PDA

View Full Version : செயற்கைப் பெட்ரோல் கண்டுபிடிப்பு!



பாரதி
01-02-2011, 11:10 AM
இன்றைய தினமலரில் கீழ்க்கண்ட செய்தியை படிக்க நேர்ந்தது.


லண்டன்: தற்போது இயற்கையாக கிடைக்கும் கச்சா எண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை பெட்ரோலை தயாரித்துள்ளனர். ஹைட்ரனை மையமாக வைத்து புதிய மூலக்கூறுகளுடன் அது தயாரிக்கப்படுகிறது. இந்த பெட்ரோல் மூலம் கார்கள் மற்றும் என்ஜின்களை இயக்க முடியும். இதில் இருந்து வெளியாகும் புகையால் காற்றில் மாசு ஏற்படாது.சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த பெட்ரோல் ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெட்ரோல் பங்க்குகள் மூலம் விற்பனையாக இன்னும் 3 ஆண்டுகளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://i.dailymail.co.uk/i/pix/2011/01/28/article-1351341-0CF360B6000005DC-15_634x387.jpg

மேலதிக தகவல்களுக்கு:

http://www.dailymail.co.uk/sciencetech/article-1351341/Relief-pumps-Revolutionary-hydrogen-fuel-cost-just-90p-GALLON-run-existing-cars.html#ixzz1CO3klX43

அப்படி ஒரு செயற்கை எரிபொருள் கிடைப்பது உண்மையாகும் என்றால்....!!

உமாமீனா
01-02-2011, 11:21 AM
அப்படியா தகவலுக்கு நன்றி அமலுக்கு வந்தால் சந்தோசம்

அக்னி
01-02-2011, 04:42 PM
அப்பிடிப் பெற்றோல் கிடைத்தால்,
இப்பிடிக் கார் வாங்கி ஓடலாமே... :)

முரளிராஜா
01-02-2011, 04:53 PM
அப்படி கிடைத்தாலும் அது இங்கிலாந்தில் அல்லவா கிடைக்கும்.

கௌதமன்
01-02-2011, 04:56 PM
ஹைட்ரஜனிலிருந்து பெட்ரோலாகத் தயாரிக்காமல் நேரடியாக ஹைட்ரஜனையே எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. அது கொஞ்சம் ஆபத்தானது. தற்சமயம் செலவும் அதிகம். எதிர்காலத்தில் எரிபொருள் எது எனபதைத் தீர்மானிப்பது விலையாக இருக்காது, அதனுடைய தாராளமாகக் கிடைக்கும் தன்மையாகத் தான் இருக்கும்.

நாஞ்சில் த.க.ஜெய்
02-02-2011, 09:55 AM
இது போன்ற ஒரு மாற்று எரிபொருள் அவசியம் இன்று உடனடி தேவை இதன் மூலமேனும் விலைவாசிதனை ஓரளவேனும் சமாளிக்கலாம்