PDA

View Full Version : ஒரு தலைக் காதல்



M.Jagadeesan
30-01-2011, 12:08 AM
அவனைப் பார்த்து அவள் சொன்னது:
......................................................
எது எதுவாக இருக்க வேண்டுமோ
அது அதுவாக இருக்கின்ற வரையில்
அதற்கு நல்லது.

இது அதுவாக மாற நினைப்பதும்
அது இதுவாக ஆக நினைப்பதும்
பொதுவாக நல்லது அல்ல.

உன் நிலை வேறு
என் நிலை வேறு
உன் நிலையில் நான் வருவதும்
என் நிலையில் நீ வருவதும் என்பது
கடலும் குட்டையும் கலந்தது போலாகும்.

உன் வழி வேறு
என் வழி வேறு
உன் வழியில் நான் வருவதும்
என் வழியில் நீ வருவதும் என்பது
எலியும் தவளையும் சேர்ந்தது போலாகும்.

உன் அறிவு வேறு
என் அறிவு வேறு
உன் அறிவோடு என் அறிவையும்
என் அறிவோடு உன் அறிவையும் சேர்ப்பது
மலையுடன் கடுகை சேர்த்தது போலாகும்.

வாழ்க்கை என்பது வியாபாரம்
பாலுடன் சேர்ந்த நீர் பாலாவது போல
பொன்னுடன் சேர்ந்த செம்பு பொன்னாவது போல
என்னுடன் சேர்ந்த நீ நான் ஆவாய்
உன்னுடன் சேர்ந்தால் நான் என்ன ஆவது?

dellas
30-01-2011, 05:38 AM
நீ வேண்டாம் என்று நேரிடையாகவே சொல்ல வேண்டியது தானே..நல்ல உவமைகள்..பாராட்டுக்கள்.

M.Jagadeesan
30-01-2011, 06:33 AM
நீ வேண்டாம் என்று நேரிடையாகவே சொல்ல வேண்டியது தானே..நல்ல உவமைகள்..பாராட்டுக்கள்.

நன்றி டெல்லாஸ்!

பிரேம்
30-01-2011, 08:37 AM
கவிதை அருமை...:)
------------------------
அவளைப் பார்த்து அவன் சொன்னான்..
-----------------------------------------
அது அது அதுவாகவே இருக்க நினைத்தால்..
உலகின் முன்னேற்றம் கனவாகிவிடுமே..
மாற்றம் ஒன்றே மாறாதது தோழி..
அது எனக்கும் நிகழுமே...

நிலை இன்று வேறு வேறுதான்..
நிலையாகிவிடும் இது என்றே நினைத்தாயோ...?
கடலும் குட்டையும்
கொண்டது நீர் என்ற ஓன்று தானே தோழி..

என்றோ உனக்கு கல்யாணம்
எவரோ உனக்கு கண்ணாலன்...
வழிகள் மட்டுமே வேறு..
வந்து சேரும் இடம் ஒன்று தானே..
எலி..தவளையும் வேறு வேறுதான்..
இரண்டும்.. வாழும் உயிரி தானே தோழி..

உன் புரிதலில் தவறொன்று கண்டேன்..
வாழ்க்கை என்பது வியாபாரம் அன்று..
அது விலை சொல்ல முடியாத விருட்சம்..
நீர்தான் மாட்டின் தயவால் பாலாகிறது..
நீர் என்றுமே நீர்தானே தோழி..

என்ன ஆவாய் என்ற குழப்பம் வேண்டாம்..
என்னாலும் வாழ்விக்க முடியும்..
நான் என்றும் நானாகவே இருப்பேன்..
நம்பிக்கை இருந்தால் மட்டுமே நலமென்று சொல்..:)

M.Jagadeesan
30-01-2011, 08:48 AM
கவிதை அருமை...:)
------------------------
அவளைப் பார்த்து அவன் சொன்னான்..
-----------------------------------------
அது அது அதுவாகவே இருக்க நினைத்தால்..
உலகின் முன்னேற்றம் கனவாகிவிடுமே..
மாற்றம் ஒன்றே மாறாதது தோழி..
அது எனக்கும் நிகழுமே...

நிலை இன்று வேறு வேறுதான்..
நிலையாகிவிடும் இது என்றே நினைத்தாயோ...?
கடலும் குட்டையும்
கொண்டது நீர் என்ற ஓன்று தானே தோழி..

என்றோ உனக்கு கல்யாணம்
எவரோ உனக்கு கண்ணாலன்...
வழிகள் மட்டுமே வேறு..
வந்து சேரும் இடம் ஒன்று தானே..
எலி..தவளையும் வேறு வேறுதான்..
இரண்டும்.. வாழும் உயிரி தானே தோழி..

உன் புரிதலில் தவறொன்று கண்டேன்..
வாழ்க்கை என்பது வியாபாரம் அன்று..
அது விலை சொல்ல முடியாத விருட்சம்..
நீர்தான் மாட்டின் தயவால் பாலாகிறது..
நீர் என்றுமே நீர்தானே தோழி..

என்ன ஆவாய் என்ற குழப்பம் வேண்டாம்..
என்னாலும் வாழ்விக்க முடியும்..
நான் என்றும் நானாகவே இருப்பேன்..
நம்பிக்கை இருந்தால் மட்டுமே நலமென்று சொல்..:)

கவிதைக்குக் கவிதையைப் பின்னூட்டமிட்ட பிரேம் அவர்களுக்கு நன்றி!

உமாமீனா
02-02-2011, 02:17 AM
உன் நிலை வேறு
என் நிலை வேறு
உன் நிலையில் நான் வருவதும்
என் நிலையில் நீ வருவதும் என்பது
கடலும் குட்டையும் கலந்தது போலாகும்.

?

எல்லாம் சரி எல்லா குட்டையும் கடைசியில் கடலில் தானே போய் சேர்க்கிறது - இப்ப என்ன சொல்விக... இப்ப என்ன சொல்விக..

M.Jagadeesan
02-02-2011, 02:25 AM
குட்டை கடலில் கலப்பதில்லையே! நதிதான் கடலில் கலக்கும்.

உமாமீனா
02-02-2011, 03:30 AM
குட்டை கடலில் கலப்பதில்லையே! நதிதான் கடலில் கலக்கும்.

குட்டை நதியில் கலந்து நதி கடலில் கலக்கிறது ஆக மொத்தத்தில்?....................