PDA

View Full Version : உ.போ.எண்:5 நாட்டுப்பற்றுக்கவிதை:11



M.Jagadeesan
30-01-2011, 03:47 AM
பாரதத் தாய்
..................
இமயம் முதல் குமரிவரை பாரதத்தாயே! உன்
இருப்பிடமாய்க் கொண்டாயே பாரதத்தாயே!
திமிறிவரும் பகைவரையும் பாரதத்தாயே! நீ
திருந்திடவே வைத்திடுவாய் பாரதத்தாயே!

பொங்கிவரும் கங்கைநதி பாரதத்தாயே! உன்
பொன்னுடலைத் தழுவிடுமே பாரதத்தாயே! உன்
தங்கைநதி காவிரியும் பாரதத்தாயே! எம்
தமிழ்நாட்டைக் காத்திடுமே பாரதத்தாயே!

எந்நாட்டில் இருந்தாலும் பாரதத்தாயே! என்
எண்ணமெல்லாம் உன்னிடமே பாரதத்தாயே! அந்த
இந்திர லோகமுந்தான் பாரதத்தாயே! என்
இந்தியாவைப் போல்வருமா? பாரதத்தாயே!

வேற்றுமையிலே ஒற்றுமைதான் பாரதத்தாயே! உலகில்
வேறெங்கும் கண்டதுண்டோ?பாரதத்தாயே! உனைத்
தூற்றிவரும் பகைவருக்குப் பாரதத்தாயே! நீ
கூற்றுவனாய் விளங்கிடுவாய் பாரதத்தாயே!

கல்லாகப் பிறந்தேனும் பாரதத்தாயே! உன்
காலடியில் மிதிபடவே விரும்புகின்றேன் ஒரு
சொல்லாகப் பிறந்தாலும் பாரதத்தாயே! தமிழ்ச்
சொல்லாகப் பிறந்துன்னை வாழ்த்திடுவேனே!

கௌதமன்
30-01-2011, 04:11 AM
மகாகவி பாரதியின் கவிதையைப் போல் எழுச்சியூட்டும் கவிதை.

கவிதை நடையும், சொல்லழகும் பார்க்கும் போது கண்முன்னே மகாகவியே வந்து சொல்வது போல் உள்ளது.

பாராட்டுகள் நண்பர் ஜெகதீசன்.

கீதம்
30-01-2011, 05:51 AM
படிக்கும்போதே தாளலயத்துடன் வரிகள் தலையாட்டவைக்கின்றன,
கவிநயத்துக்கு மட்டுமல்ல, கவி சொல்லும் கருநயத்துக்கும் உடந்தையாய்!
மிக அருமை. பாராட்டுகள் ஐயா.

ஜானகி
30-01-2011, 06:04 AM
பண்ணுடன் அமைந்தது போன்ற, எளிய நடையில் அமைந்த, ஆனால், உயர்ந்த சிந்தனை கொண்ட இந்தப் பாடலை, பாடப் புத்தகத்தில் சேர்க்கலாம்...சிறுவர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய நல்ல பாடல்..பெரியவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டிய பல உண்மைகள் கொண்டது.

M.Jagadeesan
30-01-2011, 06:28 AM
கெளதமன்,கீதம்,ஜானகி ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!