PDA

View Full Version : போட்டிக்கவிதை எண்.13



கௌதமன்
28-01-2011, 05:23 PM
கவிதை எண்.13


கவிழ்ந்துக் கிடக்கிறேன் நான்; பார்வை தெளிவில்லை;
வலது கை இருப்பதாக உணர்வில்லை;
இடது கையினால் தடவிப் பார்த்தேன், ஒரே இரத்தம்
வாயிலிருந்தா மூக்கிலிருந்தா தெரியவில்லை;
கால்கள் இன்னுமிருப்பதாக நம்புகிறேன்
பூட்ஸ் கால்களின் உதைமட்டும் நின்றபாடில்லை
ஒன்று நிச்சயம் எப்படியும் இறந்து விடுவேன்
சற்றே தலையுயர்த்திப் பார்க்கிறேன்
இப்போதாவது சொல் என்கிறார்கள்
’வந்தே மாதரம்’; தலையில் விழுந்தது கடைசி அடி

-- கௌதமன்

[கவிதையின் விமர்சனங்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது]

பாலகன்
28-01-2011, 05:25 PM
மெய்சிலிர்க்க வைக்கும் வரிகள்.

உணர்ச்சிப் பிழம்புகளாய் வார்த்தைகள் கவிதையாய்.

பாராட்டுக்கள் நண்பரே

M.Jagadeesan
28-01-2011, 08:49 PM
திருப்பூர் குமரனை நினைவூட்டிய வரிகள்! பாராட்டுக்கள் கெளதமன்.

கீதம்
28-01-2011, 09:50 PM
குருதிப் பொங்கி வழியும்
இறுதித் தருணங்களிலும்
பெருகி வழிகிறதே,
பிறந்த நாட்டுப்பற்று!
கரமறுபட்டாலும்
கழுத்தறுபட்டாலும்
அறுபடாத அரும்பிணைப்பை
அழகாய்க் காண்கிறேன்,
கவிமுழக்கும் கடைசிச்சொல்லில்!!

பாராட்டுகள் கெளதமன்.