PDA

View Full Version : இதுவும் கடந்து போகும்...simariba
29-01-2011, 01:19 AM
எதுவும் மாறலாம்
தலைகீழாகலாம்...

வெண்மையின் கருவில்
கருமையும் வாழலாம்...

வெண்மேகங்கள் நீர் கோர்த்து
கருமேகமாவது போல்...

பின் அமில மழையும்
கொட்டித்தீர்க்கலாம்...

கோரபற்களின் கொடு
தாக்குதலுக்கும் மேல்
வலிமையாக...

நகைச்சுவை எனும்
பேரில் குதறித் துப்பலாம்...

கள்ளமறியா
நேர் சிந்தனையும்

உதவும் உள்ளமும்
மட்டுமே உனக்கு
அரணாயிருந்தாலும்...

தனக்கு வேண்டியதை மட்டுமே
தருவித்து கொள்ளும்
தனித்திறமை கூட்டி
திரிபவர்களிடமிரிந்து

தற்காத்துக் கொள்வதற்காகவாவது

கள்ளம் பழகு
பொய்மை பழகு

மென்மையே வியாபித்திருக்கும்
மனதை கல்லாக்கு

மனதில் இல்லையென்றாலும்
வெறுப்பை உமிழப்பழகு

இளம் பச்சையாய் துளிர் விட்டு
பின் கரும்பச்சையாகி
மஞ்சளாகி காய்ந்து விழும்
இலைகளைப்போல்

இதுவும் கடந்து போகும்...

ஜானகி
29-01-2011, 01:29 AM
எது மாறினாலும்... நீ மாறவேண்டாம்...காலம் தானே மாறும்...பொறுமையும் நம்பிக்கையும் துணையாகக் கொள்...உயர்ந்து நிற்பாய்... இறுதியில்.... ! சத்தியம் என்றுமே வெல்லும்...தர்மம் தலை காக்கும்...தளராதே என்றும் !

simariba
29-01-2011, 01:50 AM
நன்றி ஜானகி! சரியான நேரத்தில் சரியான அறிவுரைக்கு நன்றி ஜானகி! சில கசப்பான நிகழ்வுகள் மனதை நிலைகுலையவே செய்கின்றன! குழம்பிய மனதில் சில கசப்பு கவிதைகள் முளைவிடவே செய்கின்றன! மனதின் வலி மிகும் போது மன்றத்திற்கு வருவதும், தாயின் மடியில் கிடைக்கும் ஆறுதல் போல், அழும் குழந்தைக்கு கிடைக்கும் அரவணைப்பு போல் மன்ற உறவுகளின் பின்னூட்டங்கள் நொந்து தொய்ந்த புத்தியை தூக்கி நிறுத்துவதும் சற்று நேரத்தில் விளையாட சென்று விடும் சிறுபிள்ளையாய் மனம் சுறுசுறுப்படைவதும் எனக்கு கிடைத்திருக்கும் வரங்கள்!!
மன்றத்திற்கும் உறவுகளுக்கும் மிக மிக நன்றி!

கௌதமன்
29-01-2011, 04:21 PM
திமிரோடு இரு என் தோழி!

அதனால்

உன் புன்னகைத் தொலையலாம்,

சில நட்புகள் உடையலாம்,

பரவாயில்லை.

திமிர்த்தனம் நேர்மைக்கு மாட்டும் ஒரு முகமூடி,

பிறர் எளிதில் நெருங்காமல் தடுக்கும் அக்னி வளையம்,

பலகீனம் வெளியில் தெரியாமல் மறைக்கும் திரை,

அழுகையை அடக்கும் ஒரு யுத்தி,

அறிவாளியாய் காட்ட முயற்சிக்கும் ஒரு பாவனை.

ஏமாற்றங்களை தாங்கிக் கொள்வதைவிட

திமிர் பிடித்தவள் என்னும் பெயர் ஒன்றும் மோசமில்லை.

ஜனகன்
29-01-2011, 07:50 PM
வலிகள் வார்த்தைகளில்,

அதை அழகான உங்கள் கவிதை நடையில் சொல்லியிருப்பது மிக அருமை.
வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் அபிராமி.

கீதம்
29-01-2011, 10:22 PM
காயம்பட்ட மனதுக்கு கவிதை ஒத்தடம். வலிகளை வரிகளாக்கும் ரசவாதம் கவிஞர்களுக்கே உரித்தான சொத்து. இச்சொத்திருக்கையில் அச்சொத்தைகளைப் பற்றியென்ன கவலை?

கவி நன்று. பாராட்டுகள் அபி.

பிரேம்
29-01-2011, 11:41 PM
நல்லவனா இரு..ஆனா ரொம்ப நல்லவனா..:D.. இருக்காதேன்னு சொல்லறீங்க..முயற்சி பண்றேன்...கவிதை அருமை..

simariba
30-01-2011, 11:41 AM
நன்றி கௌதமன்!
நன்றி ஜனகன்!
நன்றி கீதம்!
நன்றி பிரேம்!

நாஞ்சில் த.க.ஜெய்
30-01-2011, 01:48 PM
தோழியே "என்றும் நீ மாறிவிடாதே மற்றவர்களுக்காக ..
மாற்றிகொள் உனக்காக தன்னையே மாற்றிகொள்பவருக்காக..
காலம் என்பது நிலையானதல்ல இன்று போல் என்றும் நிகழ்வதற்கு
அதுவும் ஒருநாள் மாறும் அது வரை" (முதல் இரு வரிகளை மீண்டும் படிக்கவும் )...

simariba
30-01-2011, 11:41 PM
நன்றி t.jai!