PDA

View Full Version : அவளின்றி ஒரு அணுவும் அசையாது...



sakthiselvi
01-02-2011, 09:55 AM
அற்புதங்களின் பிறப்பிடம்
அன்னையின் இருப்பிடம்
அவளால் ஆரம்பித்துவைக்கப்பட்ட பயணமிது
அவளால் ஏற்றப்பட்ட உயிர்தீயிது
அவள் உயிர்குடித்து வளர்த்த உடலிது

அறுதியிட முடியாத அன்பின் ரூபமது
ஆழி தோற்க்கும் அவள் அன்பின் ஆழம் கண்டு
சந்ததிகள் வேர்விடுவதற்காய்
சங்கடங்கள் பல* சகித்தவள் அவள

மத்திய தர பெண்கள் பலரின்
விரதத்தின் மெய்ப்பொருள்அறிவீர்களா?
பிள்ளைகள் உண்டு மிச்சம்மிருப்பின் உண்பதே!!!!!
எத்தனையோ நாட்கள்
எங்களுக்காய் விரதமிருந்தவள் அவள்

நாங்கள் திரும்ப சிறிதே தாமதித்தாலும்
மணியிழந்த அரவாய் மதியிழந்த
வானாய் அவளின் கலக்கம்
நான் மக்கிப்போய்விட* இருந்தபோது
உயிர் உரம் இட்டவள் அவள்

அவள் வலி நான் உணர்ந்தபோது
உணர்ந்தேன் அவள் அருமை
நாம் எத்தனை முறை காயப்படுத்தினாலும்
நமை தொடரும் அவள் ஆசிகள்

என் முதல் தாலாட்டு அவள்
இதயத்து நுண்ணொலி
கருவாய் 45 நாட்களில் ஒலிக்கத்துடங்கிய
என் இதயத்தொலி இன்றும் உன் காதுகளில்.........

உன் அன்பு வலை பின்னலில் சிக்கி கொண்டு
என்றுமே வெளிவரக்கூடாது நான்......

பாரிஜாத தேவவிருட்சங்களும்
கற்பகத் தருக்களும் நான் நிஜத்தில்
கண்டதில்லை எனக்கு அவை
தேவையும் இல்லை நீ இருக்கும் போது...

முரளிராஜா
01-02-2011, 10:10 AM
அன்னையை போற்றும் உன்னத படைப்பு. வாழ்த்துக்கள். தாயின் பாசத்தை எதனோடும் ஒப்பிடமுடியாதே. தொடரட்டும் உங்கள் கவிதை மழை.

sakthiselvi
02-02-2011, 12:00 PM
நன்றி முரளி

நாஞ்சில் த.க.ஜெய்
02-02-2011, 12:20 PM
உண்மை தாயின் பாசத்தில் உள்ள குழந்தையின் வரிகள்

கீதம்
03-02-2011, 07:30 AM
கருவில் அடைத்தவளைக் கவிதையில் அடைக்கவிரும்பிய ஆதங்கம் புரிகிறது. அவளன்பை ஆராதிக்கும் வரிகளால் நெய்து போர்த்திய கவிச்சேலை அழகு. பாராட்டுகள் சக்திசெல்வி.

M.Jagadeesan
03-02-2011, 07:39 AM
அன்னையின் அன்பை வெளிப்படுத்திய அற்புதமான கவிதை!

sakthiselvi
03-02-2011, 09:11 AM
நன்றி ஜெய் , கீதம் , ஜெகதீசன்