PDA

View Full Version : டாக்டர் கோதண்டராமன் கதைகள் - 1



கௌதமன்
01-02-2011, 01:19 PM
டாக்டர் கோதண்டராமன் கதைகள் - 1

[முதல் கதை கொஞ்சம் சுமார் தான் (ரொம்பவே) ஆனா பாருங்க கதை சொல்வது கௌதமன் இல்லீங்க டாக்டர் கோதண்டராமன்ங்க. அதனால கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்]

டாகடர் கோதண்டராமனை உங்களுக்குத் தெரியுமா?. நான் தான் அது. ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட், ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் போல டாகடர்ஸ் கிட்ட போற நோயாளிங்க எல்லாம் அந்தந்த டாக்டர்ஸை புகழ்ந்தோ அல்லது திட்டியோ வெளியில பேசுவாங்க. அதுவே அவங்களுக்கு ஒரு விளம்பரமா இருக்கும் இருக்கும். ஆனா எனக்கு அந்த கவலையெல்லாம் இல்லை. பொதுவா எங்கிட்ட வந்து குணமான யாரும் அந்த டாகடர்கிட்ட போனேன் எனக்கு நல்ல குணம் கிடைச்சதுன்னு மனசார வெளியே சொல்ல மாட்டாங்க குணமாகாதவங்களும் சொல்ல மாட்டாங்க. அப்படிப்பட்ட மருத்துவம் நான் பாக்க்றேன். அதுக்காக மனசை எங்கேயோ அலைபாய விடாதீங்க. நான் ஒரு மனநல மருத்துவன். என்கிட்ட வந்த விஷயத்த வெளியே யாருகிட்டயும் சொல்ல வேண்டாமுன்னு நானே நோயாளிங்க கிட்ட சொல்லிருவேன். ஏன்னா மனநல மருத்துவ சிகிட்சை எடுத்தவங்களை இந்த ஊர் ஒரு காலத்திலயும் நல்ல விதமா சொன்னதில்லீங்க. அவன் நல்லா ஆயிட்டாலும் ஊரில உள்ளவங்க திரும்பவும் என்கிட்ட சிகிட்சை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கியிருவாங்க.


நான் தனியா கிளினிக் போட்டிருந்தாலும், நகரிலுள்ள பெரும்பாலும் எல்லா பெரிய ஆஸ்பிட்டலிலும் நான் தான் கன்சல்டண்ட். பொதுவாக நோயாளிகளுங்களுக்கு நோயைக் காட்டிலும் நோய் பற்றிய பயம் தான் அதிகமா இருக்கும். அதுவும் ஒவ்வொரு நோயாளியைப் பத்தி ஒவ்வோரு கதையே எழுதலாம்.


என்கிட்ட சிகிட்சை எடுத்தவங்களைப் பத்தி நான் வெளியே சொல்லக் கூடாது. ஆனாலும் பெயரச் சொல்லாம பொதுவா அவங்களைப் பத்தி சொல்றேன். ஏன்னா அவங்களைப் போல உள்ளவங்களை நீங்களும் வாழ்க்கையில உங்களுக்கு தெரிஞ்சவங்களாகவோ, சொந்தக்காரங்களாகவோ அல்லது நண்பர்களாவோ சந்திக்கலாம் இல்லையா?


ஒரு நோயாளி இப்படிதான், எனக்கு தெரிஞ்ச டாகடர் ஒருவர் ரெஃபர் பண்ணியிருந்தாரு. அவருக்கு என்ன பிரச்சனைனா உலகத்திலுள்ள நோய்கள் எல்லாம் அவருக்கு இருக்கிறதா நினைச்சுக்குவாரு. எல்லா உறுப்புகளிலும் பிரச்சனை இருக்குன்னு இவரே டாக்டரிடம் வற்புறுத்தி எல்லா டெஸ்டுகளும் எடுக்க சொல்லுவாரு. ஒண்ணுமில்ல நல்லாத்தான் இருக்கீங்கன்னு டாக்டர் சொன்னா, அந்த டாக்டர் சரியில்லை அவருக்கு ஒரு மண்ணும் தெரியாதுன்னு வேற டாக்டர் கிட்ட போவாரு. இப்படியே நாலு டாகடர்கிட்ட காட்டிட்டு கடைசியா என் நண்பர்கிட்ட வந்திருக்காரு. அவரும் இவரைப் புரிஞ்சுகிட்டு ஆமா உஙகளுக்கு நிறைய பிரச்சனை இருக்கு. முதல்ல டாக்டர் கோதண்டராமனை பார்த்துகிட்டு வந்து இங்க வாங்கன்னு சொல்லியிருகாரு. சரின்னு நோயாளியும் என் கிட்ட வந்தாரு.


வந்தவருக்கு ஒரு 50 வயசு இருக்கும். பார்க்க நல்லா ஆரோக்கியமாத்தான் இருந்தாரு. வந்தவர் பேசிகிட்டே இருந்தாரு. நான் அவரை நல்லா கவனிச்சுகிட்டே இருந்தேன், நம்ம வேலையே அதுதானே. தனக்குள்ள பிரச்சனையை யாரும் கேட்க மாட்டேங்கிறாங்கங்க, டாக்டர்கிட்ட போனா அவரும் ஒண்ணுமில்லைன்னு சொல்றாரு அப்படீன்னு சொன்னாரு. சரி உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டேன். ஹார்ட்டுல பிரச்சனை, கிட்னில பிரச்சனை, அதில பிரச்சனை, இதில பிரச்சனைன்னு மொத்தத்தில டோட்டலா பிரசசனைன்னு சொன்னார். அதிலிங்க குறிப்பா ஹார்ட்டுல என்ன பிரச்சனைன்னு கேட்டா. அது தெரியாதுங்க ஆனா ஹார்ட்டுல பிரச்சனை இருக்குங்கன்னு சொன்னார். அது எப்படி உங்களுக்கு தெரியும்னு கேட்டா, புத்தகத்தில போட்டிருந்ததுன்னு சொன்னார். என்ன புத்தகமுன்னு கேட்டேன். சுமார் 10 ஆரோக்கியம் சம்பந்தமான புத்தகங்களை வரிசையா சொன்னாரு. இதெல்லாம் ரெகுலரா வாசிப்பீங்களான்னு கேட்டேன். ஆமா வாசிப்பேன். உடல் ஆரோக்கியம் வாழ்க்கையிலே ரொம்ப முக்கியமில்லையா என்கிட்டேயே கேட்டாரு.


அவரோட பிரச்சனை என்னன்னு புரிய ஆரம்பிச்சது. ஆரோக்கியம் சம்பந்தமான பல புத்தகங்களில பொதுவா இந்தந்த நோய்க்கு இன்னின்ன அறிகுறிகளுன்னு நிறைய போட்டிருப்பாங்க. இவர் அதையெல்லாம் படிச்சிட்டு முதல்ல அந்த அறிகுறிகளெல்லாம் தனக்கிருப்பதா நினைச்சுக்குவாரு. அப்புறம் அதற்கு என்ன நோய் காரணமாக இருக்கும் என்பதையும் புத்தகம் மூலமா படிச்சு தெரிஞ்சு வச்சிக்குவாரு. அப்புறம் ஒவ்வொரு டாக்டாரா பார்த்து எனக்கு பிரச்சனை இருக்கு வைத்தியம் பண்ணுங்கன்னு சொல்றது. அவங்க வீட்டுல உள்ளவங்க இவரை ஆரம்பத்தில கொஞ்சம் சீரியஸா எடுத்து அப்புறம் கண்டுக்காம விட்டுட்டாங்க.


அவரோட உண்மையான பிரச்சனை தெரிஞ்ச பிறகு அவருக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கணுமோ அதைக் கொடுத்தேன். இப்ப அவர் அந்த புத்தகத்தையெல்லாம் படிக்கிறதில்லை. இதை எதுக்கு சொல்றேன்னா, ஆயிரம் புத்தகத்தில ஆயிரம் விஷயம் போட்டிருக்கலாம். ஆனா நமக்கு எது தேவையோ அதைத்தான் எடுத்துக்கணும். அப்படி ஒரு மனப்பக்குவம் இல்லாம எல்லாத்தையும் நம்புனீங்கன்னா அந்த மாதிரி புத்தகங்களே படிக்காதீங்க. பெரியவங்க யாராவது வீட்டிலே இருந்தா இந்த மாதிரி புத்தகங்களை வீட்டிலே வாங்கிக் கொடுக்காதீங்க. இல்லை புத்தகம் படிச்சு இப்படி சந்தேகத்தோடு தானும் குழம்பி அடுத்தவங்களையும் குழப்புவேன்னு சொன்னா, அங்கேயிங்கே சுத்தி நேரத்தை வேஸ்ட் பண்ணாம டைரக்டா எங்கிட்ட வாங்க. இப்பவே ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சிருவோம்.

இந்தக் கதையை இத்தோடு முடிச்சிக்கிறேன். ஆனா அப்பப்ப வேற வேற கதைகளோடு உங்களை மீட் பண்ணுவேன். இப்ப போயிட்டு வரேன்.

ஜனகன்
01-02-2011, 09:30 PM
கௌதமன், கதை சூப்பர்,வாழ்த்துக்கள்.

ஆமா..............கோதண்டராமன் மீண்டும் கதை சொல்ல வருவாரா?

sarcharan
02-02-2011, 08:30 AM
இப்ப போறேன் நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்னு சொன்னிங்க....

நீங்களும் கோதண்டராமனை பாக்க போய்டீங்களா?:D:D

நாஞ்சில் த.க.ஜெய்
02-02-2011, 11:36 AM
உங்கள் கதையா நண்பரே ! எழுத்து நடை நன்றாக உள்ளது .தொடரட்டும்

ரங்கராஜன்
03-02-2011, 02:06 AM
மூன்றாவது மனிதனின் பார்வையில் இருந்து சொல்லப்படும் ஒருவனின் சுயசரிதம் அல்லது வாழ்க்கை சொல்லப்படும் நடை மீது எப்பவுமே எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு....

இதே பாணியை பல இடங்களில் சுஜாதா கையாண்டு இருப்பார்.....

முதல் கதை என்பதை நம்பமுடியவில்லை கௌதமன் வாழ்த்துக்கள்.....

ஒரு சின்ன யோசனை, இதை தனித் தனி சிறுகதைகளாக எழுதாமல்,,,, நீங்கள் யோசித்து வைத்திருக்கும் கதைகளுக்கு பாலம் அமைத்து தொடர்கதையாக எழுதலாம்...... அல்லது சிறுகதையாக எழுதினால் தான் நன்றாக இருக்கும் என்று விரும்பினால்.... இன்னும் கொஞ்சம் சம்பவங்களை சேர்த்து எழுதலாம்......

இது என் கருத்து... தப்பாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்... வாழ்த்துக்கள்...

dellas
03-02-2011, 08:53 AM
உளவியல் சார்ந்த கதைகள் எழுதும்போது கவனம் தேவை . நன்றாகவே எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.

கௌதமன்
03-02-2011, 03:43 PM
இதே பாணியை பல இடங்களில் சுஜாதா கையாண்டு இருப்பார்.....

முதல் கதை என்பதை நம்பமுடியவில்லை கௌதமன் வாழ்த்துக்கள்.....

ஒரு சின்ன யோசனை, இதை தனித் தனி சிறுகதைகளாக எழுதாமல்,,,, நீங்கள் யோசித்து வைத்திருக்கும் கதைகளுக்கு பாலம் அமைத்து தொடர்கதையாக எழுதலாம்...... அல்லது சிறுகதையாக எழுதினால் தான் நன்றாக இருக்கும் என்று விரும்பினால்.... இன்னும் கொஞ்சம் சம்பவங்களை சேர்த்து எழுதலாம்......

இது என் கருத்து... தப்பாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்... வாழ்த்துக்கள்...

சுஜாதாதான் எனக்கு ஆதர்ஸம். முதன் முதலில் எழுத ஆரம்பிப்பவர்கள் (எது வேண்டுமானாலும்) அவரின் பாதிப்பு இல்லாமல் எழுத முடியாது. சுஜாதாவின் எழுத்துகளைப் படிக்காதவர்களுக்கும் அவரது பாதிப்பு இருக்கும். (அது எப்படி யாராவது சொல்லுங்க பார்ப்போம்)

இது என் முதல் கதை இல்லை. (முதல்ல இது கதைதானாவென்று எனக்கே தெரியவில்லை. ஏதோ தோணினதை எழுதினேன்). வேறு பலவும் எழுதியிருக்கிறேன். (அதில் எனக்குப் பிடித்தது ’இவன் அவன் தானா ?’ )

வாழ்த்துகளுக்கு நன்றி!



கௌதமன், கதை சூப்பர்,வாழ்த்துக்கள்.

ஆமா..............கோதண்டராமன் மீண்டும் கதை சொல்ல வருவாரா?

நன்றி ! பிஸியில்லைன்னா வருவாருன்னு நானும் நம்பறேன்.


இப்ப போறேன் நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்னு சொன்னிங்க....

நீங்களும் கோதண்டராமனை பாக்க போய்டீங்களா?:D:D

மீட் பண்றேன்னு சொன்னது டாக்டர் தான் நானில்லை.


உங்கள் கதையா நண்பரே ! எழுத்து நடை நன்றாக உள்ளது .தொடரட்டும்

அப்படி சந்தேகமல்லாம் படாதீங்க நான் எழுதனதுதான். ஏற்கனவே எனக்கு கொஞ்சம் தலைக்கனம் உண்டு.இப்படி சொன்னீங்கன்னா விழா நடத்தி புத்தகங்கள் வெளியீடு செய்திருவேன். அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது.



உளவியல் சார்ந்த கதைகள் எழுதும்போது கவனம் தேவை . நன்றாகவே எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.

தலைவா! ஒரு விண்ணப்பம். உளவியல் கதைகளா இதைப் பார்க்காதீங்க. வெறும் உளறல் ரேஞ்சுல பார்த்தாப் போதும். நான் ஒரு டம்மி பீஸ். துப்பறியும் சாம்பு கதையைப் படிச்சுகிட்டு நானும் ஒரு சி.ஐ.டி. மாதிரி ஃபீல் பண்ணினா எப்படி இருக்கும். (தேவன் கதைகளைப் படிச்சிருக்கீங்களா? படிச்சா அந்த ஜோர்ல நீங்க எழுதுறதெல்லாம் கூட ஒரே காமெடியா இருக்கும்)
அப்புறம் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.