PDA

View Full Version : போட்டிக்கவிதை எண்.12



கௌதமன்
28-01-2011, 05:29 PM
கவிதை எண்.12

கொடிப்பிடிக்க வேண்டாம்! கோஷமிட வேண்டாம்!
போராட்டமும் வேண்டாம்! தடியடிப்படவும் வேண்டாம்!
விடுதலை ஏற்கனவே கிடைத்தாயிற்று - அப்படியென்றால்
வீரமறவர் போல் நாட்டுப்பற்றைக் காட்ட என்ன வழி
இன்னொருப் போர் வரும்வரை பொறுத்திருப்பதா?

போரிட்டு வெளிப்பகை ஜெயிப்பது மட்டுமன்று நாட்டுப்பற்று
நம்மிலிருந்து சாதிப்பகைவனை விரட்ட,
மதமென்னும் வேறுபாட்டை களைய,
வரி ஏய்ப்பு செய்யாமல் வாழப்பழக,
முண்டியடிக்கமல் வரிசையில் நிற்க,

வீட்டின் குப்பையை தெருவில் போடாதிருக்க,
லஞ்சம் கொடுப்பது வாங்குவதை நிறுத்த,
சிறார்களை வேலைக்கு வைக்காமலிருக்க,
பெண்களுக்கு சம உரிமைக் கொடுக்க,
எடுக்கும் முயற்சிகளில் காட்டும் பற்றே நாட்டுப்பற்று

----கௌதமன்

[கவிதையின் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன]

பாலகன்
28-01-2011, 05:57 PM
தலைசிறந்த கருத்துக்கள் அடங்கிய கவிதை

இன்றைய அவலங்களை பற்றிய விழிப்புணர்வு கவிதை

அருமை நண்பரே! உங்கள் உயரிய எண்ணத்திற்கு ஒரு சல்யூட்

அன்புடன்
மகாபிரபு

கீதம்
28-01-2011, 09:40 PM
நல்ல கருத்துகளை முன்வைத்து,
நாடு முன்னேற வழி சொல்லும் கவிதை.
பாராட்டுகள் கெளதமன்.

M.Jagadeesan
28-01-2011, 10:52 PM
வெளிப்பகையை வென்றுவிட்டோம் இனி
உட்பகையை வெல்லவேண்டும் என்ற*
நல்ல கருத்தே நாட்டுப்பற்றைக் காட்டும்.

பாராட்டுக்கள் கெளதமன்.

ஜானகி
29-01-2011, 01:16 AM
ஆம்... நம்மை நாம் வெல்வதே உண்மையான ஜனநாயகம் என்று கொள்ளலாமா ?

M.Jagadeesan
29-01-2011, 04:03 AM
அப்படியல்ல!
தீமையை நன்மை வெல்லவேண்டும்.
அதர்மத்தை தர்மம் வெல்லவேண்டும்
அநியாயத்தை நியாயம் வெல்லவேண்டும்
பொய்யை உண்மை வெல்லவேண்டும்
ஊழலை நேர்மை வெல்லவேண்டும்
உறக்கத்தை விழிப்பு வெல்லவேண்டும்
துன்பத்தை இன்பம் வெல்லவேண்டும்
கல்லாமையைக் கல்வி வெல்லவேண்டும்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

கௌதமன்
29-01-2011, 07:56 AM
ஒரு உண்மை:

இந்தக் கவிதைக்கு நான் வாக்களிக்கவில்லை.

அதாவது என் கவிதைக்கு நான் வாக்களிக்கவில்லை.

கலாசுரன்
09-02-2011, 02:45 AM
நன்றாக உள்ளது..
கருத்துமிகும் ஒரு படைப்பு..
வாழ்த்துக்கள் ..[:)]

dhilipramki
09-02-2011, 03:09 AM
எது உண்மையான நாடு பற்று என்று புரியுது இப்போ!!

நன்றி கௌதமன்.:)