PDA

View Full Version : என் கடவுள் என்பது...



ரசிகன்
06-02-2011, 10:50 PM
எழுத படிக்க தெரியாத

ஒரு வாய்பேச முடியாதவனின்

காதல் கவிதை...


பொய் பேசாத

அன்பை ஊட்டும் தாயின்

ஒரு கை நிலாச்சோறு...


பேச ஆரம்பிக்காத

செல்லம் கொஞ்ச துடிக்கும்

ஒரு குழந்தையின்

எச்சில் முத்தம்....


என் கடவுள் என்பது

உங்களின் கேள்விக்குறி

எந்தன் காற்புள்ளி!

கலாசுரன்
07-02-2011, 03:49 AM
பொய் பேசாத

அன்பை ஊட்டும் தாயின்

ஒரு கை நிலாச்சோறு...


பேச ஆரம்பிக்காத

செல்லம் கொஞ்ச துடிக்கும்

ஒரு குழந்தையின்

எச்சில் முத்தம்....


இந்த வரிகளை சோகங்களோடு ஆழ்ந்து ரசித்தேன் ரசிகன் ..
ஏனனில் இவை ஞாபகங்களில் கூட எனக்குக் கிடைத்ததே இல்லை ..
மனதை ஆழத் தாக்கிதது உங்கள் வார்த்தைகள்

வாழ்த்துக்கள் ..:)

ராஜாராம்
07-02-2011, 03:54 AM
எழுத படிக்க தெரியாத

ஒரு வாய்பேச முடியாதவனின்

காதல் கவிதை...
பொய் பேசாத
அன்பை ஊட்டும் தாயின்

ஒரு கை நிலாச்சோறு...

பேச ஆரம்பிக்காத

செல்லம் கொஞ்ச துடிக்கும்

ஒரு குழந்தையின்

எச்சில் முத்தம்....



மிக மிக அருமையான படைப்பு.அபாரமான உவமைகளை சுட்டிக்காட்டி,அற்புதமாய் படைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

உமாமீனா
10-02-2011, 06:24 AM
சபாஷ்....ரசிகனின் ரசனைக்கு மீண்டும் ஒரு சபாஷ்

ஜானகி
10-02-2011, 06:54 AM
வடிக்கத் தெரியாத

பலரின் மனமொழியைப்

பிரதிபலிக்கும் கவிதை....

[ இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்]

ரசிகன்
10-02-2011, 12:55 PM
பொய் பேசாத

அன்பை ஊட்டும் தாயின்

ஒரு கை நிலாச்சோறு...


பேச ஆரம்பிக்காத

செல்லம் கொஞ்ச துடிக்கும்

ஒரு குழந்தையின்

எச்சில் முத்தம்....


இந்த வரிகளை சோகங்களோடு ஆழ்ந்து ரசித்தேன் ரசிகன் ..
ஏனனில் இவை ஞாபகங்களில் கூட எனக்குக் கிடைத்ததே இல்லை ..
மனதை ஆழத் தாக்கிதது உங்கள் வார்த்தைகள்

வாழ்த்துக்கள் ..:)
நன்றி
கலாசுரன்

எல்லாம் உங்க வழிகாட்டுதல் தான் :)

ரசிகன்
10-02-2011, 12:57 PM
மிக மிக அருமையான படைப்பு.அபாரமான உவமைகளை சுட்டிக்காட்டி,அற்புதமாய் படைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
நன்றி ராஜாராம்!:)

ரசிகன்
10-02-2011, 12:58 PM
சபாஷ்....ரசிகனின் ரசனைக்கு மீண்டும் ஒரு சபாஷ்
நன்றிகளை அடுக்கிக்கொண்டே போகலாம் போலிருக்கிறது மீனா... நன்றி :-):)

ரசிகன்
10-02-2011, 12:59 PM
வடிக்கத் தெரியாத

பலரின் மனமொழியைப்

பிரதிபலிக்கும் கவிதை....

[ இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்]
நட்சுனு இருக்கு :-)

lenram80
10-02-2011, 01:17 PM
உண்டியலில் பணம் போடுபவனா?
இல்லை
வழியில் நிற்கும் வறியவர்களிடம் பணம் போடுபவனா?

யார் கடவுள்?

எல்லாவற்றிலும் கடவுள் பார்ப்பது பக்தியா?
இல்லை
கோவிலில் மட்டும் கடவுள் பார்ப்பது பக்தியா?

அன்பே சிவம்!
சிவமே அன்பு!

வாழ்த்துகள் ரசிகன்!