PDA

View Full Version : திருமண நாள்



கௌதமன்
31-01-2011, 01:44 PM
திருமண நாள்

எனக்கு ஞாபக மறதி அதிகங்க. அதிலும் குறிப்பா தொலைபேசி எண்கள், பிறந்த நாள் இதெல்லாம் ஞாபகம் வச்சிக்க வேண்டும் என்றால் கஷ்டம்தாங்க. என் பிறந்த நாளே எனக்கு ஞாபகம் இருக்காதுன்னா பார்த்துக்குங்களேன். அது எப்படடீங்க என் பிறந்த நாளே மறந்து போகும் அப்படீன்னு கேட்கறீங்களா? ஏப்ரல் 3-ன்னா ஞாபகம் இருக்கும், பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திரமுன்னா எப்படிங்க ஞாபகம் இருக்கும். எங்க வீட்டில எல்லாருக்கும் பிறந்த நாள்னா பிறந்த தமிழ் மாதமும், பிறந்த நட்சத்திரமும் பார்த்துதாங்க கொண்டாடுவாங்க. வீட்டில உள்ள ஒவ்வொருத்தருக்கும் பிறந்த மாதம், நட்சத்திரத்தை ஞாபகம் வைக்கணுமுன்னா எனக்கு கொஞ்சம் கஷ்டம்தாங்க. ஆனா ஒரே ஒரு முக்கியமான நாள் மட்டும் ஆங்கில நாள்தாங்க பார்ப்போம். அது வேறு ஒண்ணுமில்லிங்க என் திருமண நாள்தாங்க. அதை மறக்க முடியுமாங்க? இல்லை மறந்துட்டு வீட்டுக்கு வர முடியுமாங்க?

பொதுவா ஒவ்வொரு திருமண நாளுக்கும் சர்ப்பரைஸா மனைவிக்கு ஏதாவது பிரெஸண்ட் பண்ணுவேங்க. அவங்களும் அதே மாதிரி சர்ப்பரைஸா பிரெஸண்ட் பண்ணுவாங்க. புடவை, பொம்மை இதுமாதிரிங்க. இது எதுவும் இல்லைனா இருக்கவே இருக்கு கிரீட்டிங் கார்டுங்க. வீட்டுப் பக்கத்திலேயே கார்ட்ஸ் கடை இருக்குங்க. அதனால முந்தின நாள் ஆஃபிஸ் விட்டு வரும்போதே வாங்கி அடுத்த நாள் சர்ப்பரைஸாகக் கொடுத்துருவேங்க.

இது மாதிரிதாங்க எப்போதும் போல இந்த வாட்டியும் திருமண நாளுக்கு முந்தின நாள் வந்தது. இந்த வாட்டியும் முன்னாடியே பிளான் பன்ணி ஒண்ணும் வாங்கி வைக்கலீங்க. அன்னைக்குப் பார்த்து ஆஃபிஸில மீட்டிங் அதுவும் ஆஃப்டர் அவர்ஸ்ல. மீட்டிங்கில புது புராஜெக்ட்ட பத்தி பேசறான் பேசறான் ஒவ்வொருத்தனும் பேசிட்டே இருக்கிறான். எனக்கு நைட் 9 மணிக்குள்ள வந்தாதான் அட்லீஸ்ட் வீட்டுப்பக்கத்துல இருக்குற கார்டு கடையிலிருந்து வெட்டிங் அனிவெர்ஸரி கார்டாவது வாங்கி அடுத்த நாள் காலையில வைஃப்புக்கு பிரெஸண்ட் பண்ண முடியும். என் வைஃப் என்னை மாதிரி இல்ல. நல்லா ஞாபகம் வெச்சி எப்படியாச்சும் முன்னாடியே ஏதாவது வாங்கி வெச்சிருப்பாங்க. ஆனா மீட்டிங் முடிஞ்ச மாதிரி இல்ல. என் பிரெஸண்டேஷனை அஜெண்டாவில கடைசியில வெச்சிட்டான் என் அவசரம் தெரியாத கன்வீனர். ஒரு வழியா மீட்டிங் 8.15 க்கு முடிஞ்சது. ஆஃபிஸ் கன்வேயன்ஸுல வீட்டுக்கு வரதுக்கு சரியா 9.00 ஆயிடுச்சு. நான் வழியிலேயே கடை பக்கத்தில இறங்கிட்டேன். நல்ல வேளை கார்டு கடை திறந்து இருந்துச்சு. பாதிக் கதவை அடைச்சிட்டான். ஒரு வழியா உள்ளேப் போய் வெட்டிங் அன்னிவெர்ஸரி கார்ட்ஸ் எல்லாம் எங்க இருக்குங்கன்னு கேட்டேன். ‘இந்த கடைசி வரிசைக்கு வாங்க, இங்க இருக்கு’ என்று உள்ளேயிருந்து கேட்டது என் மனைவியின் குரல்.

மதி
31-01-2011, 01:55 PM
ஹாஹா.. என்னடா சொல்லப்போறாருன்னு பாத்தா கடைசியில் நச்..!! அவங்களும் அந்த நேரத்துல?? ஜாடிக்கேத்த மூடி..!

dellas
31-01-2011, 04:23 PM
மீண்டும் சிரிக்க வைத்து விட்டீர்கள் கெளதம். 'ஆமா திருமண நாளுக்கு எங்களுக்கு ஏதும் கிடையாதா?'

ஜனகன்
31-01-2011, 04:31 PM
உங்கள் சொந்தக் கதை சோகக் கதை எல்லாம் சூப்பருங்க.

கதையோட கதையாக சிக்கனத்துக்கு நல்ல டிப்ஸ் சொல்லியிருக்கீங்க.
நானும் இனிமேல் இந்த முறையைத்தான் பின்பற்றவேண்டும்.

அன்புரசிகன்
01-02-2011, 12:26 AM
அது தான் இருக்கே 123greetings... இசையோட கொடுத்திடலாமே.. ஏன் தண்டச்செலவெல்லாம்..:lachen001:

ஆளுங்க
01-02-2011, 10:20 AM
சூப்பருங்க!!

இது எப்ப????

உமாமீனா
01-02-2011, 10:39 AM
(இதை தான் வெள்ளைக்காரன் சொல்லி இருக்கான் மேட் பார் ஈச் அதர்) என் கருத்து நல்ல மனம் புரிந்த தம்பதிகள் வாழ்க வளமுடன்