PDA

View Full Version : ஔவையாரின் ஞானக் குறள்கள்.



ஜானகி
01-02-2011, 08:47 AM
சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கிய " சித்தர்கள் கண்ட விஞ்ஞானத் தத்துவம் " என்ற புத்தகத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மணிவாசகர் பதிப்பகம் - சாமி சிதம்பரனார் வெளியிட்டது, இந்தப் புத்தகம்.

சித்தர்களின் பாடல்கள் என்ற வரிசையில், ஔவையாரின் ஞானக் குறள்கள் என்று சிலவற்றைப் படித்தேன்.

இவர் சங்க காலத்தவரா, அதன் பிந்தய காலத்தவரா என்ற குறிப்பு இல்லை, ஆனால், கருத்தாழம் மிக்கதாக இருந்தது.

மொத்தம் 31 அதிகாரங்கள் - 310 குறள்கள் ; 3 தலைப்புகள் - வீட்டு நெறிப் பால், திருவருட்பால், தன்பால்.

மாதிரிக்குச் சில.

ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து

ஓதிய நூலின் பயன்,

பொருள் :

இந்த உடம்புக்கு முதன்மையாக இருக்கும் அறிவானது, வேதத்தினால் வரும் பயனாகும். மனிதப் பிறவி எடுத்தவர்கள் அறிவைப் பெறவேண்டும்.

பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்

தாம் மாறில் தோன்றும் பிறப்பு.

பொருள் :

பரம்பொருளில் உள்ள பராசக்தியில் அடங்கிய 5 பெரும் பூதங்களும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டுச் சேர்ந்தால், பிறப்பு தோன்றும்.

ஜானகி
07-02-2011, 04:27 PM
''பிறப்பினால் பெற்ற பயன் ஆவது எல்லாம்

துறப்பதாம் தூநெரிக்கண் சென்று.''

மனிதப் பிறவி எடுத்ததனால் பெற்ற பயன், குற்றமற்ற தூய நெறியிலே நடந்து, தீமைகளையும், தீமைகளுக்குக் காரணமான ஆசைகளையும் அடியோடு விட்டுவிடுவதேயாகும்.

''உன்னும் கருமம் முடிக்கலாம் ஒள்ளியதாய்

மன்னும் அருள் பெற்றக்கால்"

எப்போதும் அழிவில்லாமல் புகழுடன் நிலைத்திருக்கும் அன்புதனைப் பெற்றுவிட்டால், நினைக்கும் காரியங்களை சாதிக்கலாம், பழுதுபடாமல் வெற்றியும் பெறலாம்.

" வாய்மையால், பொய்யாமனத்தினால், மாசற்ற

தூய்மையால், ஈசன் அருள்"

உண்மை பேசுவதனாலும், வஞ்சகமற்ற உள்ளத்தாலும், குற்றமற்ற, பரிசுத்தமான ஒழுக்கத்தினாலும், இறைவன் அருள் கிடைக்கும்.

ஔவையார் ஞானக் குறள்கள்.

உமாமீனா
08-02-2011, 04:06 AM
உங்களின் பகிர்வுக்கு நன்றி