PDA

View Full Version : இந்த சிறியவனின் ஆலோசனைராஜாராம்
03-02-2011, 10:26 AM
(நான் நமது மன்றத்தில் புதியவன்.மாபொரும் அறிஞர்களும்,கவிஞர்களும்,ஆன்மீக வழிகாட்டிகளும்,மற்றும்,பெரியோர்கள்,நிறைந்த இந்த "தமிழ் மன்றத்திற்கு",எனது சிறிய ஆலோசனை.)

"'பல்லாயிரம் கணக்கோர் ஒன்றுசேரும்,இந்த மன்றத்தில்,
பெரும் நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு,
{நலம்பெற பிரார்த்திப்போம்},என்று ஒருப் பகுதி ஒதுக்கி,
அந்தப் பகுதியில்,உயிருக்கு போராடும் உயிர்களுக்காக,அணைவரும் ஒருங்கினைந்து கூட்டுப் பிரார்தனை செய்யலாமே.

அந்தப் பகுதியை படித்துவிட்டு, நம் நண்பர்கள்,தங்கள் மனதை ஒருநிலைப் படுத்தி,அந்த வேண்டுதலைகளை,நம் இணையதளத்தில் எழுத்துவரிகளில்,இறைவனுக்கு கொண்டுசேர்களாமே.

(எனது ஆலோசனையில் தவறோ,அதிகப்பிரசங்கித்தனமோ,இருப்பின் மன்னிக்கவும்.)

அக்னி
03-02-2011, 11:48 AM
அனைவர் கருத்துக்களையும் கேட்டுச்,
சாதக பாதகங்களை அலசி முடிவெடுக்கலாம் என நினைக்கின்றேன்.

கொச்சைப்படுத்துவதாகிடக் கூடாது.

முரளிராஜா
03-02-2011, 01:45 PM
நல்ல ஆலோசனை தான் ராஜாராம், இருப்பினும் நண்பர் அக்னி அவர்கள் கூறியுள்ளது போல மற்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை.

வியாசன்
03-02-2011, 03:34 PM
நண்பரே இந்த இணைப்பை பாருங்கள்


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21668

கௌதமன்
03-02-2011, 04:06 PM
1) கூட்டுப் பிரார்த்தனை எவ்வாறு குணம் தரும் என்பது பற்றி யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

2) பாதிக்கப் பட்டவர்களுக்குக் குணம் கிடைக்குமென்றால் பிரார்த்தனைக்கு நான் எதிர்ப்பு இல்லை.

3) மன்றத்தில் ஆன்மீக வழிகாட்டியைத் தேடுகிறீர்கள். ஆன்மீகத்தை யாரும் வழிகாட்ட முடியாது.

இதுபற்றி மேலும் கருத்துக்கூறி புதிய சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை.

பாலகன்
03-02-2011, 04:16 PM
இது ஒரு மிகச்சிறந்த முயற்சி! நண்பரின் உயரிய எண்ணத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

ஜானகி
03-02-2011, 04:36 PM
சீரிய சிந்தனை... வரவேற்கத் தக்கது.
கூட்டுப் பிரார்த்தனையால் உண்டாகும் உயரிய எண்ண அலைகள் நிச்சயம் பயன் தரும். பிறர்க்காகத் தொண்டு செய்த சிறிய திருப்தியும் கிடைக்கும்.

அக்னி
03-02-2011, 08:50 PM
வியாசன் அவர்கள் சுட்டிய சுட்டி வழி தொடர்ந்து,
அறிஞரின் பதிவை மேற்கோளிடுகின்றேன்...


அவரவர் நம்பிக்கையில் வேண்டுவதற்கு உபயோகமான பகுதிதான்.

மதம் சம்பந்தப்பட்ட பகுதியில் இதை வைக்கலாம். முதலில் தனிபிரிவு ஆரம்பிக்கும் முன் பிராத்தனைகளை (பிராத்தனை-1, 2, 3 என்ற தலைப்புகளில்) ஆன்மீகம். (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=65) பகுதியில் கொடுப்போம். 10ற்கும் மேல் பிராத்தனைகள் வந்தவுடன் தனிப்பிரிவு ஆரம்பிக்கலாம்.

நிர்வாக குழு ஆலோசித்து விரைவில் முடிவு சொல்கிறோம்.


கௌதமன் அவர்களுக்கு...
இது தொடர்பான சர்ச்சை விவாதங்களைத் தள்ளிவைத்துவிட்டு,
நம்பிக்கை ஒருவருக்கு மட்டுமே என்றானாலும் கூட, ஆதரவளிப்போமே...

அமரன்
03-02-2011, 09:51 PM
கூட்டுப் பிரார்த்தனை நெஞ்சங்களை நெருங்க வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

எனக்காக இத்தனை பேர் என்ற எண்ணமே ஒருத்தனை எழ வைக்கும்.

முகமறியா ஒருவருக்காக உளமுருக வேண்டுவது எத்துணை உயர்பண்பு.

இவை போன்ற ஆன்மீக அம்சங்களைக் கொண்ட கூட்டுப்பிரார்த்தனை வரவேற்புக்குரியது, மதச்சாயம் பூசப்படாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்;

ஆனாலும் அறிஞர் சொன்னது போல ஆன்மீகப் பகுதியில் இப்போதைக்கு இதைச் செய்யலாம். மன்றத்தார் ஆர்வத்தைப் பார்த்து தேவை என்றால் தனிப்பிரிவு உருவாக்கலாம்.

நன்றி நண்பரே.

மன்றத்தில் ஆலோசனை சொல்ல தயங்க வேண்டாம். அஞ்ச வேண்டாம். தாராளமாக உங்கள் யோசனைகளை வழங்குங்கள்.

ராஜாராம்
04-02-2011, 05:05 AM
எனது ஆலோசனையயும் மதித்து,அதற்கு ஆதரவும்,கருத்துக்களும்,தெரிவித்த,
திரு அக்னி அவர்களுக்கும்,திரு முரளிராஜா அவர்களுக்கும்,திரு வியாசன் அவர்களுக்கும்,திரு கவுதம் அவர்களுக்கும்,திரு மகாபிரபு அவர்களுக்கும்,திருமதி ஜானகி அவர்களுக்கும்,திரு அமரன் அவர்களுக்கும்,மற்றும் மன்றத்தில் இணைந்துள்ள அணைத்து நண்பர்களுக்கும்,...என் நன்றிகள் பல.

உமாமீனா
04-02-2011, 06:00 AM
அருமையான யோசனை - இப்படி ஒரு சிந்தனை உமக்கு வந்ததே பெரிய விஷயம் - பாராட்டுக்கள்- நிர்வாகம் அதற்கான இடத்தை கொடுக்கும் என எதிர்பார்கிறேன்