PDA

View Full Version : மரமா? புல்லா?



M.Jagadeesan
30-01-2011, 12:47 PM
புறக்கா ழனவே புல்லெனப் படுமே
அகக்கா ழனவே மரமெனப் படுமே

என்பது தொல்காப்பிய நூற்பா.இதன்படி வெளிப்புறத்தே உறுதியுடைய தாவரங்கள் "புல்" என்றும் உட்புறத்தே உறுதியுடைய தாவரங்கள் "மரம்"என்றும் அழைக்கப்பட வேண்டும்.

மூங்கில்,தென்னை,பனை ஆகிய தாவரங்கள் வெளிப்புறம் உறுதியுடைய "புல்"
வகையைச் சார்ந்தது.இதனை இன்றைய தாவர இயலாரும் ஏற்றுக் கொள்கின்றனர்
தென்னை மரத்தின் தாவர இயல் பெயர் "COCOS NUCIFERA" என்பதாகும்.இது
"PALM" என்ற புல் வகைக் குடும்பத்தைச் சார்ந்தது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர் இக்கருத்தைக் கூறியிருப்பதுவிந்தையிலும் விந்தையல்லவா?

ஆகவே இனி நாம் மூங்கில்,தென்னை,பனை ஆகிய தாவரங்களை மரம் என்று
அழைக்காது "மூங்கில்புல்","தென்னம்புல்","பனம்புல்"என்றே அழைப்போமாக!

நாஞ்சில் த.க.ஜெய்
30-01-2011, 01:57 PM
நண்பரே ! செய்திகள் புதிது தான் என்றாலும் இன்றைய பழக்க வழக்கங்களை மாற்றும் எவ்வொரு விடயமாக இருந்தாலும் அதனை ஏற்று கொள்வது என்பது கடினம் அதைவிட கடினம் அதனை மாற்றி இவ்வாறு அழைப்பது என்பது .....

M.Jagadeesan
30-01-2011, 02:19 PM
நண்பரே ! செய்திகள் புதிது தான் என்றாலும் இன்றைய பழக்க வழக்கங்களை மாற்றும் எவ்வொரு விடயமாக இருந்தாலும் அதனை ஏற்று கொள்வது என்பது கடினம் அதைவிட கடினம் அதனை மாற்றி இவ்வாறு அழைப்பது என்பது .....

வழக்கத்திற்கு கொண்டுவந்திட்டால் எதுவுமே கடினம் அல்ல!
'பஸ்"என்னும் சொல்"பேருந்து" ஆகவில்லையா?
"கம்ப்யூட்டர்" என்னும் சொல் "கணினி" ஆகவில்லையா?
"மந்திரி"என்னும் சொல் "அமைச்சர்"ஆகவில்லையா?
அரசு நினைத்தால் எதுவும் செய்யலாம்.

நாஞ்சில் த.க.ஜெய்
30-01-2011, 02:45 PM
ஆங்கிலம் எனும் அந்நிய மொழியின் ஆதிக்கத்தில் இருந்து தமிழுக்கென ஒரு பாதை வேண்டும் எனும் நோக்கத்தில் மாற்றப்பட்டது அவ்வார்த்தைகள் ஆனால் இவைகளோ ( மூங்கில்,தென்னை,பனை ) தமிழ் தான் என்றாலும் இதன் அறிவியல் புகலிடம் வேறு என்ற காரணம் காட்டி இதன் இயல்பான வார்த்தைகளை மாற்றுவது என்பது இயலாதது ..மேலும் மந்திரி என்பதும் அமைச்சர் என்பதும் தமிழ் வார்த்தைகள் தானே நண்பரே !

கீதம்
30-01-2011, 09:51 PM
புல்வகைகள் ஒருமுறை மட்டுமே பூத்து மடியக்கூடியவை என்று எங்கோ படித்திருக்கிறேன். தென்னை, பனை போன்றவை ஒரு வித்திலைத்தாவரமாக இருந்தாலும் அவை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பூத்து காய்த்து பலன் தருவதால் அவற்றை மரம் என்பதே பொருந்தும் என்று தோன்றுகிறது. புல்வகை பற்றி நான் கேள்விப்பட்டது சரியா என்று தாவரவியல் அறிந்தவர்கள் எவரேனும் தெளிவுபடுத்துங்களேன்.

பாரதி
31-01-2011, 12:14 AM
புறக்கா ழனவே புல்லெனப் படுமே
அகக்கா ழனவே மரமெனப் படுமே

என்பது தொல்காப்பிய நூற்பா.இதன்படி வெளிப்புறத்தே உறுதியுடைய தாவரங்கள் "புல்" என்றும் உட்புறத்தே உறுதியுடைய தாவரங்கள் "மரம்"என்றும் அழைக்கப்பட வேண்டும்.

மூங்கில்,தென்னை,பனை ஆகிய தாவரங்கள் வெளிப்புறம் உறுதியுடைய "புல்" வகையைச் சார்ந்தது.இதனை இன்றைய தாவர இயலாரும் ஏற்றுக் கொள்கின்றனர். தென்னை மரத்தின் தாவர இயல் பெயர் "COCOS NUCIFERA" என்பதாகும்.இது "PALM" என்ற புல் வகைக் குடும்பத்தைச் சார்ந்தது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர் இக்கருத்தைக் கூறியிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?

ஆகவே இனி நாம் மூங்கில்,தென்னை,பனை ஆகிய தாவரங்களை மரம் என்று அழைக்காது "மூங்கில்புல்", "தென்னம்புல்", "பனம்புல்" என்றே அழைப்போமாக!

தொல்காப்பியத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பது வியப்பான செய்தியே..! காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் ஏராளமான விடயங்களில் இவையும் அடங்கும். இத்திரி கண்ட பின்னர் தேடியதில் கிடைத்தவை:

தொல்காப்பியத்திலேயே புல் வகையின் உறுப்புகள் பற்றிய பாடல்:
தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையே என நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்.

மரவகையின் உறுப்புகள் பற்றி அடுத்த பாடல்:
இலையே முறியே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையே உள்ளுறுத் தனையவை எல்லாம்
மரனொடு வரூஉம் கிளவி என்ப.

இரண்டிற்கும் பொதுவானது பற்றி அடுத்த பாடல்:
காயே பழமே தோலே செதிளே
வீழ்ழோடு என்றாங்கு அவையும் அன்ன.

ஆக தென்னையும் பனையும் புல் வகைகள் என தெளிவாக விளங்குகிறது!

“பழங்காலத்தில் மரம் என்ற சொல், தேக்கு, பலா, மா முதலிய உள்ளே வைரமுடைய மரங்களை மட்டும் குறித்து வந்தது. தென்னைமரம், பனைமரம், முதலியவற்றிற்கு உள்ளே வைரம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் அந்தக் காலத்தில் தென்னை மரம், பனைமரம் என்று சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். அவற்றை மரம் என்று சொல்லுவதே பிழையாக இருந்தது. அவைகளை எல்லாம் நம் முன்னோர்கள் புல் என்று சொல்லி வந்தார்கள். தென்னையையும், பனையையும் பார்த்துப் 'புல்' என்று சொன்னால் இந்தக் காலத்தில் எல்லோரும் சிரிப்பார்கள். உயரமாக வளராமல், தரையோடு உள்ள சிலவற்றை மட்டும்தான் இப்போது புல் என்று சொல்கின்றோம். ஒரு காலத்தில் இருந்த சொல்வழக்கு மற்றொரு காலத்தில் இல்லாமல் போவதை இவைகள் தெரிவிக்கின்றன.” என சொல்லின் கதையில் திரு. மு. வரதராசனார் கூறி இருப்பதையும் இக்கணத்தில் நினைவு கொள்வோம்.

மாறி வரும் சொற்களில் பிழையானவற்றை அறிந்து அவற்றை சரி செய்ய முயற்சிக்கும் இது போன்ற திரிகள் பயன் தரத்தக்கவை.

மிக்க நன்றி நண்பரே. தொடருங்கள்.

M.Jagadeesan
31-01-2011, 12:40 AM
பாரதி அவர்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி!