PDA

View Full Version : எங்க ஊரு நக்கலு:1.(என் கல்யாணம்)



ராஜாராம்
03-02-2011, 06:26 AM
(திருமணம் என்பது ஒரு மனிதனது வாழ்வை அர்த்தமுடையதாக்கும் மங்களகாரியம்.அதை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படைப்பை நான் சித்தரிக்கவில்லை.அப்படி யாரேனும் கருதினால் ,அதற்கு என்னை மன்னிக்கவும்.)

(ஒரே இடத்தில் நடைபெறும்,இரண்டு தனித்தனி சம்பவங்களை,ஒன்றாக இணைத்து,கூறும்வண்ணம்,இந்த படைப்பை அமைத்திருக்கிறேன்)


(சம்பவம்1:-தனது நண்பர் ஒருவரின் மாமியார் இறந்துவிட்டதை அறிந்து,அதை ,ஒரு பொதுதொலைபேசியில் சம்மந்தப்பட்ட நண்பரிடம்,துக்கம் விசாரிக்கிறார்...ஒருவர். அவரது பெயர் "முரளிராஜா".
சம்பவம்2:-தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டத்தை,தனது நண்பர் ஒருவருக்கு,அதே பொதுதொலைபேசி மையத்தில் இருந்து,,மற்றொரு தொலைபேசியில் பேசுகிறார் மற்றொருவர்.அவரது பெயர் "ராஜாராம்".
இவர்கள் இருவரும் தனித்தனியே பேசுவதை,ஒன்றாய் ஒருங்கிணைத்து,......இது சித்தரிக்கப்பட்டுள்ளது)


ராஜாராம்:- "மாப்ளே....எனக்கு இன்னைக்கு,நிச்சயதார்த்தம்....டா..."

முரளிராஜா:- "அடப்பாவமே.....கேட்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குடா மச்சான்...இப்படி திடீருன்னு ஒரு அசம்பாவிதம்,அதுவும் உனக்கு நடந்திருக்க கூடாது..".

ராஜாராம்:- "பொண்ணோட அப்பா, அதான்!!...என் மாமனாரு....பெரிய டாக்டர் ....".

முரளிராஜா:- "பாவம் டா.....உன் மாமனாரு. இனிமே தான் ரொம்ப கஷ்ட்டபடப் போராரு....பாவம்".

ராஜாராம்:- "பொண்ணுக்கும்,அவங்க வீட்டுல உள்ளவங்க எல்லாருக்கும், என்னை ரொம்ப புடிச்சுபோச்சாம்...மாப்ளே!!!".

முரளிராஜா:- "கெட்டநேரம் வந்துட்டா,ஒட்டகத்துமேல ஏறி நின்னாலும் நாய் கடிக்கும்னு,சொல்லுவாங்க.அது உன் விஷயத்துல சரியாத்தான் டா இருக்கு..".

ராஜாராம்:- "நம்ம நண்பர்கள்,சுரேஷ்,கணேஷ்,எல்லாருக்கும் இதை சொல்லாப்போறேன்டா ...".

முரளிராஜா:- "மச்சான்....இது எங்க வீட்டு துக்ககாரியம் போலடா.அதனால,நானே நம்ம நண்பர்களுக்கெல்லாம் தகவல் தந்திடுறேன்.நீ அங்க ஆகவேண்டிய காரியத்தைப் பாரு மச்சான்..".

ராஜாராம்:- "அடுத்த மாசம்,10ம் தேதி,கல்யாணம்...".

முரளிராஜா:- "10க்கு, கண்டிப்பா நான் ,அங்க உன்கூட இருப்பேன்...".

ராஜாராம்:- "மாப்ளே,,...நீ,நம்ம நண்பர்கள் எல்லாரும்,கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வந்து,என்கூடவே இருக்கணும்...".

முரளிராஜா:- "உனக்கு ஒரு கஷ்டம்னா....உன்ன தனியாதவிக்க விடமாட்டோம்டா....கண்டிப்பா உனக்கு ஆறுதாலா உன்கூடவே இருப்போம்...நண்பேன்டா!!..."

ராஜாராம்:- "ஓக்கே....நான் போனனைக் கட் பன்னிடுறேன் டா மாப்ளே,...அப்பறம் நேரில பக்கும்போது விவரமா பேசிப்போம்..".

முரளிராஜா:- "ஓக்கே டா.நான் போனனை வெச்சுடுறேன்....நீ..அதயே நெனச்சு கவலப்பட்டு,உடம்ப கெடுத்துக்கொள்ளாத..தைரியமா இரு..."

முரளிராஜா
03-02-2011, 07:01 AM
ராஜாராம் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது,நல்ல கற்பனை.
ராஜாராம் உண்மையாவே உனக்கு கல்யாணம்னு என்கிட்ட சொன்னா இததானே சொல்லுவேன்.
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

M.Jagadeesan
03-02-2011, 07:03 AM
கற்பனை மிகவும் அபாரம்! தொடரட்டும் உங்கள் நக்கல்கள்!

கௌதமன்
03-02-2011, 05:04 PM
ராஜாராமும் ராஜாராமின் மனச்சாட்சியும் பேசுகிறது அப்படினே சொல்லியிருக்கலாமே :lachen001: எதுக்கு முரளிராஜாவை வம்பிழுக்கிறீர்கள்

ராஜாராம்
04-02-2011, 04:28 AM
எதுக்கு முரளிராஜாவை வம்பிழுக்கிறீர்கள்

அருமை நண்பர் கவுதமிற்கு,
தாங்கள் கூறியதுபோல்,'மனசாட்சி",பேசுவதுபோல் படைப்பை அமைத்திருந்தால்,நன்றாக இருந்திருக்கும்.அறிவுரைக்கு நன்றி.



மேலும்,
நண்பர் முரளிராஜாவின் பெயரை, படைப்பில் எழுதும்முன்,அவரது முழு அனுமதியையும் பெற்றபின்னரே, அதை வெளியிட்டுள்ளேன்.இருப்பினும்,தங்கள் கருத்திற்க்கு,தலைவணங்குகின்றேன்.

ராஜாராம்
04-02-2011, 04:32 AM
திரு ஜகதீசன் அவர்களுக்கு,
என் மானசீகமான நன்றிகள்.

ராஜாராம்
04-02-2011, 04:36 AM
ராஜாராம் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது,நல்ல கற்பனை.
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:


ந...ந....நன்றி....புரளிராசா...(மன்னிக்கவும்)...நன்றி...முரளிராசா

உமாமீனா
04-02-2011, 05:20 AM
உங்கள் கற்பனைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் -

உங்களின் வித்தியாசமான கற்பனைக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்

dhilipramki
04-02-2011, 06:03 AM
பலே பாண்டியா !!!:eek:

முகம்மது ஹுமாயூன்
04-02-2011, 11:50 AM
என்னை ஊக்குவித்து வழ்துககூறிய,
தோழி உமாமீனாவிற்கும்,நண்பர் திலீப்ராம்கி அவர்களுக்கும்,என் நன்றி கலந்த வணக்கங்கள்.

ராஜாராம்
04-02-2011, 12:00 PM
(எனது நண்பர் முகம்மதுஹுமாயூன் என்னுடய கணினியில் மெயில் சரிபார்த்துவிட்டு,லாகவுட் செய்யாமல் சென்றுவிட்டார்.நன்றி கூறிய நானும் அதனை கவனிக்கவில்லை.எனவே,எனது வாழ்து நன்றி அவரது பெயரிலேயே பதிவாகிவிட்டது)

இடையில் ஏற்பட்ட கோளாறுக்கு மன்னிக்கவும்.



என்னை மனமாரப் பாராட்டி,ஊக்குவித்த,தோழி உமாமீன அவர்களுக்கும்,
நண்பர் திலிப்ராம்கி அவர்களுக்கும்,
எனது நன்றிகலந்த வணக்கங்கள்.

Kalai_21
05-02-2011, 03:44 PM
நன்றாக இருக்கிறது.... கலக்குங்க.....

CDMSURESH
01-03-2011, 06:58 AM
SUPER.........CDM S

sarcharan
01-03-2011, 08:44 AM
ராஜாராம்,
உங்க அவதார பாத்தா இம்சை அரசன் 23ம் புலிகேசி பட டைட்டில் மாதிரியே இருக்கே :aetsch013::p

முரளிராஜா
01-03-2011, 09:15 AM
ராராவும் ஒரு இம்சைதான்

sarcharan
01-03-2011, 10:36 AM
ந...ந....நன்றி....புரளிராசா...(மன்னிக்கவும்)...நன்றி...முரளிராசா

நா (புரள) தழுக்க (நன்றி) (உ)(கு)ரைதுள்ளீர் போலும்:p