PDA

View Full Version : 'அம்மா'வுக்கு நேர்ந்த கொடுமைஆளுங்க
07-02-2011, 07:10 AM
இது 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மட்டுமே!!!!!!!!

தமிழ் மொழியில் "அம்மா" எனும் வார்த்தை மிக முக்கியமானது!!
"அம்மா" என்பது தாய்மையின் அடையாளம் மட்டும் அல்ல...
அது பெண்மையின், கருணையின் அடையாளமும் தான்....

இது தமிழர்களாகிய நமக்குத் தெரியும்...

ஆனால், கூகிள் ரோபோவுக்குத் தெரியவில்லை....

கூகிளில் (google) அம்மா என்று தமிழில் தட்டச்சு செய்து தேடுங்கள்..

கிடைக்கும் முதல் சில விடைகள் உங்களை அதிர வைக்கும்...

தங்கை, அக்கா, அத்தை, பெரியம்மா, சித்தி, அண்ணி என நம் தமிழ் வழக்கில் மதிப்பு மிக்க நிலையில் இருக்கும் அனைத்து பெண் வழிச் சொந்தங்களுக்கும் இதே நிலை தான் !!

இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு கூகிள் குண்டா என்று அறியேன்..

பி.கு:
கூகிள் குண்டு (google bomb)
கூகிள் தேடுபொறியில் , ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தட்டச்சு செய்யும் போது, கிடைக்கும் பதிலகள் அனைத்தும் வேறு ஒரு குறிப்பிட்ட பக்கத்தை சென்றடைவது!!

http://en.wikipedia.org/wiki/Google_bomb

சில நாட்கள் முன்பு வரை, "miserable failure" என்று தேடினால், உடனே முன்னாள் அமெரிக்க குடியரசு தலைவர் ஜார்ஜ் புஷ் பற்றிய செய்திகள் விழும்..
அதே போல, " failure" என்று தேடினால், ஒபாமாவின் செய்திகள் விழும்
தவறான பொருளாதார் கொள்கைகள் காரணமாக அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சி கண்ட சமயம் கடுப்பான சிலர் செய்த வேலை இது!!

இப்போதும் கூட...
"French Military Victories" என்று கூகிள் தேடுபொறியில் தட்டச்சு செய்து "அதிர்ஷ்டம் என் பக்கம் (I am feeling lucky) என்ற பொத்தானை அழுத்துங்கள் .. புரியும்!!

நாஞ்சில் த.க.ஜெய்
07-02-2011, 07:33 AM
நானும் பார்த்தேன் நண்பரே ..எவ்வாறு இது நிகழ்ந்தது.. இதனை காணுகையில் மிகவும் வேதனை மற்றும் கடுப்பாக இருக்கிறது தமிழில் மட்டும் இவ்வாறு நிகழ்கிறது ..

உமாமீனா
07-02-2011, 08:16 AM
நீங்க ஏதோ சொல்ல நானும் ஆர்வக்கோளாரில் சென்று தேடினால்?

என்ன கருமம் ஏன் இப்படி? இவ்வளவு கேவலமாக.....???? என் முன்னே ஒரு பெரிய ? .

ஆளுங்க
07-02-2011, 10:08 AM
நீங்க ஏதோ சொல்ல நானும் ஆர்வக்கோளாரில் சென்று தேடினால்?

? .

இவ்வளவு கேவலமாக உறவுகளின் தேடல்கள் முடிவது தான் திகைப்பே!!

இதை சரி செய்ய ஏதும் வழி உண்டா?

அக்னி
07-02-2011, 10:23 AM
நிச்சயமாக இருக்கும்...
கூகிள் குழுமத்துக்கு அறிவிக்கலாம்.
எப்படி என்று மன்ற உறவுகள் யாரேனும் விளக்கிப் பதிவிட்டால், நாமனைவருமே அதனை அனுப்பி வைக்கலாமே.

இதனை விளக்கி, ஆங்கிலத்தில் யாரேனும் ஒரு பதிவை இட்டால்,
அதனை அப்பிடியே அனுப்பி வைக்க நான் தயார்...
(என்னோட ஆங்கில அறிவுக்கு நானாக அனுப்பி வைத்தால், இதைவிடக் கேவலமாகப் போயிடும்...)

sarcharan
07-02-2011, 11:42 AM
கொஞ்ச நாளுக்கு முன்னர் மிசெல் ஒபாமா காமெடியையும் கூகிள் விட்டுவைக்கவில்லை.

aathma
07-02-2011, 12:05 PM
இப்படியெல்லாம் அநியாயம் செய்கிறார்களே , மனம் எரிமலையாய் குமுறுகிறது . இத்தகைய இழிநிலையை உடனடியாக போக்கவேண்டும்

கௌதமன்
07-02-2011, 04:19 PM
அந்த கருமத்தைப் பார்த்தேன்.

எதாவது செய்யணும். என்ன செய்யலாம் நண்பரே?

ஆளுங்க
07-02-2011, 04:25 PM
எல்லாரும் சேர்ந்து ஒரு தீர்மானம் போடுவோம்..

மன்றம் சார்பாக கூகிளுக்கு மடல் அனுப்புவோம்!!

அக்னி
07-02-2011, 06:10 PM
என்னுடைய பதிவை மேற்கோளிடுகின்றேன்...
தயவு செய்து அறிந்தவர் யாரேனும் எவ்வாறு கூகிளுக்கு இதனைத் தெரிவிப்பது எனப் பதிவிட வேண்டுகின்றேன்.


நிச்சயமாக இருக்கும்...
கூகிள் குழுமத்துக்கு அறிவிக்கலாம்.
எப்படி என்று மன்ற உறவுகள் யாரேனும் விளக்கிப் பதிவிட்டால், நாமனைவருமே அதனை அனுப்பி வைக்கலாமே.

இதனை விளக்கி, ஆங்கிலத்தில் யாரேனும் ஒரு பதிவை இட்டால்,
அதனை அப்பிடியே அனுப்பி வைக்க நான் தயார்...
(என்னோட ஆங்கில அறிவுக்கு நானாக அனுப்பி வைத்தால், இதைவிடக் கேவலமாகப் போயிடும்...)

நாஞ்சில் த.க.ஜெய்
08-02-2011, 09:15 AM
இது போன்ற அவசியமான அதேநேரத்தில் முன்னுதாரமான பதிவுகள் பதிவிடபடவேண்டும் ..இத தவறுகள் இனிமேல் நிகழாதிருக்க நம்மாலான உதவிகள் அவசியம் செய்யப்படவேண்டும்..இதற்க்கான வழிமுறைகள் எவ்வாறு கூகிள் நிறுவனத்திற்கு தெரிவிப்பது ? குறிப்பிட தளம் பற்றி தகவல் தெரிவித்து அதனை எவ்வாறு தடை செய்வது ? மேலும் நமது கணினியில் எவ்வாறு அதனை தடை செய்வது? போன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரியவேண்டும் ..மேலும் இந்த முயற்சியில் நண்பர் அக்னியுடன் நானும் பங்கு கொள்கிறேன் ..

ஆளுங்க
08-02-2011, 03:47 PM
நாம் கூகிளுக்கு எழுதினாலும் அதனால் எந்த பயனும் இருக்கப் போவது இல்லை என்றே தோன்றுகிறது!!!

கூகிள் தனது ஏனைய பொருட்களான யூடியூப் (Youtube), ஜிமெயில் (Gmail), பிளாகர் (Blogger), ஆர்குட் (Orkut), படத்தேடல் (Image Search), பிகாஸா (Picasa) ஆகியவற்றுக்கு இந்த தடையை வைத்து இருந்தாலும், தன் வலைத் தேடல் பொறிக்கு இந்த கட்டுப்பாட்டை விதிக்கவில்லை.

ஒரு தளத்தை கூகிள் தேடலில் இருந்து நீக்கும் வழிமுறைகளை இங்கு காண்க (http://www.google.com/support/websearch/bin/answer.py?hl=en&answer=164734)

சுருக்கம்:

கூகிள் தேடலில் இருந்து ஒரு தளத்தை நீக்க வேண்டுமெனில், அந்த தளம் அழிக்கப்பட்டோ அல்லது தேடுபொறியால் முடக்கப்பட்டோ இருக்க வேண்டும்.

கூகிள் தேடுபொறி தரும் முடிவுகளில் உள்ள தளங்களோ அவற்றின் கட்டுப்பாடோ கூகிள் நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல. தளங்கள் அவற்றின் உரிமையாளர்களால் கட்டுப்படுத்தப் படுகிறன.

ஒரு தளத்தையோ அல்லது பொருளையோ கூகிள் தேடல் முடிவுகளில் இருந்து நீக்க விரும்பினால்ச் பின்வருபவற்றில் ஒன்றை செய்ய வேண்டும்:

* உரிமையாளர் அந்த குறிப்பிட்ட பக்கத்தை நீக்கலாம்
* உரிமையாளர் வெப்மாச்டர் கருவிகளில் உள்ள (Webmaster Tools (https://www.google.com/webmasters/tools/removals)) நீக்குபொறி மூலம் விண்ணப்பித்து நீக்கலாம்..
* பிறர் உரிமையாளரிடம் (Webmaster) வேண்டுகோள் விடுத்த பின், வெப்மாச்டர் கருவிகளில் உள்ள (Webmaster Tools (https://www.google.com/webmasters/tools/removals)) நீக்குபொறி மூலம் விண்ணப்பித்து நீக்கலாம்..
[உரிமையாளர் ஒப்புக்கொண்டால் ஒழிய நீக்கப்பட மாட்டாது]

இவற்றில் எதுவும் நம்மால் சாத்தியம் இல்லை...
(அந்த தளத்தின் மேலாளர் கண்டிப்பாக இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்)

வேறு வழிகள் உண்டு..

அவற்றைப் பற்றி அடுத்ததில்!!!

ஆளுங்க
08-02-2011, 04:52 PM
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.....

பாதுகாக்கப்பட்ட தேடல் முடிவுகளில் (SafeSearch Filtering) தப்பிக்கும் தளங்களை எப்படி முறையிடுவது என்று இந்த பதிவில் கூறி உள்ளேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26358)...கூகிள் பொறிக்குத் தமிழ் அவ்வளவாக தெரியாது!!
எனவே, நீங்கள் கெடுபிடியான பாதுகாப்புடன் (Strict SafeSearch) (??!!) தேடினாலும், அந்த தகாகத வலைத்தளங்கள் கண்டிப்பாக வரும்!!
அதுவே நம் பலம்!!

தகாதவற்றை முறையிடுவோம்!!
தமிழர் பெருமையைக் காப்போம்!!

வாழிய செந்தமிழ்!!

நாஞ்சில் த.க.ஜெய்
10-02-2011, 01:03 PM
தவறு நம்மிடம் இருந்து தான் ஆரம்பிக்கிறது என்பது உங்கள் பதிவு சுட்டி காட்டுகிறது ..நமது தவறினை நாம் சரி செய்து கொண்டால் போதும் மற்ற தவறுகள் தானாக குறையும் ..இந்த பதிவு ஒரு படிப்பினையாக நமக்கு இருக்கும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை ...