PDA

View Full Version : ஸ்பெக்ட்ரம் முறைகேடு : மாஜி அமைச்சர் ராஜா கைது

அருள்
02-02-2011, 10:42 AM
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய தொலைதொடர்பு துறை மாஜி மத்திய அமைச்சர் ராஜா டில்லியில் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ., அதிகாரிகள் ராஜாவை கைது செய்துள்ளனர். அவருடன் தொலைதொடர்பு துறை மாஜி அதிகாரிகள் ஆர்.கே.சந்தோலியா , பெஹீரியா, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை அளித்தது. இதனை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பு அலைகளால் ராஜா, அமைச்சர் பதவியை கடந்த நவம்பர் 14ம் தேதியன்று ராஜினாமா செய்தார். ராஜா வகித்து வந்த பதவி கபில் சிபலிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ராஜா எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வந்தது. எதிர்பார்க்கப்பட்டது போல் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜினாமா, ரெய்டு, கைது : கண்ணுக்குத் தெரியாத ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு நாட்டையே உலுக்கியது. நாட்டுக்கு பேரிழப்பை எற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமெண்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி எதிர்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால், பார்லிமென்ட் குளிர் கால கூட்டத் தொடர் முற்றிலுமாக முடங்கியது. எதிர்ப்பு வலுக்கவே பதவியை ராஜினாமா செய்தார் ராஜா. இருப்பினும் தான் தவறு ஏதும் செய்யவில்லை என விளக்கங்களையும், பேட்டிகளையும் அளித்து வந்தார்.

அப்போது தான் ரெய்டு நடவடிக்கை தொடங்கியது. முதல் முறையாக கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று *டில்லி மற்றும் சென்னை, பெரம்பலூரில் இருக்கும் ராஜாவின் வீடுகள், அவரது உறவினர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது.

ராஜா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவரது தனிச்செயலர் ஆர்.கே. சண்டோலியா, மாஜி செயலர் சித்தார்த்த பெஹூரியா, தொலைதொடர்பு துறை உறுப்பினர் ஸ்ரீதர், துணை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது. ஆனால் ரெய்டு வெறும் கண்துடைப்புதான் என எதிர்கட்சிகள் ஒருமித்த குரல் எழுப்பின.

ராஜினாமா, சுப்ரீம்கோர்ட்டின் கண்டிப்பு என அடுத்தடுத்து நெருக்கடிகள் ராஜாவுக்கு வலுத்து வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு சர்ச்சையால் தி.மு.க., வுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாக கூறி கட்சியின் மூத்த பிரமுகர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். அமைச்சர் அழகிரி, தனது தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாயின. பின்னர் அதனை முதல்வர் கருணாநிதி மறுத்தார். இருப்பினும் ராஜா மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வரும் சட்ட மன்ற தேர்தலை சந்திக்க ஏதுவாக இருக்கும் என்று கட்சியினரிடையே பேச்சு நிலவியது.இந்நிலையில் தான் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., கொண்டாட்டம்: அ.தி.மு.க., வினர் ராஜா கைதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க., வினர் ராஜா கைதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாஞ்சில் த.க.ஜெய்
02-02-2011, 11:01 AM
கைதினூடே அரசிற்கு ஏற்பட்ட இழப்பினை மீண்டும் பெற்றால் நாட்டுக்கு நன்று ஒருவேளை இது சாத்தியப்பட்டால் ....

முரளிராஜா
02-02-2011, 11:15 AM
இது எதிர்பார்க்கபட்ட ஒன்றுதான் என்றாலும் நண்பர் ஜெய் சொன்னது போல அத்தனை கோடியும் கிடைத்தால் நாடே நண்மை பெறும் அல்லவா.ஆனால் அதற்க்கெல்லாம் இங்கு வாய்ப்பு இல்லை. அவர் அரசியல் நெருக்கடியின் காரணமாகவே கைது செய்யபட்டுள்ளார்.

விக்ரம்
02-02-2011, 04:17 PM
எங்க நம்ம Pro-Spectrum மக்க யாரும் கருத்து பதிக்க காணோம்... ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடக்கவில்லை என்பது போல நாளொரு திரியும், அதற்கு சப்போர்ட்டாக பொழுதொரு பதிவும் இட்ட நண்பர்கள் எங்கப்பா......???? எந்தவொரு கட்சிக்கும் சப்போர்ட் செய்யுங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் கட்சிக்கும், தலைவர்களுக்கும் அடிமையாக இருக்காதீர்கள்.

வியாசன்
02-02-2011, 06:01 PM

இதுதானே வேண்டாமென்கிறது. அது ஊழலில்லை வெறும் வருவாய் இழப்புதான். இதை போய் பெரிது படுத்துவதா? இப்படித்தான் சொன்னார்கள். நீங்கள் ஊழல் என்று பெரிதுபடுத்துவதா?
மோதகம் என்றாலும் கொழுக்கட்டை என்றாலும் சுவை ஒன்றுதான்.

பிரேம்
03-02-2011, 12:44 AM
இது..சும்மா வெறும் கண்துடைப்பு மட்டுமே...ஏன் கலைஞர் டெல்லி போயிட்டு வந்தவுடனே கைது பண்ணனும்..அதற்கு முன்னே கைது பண்ணி இருக்கலாமே..அது தெரியாமல் அ தி மு க காரர்கள் பட்டாசு வெடித்து தி மு க காரர்களோட சண்டை போடா பார்க்குறாங்க..

விக்ரம்
03-02-2011, 04:26 AM

என்ன சொல்ல வர்றீங்க...
இந்தக் கைது மூலமா ராசாவோட மனைவி சங்கடப்பட்டாங்களோ என்னவோ, ஆனா அவரோட துணைவி ரெண்டு நாளா பச்சத் தண்ணிகூட பல்லுல படாம பாடா படுறாங்க தெரியுமா?

sarcharan
03-02-2011, 05:40 AM
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா......

இன்பா
03-02-2011, 09:21 AM
பாவம் ராஜா :)

ஏன் அவர் மட்டுமே கைது செய்யப்பட்டார் ?

அவர் கைது செய்யப் பட்டாலும் கூட்டணி தொடருமாமே ?

அப்போ அவர் கட்சியிலிருந்து தூக்கிடுவாய்ங்களா ?

ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்க வில்லை இருந்தாலும் கைது செய்கிறார்கள் என்றால்.. நெருப்பில்லாமல் புகையுதோ ?

தலை சுத்துதப்பா... எனக்கில்லை

aren
03-02-2011, 10:36 AM
இதையெல்லாம் மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டு உங்கள் நேரத்தை விரயப்படுத்தவேண்டாம். காரணம், இப்படி ராஜா கைது செய்யப்படாவிட்டால் இதையே அதிமுக தன்னுடைய பிரசாரமாக எடுத்துக்கொள்ளும், அதுக்கு செக் வைக்கவே இந்த கைது நாடகம்.

ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் தீர்ப்பை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிவித்து இந்த ராஜா பிரச்சனையை அதிமுக பேச முடியாமல் செய்துவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

ராஜா அவர்களை கைது செய்துள்ளதால் காங்கிரஸும் திமுகவும் ஊழல் செய்பவர்கள் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நினைப்பை மக்களுக்கு தேர்தலுக்கு முன்பாக ஏற்படுத்திவிடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

இன்னும் நேரம் இருக்கிறது, என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

dhilipramki
03-02-2011, 01:04 PM
எங்க நம்ம Pro-Spectrum மக்க யாரும் கருத்து பதிக்க காணோம்... ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடக்கவில்லை என்பது போல நாளொரு திரியும், அதற்கு சப்போர்ட்டாக பொழுதொரு பதிவும் இட்ட நண்பர்கள் எங்கப்பா......???? எந்தவொரு கட்சிக்கும் சப்போர்ட் செய்யுங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் கட்சிக்கும், தலைவர்களுக்கும் அடிமையாக இருக்காதீர்கள்.

உண்மை விழங்கும் வரை காத்து இருப்போம்; என்று தான் உள்ளேன் ஒழிய, வாயிப் பொத்தி இல்லை தெரியட்டும். கைது பண்ணிய அனைவரும் குற்ற வாளிகள் அல்ல

விக்ரம்
04-02-2011, 02:35 PM
உண்மை விழங்கும் வரை காத்து இருப்போம்; என்று தான் உள்ளேன் ஒழிய, வாயிப் பொத்தி இல்லை தெரியட்டும். கைது பண்ணிய அனைவரும் குற்ற வாளிகள் அல்ல
டான்சி மற்றும் அதிக சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா குற்றம் புரியவில்லை என்று சொல்ல வருகிறீர்களா? ஜெயலலிதாவும், ராசா & கோ -வும் கிரிமினல்ஸ் இல்லை என்கிறீர்களா?

அதெப்படிங்க, எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கீங்க.. ஒருவேளை ராசா குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால் (Even from Supreme Court after 10 / 20 years) என்ன சொல்வீங்க தெரியுமா? நீதி தேவதை மயங்கிவிட்டால் என்று சொல்வீர்கள் (அ) எப்படி சொல்வீர்கள் கொஞ்சம் சொல்லிக் காமிங்க dhilipramki, உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்..

DB reality -> Cineyug -> கலைஞர் தொலைக்காட்சி deal பற்றி உங்க கருத்து கொஞ்சம் சொல்லுங்களேன்.

உமாமீனா
06-02-2011, 05:46 AM
எல்லாம் தேர்தல் நாடகம் - இதுக்கு மேல சொல்வதற்கு ஒன்றுமே இல்லை - மக்கள் ஒட்டு மூலம் நிருபிக்கட்டும் - அடுத்து மீண்டும் இதே ஆட்சிதான் எள்ளளவும் சந்தேகமே இல்லை -

கருணாநிதி வேட்டிக்கட்டிய ஜெயலலிதா

ஜெயலலிதா புடவைகட்டிய கருணாநிதி

ஆக மொத்தம் யார் வந்தாலும் அழகிரி ஸ்டாலின் கனிமொழி தயாநிதி ராசாத்தியம்மாள் கும்பலைப்போல சசிகலா கும்பல் நாட்டையே மொட்டை அடித்து விடும்

மொத்தத்தில் இளிச்சவாயன் தமிழன் - உலகெங்கும் உள்ள தமிழனின் சாபகேடு

விக்ரம்
06-02-2011, 06:46 AM
யார் வந்தாலும் அழகிரி ஸ்டாலின் கனிமொழி தயாநிதி ராசாத்தியம்மாள் கும்பலைப்போல சசிகலா கும்பல் நாட்டையே மொட்டை அடித்து விடும்

மொத்தத்தில் இளிச்சவாயன் தமிழன் - உலகெங்கும் உள்ள தமிழனின் சாபகேடு
விஜயகாந்த் வந்தா என்ன ஆகும்னு சொல்லாம விட்டுட்டீங்க.
விஜயகாந்த் மச்சான் சுதீஷ், விஜயகாந்த் மனைவி பிரேமலதா போன்றோரையும் டீல் ல விட்டுடாதீங்க..

பொதுமக்களாகிய நமக்கு தேவை என்னங்க? வெரும் வாய மெல்லுறதுக்கு பதிலா மெல்ல எள்ளோ, அவுளோ வேணும்.

M.Jagadeesan
06-02-2011, 07:44 AM
எல்லாம் தேர்தல் நாடகம் - இதுக்கு மேல சொல்வதற்கு ஒன்றுமே இல்லை - மக்கள் ஒட்டு மூலம் நிருபிக்கட்டும் - அடுத்து மீண்டும் இதே ஆட்சிதான் எள்ளளவும் சந்தேகமே இல்லை -

கருணாநிதி வேட்டிக்கட்டிய ஜெயலலிதா

ஜெயலலிதா புடவைகட்டிய கருணாநிதி

ஆக மொத்தம் யார் வந்தாலும் அழகிரி ஸ்டாலின் கனிமொழி தயாநிதி ராசாத்தியம்மாள் கும்பலைப்போல சசிகலா கும்பல் நாட்டையே மொட்டை அடித்து விடும்

மொத்தத்தில் இளிச்சவாயன் தமிழன் - உலகெங்கும் உள்ள தமிழனின் சாபகேடு

ஆக இனிமேல் மொட்டை போடுவதற்கு, பழனி, திருப்பதி என்று போகத் தேவை
யில்லை என்று சொல்கிறீர்கள்!

நாஞ்சில் த.க.ஜெய்
06-02-2011, 10:11 AM
போடுறது மொட்டை அத யாரு போட்டா என்ன ...

அமரன்
06-02-2011, 10:52 AM
ஆக இனிமேல் மொட்டை போடுவதற்கு, பழனி, திருப்பதி என்று போகத் தேவை
யில்லை என்று சொல்கிறீர்கள்!

மொட்டை போடாமல் முடி முளைக்காது என்றும் சொல்லலாம்.

sarcharan
07-02-2011, 10:54 AM
மொத்தத்தில் இளிச்சவாயன் தமிழன் - உலகெங்கும் உள்ள தமிழனின் சாபகேடு

ஹ ஹா ஹா... உண்மை... நக்கலுடன் உரைத்தது நயம்...