PDA

View Full Version : ஒற்றைக்கண்



கலாசுரன்
07-02-2011, 03:43 AM
*
தனக்கான
தனிப்பட்ட புத்தகங்களை
பதுக்கிவைப்பதை
ஒரு கண் மட்டுமுடைய
அந்த
மயிலிறகு
கூர்ந்து பார்ப்பதை
அவள் விரும்புவதே இல்லை

அந்த
மயிலிறகின்
குழந்தைகளைப் பெற்றெடுக்க
ஏதோ ஒரு புத்தகத்தின்
பக்கங்களை
கருவறையாக்கியிருந்தாள்
கலவியரியாத
அந்தச் சிறுமி .....!

பிறகெப்போதோ ஒரு நாள்
கருவிலிருக்கும்
அக்குழந்தைகளை
எரித்துக்கொண்டிருந்தான்
ஒருவன்

ஒற்றைக் கண்
அழுதுகொண்டிருந்தது
ரகசியமாய்

அவள்
இன்று
சிறுமியல்ல ..
*
கலாசுரன்

ரசிகன்
10-02-2011, 01:00 PM
அடடா.... கலாசுரன் :):):)

கீதம்
13-02-2011, 06:15 AM
புத்தகங்களின் இன்றைய நிலை பற்றிச் சொல்லி
சிறுமியின் நிலையைப் பூடகமாயுணர்த்தி
பரிதாபமுண்டாக்கும் ஒரு முகம்,
பகீரென நெஞ்சைச் சுண்டியிழுத்து
எதையெதையோ எண்ணச்செய்து
பரிதவிப்புண்டாக்கும் ஒரு முகமெனப்
பலமுகம் காட்டும் கவிதை.

பாராட்டுகள் கலாசுரன் அவர்களே.

உமாமீனா
13-02-2011, 06:58 AM
அருமையான சிந்தனை

கலாசுரன்
18-02-2011, 05:25 AM
நன்றி ரசிகன், கீதம் மற்றும் உமாமீனா
:):):):)

Nivas.T
18-02-2011, 06:00 AM
இயல்பான செயல்
இனிமையாய் கூறி
கனமாய் முடிக்கும் கவிதை

கவிதை அழகு

முரளிராஜா
18-02-2011, 06:06 AM
அருமை வாழ்த்துக்கள்

கலாசுரன்
21-02-2011, 03:32 AM
நன்றி நிவாஸ் மற்றும் முரளீராஜா..:)

அக்னி
14-03-2011, 03:01 PM
ஒரு தலைமுறைக்குள்
தலைவிதி மாறிப்போன
புத்தகங்கள்...

தொழில்நுட்பத்தின்
அசுர வளர்ச்சியில்
புத்தகங்கள்
அரூவங்களாகிப்போன
அவலம்...

தூங்கிவிழும்போது
தொட்டிலாகிய
அந்தப் புத்தகங்கள்
சுட்டெரிக்கப்படுவது
வரமா... சாபமா...

காகித வாசம்
கருகிய வாசமாய்...

மனம் நெருடும் கவிதை... பாராட்டு...

கலாசுரன்
21-03-2011, 03:56 AM
நன்றி அக்கினி ..[:)]