PDA

View Full Version : மனிதனுக்கு மட்டும் ஆத்மா உண்டு



dhilipramki
29-01-2011, 01:44 PM
மனிதனுக்கு மட்டும் ஆத்மா உண்டு
மனிதனுக்கு மட்டும் ஆத்மா உண்டு. இந்த ஆத்மாவின் மேன்மைக்கு, அதன் சந்ததிகள் பிரோகிதனுக்குத்தான் தர்மம் செய்ய வேண்டும்! "அதாவது ஆத்மா சுகமடைய பிரோகிதனுக்குச் சுகமுண்டாக்க என்றால், வேண்டும்":D இவை பிரோகிதர்களால் அவர்களது நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்டாதென்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை.

கண்ணுக்கு தெரியாமலும், சூட்சமமாகவும் யாருக்கும் தெரியாமலும் மேலே செல்கிறது என்கிறார்கள்! இப்படி கூறுகிறவர்கள் கண்ணுக்கு மட்டும் இந்த ஆத்மா எப்படி தெரிந்ததோ தெரியவில்லை. கேட்டால் "வேதம் சொல்கிறது, சாஸ்த்திர புராணம், கருட புராணம் சொல்கிறது, என்பார்கள்! இவைகள் எப்போது யாரால் ஏற்படுத்தப் பட்டன? என்றால் ரிஷிகள், முனிவர்கள், கடவுள் அவதாரங்கள், கடவுள் வெங்காயங்கள், கருவப்பிள்ளைகள் கூறியவைகள் என்பார்கள்." இவர்கள் யார்? இவர்களின் யோக்கியதை என்ன? இந்த நபர்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? யாரோ உளறியவைகளை வைத்துக் கொண்டு இந்த விஞ்ஞானக் காலத்திலும் நாம்கட்டி அழுவது பொருத்தமாகுமா? என்று கேட்டால், "அப்படிக்கேட்காதே நாஸ்திகம் பேசாதே. நீ பாவி, உன்னைக் கடவுள் நரகத்தில்தான் தள்ளுவார்" என்றுதான் கூறமுடியுமே தவிர ஒன்றுக்கும் சரியான பதில் கூறமுடியாது. :sauer028:
- தந்தை பெரியார் 24/04/1956 இல் பேசியது

M.Jagadeesan
29-01-2011, 01:53 PM
தந்தை பெரியார் கூறியதை யாரும் மறுக்கமுடியாது. அதே சமயத்தில்
மூட நம்பிக்கைகளையும் ஒழிக்கமுடியாது.

கௌதமன்
29-01-2011, 04:47 PM
சாஸ்திரம் படித்தவர்களில் பலர் பௌதிக விஞ்ஞானம் படித்தவர்களாக இருக்கலாம். அவர்கள் சாஸ்திரங்களையும், அறிவியலையும் நம்புவதாக இருந்தால் விஞ்ஞான ரீதியாக சாஸ்திரங்களை மெய்ப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளலாம். அதில் சில உண்மைக்கு அப்பாற்பட்டது என தீர்க்கமாக தெரிந்தால் தைரியமாக சாஸ்திரத்தில் சொல்லப் பட்டவைகளில் இவை தவறு எனலாம். சில உண்மை அல்ல என தீர்க்கமாக சொல்ல, இப்போதைய விஞ்ஞானத்தால் முடியாது, இன்னும் ஆராய்ச்சிகள் தேவைப் படுகிறது என்று நம்பினால் அதனை தற்சம்யம் அப்படியே வைத்துக் கொள்வோம் எனலாம். சில சாஸ்திரங்கள் விஞ்ஞானப் பூர்வமாக சரியானதாக இருக்கலாம், அதனை இன்னன்ன காரணங்களால் சரி என்று மக்களுக்கு எடுத்துக் கூறலாம்.

அப்படிச்செய்வது தான் அறிவு வளர்ச்சிக்கும், நாகரிக வளர்ச்சிக்கும் உதவும். அதை விடுத்து முன்னோர்கள் சொன்னார்கள், ஞானிகள் சொன்னார்கள், மதம் சொல்கிறது என்று அனைத்தையும் கண்மூடி ஏற்றுக்கொள்வதோ, அல்லது உண்மையிலேயே விஞ்ஞான ரீதியாலானக் காரணங்கள் உள்ளது என்று ஆராய்ந்துக் கூறியப் பிறகும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதோ அறிவுக்கு உகந்ததாக இருக்க முடியாது. ஒரு செயலை செய்யும் முன் ஏன் இதை செய்கிறோம் என்று தெரியாமல் செயவதற்கு ஆறாவது அறிவுத் தேவையில்லை. ஐந்தறிவே அதிகம். இது எல்லா மதங்களுக்கும், மதச் சடங்களுக்கும் பொருந்தும்.

ஒரு வேளை அந்தச் சடங்குகள் அது சொல்லப்பட்ட காலகட்டத்தில் ஏற்புடையதாக இருந்தால் இப்போதைய காலகட்டத்துக்கு அது பொருந்துமா என்பதையும் ஆராய்ந்து முடிவெடுப்பது அறிவார்ந்த சமூகத்தின் கடமை.

dhilipramki
30-01-2011, 02:35 AM
சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி நண்பரே

ruthra
16-02-2011, 09:29 PM
இக்காலத்திற்கு இந்த விடயம் பொருந்தாது. ஆனாலும் இன்னும் பலர் இப்படியான நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். படித்தவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்க:sprachlos020:

அன்புரசிகன்
16-02-2011, 09:34 PM
ஒரு வேளை அந்தச் சடங்குகள் அது சொல்லப்பட்ட காலகட்டத்தில் ஏற்புடையதாக இருந்தால் இப்போதைய காலகட்டத்துக்கு அது பொருந்துமா என்பதையும் ஆராய்ந்து முடிவெடுப்பது அறிவார்ந்த சமூகத்தின் கடமை.

அவர்கள் யார்? எப்படி கண்டறிவது??? என்பதையும் கூறினால் அவர்களிடம் சென்று முறையிட இலகுவாக இருக்கும்.:D
--------------

நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது. அவரவர் தமக்கென்று உள்ள 6 வது விடையத்தை கொண்டு ஆராய்ந்து செய்தாலே எல்லாம் சரியாகிவிடும். அதை செய்ய மறுப்பதிலேயே பல மூட நம்பிக்கை ஆரம்பித்துவிடுகிறது.
----------------------

பலரும் இப்படி செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்று செய்துபார்க்க பயப்படுகிறார்கள்.

உதாரணமாக பலகாலமாக பிள்ளை இல்லாதவர்கள் நேர்த்தி வைத்து பிள்ளை பிறந்தால் அந்த நேர்த்திக்கடனை செலுத்திவிடுகிறார்கள். இது சரியா தவறா என்பது இன்னொருபுறம். அவர்கள் அந்த நேர்த்திக்கடனை செய்யாது விட அந்த பிள்ளைக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்ற சிந்தனையால் தான். அந்த ரிஸ்க் ஐ எடுக்க அவர்கள் பயப்படுவது. அந்தப்பிள்ளைக்கு இயற்கையாகவே அது நடந்திருக்கலாம். பாசம் எல்லாவற்றையும் மறைத்துவிடும். (பாசம் எப்படியிருக்கும். யாராவது கண்டீர்களா என்றால் நிச்சயமாக நான் காணவில்லை. அதுபற்றியும் ஆராயச்சொல்லி அந்த அறிவு சமூகத்தினரிடம் சொல்லவேண்டும்) நம்பிக்கைகள் இந்த இடத்தில் தான் ஆரம்பமாகிறது.


விவேக் சொன்னது போல மழை பெய்தாலும் குற்றம். பெய்யலேன்னாலும் குற்றம். பாவம் இந்த இயற்கை. உங்க கிட்ட மாட்டி ரொம்ப சஃப்பர் பண்ணுது. :D