடவுள்: அதுவரை நான் உயிருடன் இருப்பேனோ இல்லையோ தெரியவில்லையே என்று கேவி கேவி அழத்தொடங்கினாராம்

இது எப்படி இருக்கு..