PDA

View Full Version : பத்தினத்திட்டா தம்புராட்டிCEN Mark
01-02-2011, 12:50 PM
டீ ஸ்டாலில் டீ அருந்திக்கொண்டிருந்த வினய், அபிஷேக், டீக்கு சில்லரையை கொடுத்துட்டு தோளில் கைபோட்டு நடந்து செல்கிறார்கள்.

மச்சி. இந்த லீவுல பத்தினத்திட்டா போலாமா? - வினய்
பத்தினத்திட்டாவா? அது எங்கடா இருக்கு? அதுயென்ன பேரு பத்தினத்திட்டான்னு? நம்ம ஊரு பேருமாதிரி தெரியலையே? புதுசா இருக்கு! அங்க அப்படி என்னடா விஷேஷம்? - அபிஷேக்
சொல்றேன். பத்தினத்திட்டா கேரளாவில இருக்கு. அங்க உள்ள ஒரு (தம்புராட்டி)கோவில். பெண் தெய்வந்தான். ஆனா கேட்டது பலிக்கும்.வர்றியா? - வினய்
மக்கா! நீ லவ் பன்றே! அங்க போரதுக்கு ஒரு காரணம் இருக்கு. நான் எதுக்கு? அதுவும் சாமின்னாலே எனக்கு அலர்ஜி. அதென்னடா தம்புராட்டின்னு. சகிலா பட டைட்டில் மாதிரி.– அபி
பாத்தியா. தெய்வ நிந்தனை செய்யாதே. பயங்கர சக்திவாய்ந்ததுபா? - வினய்
அப்படியா அப்ப நான் வரலேபா! - அபி
இதான் ப்ரண்ட்ஷிப்பா. ஒரு கம்பெனிக்காச்சும் வரக்கூடாதா? யெடம் சூப்பரா இருக்கும். பார்த்தவுடனேயே பிடிச்சுடும். போக வர என் செலவு. இப்ப ஒகேயா? – வினய்
அதுஇல்லேடா. வீட்டுலே ஒரு வார்த்தை கேக்கனும். மொதல்ல அவங்க விடுவாங்கலான்னு சந்தேகம். நைட்டுல போன்ல சொல்றேனே. – அபி
சரி. ஆனா பாசிட்டிவான பதிலைச்சொல்லு. – வினய்

இரவு. அபிஷேக் மொபைல் சினுங்கியது.
யென்னடா? பதிலைக்கானோம். – வினய்
இல்லடா. வீட்டுல சின்ன ப்ராப்ளம். அதான் யெப்படி கேக்கிறதுன்னு? – அபி
நான் வேனா வீட்டுல கேக்கவா? – வினய்
இல்ல.இல்ல. யெதாவது பொய் சொல்லிட்டு வர்றேன். – அபி.
சரி. காலையில அஞ்சுமணிக்கெல்லாம் பஸ்ஸ்டாண்ட் பக்கம் வந்துடு. ஒரு மாத்து ட்ரெஸ், டவெல் மட்டும் போதும்.சரியா? – வினய்
சரி.- அபி

பேருந்து நாகர்கொவிலிலிருந்து புறபட்டது. பல விஷயங்களையும் விவாதித்து பேருந்துடன் விரைந்தார்கள். வழி நெடுக உயர்ந்த மரங்கள். பச்சை பசேலென்ற சமவெளிகள். வளைந்து நெளியும் பாதைகள். இயற்கையின் படைப்பினை கண்களில் பருகி, வாயைப்பிளந்தார்கள். வினய் இந்த பயணத்திற்க்குப் பழக்கப்பட்டவன்போல் இருந்தான். அபி ஒரு மூன்று வருடத்திற்கு முன்புதான் திருச்சிக்குப் பக்கத்தில் திருக்கோவிலூரிலிருந்து நாகர்கொவில் வந்து செட்டிலாகிருந்தான். அதனால்தான் தன்னை மறந்து இயற்கையோடு பறந்தான்.
பேருந்து டீக்காக பத்து நிமிடம் நின்றது. இருவரும் இறங்கி டீ சாப்பிட்டுவிட்டு, ட்ரைவரிடம் இன்னும் எத்தனை நேரமாகுமென்று கேட்டு வைத்தார்கள். பேருந்து மீண்டும் புறப்பட்டது. சிலமணி நேர பயனத்திற்குப் பிறகு சாலையில் பத்தினத்திட்டா 2 கிலோமீட்டர் என்ற மைல்கல் கண்ணில் பட்டது. அவரவர் லக்கேஜ்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டார்கள். பேருந்து பஸ்ஸ்டாண்டை தொட்டது. இருவரும் இறங்கிக்கொண்டார்கள். கண்டக்டரிடம் செல்ல வேண்டிய இடம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார்கள்.
பஸ்ஸ்டாண்டிலிருந்து ஆட்டோவில் அரைமணி நேர பயணம். ஆட்டோ விட்ட இடத்திலிருந்து நடக்க ஆரம்பித்தார்கள். பாதை சுருங்கி ஒத்தையடிப்பாதையாக வளைந்து ஒடியது. கற்களும், பாறைகளும் பாதையிலே குறுக்கிட்டன. இருமருங்கிலும் நெடிதுயர்ந்த தேக்கு மரங்களும், குத்துகுத்தாக பெயர் தெரியா செடிகளும் இது காடு யென பறைசாற்றின. உள்ளே செல்லச்செல்ல சூனியமும், இருளும் பரவத்தொடங்கியது. வினய் அபியின் கையை இறுகப்பற்றி கொண்டான். இருவரும் சேர்ந்தே மூச்சுவாங்க பாதையேறி சென்றார்கள். காட்டையே அலற வைக்கும் சத்தம். குரங்கின் சத்தமா அல்லது கூவையின் சத்தமாவென்று புரிபடாமலிருந்தது. வயிற்றுக்குள்ளும் சத்தங்கள் கேக்கத்தொடங்கியது.

என்னடா போய்கிட்டே இருக்குது. காலெல்லாம் வலிக்குதுடா. யெப்பெடா கொயில் வரும்.- அபி
பொறுடா. நானும் இப்பொதான் மொதல்ல வர்றென். வந்துறும். மலையேறும்போது பேசுனா மூச்சு றொம்ப வாங்கும். பேசாம வா.- வினய்
பாதையில் அமானுஷ்ய புன்முறுவலோடு ஒரு இளம்பெண் தென்பட்டாள். அவளிடம்,
இ தம்புராட்டி ஷேத்திரம் யெங்ஙோட்டா போவேண்டியது? – வினய்
இ ரோட்டில்கூடி சொல்ப தூரம்போயால் செறிய புழா வரும். யென்னுட்டு அத கடந்தா பத்து பதினைஞ்சு நிமிஷம் நடந்தா ஷேத்திரம் யெத்தும். – பெண்
நன்னி. – வினய்
பின்னே ஒரு காரியம். நேரத்தே திருச்சி வரனும். இன்னு அம்புலி வருவில்லா. ஆட்காரும் காணுல்லா. கூடாதே அவிடவுள்ள மணிக்கூண்டிண்டேமோள கேறாம்பாடில்லா. அபகடமா. மனசிலாயோ? – பெண்
ஒகே. ஷ்ரெமிக்காம். நன்னி கேட்டொ – வினய்
இருவரும் நடந்தார்கள். அந்த பெண் சொன்னது போலவே சிறிய ஆறு தென்பட்டது.
டேய். யென்னடா பேசற. ஒரு யெழவும் புரியல. கொஞ்சம் தமிழ் வார்த்த வந்தது. மத்தபடி ம்ஹும். – அபி
மலயாளம் அப்பிடித்தான். தமிழ்ல இருந்து பிரிஞ்சி போனதுதானே. 50% தமிழ் 50% சம்ஸ்கிருதம். மலயாள மொழி தயார். மலயாள மொழி உருவாகி ஒரு 500 வருஷம் ஆகிருக்குமா? – வினய்
தெரியல. ஆனா புரியாட்டாலும் அந்த ஸ்லாங் யெனக்கு பிடிச்சிருக்கு.- அபி
அதான் மலயாளம். – வினய்
அந்த ஆற்றினைக் கடந்தவுடன் கொஞ்சம் ஏறவேண்டியிருந்தது. ஏறினார்கள். அப்புறம் இறக்கம் கண்டு இறங்கிக்கொண்டார்கள். கண்ணில் அந்த அம்மானுஷ்ய காட்சியாய் அந்த கோவில் தென்பட்டது.
இருவர் கண்களிலும் மிரட்சி. அது அன்றாடம் வழிபடும் கோயிலல்ல. புராதான கோவில். எப்போவாதுதான் வழிபாடு நடக்கும் மாந்த்ரிக கோவிலாய்பட்டது.


டேய்! வேண்டாம்டா. பாக்கவே பயங்கரமா இருக்கு. போய்ரலாம்.- அபி
ஒனக்குதான் இதிலெல்லாம் நம்பிக்கையில்லியே. அப்புறமென்னடா. வா. வந்தாச்சு. கும்பிட்டு ஒடனே கெளம்பிடலாம். – வினய்

அருகில் செல்லச்செல்ல இருவரின் உடலின் உஸ்ணம் கொதிநிலைக்கு உயர்ந்தது. கறுத்த, கருங்கல்லினாலான, எண்ணெய் பிசுப்பாய், காட்டுச்செடிகள் படர்ந்து, அனாமத்தாய் நிற்கும் அந்த பாழடைந்த கோவிலின் வெளிப்புறத்தோற்றம், நம்பிக்கையற்ற நாத்திகவாதிக்குக்கூட உள்சலனத்தில் உன்மத்தம் ஊற்றெடுக்கும். கோவிலின் முகப்பின் வாயிலில் கதவுகள் இன்றி ஆயாசமாக அமைந்திருந்தது. இருவரும் வாயிலின் வாசற்படியினை நெருங்கினார்கள்.

மக்கா! மனித காலடிபட்டு பலவருடம் ஆகிருக்கும்போல் தெரியுது. ஒனக்குன்னு யெப்பிடிடா இப்படிபட்ட யெடமெல்லாம் தெரியுது.- அபி
இல்லடா. ஒருனாள் நான் சொந்தக்காரின் வீட்டு பூஜைக்கு போயிருந்தேன். அப்ப அந்த பூஜையை நடத்திட்டு இருந்த பூஜாரி இந்த கோவிலைப்பத்தி ரொம்ப உயர்வா சிலாகிச்சாண்டா. அவசரப்பட்டுட்டேனோன்னு தோனுது மக்கா. – வினய்
சரி விடு. வந்துட்டோம். வா சாமியை பார்ப்போம். – அபி.

கருவறைக்குள் கண்மை இருட்டு. தட்டுத்தடுமாறி அடிமேல் அடியெடுத்து இருவரும் தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். மேற்கூரை யின் சிறிய இடைவெளியில் சின்னதாய் ஒரு ஒளிக்கீற்று . அது அந்த உயர்ந்த கற்சிலையின் மேல் படர்ந்து வசீகர ஈர்ப்பை கொடுத்தது.
.
வாவ்! அற்புதம். சிற்பி யென்னாமாய் வடிச்சிருக்கிறான். ஆஹா! ஒவ்வொரு உடலவையன்களையும் தத்ரூபமாக செதுக்கிருக்றான்பா.- அபி
சாமிய அப்படியெல்லாம் சொல்லாதேடா. நாம வேற தனியா வந்துருக்கோம். எனக்கு றொம்ப பயமா இருக்கு அபி – வினய்
என்னடா பயம். பரசக்தி படத்துல வர்ர வசனம். அம்மன் யெப்போடா பேசினாள். அதிமாதிரிதான், இந்த சிலையும் ஏதோ ஒரு சிற்றரசனின், மனைவி அல்லது வைப்பாட்டி அல்லது அந்தப்புரத்து அழகி. அவ்வளவுதான்.- அபி.
பேசாம இரு. அதுவே நீ யெனக்கு செய்யும் மஹா புன்னியமாவும். – வினய்
நீ றொம்ப றொம்ப பயந்து இருக்கிற. போ போய் உன் பூஜையை தொடங்கு. – அபி

வினய் பையிலிருந்து, பூஜைக்குரிய சாதனங்களை ஒவ்வொன்றாய் யெடுத்து சாமிச்சிலையின் பீடத்தில் வைத்தான். என்கிருந்தோ பரந்து வந்த வெளவால் இவர்கள் இருவரையும் உரசிக்கொண்டு பறந்தது. முதல் முறையாய் அபி அதிர்ந்தான். ஊதுபத்தி கொளுத்தப்போன தீப்பட்டி அபியின் வீரீட்டில் கைதவறி கீழே விழுந்தது.. அபசகுணமென்று கருதி வினய் அபியை ஏறிட்டுப்பார்த்தான்.

இருவர் முகத்திலும் வியர்வைத்துளிகள். கற்கோவிலின் தன்மையா? உள் நடுக்கத்தின் பக்கவிளைவா வென்று தெரியவில்லை.வெத்திலை, பாக்கு, பழம் பரப்பி, பழத்தில் ஊதுவத்தி கொளுத்தி சொருகியதும், சூடம் கொளுத்தி ஆராதனை காட்டினான் வினய். கண்கள் மூடி சிறிது நேரம் தியானித்தான். கண்களைத்திறந்தால் அபியைக் காணோம். அபியின் துணைதான் இதுவரை ஆறுதல். அவன் அகன்றது உள்ளே கிலியை உண்டுபன்னியது.

அபி! டேய் விளையாடாதே. யெங்கடா இருக்கே.வாடா. – வினய்

கொடியின் தண்டினை பிடித்து தலைகீழாய் தொபீரென்று வினயின் முன்னே தோன்றினான். அவனை அடித்து, கடிந்து கொண்டான்.

தயவுசெய்து. என்கிட்டே சொல்லாம யென்கேயும் போகாதே. நான் பாதுகாப்பா போரது இல்ல இப்ப ப்ரச்சின, உன்னை பாதுகாப்பா கொண்டு சேர்க்கரதுதான் யென்னோட தலயாயப்பிரச்சின. – வினய்
சரி.சரி.கோவிச்சுக்காதே. ஒரு அனுமதி மட்டும் கொடு. அந்த மணிக்கூண்டு றொம்ப அழகா இருக்கில்ல. மேலயேறி பார்த்தா இந்த கொயிலின் சுற்றுவட்டாரம் முழுதும் தெரியும்ல. வற்றியா? – அபி
வேண்டாம். யேர்கனவே அந்த பொண்ணு அதுமேல யேரவேண்டாம்னு சொல்லிருக்குது. ஆபத்த விலகொடுத்து வாங்கவேண்டாம். பேசாம வா. புரப்படலாம்.- வினய்
நீ இரு. நான் இப்ப வந்துர்றேன்.- அபி

அபி வினயின் பேச்சை கேட்காமல் மணிக்கூண்டு நோக்கி ஓடினான். படிகளில் சருகுகளும், விரிசல்களும் கிடந்தன. அபியின் விளையாட்டு தொடங்கியது. முதல் படியில் காலை வைத்தான்.
1,2,3,4,5,6,7,8,9,10…………41,42,43,44,45,46………..71,72,73,………91,92,93,94,…..100
நூறு படிகளைக்கடந்து மணியின் அருகாமையில், பின்வரும் அபாயத்தின் அறியாமையாய் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். வினய் ஸ்டீபென் ஸ்பீல்பெர்க் படத்தின் கதாபாத்திரமாய் சிறியதாய் தெரிந்தான் அபியின் பார்வைக்கு. சுற்று பகுதிகளின் காட்சிகள் மனதுக்கு ரம்மியமாய் தோன்றியது. கீழே வினய் அழைப்பதை கவனித்தான். மெதுவாக இறங்கினான்.

100,99,98,97,96,95,94,93,92,91……50,49,48,47,46…….35,34,33,32,31…10,9,8,7,6,5,4,3,2,1,2,3,4,5, ……?

கௌதமன்
01-02-2011, 12:55 PM
தலைவா! எத்தனையாவது வாட்டி?

CEN Mark
01-02-2011, 01:05 PM
தலைவா! எத்தனையாவது வாட்டி?

பாஷை புரியலையோ?

கௌதமன்
01-02-2011, 01:10 PM
பாஷை புரியலையோ?

இதேக் கதையை ஏற்கனவே திரியில் பதித்தது தானேத் தலைவா!

நீங்களே மறந்துட்டீங்களா?

CEN Mark
01-02-2011, 01:43 PM
இதேக் கதையை ஏற்கனவே திரியில் பதித்தது தானேத் தலைவா!

நீங்களே மறந்துட்டீங்களா?

அதச்சொல்லல. திரி எண்ணைய் இல்லாமல் அணைந்திருந்தாதைச் சொன்னேன்.