PDA

View Full Version : டாக்டர் கோதண்டராமன் கதைகள் - 2கௌதமன்
02-02-2011, 01:44 PM
டாக்டர் கோதண்டராமன் கதைகள் - 2

[டாக்டர் கோதண்டராமன் கதைகள் - 1 ஐ படித்து விட்டு இதைப் படியுங்கள்]

இன்னைக்கு நோயாளிங்க யாரும் இல்லை. சில சமயம் அப்படித்தான் இருக்கும். ஏன்னா உங்களுக்கேத் தெரியும் எங்கிட்ட எமர்ஜென்ஸி கேஸுன்னு யாரும் வரமாட்டாங்க. நான் உட்கார்ந்து சைக்கோ அனலிஸிஸ் புத்தகத்தை படிச்சிட்டு இருந்தேன். வரவேற்பரறையிலிருந்த டிவியில ஏதோ ஓடிட்டு இருந்தது. இண்டர்காமிலக் கூப்பிட்டு சத்ததைக் குறைக்கச் சொல்லிட்டு நான் புத்தகத்தில ஆழ்ந்துட்டேன். பொதுவா எனக்கு சைக்காலஜி சமபந்தப்பட்ட கதைப் புத்தகங்கள்னா படிக்கப் பிடிக்கும். ஷிட்னி ஸெல்டனோட தி நேக்கடு ஃபேஸுங்கிற கதையைப் படிச்சிருக்கீங்களா? அதில என்னைப் போல ஒரு சைக்கோ அனலிஸ்டு தான் ஹீரோ. அதுக்காக என்னையும் ஒரு ஹீரோவா நினைக்காதீங்க என் கதையில எப்போதும் நோயாளிங்கதான் ஹீரோஸ்.

படிச்சிட்டிருக்கும் போது வெளியே ஒரே சத்தம். திரும்பவும் டிவி சத்ததைக் கூட்டி வச்சுட்டாங்கன்னு நினைச்சு இண்டர்காமில கூப்பிட்டுக் கேட்டேன். ஏதோ ஒரு ஆள் சத்தம் போட்டுகிட்டு இருக்கான்னு ரிஸப்ஷன்ல சொன்னாங்க. சரி ஒரு கேஸு வந்திடுச்சின்னு நினைச்சுகிட்டேன். அவரை உள்ளே வரச்சொல்லுன்னு இண்டர் காமில சொல்லிட்டு வெயிட் பண்ணினேன்.

சுமார் ஆறடி உயரம் வாட்டசாட்டமா ஒரு ஆள் உள்ளே வந்தார். அவர உட்கார சொல்லிட்டு வந்த விஷயத்தைக் கேட்டேன். அவர் தன்னுடைய விபரங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அவருக்கு வயது சுமார் 40. அவர் ஒரு குத்துச் சண்டை வீரர். உள்ளூரில் அவர்தான் பிரபல சாம்பியன். பந்தய அடிப்படையில் அவர் போட்டிகளில் பங்கேற்பார். பெரும்பாலும் எல்லா போட்டியிலும் ஜெயிச்சுருவார். வாரத்தில குறைஞ்சது மூணு போட்டியாவது இருக்கும். அதனால எப்பவும் பிஸியாதான் இருப்பார்.
இப்ப சமீப காலமா அவருக்கு ஒரு பிரச்சனை. அதாவது படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. எப்பவும் போட்டி நினைப்பாவே இருக்குது. அதாவது குத்துசண்டை ரிங்குக்குள்ள எப்பவும் நிற்கற மாதிரி அவருக்கு நினைப்பு. கண்மூடினால் எதிரி தன்னை தாக்கியிருவானோ என்பதுதான் அவரோட பிரச்சனை. அதனால தூக்கம் வராம தவிப்பார். ஒரு டாக்டரை பார்த்திருக்கார். அவர் தூக்க மாத்திரையை பரிந்துரை செய்திருக்கிறார். இவர் அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்யக்கூடியவர். அதனால் இவர் தூக்க மாத்திரையைப் போட விருப்பப்படவில்லை. ஒரு வாரமாக இந்த பிரச்சனைத் தீவிரமா இருந்ததால போட்டியுலும் பங்கேற்க முடியாம இப்ப இங்க வந்திருக்காரு.

நான் அவருக்கு ஒரு யோசனையைச் சொன்னேன். அதாவது படுக்கப் போகிறதுக்கு 2 மணி நேரத்துக்கு முன்னாடியே இரவுச் சாப்பாடை முடிச்சுகிட்டு அமைதியா கொஞ்ச நேரம் இருக்க சொன்னேன். அப்புறம் தூக்கம் கொஞ்சம் வர மாதிரி இருக்கும் போது படுக்கையில படுத்து கண்களை மூடிப் படுக்கச் சொன்னேன். அதுக்குப் பிறகும் தூக்கம் வரவில்லைன்னா 1,2,3,..ன்னு எண்ணச் சொன்னேன். தன்னாலே தூக்கம் வரும் கொஞ்சம் முயற்சி பண்ணிப் பாருங்கன்னு சொல்லி அனுப்பினேன்.

அடுத்த நாள் காலையிலேயே அவர் வந்துட்டார். என்ன விஷயமுன்னு கேட்டேன். முன்னயாவது பரவாயில்லை, தூக்கம் வராம படுத்தாவது கிடந்தேன். இப்ப பாருங்க படுக்கக்கூட முடியலன்னு சொன்னார். ஏன் என்ன ஆச்சுன்னு கேட்டேன். 1,2,3..ன்னு எண்ணி 9 வரும்போது படீரென்னு எந்தரிச்சு நிற்கதான் தோணுது படுத்துக்கிடக்க தோணலன்னார்.

அவர் குத்துச்சண்டை வீரருன்னு அப்பத்தான் எனக்கு ஞாபகம் வந்தது. பாருங்க நானே அதை மறந்து அவர் பிரச்சனையை பெரிசாக்கிட்டேன். 9 எண்ணினதுக்கு பிறகும் படுத்துக் கிடந்தா குத்துச் சண்டை போட்டியில தோத்த மாதிரியில்லங்க அர்த்தம்.

அப்புறம் உள்ள கதையை நீங்களே ஊகிச்சுருவீங்களே, அதையும் நான் சொல்லிட்டு இருக்கணுமா என்ன? ஒரு வழியா இப்ப குணமாயிட்டார்.

மீண்டும் சந்திப்போம்..

கீதம்
03-02-2011, 03:48 AM
ரசிக்கவைத்த சிகிச்சை. பாராட்டுகள் கெளதமன்.

போகிற போக்கைப் பார்த்தால் டாக்டர் கோதண்டராமனும் ஒரு டாக்டரைப் பார்த்தல் நலமென்று தோணுது. பாருங்க, கதைப் பகுதியில் பதியவேண்டியதை கவிதைப் பகுதியில் பதிந்திருக்கார்.

கௌதமன்
03-02-2011, 03:20 PM
போகிற போக்கைப் பார்த்தால் டாக்டர் கோதண்டராமனும் ஒரு டாக்டரைப் பார்த்தல் நலமென்று தோணுது. பாருங்க, கதைப் பகுதியில் பதியவேண்டியதை கவிதைப் பகுதியில் பதிந்திருக்கார்.


அப்படியா எனக்குத் தெரியல்லையே!

அவருக்குத் தெரியாமல் யாராவது அவரைக் கடத்தி இங்கக் கொண்டு வந்துட்டாங்களா?

ஒரு வேளை அவருக்குத் தெரிஞ்சவங்க கவிதை எழுதுறாங்கான்னு அவரைப் பார்க்கப் போயிருப்பாங்களோ?

கீதம்
03-02-2011, 10:56 PM
அப்படியா எனக்குத் தெரியல்லையே!

அவருக்குத் தெரியாமல் யாராவது அவரைக் கடத்தி இங்கக் கொண்டு வந்துட்டாங்களா?

ஒரு வேளை அவருக்குத் தெரிஞ்சவங்க கவிதை எழுதுறாங்கான்னு அவரைப் பார்க்கப் போயிருப்பாங்களோ?

டாக்டர் கோதண்டராமனுக்கு நோயாளிகளின் வரத்து குறைவா? அதனால் இப்படியெல்லாம் மாற்றுவழியில் வலைவீசிப் பிடிக்க முயல்கிறாரா? நேற்று அங்கிருந்தவர் இன்று இங்கிருக்கிறார். என் கண்ணே என்னை ஏமாற்றுமா? ஐயோ... பிதற்றத் தொடங்கிவிட்டேனா? :icon_hmm:

கௌதமன்
04-02-2011, 12:45 AM
நேற்று அங்கிருந்தவர் இன்று இங்கிருக்கிறார். என் கண்ணே என்னை ஏமாற்றுமா? ஐயோ... பிதற்றத் தொடங்கிவிட்டேனா? :icon_hmm:

நண்பர் கீதத்துக்கு டாக்டர் சனிக்கிழமை காலை 10 மணிக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்துருகிறார். :D